Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பிரபாகரனுடையது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் இதைச் சொன்னதற்காக நான் சுடப்படலாம்," என்று எம்.பி. கூறினார்.

"பிரபாகரன் 2009 க்கு முன்பு தாய்லாந்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றார்," என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கு பதிலளித்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார். 

"அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம், ஆனால் அவர் பைத்தியம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது," என்று எம்.பி. மேலும் கூறினார்.



Tamilmirror Online || ”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன”

  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆம் ஆண்டுக்கு முன் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த பொருட்கள் தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன : 300 கொள்கலன்கள் குறித்து அர்ச்சுனா வெளியிட்ட பரபரப்பு தகவல் 

Published By: VISHNU

06 JUN, 2025 | 06:39 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அண்மையில்  இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன. 2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேர்தல் காலத்தில் பிரபாகரனின் சிலையை அமைப்பதாகவும் பிரபாகரன் கடவுள் என்றும் ஆளும் தரப்பால் பாடலும் உருவாக்கப்பட்டது. அந்த பாட்டு என்னிடம் உள்ளது. வேண்டுமென்றால் அதனை சபையிலும் சமர்பிக்கலாம். மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு கூறினர். அத்துடன் பிரபாகரனின் அம்மாவின் பெயரில் ஜெற்றி ஒன்றை அமைப்பதாகவும் அந்த பாடலில் கூறினர். அந்தளவுக்கு பொய்களை கூறினர்.

இதேவேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் 300 கொள்கலன்கள் தொடர்பான கதைகள் கூறப்பட்டன. இப்போது இது தொடர்பில் கூறுவதால் எனக்கு சூடுகள் படலாம். ஆனாலும் இதனை கூறியாக வேண்டும். அதாவது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அங்கே புலம்பெயர்ந்தோரை சந்தித்தார். அங்கே இந்த நாட்டில் செய்ய முடியாதவற்றை செய்ய முடியுமென்று வாக்குறுதிகளையும் வழங்கினர். அத்துடன் தாய்லாந்தில் இருந்த கொள்கலனில் இருந்த பொருட்கள் பிரபாகரனுடையது. 2009க்கு முன்னர் பிரபாகரன் கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் எஞ்சியிருந்து அதனை குமரன் பத்மநாதன் ஊடாக இப்போது இவர்கள் கொள்கலன்கள் ஊடாக இங்கே கொண்டுவந்துள்ளனர் என்று மக்கள் கதைக்கின்றனர்.

எனக்கு ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் கதைத்தனர். அங்கே எஞ்சியிருந்த ஆயுதங்கள் கொள்கலனில் போட்டு அண்மையில் கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அந்த 300 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டவை பிரபாகரனின் ஆயுதங்களே ஆகும். தாய்லாந்தில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கு சென்று இறுதியில் இங்கே கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை இவற்றை கூறுவதால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். ஜுன் 26ஆம் திகதி வழக்கு உள்ளது. என்னை  சிறைக்கு அனுப்பலாம். ஆனால் நான் எப்போதாவது வெளியில் வருவேன். ஆனால் நான் அஞ்சவில்லை. ஜனாதிபதி மீண்டும் ஜெர்மனிக்கு போகின்றார். புலிகளின் டயஸ்போராவின் ஜெர்மனியில் உள்ள தலைவர் ஒருவர் என்னிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி வந்தபோது பணம் கொடுத்ததாக கூறினார். நான் புலம்பெயர்நதோரிடம் இருந்து பெற்ற பணம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் உங்களால் அதனை கூற முடியுமா? என்றார்.

https://www.virakesari.lk/article/216732

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்ட கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருக்கவில்லை – சுங்க இயக்குநர் விளக்கம்

June 8, 2025 12:45 pm

அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்ட கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருக்கவில்லை – சுங்க இயக்குநர் விளக்கம்

சுங்க ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும், 323 கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லை என்று சுங்க ஊடகப் பேச்சாளர் கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகொட தெரிவித்துள்ளார்.

குறித்த கொள்கலன்களை விடுவித்தமை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்துவதற்காக இலங்கை சுங்கத்தால் இன்று (08) கூட்டப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கொள்கலன்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டதாகக் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், பிளாஸ்டிக், நூல்கள், இரசாயனங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், கால்நடை தீவனம், இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள், சிமெந்து, இரும்பு குழாய்கள், உரங்கள் மற்றும் மரம் ஆகியவை இருந்தன.

இந்த கொள்கலன்கள் பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

கூடுதலாக, இந்த கொள்கலன்கள் இந்தோனேசியா, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.

இந்தக் கொள்கலன்களை விடுவிப்பதில் நாங்கள் பின்பற்றிய வழிமுறையின் காரணமாக, இறக்குமதியாளர்கள் சுங்கத்திற்கு அறிவித்த பொருட்கள் மட்டுமே இந்தக் கொள்கலன்களில் இருந்ததாக நாங்கள் நம்புகிறோம்.

இந்தப் பொருட்களை விடுவிப்பதற்கான இறக்குமதிக் குறிப்புகளில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னரே இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.

“நாங்கள் ஸ்கிரீனிங் யூனிட் என்ற ஒரு குழுவை நிறுவி, அந்தக் குழுவிற்கு அளவுகோல்களை வழங்கி, ஆய்வு இல்லாமல் சட்டப்பூர்வமாக விடுவிக்கக்கூடிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான அதிகாரத்தை அந்தக் குழுவிற்கு வழங்கியுள்ளோம்

அவர்களின் நடைமுறை, இந்தக் குழுவில் சுமார் 25-30 ஆண்டுகளாக சுங்கத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இருப்பதைக் காட்டுகிறது. அவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் நிறைய அறிவும், தெளிவும் உள்ளது.

குழுவினரின் அறிவையும் நாங்கள் வழங்கிய அளவுகோல்களையும் பயன்படுத்தி, அதன் அளவுகோல்களுக்கு இணங்கும் கொள்கலன்களை விடுகிக்கின்றோம்.

ஜூலை 2024 இல் இந்த முறையை செயல்படுத்தத் தொடங்கினோம். ஜனவரி 2025 இல் தான் மேற்குறித்த 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. அதுவரை, பல சந்தர்ப்பங்களில் கணிசமான எண்ணிக்கையிலான கொள்கலன்கள் இந்த வழியில் விடுவிக்கப்பட்டுள்ளன.”

எவ்வாயிறும், குறித்த கொள்கலன்களில் ஆயுதங்கள், தங்கம் மற்றும் போதைப் பொருள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனவே இந்தத் தேர்வு முறையை நாங்கள் பின்பற்றியதால், இந்தக் கொள்கலன்களில் எதுவும் இல்லை என்று நாங்கள் நம்பிக்கையுடன் கூறமுடியும்.

இருப்பினும், இது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடந்ததால், இதற்காக ஒரு பிந்தைய அனுமதி தணிக்கை நடத்த இலங்கை சுங்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பிந்தைய அனுமதித் துறை ஏற்கனவே ஒரு தணிக்கையை நடத்தி வருகிறது.

மேலும், நிதி அமைச்சகத்தின் செயலாளரால் நியமிக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழு இந்த முழு செயல்முறையையும் விசாரித்துள்ளது.

சுங்க இயக்குநர் ஜெனரல் உட்பட அனைத்து அதிகாரிகளும் இந்தக் குழுவிற்குச் சென்று விவரங்களை வழங்கியுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறைக்கும் நாங்கள் விவரங்களை வழங்கியுள்ளோம், எனவே எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

“மேலும் இந்த கொள்கலன்களை விடுவிக்கும் செயல்பாட்டில் வேறு எந்த தரப்பினரிடமிருந்தும் எந்த உத்தரவும் அல்லது செல்வாக்கும் இல்லை. நான் அதை முற்றிலும் உறுதியாகக் கூற முடியும்.” என்றார்.

இதேவேளை, அண்மையில் நாடாளுமன்றில் பேசிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், சுங்க ஆய்வு செய்யாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சும் இதனை முற்றாக மறுத்திருந்தது. 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இதேவேளை, 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/sri-lanka-customs-issues-clarification-on-contents-of-controversial-containers/

  • கருத்துக்கள உறவுகள்

323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம் - ஜனாதிபதியும் உண்மையை மறைப்பதற்கு முயற்சி; முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

12 JUN, 2025 | 07:44 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை சுங்கத்தில் இருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுள்ளார். அதனாலே ஊழல் இடம்பெறும் அரச துறைகளை பெயரிடும்போது ஜனாதிபதி இலங்கை சுங்கத்தை தெரிவிக்காமல் விட்டார். சுங்கம் நிதி அமைச்சின் கீழ் இருப்பதால் ஜனாதிபதி திட்டமிட்டே அதனை மறைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவ்ர அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்லன்கள்தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அரசாங்கம் இதுதொடர்பில் எந்த அறிவிப்பையும் விடுக்காமல் இருக்கிறது. இந்த கொள்கலன் விடுவிக்கப்பட்ட விடயத்தை அரசியல்வாதிகள் யாரும் வெளிப்படுத்தவில்லை.

மாறாக சுங்க தொழிறசங்கமே இது தொடர்பில் ஜனவரி மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில் கட்டாயம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இனம் காணப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க தொழிற்சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்தே இதுதொடர்பில் ஏனைய தரப்பினருக்கும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதை தெரிந்துகொள்ள முடியுமாகி இருந்துள்ளது.

ஆனால் சம்பவம் இடம்பெற்று 6 மாதங்களுக்கு பின்னர் சுங்கத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, குறித்த கொள்கலன்களை விடுவிப்பில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை எனவும் அதுதொடர்பில் மேலிடத்தில் இருந்து யாரும் அறிவிக்கவில்லை என்றும், அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என சில பொருட்களின் பட்டியலையும் தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த அதிகாரிக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களே, மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.அதேநேரம் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதுதொடர்பில் பலரும் வினவியபோது எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்த, சுங்க பணிப்பாளர், 6 மாதங்களுக்கு பின்னர் குறித்த கொள்கல்களில் ஆபத்தான் பொருட்கள் எதுவும் இல்லை என தெரிவிப்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? ஏனெனில் தற்போது அந்த பொருட்கள் விடுக்கப்பட்டு முடிந்துள்ளன.

அதேநேரம் அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேசிய பொசன் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல் மோசடி இடம்பெறும் அரச துறைகளை பெயரிட்டு குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற 323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி இதனை வேண்டுமென்றே மறைத்திருக்க வேண்டும். ஏனெனில் சுங்கம் ஜனாதிபதியின் நிதி அமைச்சின் கீழே இருக்கிறது. அதனாலே சுங்க தொழிற்சங்கம் இது தொடர்பில் ஆரம்பமாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டால் இறுதியில் ஜனாதிபதியே இதற்கு பொறுப்பு கூறவேண்டி ஏற்படுகிறது. எனவேதான் ஜனாதிபதி ஊழல் மோசடி இடம்பெறும் அரச துறைகளை பெயரிடும்போது சுங்க திணைக்களத்தை தெரிவிக்காமல் வேண்டுமென்றே மறைத்துள்ளார் என்றார்.

https://www.virakesari.lk/article/217186

  • கருத்துக்கள உறவுகள்

சீஐடிக்கு அழைக்கப்படும் அர்ச்சுனா?

Share This :

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததும் அவரிடம் விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களே சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் இதுவரையில்  நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு

பதிலளிக்கையிலேயே நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
323 கொள்கலன்களில் என்ன இருந்தது என்று எதிர்க்கட்சியினர் ஒன்றாக இருந்து கூறினால் மக்கள் ஏற்றுக்கொள்வர். ஆனால் ஒருவர் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்த என்றும் இன்னுமொருவர் அவற்றில் போதைப் பொருள் இருந்தன என்றும் கூறுவதுடன் இன்னுமொருவர் அதில் வெடிகுண்டு இருந்தது என்றும் கூற ஆரம்பித்துள்ளனர். ஆனால் இது தொடர்பில் மேலதிக சுங்க பணிப்பாளர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான குழுவின் அறிக்கையும் நிதி அமைச்சினால் கையளிக்கும். கடந்த காலங்களில் சரியான அறிக்கைகளை சமர்ப்பித்து பொருட்களை கொண்டுவந்தவர்களுக்கு இது கொள்கலன் விடுவிப்பு தொடர்பான நடைமுறைகளை அறிவர்.
இதேவேளை இந்த விடயத்தில் கம்மன்பிலவின் கருத்தை ஒத்த பொய்யான கருத்தே அர்ச்சுனாவின் கருத்தும். இவர்கள் எதனை கூறினாலும் சுங்கத்தினால் கூறப்பட்டுள்ளவற்றை ஏற்றுக்கொள்கின்றோம். மற்றையவர்கள் கூறும் கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததும் அவர்கள் கூறுவது தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

https://www.samakalam.com/சீஐடிக்கு-அழைக்கப்படும்/

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் என பாராளுமன்றில் தெரிவித்தவர்கள் விசாரணையில் வாக்கு மூலமளிக்கத் தயங்குவது ஏன்? - அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி

11 JUL, 2025 | 04:15 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற  சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும். ஒன்று பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு ஏதும் குறிப்பிட முடியாது, பொய்யுரைக்கவும் முடியாதென சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வின் போது  பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்துக்குள்ளும், பேச்சுரிமையை  பயன்படுத்திக் கொண்டு வெளியிலும்  பொய்யுரைக்கிறார்கள்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்  என்று குறிப்பிட்டார்கள். அது குறித்து எவ்வாறு விசாரிக்காமல் இருக்க முடியும். விசாரணைகளுக்கு செல்ல இவர்கள் ஏன் அச்சமடைகிறார்கள். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு ஏதும் கூற முடியுமா, பொய்யுரைக்க முடியுமா,

323 கொள்கலன்கள் விடுவிப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக குறிப்பிடும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன். கடந்த ஜனவரி மாத காலப்பகுதியில் இந்த கொள்கலன்கள் மேல் மாகாண ஆளுநருடையது என்று அனைவரும் குறிப்பிட்டார்கள். 

பாராளுமன்றத்தில் அதை குறிப்பிட்டு கூச்சலிட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுத்ததன் பின்னர் தற்போது அவ்வாறு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

ஐந்து மாதங்களுக்கு பின்னர் இந்த கொள்கலன்களை நான் விடுவித்ததாக குறிப்பிட்டார்கள். நான் விடுவித்திருந்தால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள், வழக்குத் தாக்கல் செய்யுங்கள்.

அரச நிதியை மோசடி செய்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

கொள்கலன்களை விடுவிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது, அமைச்சர் என்ற வகையில் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் நான் பயன்படுத்துவதில்லை. 

பரிசோதனைகளின்றி கொள்கலன்களை விடுவிப்பதற்கு  எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது. பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பொய்யுரைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற  சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும்.

பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள். கீழ்த்தரமான செயற்பாடு தற்போது வெளிப்பட்டவுடன் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/219744

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.