Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

22 MAY, 2025 | 02:01 AM

image

(நா.தனுஜா)

பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து அரசாங்கம் அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் வெள்ளிக்கிழமை (23) மு.ப 11.00 - பி.ப 1.00 மணி வரை பாராளுமன்றத்தில் தனது தலைமையில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் பங்கேற்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

அதன்படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் இச்சந்திப்பில் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசாங்கம் எத்தகைய காரணங்களை முன்வைத்தாலும், இவ்வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு அரசாங்கத்துக்கு உண்மையிலேயே வட, கிழக்கிலுள்ள காணிகளை அபகரிக்கும் நோக்கம் இல்லை எனில், அவர்கள் மக்கள் முகங்கொடுத்துவரும் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கே விரும்புகிறார்கள் எனின், அதற்கென விசேட ஆணைக்குழுவொன்றை அமைத்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என இச்சந்திப்பின்போது தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/215367

  • கருத்துக்கள உறவுகள்

500040155_23958280517100967_678352611076

வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு உரித்தான 5000, ஏக்கர் காணி சுவீகரிப்பு வர்த்தமானி தொடர்பாக தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் எம்பியின் கோரிக்கையை அடுத்து பிரதமர் தலைமையில் தற்போது விசேட கூட்டம் நடைபெற்று வருகிறது...

Kunalan Karunagaran

  • கருத்துக்கள உறவுகள்

499721002_1250531796442817_8571529525082

499532732_1250526583110005_5621040214988

500059671_1250531743109489_9017535515263

499987183_1250531569776173_7328367941496

499839756_1250531799776150_6950176062235

499984594_1250531106442886_7254376389426

499775042_1250531109776219_1268647504100

499827045_1250531233109540_3929562856730

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், துறைசார் அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளுடன் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன்போது அண்மையில் வர்த்தமானி மூலம் சுவீகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலங்கள் எந்த வகையிலும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படமாட்டாது என்றும், அந்தக் காணிகள் மூல உரிமையைக் கொண்டுள்ளவர்களிடம் திருப்பியளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்க தரப்பினால் உறுதிமொழி வழங்கப்பட்டது.

Shritharan Sivagnanam

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

499721002_1250531796442817_8571529525082

499532732_1250526583110005_5621040214988

500059671_1250531743109489_9017535515263

499987183_1250531569776173_7328367941496

499839756_1250531799776150_6950176062235

499984594_1250531106442886_7254376389426

499775042_1250531109776219_1268647504100

499827045_1250531233109540_3929562856730

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், துறைசார் அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளுடன் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன்போது அண்மையில் வர்த்தமானி மூலம் சுவீகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலங்கள் எந்த வகையிலும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படமாட்டாது என்றும், அந்தக் காணிகள் மூல உரிமையைக் கொண்டுள்ளவர்களிடம் திருப்பியளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்க தரப்பினால் உறுதிமொழி வழங்கப்பட்டது.

Shritharan Sivagnanam

கஜன் கூட்டிய கூட்டத்தால் வந்த விளைவை ஏதோ தான் வெட்டி, விழுத்தியது போல போஸ்ட் போடும் பார் சிறி.

இதுவரை யாரோடும் பேசமாட்டேன் எனா இருந்த கஜன் இப்போ இராஜதந்திரிகளை சந்திப்பதும், பிரதமைரை சந்திப்பதும் நல்லதொரு முன்னேற்றம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.