Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்துக்கு---

”இன அழிப்பு“ என்று கூறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேர்காணல் ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

சரி- ஏற்கிறோம்--

A) ஆனால், யாழ்ப்பாணம் -நகதீவ எனவும் திருகோணமலை -பெற்றிக்கோட்டை என்றும் தமிழ் வரலாற்று பாடநூலில் சிங்களப் பெயர்களாக ஏன் மாற்றினீர்கள்?

B) சிங்கள இனவாதம் பாடநூலில் ஆரம்பிக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

C) வரலாற்று பாடநூலை பௌத்த தேரர்கள்தான் எழுதுகின்றனரே! தமிழ் வரலாற்று பாடநூலுக்கும் அது மொழி பெயர்க்கப்படுகிறதே!

D) இன அழிப்பு என்பது மக்களை கொல்வது மாத்திரமல்ல. அந்த மக்களின் மரபுரிமைகளை அழித்தல், இன விகிதாசாரத்தை மாற்றும் திட்டமிட்ட குடியேற்றங்கள், வரலாற்றுத் திரிபுகள், சமயத்தை வரலாற்று பாடநூலில் புகுத்தல் உள்ளிட்ட அனைத்துமே இன அழிப்புத்தான்.

கீழே சில கேள்விகள் - விளங்கங்கள் உண்டு. பதில் தருமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.

------ -----

நீங்கள் உட்பட சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு என்வென்றால், விடுதலைப் புலிகளுடன் நடத்த போரை மாத்திரம் வைத்தே இனப் பிரச்சினை விகாரத்தை நோக்குகின்றீர்கள்.

ஆனால், தமிழர்கள் கோருகின்ற “இன அழிப்பு” நீதி விசாரணை என்பது, 1956 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்லோயா படுகொலையில் இருந்து 1958 ஆம் ஆண்டு கொழும்பு கலவரம் உள்ளிட்ட 2009 முள்ளிவாய்க்கால் வரையும் நீடித்து, பின்னர் கடந்த 15 வருடங்களில் காணி அபகரிப்பு - சிங்கள குடியேற்றம் - தமிழ் வரலாற்று பாடநூல்களில் பௌத்த சமய வரலாற்று மற்றும் சிங்களச் சொற்கள் திணிப்பு போன்ற விவகாரங்களில் இருந்து வர வேண்டும்.

குறிப்பாக 1920 இல் இலங்கைத் தேசிய இயக்கம் உடைந்து, 1921 இல் தமிழர் மகாசபை உருவானதில் இருந்து, ஏறத்தாள நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் இது.

ஆனால், நீங்கள் உட்பட சிங்கள தலைவர்கள் அனைவருமே, இந்த விவகாரத்தை மிக இலகுவாக ”தமிழ் இனவாதம்” என்றும் புலிகளின் பயங்கரவாதம் எனவும் சித்தரித்து மூடி மறைக்கின்றீர்கள்.

2019 ஆம் ஆண்டில் இருந்து நடைபெறுகின்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயரில் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.

A) யாழ்ப்பாணம் - நகதீவ

B) திருகோணமலை - பெற்றிக்கோட்டை

C) யாழ். ஊர்காவற்துறை -சூக்கிரசித்த,

D) யாழ். கந்தரோடை - கந்துருகொட.

E) காங்கேசன்துறை - ஜம்புகோள பட்டுன

F) கதிர்காமம் - கஜராஜகம அல்லது கத்தரகம.

அதேவேளை ----

1) அரச செயற்பாடுகள் - ரஜகரிய

2) கிரமாத் தலைவன் - தமிக

3) குடும்பத் தலைவன் - குர்கபதி

4) கிராம சேகவர் - கிராம நிலதாரிய ----

என்ற சிங்கள சொற்கள் தமிழ் வரலாற்று பரீட்சை வினாத் தாளில் உண்டு.

ஐ.நா.கல்வித் திட்ட யுனெஸ்கோ விதிகளின் பிரகாரம், பாடநூல்கள் அந்த அந்த மொழிகளிலேயே எழுதப்பட வேண்டும். அதுவும் வேறொரு இனத்தின் வரலாற்று பாடநூலில், இன்னொரு சமய வரலாற்றை புகுத்த முடியாது.

ஒரு நாட்டில் எத்தனை தேசிய இனங்கள் வாழ்ந்தாலும், ஒவ்வொரு தேசிய இனங்களின் வரலாறுகளும் சமநிலையில் பாடநூலில் வர வேண்டும்.

ஆனால் இலங்கைத்தீவில் அப்படியல்ல.

அதுவும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் குறிப்பாக 2015 மைத்திரி - ரணில் என்று மார்தட்டிய, நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசாங்கமே, வரலாற்று பாடநூல்களில் சிங்கள சொற்களை புகுத்தியது.

எழுத இன்னும் ஏராளம் உண்டு. இவை சில உதாரணங்கள் மாத்திரமே.

ஆனாலும் மேலும் சில குறிப்புகள்--

1) யாழ்ப்பாண இராஜியம், வரலாற்று பாடநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

2) திருகோணமலை கந்தாளாய் குளம் குளக்கோட்ட மன்னன் கட்டியது. ஆனால் அக்கபோதி மன்னன் கட்டியதாக பாடநூலில் மாற்றப்பட்டுள்ளது.

-- சோழகங்க தேவன் என்ற இயற்பெயரையுடைய குளக்கோட்டன் என்ற மன்னன், இலங்கைத்தீவின் மட்டக்களப்பு அம்பாறை உள்ளிட்ட கிழக்குப் பிரதேசத்தை ஆட்சி செய்தான்.

--- திருக்கோணேச்சரம் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தவன் என்று கோணேசர் கல்வெட்டில் உண்டு. ஆகவே எக் காரண - காரிய அடிப்படையில் அக்கேபோ மன்னன் என்று மாற்றினீர்கள்? ----

சரி - யாழ்ப்பாணம் என்ற வரலாற்று பெயரை - நகதீவ என்றும், தமிழர்களின் புராதன நகரமான திருகோணமலை என்ற பெயரை பெற்றிக்கோட்டை எனவும் யாரைக் கேட்டு மாற்றினீர்கள்?

1983 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் சிங்கள அரச அதிபரை திருகோணமலைக்கு நியமித்தது முதல் இன்று வரை அங்கு எத்தனை சிங்களக் குடியேற்றங்கள்?

சில்வா என்ற அரச அதிபர் திருகோணமலையின் தமிழ் இன விகிதாசாரத்தை மாற்ற வரைபடம் வரைந்தவர். சில்வா பற்றி அமரர் சம்பந்தன் 2006 இல் நாடாளுமன்ற உரை ஒன்றில் விளக்குகிறார்.

நன்றி-

அ.நிக்ஸன்

பத்திரிகையாளர்

கொழும்பு-

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்துக்கு---

”இன அழிப்பு“ என்று கூறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேர்காணல் ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

இதனை முதலில் யே.வி.பீ(JVP) வந்தால் தேனும் பாலும் ஓடித் தமிழினத்தின் கோரிக்கைகள் தங்கத்தட்டில் வைத்துச் சிவப்புக்கம்பள விரிப்பில் பவனியாக எடுத்துவந்து கையளிப்பர் என்ற தமிழருக்கும், யூரூப்பற்மாருக்குமே வெளிச்சம். ஆட்சிக்குவருவோரின் முகங்களும் கட்சிக்கொடியின் நிறங்களுமே வேறேதவிரக் கடைந்தெடுத்த பச்சை இனவாதத்தில் சற்றும் குறையாதோர் என்பது தெரிந்ததே. ஆனால், அவர்களுக்கு ஆலவட்டம் பிடித்தோருக்கு இவளவு விரைவாக நாமம் போடுவார்களென எதிர்பார்த்திருக்கார். கட்டுரையாளர் பல்வேறு தடவைகள் தமிழின அரசியல் குறித்து யேவிபீ(JVP)யின் நிலைப்பாட்டைச் சுட்டியிருந்தார்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை ஜே. வி. பி. ஆட்சியமைக்குமென. ஆனால் அது வென்றபோது அந்தக்கட்சியில் உள்ளோரும் எம்மைப்போன்று சித்திரவதைகளையும் இழப்புகளையும் வலிகளையும் சந்தித்தவர்கள், ஆகவே எமது வலி, இழப்பு, ஏக்கம் இவர்களுக்கு புரிந்திருக்கும், அதைவிட அனுரா மிகவும் இளமையானவர், முற்போக்காக சிந்திப்பார், மாற்றங்களை செய்வார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் அது கடந்தகாலத்தில் தமிழருக்கெதிராக செய்த அநீதிகளும் அறிந்தே இருந்தோம். ஜே. வி .பி. இல்லையென்றாலும் எங்களை நேரடியாக அழித்த ஒரு கட்சிதான் வந்திருக்கும். இந்த அனுரா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி எமது காயங்களை ஆற்ற மறுப்பாரானால், இனி சிங்களத்தின் அழிவை யாராலும் தடுக்க முடியாது. எல்லோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டு, அவகாசம் வழங்கப்படுகிறது. எவ்வளவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அவர்கள் தமக்குத்தாமே அழிவை தேடிக்கொள்கிறார்கள். இனப்படுகொலை நடைபெறவேயில்லை என தம் மனச்சாட்சியை, பதவிக்காக ஏமாற்றுகிறவர்கள், ஆதாரத்துடன் நிரூபிக்கும்போது எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்? இதுவரை காலமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, ஆதாரங்களை வெளிக்கொணரவுமில்லை இனிமேலும் எதுவும் நடைபெறாது என தைரியமாக ஏமாற்றுகிறார்கள். ஆனால் நினையாத நேரத்தில், நினைத்திராத மனிதர்களால் எல்லாமே வெளிவரும். அப்போ இவர்கள் எதையும் செய்யவோ, சொல்லவோ சந்தர்ப்பம் கிடைக்காது. அன்பையும் அஹிம்சையையும் கொண்ட மதத்தின்பேரால் இவர்கள் செய்த அனிஞாயங்கள் வெளிவரும்போது அந்த மதமே அவர்களுக்கு கைகொடுக்காது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.