Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

german-2.jpg?resize=750%2C375&ssl=1

ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!

ஜேர்மனியின் புதிய சேன்சலராக கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின்  (CDU) தலைவர் ஃபிரிடிரிக் மெர்ஸ் Friedrich Merz இன்று தெரிவு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்  அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில்  கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவடைந்த போதிலும்  கூட்டணி பேச்சுவார்த்தைகள் முதலான சில காரணங்களால் ஆட்சியமைப்பதில் பல்வேறு  தாமதம்  ஏற்பட்டுவந்தது.

இந்நிலையில் 208 இருக்கைகளை வென்ற CDU/CSU கட்சியும், 120 இருக்கைகளை வென்ற SPD கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

அந்தவகையில்  இன்று ஜேர்மனியில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ளதாகவும்  உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.00 மணிக்கு ஜேர்மனியின்  நாடாளுமன்றம் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இதன்போது   பிரெட்ரிக் மெர்ஸின் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் பெரும்பான்மையை  அவர் நிரூபித்த பின்னர் ஃபிரிடிரிக் மெர்ஸை ஜேர்மனியின் 10ஆவது சேன்ஸலராக  ஜனாதிபதி உறுதி செய்வார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற  வாக்கெடுப்பில்  ஃபிரிடிரிக் மெர்ஸ்ஸுக்கு  தேவையான 316 வாக்குகள் கிடைக்கவில்லை எனவும்,  இதனால் அவர் சேன்சலராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை  எனவும்  அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்  வலது சாரி கட்சியான ஆல்டர்நடிவ் ஃபியூர் டெயுச்ச்லாந்து  புதிய தேர்தல்களை நடத்துமாறு  கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் ஓலாப் ஷோல்ஸ் (Olaf Scholz ) தற்காலிக சேன்சலராகத் திகழ்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1430874

  • கருத்துக்கள உறவுகள்

மேர்ஸ் இரெண்டாவது வாக்கெடுப்பில் வென்று சான்சிலராகிவிட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

மேர்ஸ் இரெண்டாவது வாக்கெடுப்பில் வென்று சான்சிலராகிவிட்டார்.

தொங்குபொறியில் இருந்தவர் இரண்டாவது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டார்.இப்படி நடப்பது ஜேர்மனிய பாராளுமன்ற வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜேர்மனிய எல்லைகளின் பாதுகாப்பு பரிசோதனைகளை தீவிரமாக்கியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த அகதிகள் வருகையை நிறுத்துகின்றனர்.

260036593fdbed46e5d1d428d01a6949,79d87c7

ஜேர்மனியில் வசிக்கும் உள்நாட்டு/வெளிநாட்டு தீவிரவாதிகளை ஒரு கைபார்க்கப்போகின்றார்கள்.குறிப்பாக முஸ்லீம் தீவிரவாதிகள் மீது என அழுத்தி சொல்லப்படுகின்றது.

Afd எனும் கட்சி எதை காரணம் காட்டி உச்சத்திற்கு முன்னேறினார்களோ அதே காரணங்களை சட்டங்கள் மூலம் தீர்ப்பார்கள் போல் இருக்கின்றது. அத்துடன் Afd கட்சியை இனவாத, தீவிர கட்சியாக காரணம் காட்டி தடைசெய்யவும் போகின்றார்கள்.

407839661_1733571913_v16_9_1200.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இதை செய்யாவிடில் AfD வெல்ல இவர்களே வழி சமைத்தது போல் ஆகி விடும்.

பிரிதானியா பழமைவாதிகளுக்கும் இப்படி ஒரு தலைவர்தான் தேவை.

நல்ல முடிவு வரவேற்கிறேன் .....ஜேர்மன் பாராளுமன்றத்தில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருந்தால் இப்படியான பிரச்சனைகள் வாராது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kandiah57 said:

நல்ல முடிவு வரவேற்கிறேன் .....ஜேர்மன் பாராளுமன்றத்தில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருந்தால் இப்படியான பிரச்சனைகள் வாராது

எப்படியான பிரச்சனைகள் வராது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எப்படியான பிரச்சனைகள் வராது?

ஏன் ?? நீங்கள் அடுத்த தேர்தலில் நிற்கப் போகிறீர்களா. ?? இரண்டு கட்சிகளும் சேர்த்து ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்து விட்டு பிரதமர் தெரிவில் இடறி. விட்டது போன்ற பிரச்சனைகள் வாராது Afd. காரி. வை மீண்டும் தேர்தலை என்றவுடன் வழிக்கு வந்து விட்டார்கள் போலும்” அடுத்த முறை Afd. பத்து வீதம். வாக்குகள். எடுக்குமா ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/5/2025 at 23:16, goshan_che said:

பிரிதானியா பழமைவாதிகளுக்கும் இப்படி ஒரு தலைவர்தான் தேவை.

மேற்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் தம் ஆயுத விற்பனைக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் சண்டை சச்சரவுகளை மூட்டாமல் விட்டாலே இந்த உலகில் அகதிகள் பிரச்சனை வராது.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

மேற்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் தம் ஆயுத விற்பனைக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் சண்டை சச்சரவுகளை மூட்டாமல் விட்டாலே இந்த உலகில் அகதிகள் பிரச்சனை வராது.

பிறகு நீங்கள் (நானும்) சோத்துக்கு என்ன செய்வியள்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, goshan_che said:

பிறகு நீங்கள் (நானும்) சோத்துக்கு என்ன செய்வியள்🤣

சோறா?

இருக்கவே இருக்கு செல்வச்சந்நிதியான் அடியார் மடம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சோறா?

இருக்கவே இருக்கு செல்வச்சந்நிதியான் அடியார் மடம். 😎

இல்லாட்டில் நாகபூசணி🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.