Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

09 MAY, 2025 | 05:48 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தற்கொலை செய்துகொண்ட பாடசாலை  மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம்  இடம்பெற்றபோது அது முறையாக ஆராயப்படவில்லை  என்பதை  ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயம் குறித்தும், ஆசிரியர் தொடர்பிலும் ஏன் கல்வி அமைச்சுக்கு   முறையாக  அறிவிக்கவில்லை  என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம்  விளக்கம் கோர  அமைச்சுக்கு முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி  அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது கொழும்பு  பாடசாலையின் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை மற்றும் நீதி கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து உரையாற்றுகையில்  பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கொழும்பு பாடசாலை மாணவி தற்கொலை செய்துகொண்டமை கவலைக்குரியது. இது  உணர்வுபூர்வமானதொரு விடயமாகும். இவ்வாறான சம்பவங்களை எவருக்கும் குறிப்பாக பெற்றோருக்கு தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே இவ்விடயம் குறித்து பேசுவதிலும், தலையிடுவதிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இந்த விடயத்தை அரசியல் ரீதியானதொரு விடயமாக கருத கூடாது. 15 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை  கருத்திற்கொள்ள வேண்டும். ஆகவே சமூகம் என்ற அடிப்படையில் அனைவரும் தோல்வியடைந்துள்ளோம். இதற்கு அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். இவ்வாறான சம்வங்கள் இனியும் தோற்றம் பெறாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம்  இடம்பெற்றபோது அது முறையாக ஆராயப்படவில்லை  என்பதை  ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயம் குறித்து ஏன் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவில்லை.  குறித்த ஆசிரியர் தொடர்பில் ஏன்  அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடினேன். கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சு , சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு தொடர்பாடல் நிலையில் செயற்படுவதற்கான பொறிமுறை ஒன்றை வகுப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/214309

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்த மாணவியின் பெற்றோர், விசாரணையை மேற்கொள்ளும் பொலிஸ் குழுவினருடன் பிரதமர் சந்திப்பு

10 MAY, 2025 | 08:47 PM

image

கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்த மாணவியின் பெற்றோர் மற்றும் அது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவரும் பொலிஸ் குழுவினருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று சனிக்கிழமை (10)  பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் பாடசாலை மற்றும் மேலதிக நேர வகுப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து விரைவான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது..

சம்பவம் பதிவான தருணத்திலிருந்து பொருத்தமான நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பிடுவதற்காக கல்வி அமைச்சு தற்போது ஒரு உள்ளக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இதுபோன்ற சம்பவங்களுக்கு பதிலளிப்பதற்குப் பொறுப்பான அரச நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சிறுவர் நல மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/214393

  • கருத்துக்கள உறவுகள்

Journalist Journalist

மாணவி தற்கொலை – எமது அமைப்பாளருக்கு தொடர்பில்லை – லக்ஷ்மன் நிபுணாராச்சி மலையக பெண்களுக்கு இது புதிது அல்ல சகஜமான விடையம்

உண்மையை கண்டு பிடியுங்ஙள்

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை சம்பவத்துடன் எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி திரிபுபடுத்தப்பட்டதாகும். அவர் இதில் சம்பந்தப்பட்டவில்லையென ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தெரிவித்தார்

கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினால் நேற்று வெள்ளிக்கிழமை (9) பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

விவாதத்தில் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றும் போது,

பாடசாலை மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் இந்த சபையில் நாங்கள் கதைத்தோம். 2024 ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளதுடன், டிசம்பர் மாதத்திலேயே பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் 2025 ஜனவரி மாதத்திலேயே கைது செய்யப்படுகின்றார். சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இவர் இரண்டு நாட்களில் பிணையில் விடுவிக்கப்படுகின்றார்.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் அவர் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த மாதம் 8 ஆம் திகதியே அவருக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்ட பின்னரே இந்த நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இந்த 5 மாதங்களாக என்ன செய்தது கல்வி அமைச்சு, பிரதமர் கல்வி அமைச்சராக பதவியேற்று 6 மாதங்களாகியும் ஏன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதி கிடைக்காத காரணதத்தினாலேயே மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

உங்கள் கட்சி அமைப்பாளர் ஒருவருக்கு இதில் குற்றச்சாட்டு முன்வைவக்கப்பட்டுள்ளதாக நிபுணாராச்சி எம்.பி உரையாற்றுகையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த குற்றச்சாட்டு சும்மா தெரிவிக்கப்படவில்லை. மாணவியின் பெற்றோர் அது தொடர்பில் கூறுகின்றனர். குறித்த நபரே வகுப்பரையில் அந்த மாணவியை நிற்கவைத்து, பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் மற்றைய மாணவர்களின் முன்னால் மாணவியை அவமதித்துள்ளார். அவர் உங்களின் கட்சியின் அமைப்பாளர் என்று நாங்கள் காலையில் கூறவில்லை. நீங்களே இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கூறினீர்கள்.

குறித்த ஆசிரியர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான முறைமை எப்படி இருந்திருக்கிறது என்பதனை பாருங்கள். அந்த செயற்பாட்டு முறை வேகமானதான இருந்திருந்தால் அந்த மாணவியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

சம்பந்தப்பட்ட அமைப்பாளரின் வீட்டுக்கு முன்னால் 7 பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு இப்படி பாதுகாப்பு கொடுப்பதா? சிறுமியின் மரணத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பு கூற வேண்டியவரின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா? அவர் வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்திருந்தால் இன்று சிறையில் இருந்திருப்பார்.

அவர் மறைமுகமாகவோ, நேரடியாகவோ இந்த மாணவியை அவமதிப்பு செய்துள்ளதாக பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அமைப்பாளர் மட்டுமல்ல கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர். 35ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளில் தீர்மானிக்கப்படும்.

மக்கள் அரசாங்கத்திடம் முறைமை மாற்றம் தொடர்பிலேயே எதிர்பார்த்தனர். இதனையே நீங்களும் எதிர்பார்த்தனர். ஆனால் நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவானதாக இருக்கிறது என்றார்.

இதன்போது முஜிபுர் ரஹ்மான் எம்.பி. முன்வைத்த சில விடயங்கள் தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி பதிலளித்த ஆளும் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி எம்.பி. கூறுகையில்,

இந்த விடயத்தை இவர்கள் அரசியல் செய்யப் போவதில்லை என்று கூறிக்கொண்டே எமது அமைப்பாளர் ஒருவரை இதனுள் சம்பந்தப்படுத்துகின்றனர். எமது அமைப்பாளர் இதற்குள் கிடையாது. அவர் குறித்த கல்வியகத்தின் உரிமையாளரே, அவர் ஆசிரியரும் கிடையாது. முழுமையாக திரிபுபடுத்தலையே செய்கின்றனர். திரிபுபடுத்தியே ஊடகங்களுக்கு கூறுகின்றனர்.

அந்த பிள்ளை தொடர்பான கவலை எங்களிடையே இருக்கிறது. பிரதமரும் இது தொடர்பில் கூறியுள்ளார். தவறுகள் மற்றும் தாமதங்கள் இருந்தால் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

495384194_1232618395128890_6229524984028

495149418_1232618471795549_5006482102550

495051231_1232618538462209_2710335430870


  • கருத்துக்கள உறவுகள்

Nadarajah Kuruparan

is with Ramalingam Chandrasegar.

கொட்டாஞ்சேனை மாணவியும் பிந்திய நீதியும்…

ஆணையிறவு உப்பில் சுறணை வந்தது போல் சொன்னதை செய்யுங்கள்.

சில தமிழ் பண்டிதர்கள் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என நினைத்திருந்தேன். ஆனால் ஹீரோயிசத்தை ஆராதிப்பதை தவிர, அரசியல் புரியவில்லை, குறிப்பாக தமிழும் புரியுதில்லை என்பதுதான் துர்ப்பாக்கியம். சரி அவர்கள் அப்படியே இருக்கட்டும்.

என்னுடன் உரையாடிய நண்பர் ஒருவர் சொன்னர் “இவங்களை ஒருவரும் அனுப்பத் தேவையில்லை தாங்களாகவே போய்விடுவாங்கள் போல இருக்கு என்று“ (அநுர குறித்து ஒரு மென்போக்கு அவரிடமும் உண்டு)

நாடு அநுரவோடு இருக்க வேண்டும் வடக்கு கிழக்கு மலையகம் ஊரோடு இருக்க வேண்டும் என நினைப்பவன் நான் என்று தெரிந்தே அவர் என்னிடம் இதனை வலியுறுத்தினார்.

இன்னுமொரு நண்பர் சொன்னார் இப்பவும் நீங்கள் அந்த நிலைப்பாடோடுதான் இருக்கிறியல் போல கிடக்கு, கவனம் உங்களை அவங்கட ஆட்கள் என்று சீல்குத்திப்போடுவாங்கள் என்று.

வெளிப்பார்வை எப்படி இருந்தாலும் அதுபற்றிய கவலை என்னிடம் இல்லை. உண்மை எது என்பதனை எனது கடந்தகாலம் கூறும்.

காரணம் தமிழ் சிங்களம் என வேறுபாடு இல்லாமல் அதிகாரத்தை அவ்வப்போது கையில் எடுத்த அனைத்து தரப்பினாலும், நான் உடலளவிலும் மனதளவிலும் கடுமையாகபாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

சரி விடயத்திற்கு வருவோம். கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் குறித்து அண்மைய நாட்களாக பாரிய போராட்டங்கள், சர்ச்சைகள், சமூகவலைத்தள விவாதங்கள் தொடர்கிறது.

நாடாளுமன்றிலும் இது குறித்த விவாதங்கள் கடுமையாக இடம்பெற்றன. இதில் ஆளும் அரசாங்கம் என்ற அடிப்படையில், ஜனாதிபதியும், பிரதமரும், மகளீர்விவகார அமைச்சரும் ஆளும்தரப்பினரதும் பொறுப்புக் கூறல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் – மகளீர் அதிகார சபையில் தமது முறைப்பாட்டை முறைப்படி பதிவுசெய்யவில்லை. காவற்துறையில் முறையிடவில்லை, பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியரிடம் மனநல சிகிச்சை பெற்றிருக்கிறார் என கூறுவது ஆட்சியாளரின் பொறுப்பற்ற செயற்பாடாகும்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி ஏன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் (மனநல பாதிப்பு அல்ல மன அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தார்) ஏன் தற்கொலை செய்துகொண்டார்? தற்கொலைக்கு தூண்டியவர் யார்? என்ற விடயங்கள் வெளிவந்தவுடனேயே அது குறித்து கல்வி அமைச்சும், மகளீர் விவகார அமைச்சும், சிறுவர் பாதுகாப்புச் சபையும், சட்டத்துறை – நீதித் துறை என்பனவும் தாமாகவே களத்தில் இறங்கி செயற்பட்டு இருக்க வேண்டும்.

தற்கொலைக்கு காரணமான ஆசிரியரையும், தற்கொலைக்கு துண்டிய ஆசரியரையும், விசாரணை முடியும் வரை தற்காலிக பணி நீக்கம் செய்திருக்க வெண்டும்.

பதிலாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுதலிக்கும், அல்லது தம்மை பாதுகாக்க (defend பண்ண) முனைவதும், விமர்சனங்களை ஏற்க மறுப்பதும், இடது மைய அரசாங்கத்தின் பண்பாக இருக்க முடியாது.

கடுமையான அழுத்தங்களின் பின் விமர்சனங்களின் பின் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஹரினி பெற்றோரை அழைத்து பேசியிருக்கிறார்.

நடவடிக்கைகளை துரிதப்படுத்த காவற்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

ஆசிரியர் ஒருவர் கட்டாய விடுவிப்பில் அனுப்பப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த நடவடிக்கைகள் முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த ஏனைய அரசாங்கங்களை விடவும், ஆட்சியாளர்களை விடவும் நேர்மையாக ஆட்சியை தொடர்வதென்றால் கிளீன் சிறிலங்காவை உருவாக்க வேண்டும் என்றால் தவறுகளை தவறு என ஏற்றுக்கொள்ளும் பண்பு உருவாக வேண்டும்.

விமர்சனம் சுயவிமர்சனம் என்பவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் NPP அரசாங்கம் பத்தோடு பதினொன்று அல்ல என்பதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

ரணில் கூறிய L Board Board ("L plates" (red L on a white background) are mandatory for learner drivers to display on their vehicles.) அரசாங்கமாக தொடர்ந்தும் இருக்க முடியாது.

அவ்வாறே பயிற்சி முடிவடைந்து ஓட்டுனர் உரிமம் பெற்றபின்னான 3 மாத கால ஓட்டுனர் அனுபவமும் கிடைத்து விட்டது. ஆதாவது P Board காலமும் நிறைவடைந்துள்ளது. ( Green P "P plates" (green P on a white background) are optional and are used by newly qualified drivers to indicate that they are relatively inexperienced.)

இனிவரும் காலம் அனைத்து விடயங்களிலும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய காலம்.

குறிப்பாக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக காலம் தாழ்த்தாது நிறைவேற்ற வேண்டும்.

இந்தப்பதிவை இறுதி செய்யும் போது ஆணையிறவு உப்பு (Elephant pass Salt) என்ற பெயர் உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் சொன்னதை செய்தது போல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

1) பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்

2) புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

3) மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

4) தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்.

5) வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோர் விடயம், அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு, காணிகளை கையகப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகாணப்பட வேண்டும்.

6) இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி, அரசியல் பாகுபாடுகள் இன்றி அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வெண்டும்.

7) சட்டத்தின் ஆட்சியை உருவாக்க வேண்டும்.

8 சட்டத் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறைகள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்

9) லஞ்சம் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

10) நாடுபூராகவும் சம வளப்பங்கீட்டையும் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இவற்றில் உடனடியாக கவனம் செலுத்தப்படல் வேண்டும். இல்லாவிடின் கோட்டாபயவை நீங்கள் வீட்டுக்கு அனுப்பினீர்கள்.

மாறாக உங்கள் பொறுப்பீனங்கள் தொடர்ந்தால் உங்களை நீங்களே வீட்டுக்கு அனுப்பிவிடுவீர்கள்.

76 வருடங்களுக்கு பின் கிடைத்த அரிய சந்தர்ப்பம் இழக்கப்பட்டு நாடு மீண்டும் அதள பாதாளாத்தை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும்.

கிளீன் சிறீலங்காவா? அதளபாதாளமா? நாடு அநுரவிடமா? கொள்ளையர்களிடமா? என்பதனை நீங்களே தீர்மானியுங்கள்.

“கோட்டாவை வீட்டுக்கு அனுப்பியது அறகலய!” உங்களை நீங்களே வீட்டுக்கு அனுப்பிவிடுவீர்களோ என பயமாய் இருக்கிறது!” #ஞாபகங்கள்

May be an image of 5 people, dais and text


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் மாணவி அம்ஷிகாவிற்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டம்

11 MAY, 2025 | 06:21 PM

image

மட்டக்களப்பு காந்திப்பூங்கா வளாகத்தில் என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் - மௌனத்தைக் கலைப்போம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த அம்ஷிகாவிற்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டமொன்று  ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது.

இதன்போது அம்ஷிகாவின் ஆத்மசாந்திவேண்டியும் அவருக்கு நீதிவேண்டியும் கலந்து கொண்டோர் கறுப்புப் பட்டியணிந்து, மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது "பரிதாபம் வேண்டாம். பாதுகாப்பு வேண்டும்", "ஒன்றாய் எழுந்தால் சீண்டல் அழியும்", "தண்டனை இல்லையெனில் குற்றமும் தொடரும்", "தண்டனை இல்லையென்பதே குற்றவாளியின் தைரியம்","என் உடலை உன் உரிமையென எண்ணாதே', "அரசின் மௌனம் சீண்டலுக்கான அனுமதிப் பத்திரம்" போன்ற பதாதைகளை ஏந்தியும்,கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குக் கையளிப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னுமொரு மாணவிக்கு ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையானதாக ஆக்கப்படவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

WhatsApp_Image_2025-05-11_at_13.27.25.jp

WhatsApp_Image_2025-05-11_at_13.27.24.jp

WhatsApp_Image_2025-05-11_at_13.27.27.jp

WhatsApp_Image_2025-05-11_at_13.27.23__1

https://www.virakesari.lk/article/214471

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.