Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

AMCA, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,எதிர்காலத்தில் போர்களில் விமானப்படை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஷக்கீல் அக்தர்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 30 மே 2025, 08:04 GMT

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்திய 'ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்' போர் விமானங்களின் உள்நாட்டுத் தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. (ஸ்டெல்த் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'ரகசிய' என்று அர்த்தம். எதிரிகளே அறியாத வகையில் அவர்களின் ரேடார்களுக்கு சிக்காமல் எதிரி நாட்டிற்குள் ஊடுருவக் கூடியவை)

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்கியுள்ளன.

இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இது இந்திய விமானப்படையின் திறனை அதிகரிக்கும் ஒரு பெரிய திட்டம் ஆகும். தனியார் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 'மேம்பட்ட நடுத்தர போர் விமானம்' (AMCA) மாதிரிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பொறுப்பு இந்திய அரசின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு (ADA) வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி இந்த திட்டத்தை செயல்படுத்தும்.

"இந்த திட்டம் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் சோதனை மாதிரியை உருவாக்க நாட்டின் நிபுணத்துவம், திறன்கள் மற்றும் திறனைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும்" என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான்வெளித் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதில் அனுபவம் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் இலகு ரக போர் விமானமான தேஜஸை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கும் பொறுப்பு ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

AMCA, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்காவின் எஃப்-35 போர் விமானம்

தனியார் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த உள்ளூர் திட்டத்தில் சேருவதால் இது சாத்தியமாகும் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவில், 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்' என்பது பாதுகாப்புத் துறைக்கான விமானங்களை உற்பத்தி செய்வதிலும், அசெம்பிள் செய்வதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு மார்ச் 2024 இல் பாதுகாப்புக்கான இந்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் ஏர் ஷோவில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் மாதிரியை ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி காட்சிப்படுத்தியிருந்தது. இது ஒற்றை இருக்கை, இரட்டை என்ஜின் கொண்ட போர் விமானமாக இருக்கும்.

இதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி, 2035 ஆம் ஆண்டில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்களின் தயாரிப்பு தொடங்கும் என்றும், ஆரம்பத்தில் குறைந்தது 120 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது, இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் இதை எவ்வாறு பார்க்கிறார்கள்?

AMCA, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்யாவின் சுகோய்-57 போர் விமானம்

'ஸ்டெல்த்' தொழில்நுட்பம் என்றால் என்ன?

அலெக்ஸ் பிட்சாஸ் அட்லாண்டிக் கவுன்சிலில் ஒரு மூத்த ஆராச்சியாளர் மற்றும் பாதுகாப்பு, வான்வெளி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப துறைகளில் நடைபெறும் டிஜிட்டல் மாற்றம் குறித்தும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்தும் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் பென்டகன் அதிகாரி ஆவார்.

பிபிசியின் முன்சா அன்வரிடம் பேசிய அவர், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கிய அம்சம் "ஸ்டெல்த் தொழில்நுட்பம்" ஆகும் என்று குறிப்பிட்டார். " இது விமானத்தின் ரேடார் குறுக்குவெட்டு மற்றும் வெப்ப கண்டறிதலைக் குறைக்கிறது, இதனால் விமானத்தின் இருப்பை ரேடாரால் கண்டறிவது மிகவும் கடினம்" என்றார்.

அலெக்ஸ் பிட்சாஸின் கூற்றுப்படி, இந்த விமானங்கள் ஆயுத தளவாட அமைப்புகள், எளிதாக திசை மாற்றி இயக்கும் திறன் மற்றும் சூப்பர்சோனிக் வேகத்தில் பறந்து செல்லுதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன.

"ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் அதிநவீன போர் விமானங்கள், அவை ஸ்டெல்த், சூப்பர் க்ரூயிஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. ரேடாரைத் தவிர்க்கும் திறன் அவற்றுக்கு உள்ளது. இதன் காரணமாக எதிரிகளால் அவற்றின் இருப்பை எளிதில் கண்டுபிடிக்க முடியாது" என்று விளக்கினார் பிட்சாஸ்.

மேலும், "புதிய இயந்திர வடிவமைப்புகள், குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் உள்ளடங்கிய ஆயுத அறைகள் விமானத்தின் வெப்பநிலையை குறைக்கின்றன, இதனால் வெப்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விமானத்தை கண்டறிவது கடினம்." என்றார்.

ஸ்டெல்த் தொழில்நுட்பம், மேம்பட்ட இயக்கம் மற்றும் நீண்ட தூரத்தில் தாக்கக் கூடிய ஆயுதங்கள் போன்ற இந்த அம்சங்கள் அனைத்தும் இணைந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றுகின்றன என்று பிட்சாஸ் கூறுகிறார்.

"அவற்றைக் கண்டறிந்து குறிவைப்பது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு கூட ஒரு பெரிய சவாலாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவுக்கு ஸ்டெல்த் போர் விமானங்கள் ஏன் முக்கியம்?

பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசியிடம் கூறுகையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் விமானப்படையின் முக்கியத்துவத்தை அல்லது எதிர்கால போரில் விமானப்படை மற்றும் போர் விமானங்களின் முக்கியத்துவத்தை தெளிவாகக் காட்டுகிறது என்றார்.

ராகுல் பேடி கூறுகையில், "இந்த சமீபத்திய மோதல் முக்கியமாக இரு நாட்டு விமானப்படைகள் சம்பந்தப்பட்டது. நான்கு நாட்கள் நீடித்த இந்த போரில் போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது இரு நாடுகளிடமும் உள்ள விமானங்கள் நான்காம் தலைமுறை விமானங்களாகும்." என்றார்.

இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் விமானப்படை மீது குவிந்துள்ளதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். ஸ்டெல்த் போர் விமான தயாரிப்பு திட்டமும் இந்த கொள்கையின் ஒரு பகுதியாகும். இதனால், தரைப்படையின் முக்கியத்துவம் சற்றே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம், பாதுகாப்பு ஆய்வாளர் பிரவீன் சாஹ்னி, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கியத்துவம் இப்போது இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் '(ஊடக ஆதாரங்களின்படி) ஜே -35 ஏ என்கற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை பாகிஸ்தானுக்கு சீனா வழங்க முடிவு செய்துள்ளது' என்று கூறுகிறார்.

"பாகிஸ்தானிடம் இந்த போர் விமானங்கள் இருந்தால், இதுபோன்ற ஒரு ஸ்டெல்த் போர் விமானம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இது நடந்தால், அது இந்திய விமானப்படைக்கு கடினமான சூழ்நிலையாக இருக்கும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப்படை சமநிலையை பாகிஸ்தானுக்கு சாதகமாக மாற்றும். இந்தியாவிடம் தற்போது ஐந்தாம் தலைமுறை விமானங்கள் எதுவும் இல்லை." என்பது அவரது கருத்து.

AMCA, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐந்தாம் தலைமுறை விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பல ஆண்டுகள் ஆகலாம்.

இந்தியா ஒப்புதல் அளித்துள்ள ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்தின் முன்மாதிரி அல்லது சோதனை மாதிரி 2028ஆம் ஆண்டில் தயாராக இருக்கும் என்று பிரவீன் சாஹ்னி கூறுகிறார்.

அவர் கூறுகையில், "ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டம் தற்சார்புக்கு ஒரு நல்ல யோசனை. ஆனால் தற்போது அமைதியான சூழல் இல்லை. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, தற்போது போர் நிறுத்தம் மட்டுமே உள்ளது, அமைதி நிலைநாட்டப்படவில்லை" என்றார்.

மேலும், "எனவே இந்த சூழ்நிலையில், இந்தியா மிக விரைவில் வெளிநாடுகளில் இருந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்க வேண்டியிருக்கும். (ஏனென்றால் இந்திய திட்டங்களின்படி, உள்நாட்டிலேயே தயாராகும் போர் விமானங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் கிடைக்கும்). ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டம் நீண்ட காலத்திற்கு நல்லது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை." என்றார்.

ராகுல் பேடி கூறும்போது, "இந்த திட்டமும் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது, ஏனெனில் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னை விமானத்தின் என்ஜினை தயாரிப்பதுதான். இந்தியா இதுவரை எந்த போர் விமான இயந்திரத்தையும் தயாரித்ததில்லை. கூடிய விரைவில் இந்தியாவில் விமான என்ஜின் தயாராகிவிடும் என்ற நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் விமான என்ஜின் தயாரிப்பு குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் இப்போது அந்த பேச்சுவார்த்தைகளும் பலவீனமடைந்துள்ளன" என்றார்.

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டம் நிறைவேற நிறைய காலம் எடுக்கும் என்றும் சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பேடி கூறுகிறார்.

இந்தியாவுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?

AMCA, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்யாவின் சுகோய்-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 போர் விமானம்

இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, ஐந்தாம் தலைமுறை விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்பதால், அதுவரையிலான சவாலான காலகட்டத்தை சமாளிக்க வேறு தெரிவுகளை நாடலாம். சீனா தவிர, அமெரிக்காவின் எஃப் -35 மற்றும் ரஷ்யாவின் சுகோய் -57 ஆகிய இரு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் ஒன்றை இந்தியா வாங்கலாம்.

சில மாதங்களுக்கு முன்பு, இந்திய பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, இந்தியாவுக்கு எஃப் -35 போர் விமானங்களை விற்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் ராகுல் பேடி, "இந்த விமானத்திற்கு இந்தியா ஆம் அல்லது இல்லை என்ற பதிலை அளிக்கவில்லை. இதற்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதலாவதாக, இந்த விமானம் அதிக விலை உடையது, அது ஒரு மணி நேரம் பறக்க இந்திய மதிப்பில் சுமார் 30 லட்ச ரூபாய் செலவாகும். இரண்டாவதாக, விமானப்படை அதன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கு தனி ஏற்பாடுகளை செய்ய வேண்டும்." என்று கூறினார்.

"போர் விமான தயாரிப்பில் சீனா ஒரு படி முன்னேறியுள்ளது, இப்போது சீனா ஆறாவது தலைமுறை இரட்டை என்ஜின் போர் விமானத்தை உருவாக்கி விட்டதாகக் கூறுகிறது. அதன் சோதனை கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டது." என்றார் பேடி.

ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தவிர, அவசரகால போர் உபகரணங்களை வாங்க இந்த மாதம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதிக்கான ஒப்புதலையும் இந்திய அரசு அளித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, இந்தியா தனது வான் பாதுகாப்பை மேம்படுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த நிதியிலிருந்து சுமார் 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள டிரோன்களை வாங்க தயாராகி வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நான்கு நாள் மோதலின் போது, இரு தரப்பினரும் டிரோன்களைப் பயன்படுத்தினர்.

பிரவீன் சாஹ்னி, "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், டிரோன்கள் இனி அத்தகைய பங்கு வகிக்காது. உண்மையான சண்டை இரு நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையிலானதாக இருக்கும். 'ஆபரேஷன் சிந்தூரில்' டிரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. இரு நாடுகளின் விமானப் படைகளுக்கும் இடையே ஒரு இரவு மட்டுமே சண்டை நடந்தது, ஆனால் ஒரு பெரிய சண்டை ஏற்பட்டால், அந்த சண்டை விமானப் படைகளுக்கு இடையிலானதாக இருக்கும்" என்கிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்போதைய நிலைமை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடரும் என்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அதிகரிக்கவும் கூடும் என்று சாஹ்னி கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clygd5pn5j8o

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, பாகிஸ்தானும், இந்தியாவும் தாம் கைப்பற்றி வைத்திருக்கும் காஸ்மீரை விடுவித்து காஸ்மீரை சுதந்திர நாடாக அங்கீகரித்தால் இப்படி தேவையில்லாத வலிகள் இருக்காது பிராந்தியம் நிம்மதியாக இருக்கும் (எதுக்கு அடுத்தவன் சொத்திற்கு ஆசைப்படுவது?).

முதலில் அன்றாட வாழ்க்கைக்கு வழியில்லாமல் அல்லாடும் மக்களை மேம்படுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் எனும் மனநிலை சாதாரண மக்களுக்கு ஏற்பட்டால் மட்டுமே உசுப்பேற்றும் போலி தேசி அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

முதலில் தேசமாக ஒன்றினையாமல் (மதம், சாதி, வர்க்க) இந்த ஆயுதங்களை உருவாக்குவதால் எந்த பலனும் ஏற்படாது (இந்தியாவில் அது எப்போதும் நிகழாது).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ஒன்று கூட சரியான நேரத்தில் முடியவில்லை' - இந்திய விமானப்படை தளபதி கவலை

விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சந்தீப் ராய்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதிலும், அதை வழங்குவதிலும் ஏற்படும் தாமதம் குறித்து கவலை தெரிவித்தார். அத்துடன், சில தீவிரமான முக்கிய கேள்விகளையும் அவர் எழுப்பினார்.

2025 மே 29-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, எந்தவொரு பாதுகாப்பு குறித்த திட்டமும் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதில்லை என்றும், உள்நாட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சில முக்கியமான விஷயங்களையும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய விமானப்படை, ராணுவ தளவாட பற்றாக்குறையால் நீண்ட காலமாக போராடி வருகிறது என்பதும், அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்கள் இந்தியாவிடம் இல்லாததும் குறையாகவே இருக்கிறது.

'ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்' போர் விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அவை உற்பத்தி செய்யப்படுவதற்கும், தயாரிக்கப்பட்ட பிறகு அவற்றை பயன்படுத்துவதற்கும் இன்னும் நீண்ட காலம் எடுக்கும்.

ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் தெரிவித்த கவலைகள் உண்மையானவை என இந்திய விமானப்படையின் முன்னாள் தலைவர் வி.ஆர். செளத்ரி ஆமோதிக்கிறார்.

விமானம், இந்திய விமானப்படை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கொள்முதல் செய்ய யாரிடம் ஒப்புக்கொள்கிறீர்களோ அவர்களிடம் இருந்து உறுதியான உத்தரவாதத்தைப் பெற வேண்டிய அவசியம் உள்ளது. வாக்குறுதியளிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வேலையை முடிப்பார்கள் என்ற உறுதியான உத்தரவாதத்தை அவர்களிடம் இருந்து பெற வேண்டும்.

அவர்கள் வேலையை முடிக்கத் தவறினால், அல்லது சில ஆண்டுகளுக்கு முன்னரே, காலக்கெடுவிற்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது என்று அவர்கள் நம்மிடம் கூறியிருந்தால், மாற்று வழிகளைக் கண்டறிந்திருக்கலாம்," என்று NDTV செய்தி சேனலிடம் பேசிய இந்திய விமானப்படையின் முன்னாள் தலைவர் வி.ஆர். செளத்ரி தெரிவித்தார்.

பாதுகாப்பு கொள்முதல் மற்றும் விநியோகங்களில் காணப்படும் நீண்ட இடைவெளி மற்றும் திட்டமிடப்பட்ட நேரத்தை விட பல மடங்கு காலதாமதம் ஏற்படுவது போன்றவற்றால் விரக்தி அதிகரித்து வருவதாகக் கூறும் பாதுகாப்பு நிபுணர்கள், இதையே விமானப்படை ஏர் சீஃப் மார்ஷலின் அறிக்கை பிரதிபலிப்பதாக கூறுகின்றனர்.

கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் நாளன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலும், அதற்கு பதிலடி கொடுக்க மே 7ம் தேதியன்று பாகிஸ்தானுக்குள் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதலும், அதனையடுத்து சில நாட்கள் நடைபெற்ற சண்டையின் பின்னணியில் ஏர் சீப் மார்ஷலின் கவலை பார்க்கப்படுகிறது.

நான்கு நாள்கள் நடைபெற்ற ராணுவ மோதலுக்குப் பிறகு, பாதுகாப்பு தளவாட உற்பத்தியை தீவிரப்படுத்துவது தொடர்பான வாத-விவாதங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன.

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மேலும் முனைப்பு காட்ட வேண்டிய அவசியத்தின் பின்னணியில் விமானப்படைத் தளபதியின் அறிக்கையைப் பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம்,PIB

படக்குறிப்பு,இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு அமைப்பு

விமானப்படைத் தளபதி என்ன சொன்னார்?

வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) வருடாந்திர வணிக மாநாட்டில் பேசிய விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங், 'ஒரு திட்டம் கூட சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை' என்று கூறினார்.

"ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே, அவை ஒருபோதும் சரியான நேரத்தில் வந்து சேராது என்பது எங்களுக்குத் தெரியும். காலக்கெடு என்பது முக்கியமான பெரிய பிரச்னை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை ஏன் வழங்க வேண்டும்?" என்று ஏர் மார்ஷல் கேள்வி எழுப்பினார்.

டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தற்போது நாம் மேக் இன் இந்தியா' என்பதுடன் சேர்த்து 'டிசைன் இன் இந்தியா' என்பதையும் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என்று கூறினார்.

உள்நாட்டிலேயே ஆயுதங்களை உருவாக்க இந்திய அரசு முயற்சிக்கிறது. இருந்தபோதிலும், தற்போதும்கூட இந்தியாவிற்கு தேவையான ஆயுதங்களில் பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்தே வாங்கப்படுகிறது. பல சமயங்களில், இவற்றை வாங்குவதற்கான முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றால், அவற்றை வழங்குவதிலும் நிறுவனங்கள் பெரும்பாலும் தாமதம் செய்கின்றன.

"கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் போது, அது விரைவில் செயல்படுத்தப்படாது என்பது தெரிந்தாலும்கூட அடுத்து என்ன செய்வது என்பதை பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற நினைப்பிலேயே கையெழுத்திடுகிறோம். இயற்கையாகவே, செயல்முறைகள் தடம் புரண்டு விடுகின்றன" என்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கூறினார்.

83 தேஜாஸ் எம்கே 1ஏ இலகுரக போர் விமானங்கள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்தின் பின்னணியில் விமானப்படைத் தளபதியின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம், 2021ஆம் ஆண்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் கையெழுத்தானது.

70 எச்டிடி-40 ரக பயிற்சி விமானங்களை வாங்குவதற்காக எச்ஏஎல் உடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

"விமானப்டையை பொறுத்தவரை, எங்கள் கவனம் திறன் மற்றும் திறமையை சார்ந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வது பற்றி மட்டுமே இனி பேச முடியாது, இந்தியாவிலேயே வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்க வேண்டும்" என்று விமானப்படைத் தளபதி கூறினார்.

பாதுகாப்புப் படைகளுக்கும் தொழில்துறைக்கும் இடையே நம்பிக்கை மற்றும் வெளிப்படையான உரையாடலின் அவசியத்தை வலியுறுத்திய அவர், "மேக் இன் இந்தியா திட்டத்தைப் பொருத்தவரை, ஐஏஎஃப், சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என்றார்.

முன்னதாக, இந்திய விமானப்படை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தன்னிறைவு மட்டுமே ஒரே தீர்வு என்பதை உணர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

"எதிர்காலத்தில் தயாராக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்போது நாம் செயல்பட வேண்டும் என்பதே கவலையாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியத் தொழில்துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (DRDO) அதிக உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலும், இன்றைய தேவைகளை இப்போதே பூர்த்தி செய்யவேண்டும்" என்று விமானப்படைத் தளபதி தெரிவித்தார்.

"இப்போதைய தேவைகளுக்காக துரிதமான சில மேக் இன் இந்தியா திட்டங்கள் தேவைப்பட்டாலும், எதிர்காலத்தில் டிசைன் இன் இந்தியா திட்டங்களே தொடர்ந்து பலனைத் தரும்" என்று அவர் கூறினார்.

இந்திய விமானப்படையிடம் மொத்தம் 2,229 விமானங்கள் உள்ளன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய விமானப்படையிடம் மொத்தம் 2,229 விமானங்கள் உள்ளன

நிபுணர்களின் கருத்து என்ன?

இது குறித்து பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடியிடம் பிபிசி பேசியது. "பாதுகாப்பு அமைச்சகத்தில் செயல்படும் அமைப்பு, காலவரையறை இல்லாமல் செயல்படுவது ஆயுதப்படையினரிடமும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.

"எந்தவொரு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் செயல்முறையிலும், ஒப்பந்தம் தொடங்கிய பிறகு, திட்டம் 36 முதல் 40 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், திட்டம்12 கட்டங்களைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் சிற்சில தடைகளும் தாமதங்களும் ஏற்படுவதால் தான், இந்தத் திட்டங்கள் முடிவடைய சராசரியாக ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகிறது" என்று ராகுல் பேடி கூறுகிறார்.

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் (AMCA) பற்றி பேசும் ராகுல் பேடி, "இதற்கு தற்போதுதான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அதன் முதல் மாடல் 2035 இல் வரும், அதற்கு பிறகு உற்பத்தி செய்ய மேலும் மூன்று ஆண்டுகள் ஆகும். அதாவது, அது விமானப்படையில் சேர சுமார் 13 ஆண்டுகள் ஆகும், அதுவும் திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால்மட்டுமே" என்று கூறினார்.

மேலும், "5வது தலைமுறை போர் விமானத்தை உருவாக்க இந்தியா 2007-08 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் 11 ஆண்டுகள் தொடர்ந்தன, அதற்காக சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்களும் செலவிடப்பட்டன, ஆனால் 2018 இல் அது தோல்வியுற்றதாகக் கருதப்பட்டு கைவிடப்பட்டது. ஆனால் ரஷ்யா AFGFAவில் தொடர்ந்து பணியாற்றி, சுகோய்-57 ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கிவிட்டது. நாம் அந்த பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாக முடித்திருந்தால், தற்போது நம்மிடம் ஒரு ஸ்டெல்த் போர் விமானம் இருந்திருக்கும்."

"இந்திய விமானப்படைக்கு சுமார் 42 ஸ்குவாட்ரன் போர் விமானங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதில் 30 ஸ்குவாட்ரன்கள் தான் இருக்கிறது. இவற்றிலும், இரண்டு முதல் மூன்று ஸ்குவாட்ரன் போர் விமானங்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளன. இதன் பொருள் விமானப்படையில் சுமார் 28 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே இருக்கும்" என்று அவர் கூறினார்.

AMCA, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,எதிர்காலத்தில் போர்களில் விமானப்படை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

2018-19 ஆம் ஆண்டில் 114 போர் விமானங்கள் தேவை என இந்திய விமானப்படை முன்மொழிந்திருந்தது. அதில் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறும் ராகுல் பேடி, விமானப்படைத் தளபதியின் ஆதங்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும் என்று சொல்கிறார்.

மேலும் "ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளில் இந்திய விமானப்படையின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் சில விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எதுவுமே தெளிவாகக் கூறப்படவில்லை. நிச்சயமாக இந்திய விமானப்படை தனது தயார்நிலையை மதிப்பீடு செய்து வருகிறது."

ரஃபேல் ஒப்பந்தத்தை பாதுகாப்பு கொள்முதல் தாமதத்திற்கு மற்றொரு உதாரணமாக கூறலாம். 2007-08இல் தொடங்கிய பேச்சுவார்த்தை, 2016இல் பிரதமர் மோடி பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டபோது இறுதியானது, அதன் விநியோகம் 2018இல் தொடங்கியது.

"தேஜாஸ் வடிவத்தில் இன்று நமக்கு முன் இருக்கும் இலகு ரக போர் விமானம் (LCA) தொடர்பான பேச்சுவார்த்தை 1981 இல் தொடங்கியது. அதன் வன்பொருளில் 45 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது என்று CAG அறிக்கை கூறியது. விமானத்தின் மிக முக்கியமான பகுதி என்ஜின் தான். அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெல்த் போர் விமானத்திற்கான என்ஜினையும் நாம் உருவாக்கவில்லை. நம்மால் சொந்தமாக எந்தவொரு என்ஜினையும் உருவாக்க முடியவில்லை" என்று ராகுல் பேடி கூறுகிறார்.

"ஹெலிகாப்டர் என்ஜின்களுக்கான தொழில்நுட்பம் பிரான்சிலிருந்து வாங்கப்பட்டு, உரிமத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது. அர்ஜுன் டேங்கில் ஜெர்மன் என்ஜின் என்றால், தேஜாஸின் என்ஜின் அமெரிக்காவிலிருந்து வருகிறது. மிகச்சிறிய என்ஜின் கூட இறக்குமதி செய்யப்படுகிறது. இது உள்நாட்டு போர் விமானத்தை உருவாக்குவதில் பெரிய தடையாக இருக்கிறது" என்கிறார் அவர்.

ராகுல் பேடியின் கூற்றுப்படி, "விமானப்படைத் தளபதியின் கவலையின் அர்த்தம் என்னவென்றால், உள்நாட்டில் தயாரிக்க முடியாத எந்தவொரு உபகரணத்தையும் வெளிநாட்டிலிருந்து வாங்கி இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்."

'ஆகாஷ் தீர்'

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,'ஆகாஷ் தீர்' இலக்கு துல்லியமானது என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளது

இந்திய ராணுவத்தின் பலம்

குளோபல் ஃபயர் பவர் கூற்றுப்படி, ராணுவ பலத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எட்டு இடங்கள் இடைவெளி உள்ளது.

2025ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ராணுவ பலத்தைப் பொருத்தவரை, 145 நாடுகளில் இந்தியா தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தானின் 12ஆம் இடத்தில் உள்ளது.

இந்திய ராணுவத்தில் சுமார் 22 லட்சம் ராணுவ வீரர்கள், 4,201 டாங்கிகள், சுமார் 1.5 லட்சம் கவச வாகனங்கள், 100 தானியங்கி பீரங்கிகள் மற்றும் 3,975 இழுத்துச் செல்லப்படும் பீரங்கிகள் உள்ளன. இது தவிர, மல்டி-பேரல் ராக்கெட் பீரங்கிகள் 264 உள்ளன.

இந்திய விமானப்படையில் 3 லட்சத்து 10 ஆயிரம் வீரர்கள் மற்றும் மொத்தம் 2,229 விமானங்கள் உள்ளன.

இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளிடமும் மொத்தம் 899 ஹெலிகாப்டர்கள் உள்ளன, அவற்றில் 80 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகும்.

இந்திய கடற்படையில் 1.42 லட்சம் வீரர்கள் உள்ளனர், இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள், 13 டெஸ்ட்ராயர் கப்பல்கள், 14 போர்க்கப்பல்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள், 18 சிறிய ரக போர் கப்பல்கள் உட்பட மொத்தம் 293 கப்பல்கள் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1w3zjrzdj2o

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

சீனா, பாகிஸ்தானும், இந்தியாவும் தாம் கைப்பற்றி வைத்திருக்கும் காஸ்மீரை விடுவித்து காஸ்மீரை சுதந்திர நாடாக அங்கீகரித்தால் இப்படி தேவையில்லாத வலிகள் இருக்காது பிராந்தியம் நிம்மதியாக இருக்கும் (எதுக்கு அடுத்தவன் சொத்திற்கு ஆசைப்படுவது?).

முதலில் அன்றாட வாழ்க்கைக்கு வழியில்லாமல் அல்லாடும் மக்களை மேம்படுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் எனும் மனநிலை சாதாரண மக்களுக்கு ஏற்பட்டால் மட்டுமே உசுப்பேற்றும் போலி தேசி அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

முதலில் தேசமாக ஒன்றினையாமல் (மதம், சாதி, வர்க்க) இந்த ஆயுதங்களை உருவாக்குவதால் எந்த பலனும் ஏற்படாது (இந்தியாவில் அது எப்போதும் நிகழாது).

உண்மை. இந்த உண்மை சாதாரண மக்களிடம் சென்றடைவதைத் தடுப்பதில் ஊடகங்களின் உசுப்பேத்தலும் வெற்றி முரசுகளும் முன்னிலையில் உள்ளன. கிந்திய இந்தியாவில் அன்றாடங்காய்ச்சிகளாக வாழும் மக்களும் தமது பசியை மறந்து இந்த உசுப்பேத்தலில் மயங்கிவீழ்ந்துவிடுவர். மும்பையின் சேரி வாழ் மக்களை மீட்க இந்ந யுத்தத் தளபாடச் செலவுகளைப் பயன்படுத்தலாமே.

ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களைத் தேடும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு இந்தக் காணொளி சமர்ப்பணம்.

நட்பார்ந் நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கும் விமானங்கள் உபகரணங்கள் முற்று முழுதான பயன்பாட்டு தன்மை கொண்டவையாக இருக்காது, அவற்றிற்கு பயன்படுத்தும் ஜிபிஎஸ் உள்ளடலங்கலாக அவை மேற்கின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, கடந்தகாலத்தில் போர் காலத்தில் இராணுவ அளவு கொண்ட ஜிபிஎஸ் மட்டுமல்ல சாதாரண ஜிபிஎஸ் இனை பயன்படுத்த முடியாதவாறான நிர்ப்பந்தத்தில் இந்தியா இருந்திருகின்றது.

தற்போது வாங்கும் மேற்கு நாடுகளின் விமானங்கள் அதன் மென்பொருள் மேம்படுத்தல் நடவடிக்கை மட்டுமல்ல சாதாரண உபயோகத்திற்கு முன்னரான இயங்குநிலை சரிபார்க்கும் நடவடிக்கை (Start up checklist - sys login, upload mission data, sys health check) முடிக்கும் போது அது தயாரிப்பாளருக்கு அது தொடர்பான தகவலை அனுப்பிவிடும்.

இது ஒரு வகையில் சரியான விடயமாகவே உள்ளதாக தற்போது கருதுகிறேன், ஏனெனில் இந்தியா ஒரு ஆபத்தான சக்தியாக தெற்காசிய பிராந்தியத்தில் உருவெடுத்துள்ளது, இதற்கு உதாரணமாக அண்மைய பாகிஸ்தான் போரில் இந்தியா பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கினை தகர்த்தாகவும் அதனால் 3 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் இந்தியர்கள் பெருமை பேசுகிறார்கள்.

பாகிஸ்தான் மக்களையோ அல்லது இராணுவத்தினையோ தாக்கவில்லை வெறும் பயங்கரவாதிகளை மட்டும் தாக்குவதாக கூறிக்கொண்டு ஆரம்பித்த இந்தியாவின் நடவடிக்கை உலக அழிவின் விழிம்புவரை செல்லும் பைத்தியக்கார மனநிலைக்கு சென்றுள்ளார்கள், சாமானிய இந்தியர்கள் அதனை ஒரு தவறாக பார்க்காமல் அதனை ஒரு வெற்றியாக கருதும் முட்டாள்களாக உள்ளார்கள் (இந்த அழிவினால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்).

இந்தியா ஒரு தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசாக வருகிறதோ தெரியவில்லை ஆனால் நிச்சயமாக ஒரு நாசகார சக்தியாக உருவெடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதிலும், அதை வழங்குவதிலும் ஏற்படும் தாமதம் குறித்து கவலை தெரிவித்தார். அத்துடன், சில தீவிரமான முக்கிய கேள்விகளையும் அவர் எழுப்பினார்.

முன்பு மற்ற திரியில் சொல்லி இருக்கிறேன். இப்பொது உதோயோக பூர்வமாக.

கார்கிலில் கணடறியப்பட்டதை கூட முழுமையாக சரி செய்யாத நிலை.

2 hours ago, vasee said:

இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கும் விமானங்கள் உபகரணங்கள் முற்று முழுதான பயன்பாட்டு தன்மை கொண்டவையாக இருக்காது, அவற்றிற்கு பயன்படுத்தும் ஜிபிஎஸ் உள்ளடலங்கலாக அவை மேற்கின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, கடந்தகாலத்தில் போர் காலத்தில் இராணுவ அளவு கொண்ட ஜிபிஎஸ் மட்டுமல்ல சாதாரண ஜிபிஎஸ் இனை பயன்படுத்த முடியாதவாறான நிர்ப்பந்தத்தில் இந்தியா இருந்திருகின்றது.

தற்போது வாங்கும் மேற்கு நாடுகளின் விமானங்கள் அதன் மென்பொருள் மேம்படுத்தல் நடவடிக்கை மட்டுமல்ல சாதாரண உபயோகத்திற்கு முன்னரான இயங்குநிலை சரிபார்க்கும் நடவடிக்கை (Start up checklist - sys login, upload mission data, sys health check) முடிக்கும் போது அது தயாரிப்பாளருக்கு அது தொடர்பான தகவலை அனுப்பிவிடும்.

இது ஒரு முக்கிய காரணம் வேறு வேறு நாடுகளில் இருந்து இந்தியா கொள்வனவு செய்து, அவற்றை ஒருங்கணைக வேண்டும் என்பது இந்தியா கொள்கை.

இதை சிலர் மேற்கு சாய்வாக எடுப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கும் விமானங்கள் உபகரணங்கள் முற்று முழுதான பயன்பாட்டு தன்மை கொண்டவையாக இருக்காது, அவற்றிற்கு பயன்படுத்தும் ஜிபிஎஸ் உள்ளடலங்கலாக அவை மேற்கின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, கடந்தகாலத்தில் போர் காலத்தில் இராணுவ அளவு கொண்ட ஜிபிஎஸ் மட்டுமல்ல சாதாரண ஜிபிஎஸ் இனை பயன்படுத்த முடியாதவாறான நிர்ப்பந்தத்தில் இந்தியா இருந்திருகின்றது.

தற்போது வாங்கும் மேற்கு நாடுகளின் விமானங்கள் அதன் மென்பொருள் மேம்படுத்தல் நடவடிக்கை மட்டுமல்ல சாதாரண உபயோகத்திற்கு முன்னரான இயங்குநிலை சரிபார்க்கும் நடவடிக்கை (Start up checklist - sys login, upload mission data, sys health check) முடிக்கும் போது அது தயாரிப்பாளருக்கு அது தொடர்பான தகவலை அனுப்பிவிடும்.

இது ஒரு வகையில் சரியான விடயமாகவே உள்ளதாக தற்போது கருதுகிறேன், ஏனெனில் இந்தியா ஒரு ஆபத்தான சக்தியாக தெற்காசிய பிராந்தியத்தில் உருவெடுத்துள்ளது, இதற்கு உதாரணமாக அண்மைய பாகிஸ்தான் போரில் இந்தியா பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கினை தகர்த்தாகவும் அதனால் 3 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் இந்தியர்கள் பெருமை பேசுகிறார்கள்.

பாகிஸ்தான் மக்களையோ அல்லது இராணுவத்தினையோ தாக்கவில்லை வெறும் பயங்கரவாதிகளை மட்டும் தாக்குவதாக கூறிக்கொண்டு ஆரம்பித்த இந்தியாவின் நடவடிக்கை உலக அழிவின் விழிம்புவரை செல்லும் பைத்தியக்கார மனநிலைக்கு சென்றுள்ளார்கள், சாமானிய இந்தியர்கள் அதனை ஒரு தவறாக பார்க்காமல் அதனை ஒரு வெற்றியாக கருதும் முட்டாள்களாக உள்ளார்கள் (இந்த அழிவினால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்).

இந்தியா ஒரு தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசாக வருகிறதோ தெரியவில்லை ஆனால் நிச்சயமாக ஒரு நாசகார சக்தியாக உருவெடுத்துள்ளது.

ஏன் தேஜஸ் என ஒரு பேரிச்சம்பழத்துக்கு போடும் விமானத்தை செய்தவை எல்லோ🤣.

அண்மைய போரில் அதை மேலே எழுப்பகூடவில்லை….அந்தளவுதான் மேட் இன் இந்தியாவின் சீத்துவம்.

அமெரிக்காவின் F 35 வை வேற வாங்க ஆசையாம் 🤣. ரபேல் போல அதன் மானத்தைதையும் கப்பல் ஏற்றி விடுவார்கள் சப்பாத்தி ஸ்கூவாட்றன். அமரிக்கா விழித்து கொள்ள வேண்டும் 🤣.

👆தாம் விமானங்களை இழந்ததை முதன்முதலாக ஒத்துகொள்ளும் இந்தியாவின் படைக்களின் பிரதானி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

முன்பு மற்ற திரியில் சொல்லி இருக்கிறேன். இப்பொது உதோயோக பூர்வமாக.

கார்கிலில் கணடறியப்பட்டதை கூட முழுமையாக சரி செய்யாத நிலை.

இது ஒரு முக்கிய காரணம் வேறு வேறு நாடுகளில் இருந்து இந்தியா கொள்வனவு செய்து, அவற்றை ஒருங்கணைக வேண்டும் என்பது இந்தியா கொள்கை.

இதை சிலர் மேற்கு சாய்வாக எடுப்பது.

ஒரு நல்ல நெறி முறை இல்லா படையிடம் (ethics), எந்த வித ஒழுக்கமும் (morals) இருக்காது அவர்களிடம் அழிவு ஆயுதம் இருக்குமாயின் அது உலக அழிவிற்கு வழிவகுக்கும், இதற்கு முழுக்காரணம் இந்திய குடிமக்களே.

ஆனால் இவர்களிற்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் குறைந்த பட்ச நெறிமுறையினையாவது பின்பற்றவேண்டும்.

ஒரு சாதாரண எல்லை முறுகலை அணு ஆயுத அழிவு வரை எடுத்து செல்வது பைத்தியக்காரத்தனம், இப்படியான பைத்தியக்காரர்களுக்கு ஆயுதம் வழங்கும் போது அது பற்றி உலகு சிந்திக்கவேண்டும்.

இரண்டு ஆக்கிரமிப்பு நாடுகளும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும், உயரொழுக்கம் கொண்ட அரசியல் தலைமகளை மக்கள்தான் உருவாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

ஒரு நல்ல நெறி முறை இல்லா படையிடம் (ethics), எந்த வித ஒழுக்கமும் (morals) இருக்காது அவர்களிடம் அழிவு ஆயுதம் இருக்குமாயின் அது உலக அழிவிற்கு வழிவகுக்கும், இதற்கு முழுக்காரணம் இந்திய குடிமக்களே.

ஆனால் இவர்களிற்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் குறைந்த பட்ச நெறிமுறையினையாவது பின்பற்றவேண்டும்.

ஒரு சாதாரண எல்லை முறுகலை அணு ஆயுத அழிவு வரை எடுத்து செல்வது பைத்தியக்காரத்தனம், இப்படியான பைத்தியக்காரர்களுக்கு ஆயுதம் வழங்கும் போது அது பற்றி உலகு சிந்திக்கவேண்டும்.

இரண்டு ஆக்கிரமிப்பு நாடுகளும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும், உயரொழுக்கம் கொண்ட அரசியல் தலைமகளை மக்கள்தான் உருவாக்க வேண்டும்.

ஆசியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே அண்டை நாடுகளில் தீவிர, பயங்கர, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் எப்பொதும் முதல் 5க்குள் வரும்.

  1. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்கள், பின்னர் தாலிபான். இந்தியாவில் காலிஸ்தானிகள், கஸ்மீரிகள்.

  2. இந்தியா - இலங்கை, வங்கதேசம், பாலூச்சிஸ்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

ஒரு நல்ல நெறி முறை இல்லா படையிடம் (ethics), எந்த வித ஒழுக்கமும் (morals) இருக்காது அவர்களிடம் அழிவு ஆயுதம் இருக்குமாயின் அது உலக அழிவிற்கு வழிவகுக்கும், இதற்கு முழுக்காரணம் இந்திய குடிமக்களே.

ஆனால் இவர்களிற்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் குறைந்த பட்ச நெறிமுறையினையாவது பின்பற்றவேண்டும்.

ஒரு சாதாரண எல்லை முறுகலை அணு ஆயுத அழிவு வரை எடுத்து செல்வது பைத்தியக்காரத்தனம், இப்படியான பைத்தியக்காரர்களுக்கு ஆயுதம் வழங்கும் போது அது பற்றி உலகு சிந்திக்கவேண்டும்.

இரண்டு ஆக்கிரமிப்பு நாடுகளும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும், உயரொழுக்கம் கொண்ட அரசியல் தலைமகளை மக்கள்தான் உருவாக்க வேண்டும்.

நெறிமுறயை மேற்கு எப்போதாவது கடைபிடித்ததா அதுக்கு வரும் போது?

இன்று வட கொரியாவை மேற்கு தாக்காத காரணம் என்ன?

அனல், ஈரானை தாக்குவோம் என்று நிற்பதும்.

இந்தியாவுக்கு ஆயுதம் வழங்குவது, வழங்கும் போக்கை காட்டுவது மேற்கு, குறிப்பாக us.

ஏனெனில், மிகவும் உயர் மட்டத்தில் சீனாவுக்கு எதிரான சமப்படுத்தும் அரசாக நோக்குவது.

அத்துடன் , குறிப்பாக, இந்தியா இப்போதும் அதன் மதி காலனித்துவத்தில் இருந்து விடுபட முடியாமையும்.

அதாவது காலனித்துவதில் இருந்த, உருவாக்கிய மட்டங்களை (hierarchy) ஐ விரும்புவதும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.