Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26 MAY, 2025 | 10:44 AM

image

வவுனியா ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தின் போது காரில் பயணித்த கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/215689

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அதிர்ச்சியானதும் துயரம் மிகுந்ததுமான தகவல். எமது ஹாட்லிக் கல்லூரி வகுப்பு நண்பன் ஐயர் பிரபா அண்மையில்தான் வட இந்தியாவிலுள்ள புனித இந்து ஆலயங்களையும், புனித நதிகளின் சங்கமங்களையும் தரிசித்த பதிவுகளை முகநூலில் போட்டுக்கொண்டிருந்தார். இப்படி ஓர் கோரமான விபத்தில் சிக்கி உயிரை இழந்தார் என்பதை ஏற்க மனம் துணியவில்லை.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

காயப்பட்ட ஐயர் பிரபாவின் மனைவியும் சக பயணிகளும் விரைந்து குணமடையவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமந்தையில் விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி பலி!

உயிரழந்தவர் யாழ் பல்கலை விரிவுரையாளரின் கணவர்!

adminMay 26, 2025

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வண்டியுடன்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை (26.05.25) 4.30க்கு ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற  இந்த விபத்தில்  காரின் சாரதி உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த மூன்று பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

காரை ஓட்டிச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர், மேலும் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க  யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா (கரவெட்டி தற்போது நல்லூர்) என தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில், சம்பவம் குறித்து ஓமந்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_2479.jpeg?resize=800%2C450&ssl=1IMG_2481.jpeg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/216001/

இலங்கையில் நாளாந்தம் பலர் விபத்துகளில் கொல்லப்படுகின்றனர். அதில் அரைவாசிக்கும் மேல் சாரதி நித்திரையாகி விடுவதால் நிகழ்கின்றது. அண்மையில் இடம்பெற்ற இ.போ.ச வண்டியின் கோர விபத்துக்கும் சாரதி நித்திரையாகிப் போனதே காரணம் என கண்டறிந்துள்ளனர்.

அதிகாலையில் வாகனத்தை செலுத்த வேண்டி வரும் எனில், அதற்கு முன்னர் நல்ல ஓய்வை எடுத்து இருக்க வேண்டும். 7 மணித்தியாலங்களாவது நித்திரை கொண்டு இருக்க வேண்டும்.

நான் நீண்ட தூரத்துக்கு வாகனம் செலுத்த வேண்டி வரும் போது, இடையில் நித்திரை வருகின்ற மாதிரி இருந்தால் உடனே அருகில் இருக்கும் Parking Area விற்கு இடத்துக்கு சென்று 15 நிமிடங்களாவது Nap எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லியடி IIS இல் O/L எடுத்த பின்னர் இவரிடம் கணனி படித்திருக்கிறேன். அநியாயச் சாவு. ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

மனைவியினதும் மகனினதும் நிலை மிகவும் கவலைக்கிடம் என கேள்விப்பட்டேன். பூரண சுகமடைய வேண்டுகிறேன்.

விமானத்தால் இறங்கி காரை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டிருக்கிறார்கள். கட்டுநாயக்க பகுதியிலேயே பல அறைகள், சிறிய கொட்டல்கள் மலிவாக எடுக்கலாம். தங்கி வெளிக்கிட்டிருக்கலாம். யாழ் கொழும்பு தனி வாகனப் பயணங்கள் இரவில் கூடவே கூடாது.

இங்கிருந்து போகும் எம்மவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வான் எடுப்பிச்சு உடனேயே கிளம்புவார்கள். வான் சாரதி அப்போது தான் யாழில் இருந்து எட்டு மணித்தியாலம் ஓடி வந்திருப்பார். இன்னொரு எட்டு மணித்தியாலத்துக்கு அவரால் எப்படி ஓட முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாவின் பூதவுடலுக்கு அஞ்சலி!

adminMay 28, 2025

001-5.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் பூதவுடல் இன்றைய தினம் புதன்கிழமை காலை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதன் போது, உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

தனது தனிப்பட்ட பயணமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்

அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரபாகரசர்மாவின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று , செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

001-4.jpg?resize=800%2C600&ssl=1001-6.jpg?resize=800%2C442&ssl=1

https://globaltamilnews.net/2025/216078/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த அக்ஷயன் பிரபாகரன் உயிரிழப்பு

Published By: VISHNU

01 JUN, 2025 | 10:19 PM

image

யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிக்சை பிரபாகரன் அக்ஷயும் சிகிச்சைகள் பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி ஒமந்தையில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

ஏற்கனவே இந்த விபத்தில் யாழ்.இந்தியதுணைத்தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான ச.பிரபாகரன் உயிரிழநதிருந்தார்.

அவருடைய மனைவியாரான பிரபாகரன் சீதாலச்சுமி மற்றும் மாமனார் ஆகியோர் தொடாந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/216291

  • கருத்துக்கள உறவுகள்

துயரத்தின் மேல் துயரமான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா ஐயாவின் மகனின் மரண அறிவித்தல்

........................

கரவெட்டி, தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் 60 ஆண்டுகள் ஆலய குருக்களாக விளங்கி சிவகதி எய்திய சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள், பாகீரதி அம்மாள் தம்பதியினரதும், மாவையாதீனம் சு. துரைசாமி குருக்கள், பச்சைநாயகி அம்மாள் தம்பதியினரினதும் பேரனும், அண்மையில் சிவபதம் எய்திய ச. பிரபாகரன் (கலாசார சிரேஷ்ட அதிகாரி, இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம்), கலாநிதி. சீதாலக்ஷ்மி (சேர். பொன். இராமநாதன் காண்பிய மற்றும் கட்புல கலைகள் பீடத்தின் நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்) இன் சீமந்த புத்திரனும், அபிஷேக் (IIT,Business Management) இன் பாசமிகு அண்ணனுமான பிரபாகரன் அக்‌ஷை (2017 A/L - St. John's College, Sir John Kothalawala Defence University - Aircraft Maintenance Engineering - Final Year) 1/6/2025 முன்னிரவு 7.30 மணிக்கு சிவபதம் எய்தினார்.

அன்னார் சச்சிதானந்தக்குருக்கள் திவாகரன் - கஜலக்ஷ்மி தம்பதிகளினதும், விநோத்குமார் - இந்துமதி தம்பதிகளினதும் அருமைப் பெறாமகனும், சுவாமிநாத ஐயர், ஜெகதீஷ்வர ஐயர், இரத்தினகைலாசநாத சர்மா, இராதாகிருஷ்ண ஐயர் ஆகியோரின் மருமகனும், பரத், ஸ்நேஹா, நிதேஷின் அன்பு சகோதரனும், ஸ்ரீவித்தியாவின் பாசமிகு மைத்துனருமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை காலை 8 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று மதியம் செம்மணி இந்து மயானத்துக்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.

தகவல்

குடும்பத்தினர்

7/9A, பண்டாரக்குளம் மேற்கு வீதி, நல்லூர்.

0785688366

0766077633

May be an image of 1 person and aircraft

Laleesan Laleesan


  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ........ !

  • கருத்துக்கள உறவுகள்

அநியாய, தவிர்த்திருக்கப்பட வேண்டிய மரணங்கள். ஆத்துமா சாந்தியடைவதாக.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.