Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா?

15 Jun 2025, 9:17 PM

T4Xiw42m-Seeman-4.jpg

– ரவிக்குமார்

( Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி யாராவது கள் இறக்கினால் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். )

கள்ளுக்கடையைத் திறக்கவேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். ‘மற்ற மதுவகைகளை அரசாங்கம் அனுமதிக்கிறது. சாராயம் விற்கிறார்கள். அயல்நாட்டு மதுவகைகளைத் தயாரித்து விற்கிறார்கள். அவையெல்லாம் செயற்கையாக இரசாயனப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது.

கள் என்பது இயற்கையாக வடிகிற ஒரு பொருள். அது ஒரு இயற்கை உணவு. அது உடம்புக்கு நல்லது. சாதாரண ஏழைகள் சாப்பிடக் கூடியதாக இருக்கிறது.

அதனால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அப்படி இருக்கும்போது சாராயத்தையும், பிராந்தி விஸ்கி போன்றவற்றையும் விற்க அனுமதிக்கிற அரசாங்கம் அதன் மூலம் பெருமுதலாளிகளுக்கு லாபம் சேர்ப்பதற்குத் துணைபுரிகின்ற இந்த அரசாங்கம் ஏன் கள்ளை மட்டும் விற்கக் கூடாது என்று தடைபோடுகிறது?’ என்று கேட்கிறார்கள்.

அவர்களுடைய இந்த கோரிக்கையை அரசியல் கட்சிகள் சிலவும் ஆதரிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Ka2.jpeg

கஞ்சா வளர்க்கும் போராட்டத்தை நடத்துவார்களா?

கள்ளுக் கடை திறப்பதை ஆதரித்துப் பேசுகிறவர்கள் இது இயற்கையாகக் கிடைக்கிற ஒரு பொருள் என்று வாதிடுகிறார்கள். ‘‘கஞ்சாவும் கூட இயற்கையாகக் கிடைக்கும் ஒரு மூலிகைதான்‘‘ என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக கஞ்சா வளர்க்கும் போராட்டத்தையும் நடத்துவார்களா?

கள் நல்லது என எந்த மருத்துவர் சொன்னார்?

கள் குடித்தால் உடம்புக்கு நல்லது என எந்த மருத்துவரும் சொன்னது இல்லை. மருத்துவ ரீதியாகப் பார்த்தால் கள் என்பது சிலர் சொல்வது மாதிரி உடலுக்குக் கேடு விளைவிக்காதது அல்ல. ஏனென்றால் அதில் ஐந்து சதவீதம் முதல் பத்து சதவீதம்வரை ஆல்கஹால் இருக்கிறது.

நான்கு சதவீதத்துக்குமேல் ஆல்கஹால் இருக்கும் ஒரு பொருளைத் தொடர்ந்து உட்கொண்டால் அது மிகவும் மோசமாக உடலைப் பாதிக்கும். குறிப்பாக மூளையைப் பெரிதும் பாதிக்கும். கள் அருந்துவதால் என்சைம்கள் பாதிக்கப்படுகின்றன.அதனால் நினைவாற்றல் குறைகிறது . இந்த விஷயங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையாகும்.

Ka3.jpg

கள் அருந்துவதால் ஏற்படும் கேடுகள்

கள் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கேரளப் பல்கலைக் கழகத்தின் பயோ கெமிஸ்ட்ரி துறையைச் சேர்ந்த இந்திரா, விஜயம்மாள், ஜே.ஜே.லால் மற்றும் ஸ்ரீரஞ்சித்குமார் ஆகிய நான்கு ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். கள் குடிப்பதால் வளர் பருவத்தில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான கேடுகள் ஏற்படும் என்றும் அவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

சினையாக இருந்த எலிகளைப் பிடித்து அவற்றுக்குத் தினமும் குறிப்பிட்ட அளவு கள்ளைப் புகட்டி அவை குட்டி போட்டதற்குப் பிறகு ஆராய்ந்து பார்த்ததில் அந்தக் குட்டிகளுக்குக் கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே விதமான பாதிப்புகள் மனிதர்களுக்கும் ஏற்படும் என்பதை அந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இயற்கையான ‘ஒரிஜினல்‘ கள்ளைக் குடித்தாலே பிரச்சனை என்னும்போது ‘ கலப்பட கள்‘ குடித்தால் என்ன ஆகும் என்பதற்கு கேரளாவில் அவ்வப்போது கலப்படம் கள் குடித்ததால் ஏற்படும் மரணங்களே சாட்சி.

கள்ளில் கலப்படம்

ஒரு கள்ளுக்கடையை லாபகரமாக நடத்த வேண்டுமென்றால் அதற்குப் போதுமான கள் உற்பத்தி செய்யப்படவேண்டும். அப்படி உற்பத்தி செய்வதற்கு அந்த அளவுக்குத் தென்னை மரங்கள் இருக்கவேண்டும். தென்னை மரம் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து அவற்றைக் கள் இறக்குவதற்கு விடமாட்டார்கள்.

காய்ப்பு பொய்த்துவிடும் என்பதால் ஒரு வருடம் விட்டு ஒரு வருடம்தான் கள் இறக்க விடுவார்கள். அப்படிச் செய்யும்போது கள் இறக்கப் போதுமான மரங்கள் கிடைக்காமல் போய்விடும். இதைச் சமாளிப்பதற்கு மட்டுமின்றி அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் கள்ளுக் கடைக்காரர்கள் கண்டுபிடித்துள்ள உபாயம்தான் கலப்படக் கள் என்பதாகும். கலப்படக் கள் தயாரிப்பதற்கு என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்தால் நாம் கனவில்கூட கள்ளுக்கடையைப் பற்றி நினைக்கமாட்டோம்.

Gtec7NrbgAAHd1D-683x1024.jpg

கள்ளில் உயிருக்கு ஆபத்தான கலப்பட பொருட்கள்

ஸ்பிரிட், க்ளோரல் ஹைட்ரேட், வெள்ளை நிற சாந்து இவைதவிர டையாஸ்பாம் என்னும் மாத்திரையும்கூட கள்ளில் கலக்கப்படுகிறது. இப்படிக் கலப்படம் செய்து தயாரிக்கப்படுகிற ‘கள்ளில்’ இருக்கும் போதை நாற்பது சதவீத ஆல்கஹாலின் போதைக்குச் சமம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி ‘ செயற்கைக் கள்‘ தயாரிப்பதற்கு மட்டுமின்றி இயற்கையாக இறக்குகிற கள்ளிலும்கூட க்ளோரல் ஹைட்ரேட்டைக் கலந்து அதில் தண்ணீர் ஊற்றி கூடுதல் கள்ளை உற்பத்தி செய்வது அநேகமாக எல்லா கள்ளுக் கடைகளிலும் உள்ள நடைமுறையாகும்.‘ இருநூறு லிட்டர் கள்ளில் எழுபது லிட்டர் ஸ்பிரிட்டைக் கலந்து அதில் க்ளோரல் ஹைட்ரேட், டயாஸ்பாம் மாத்திரை போன்றவற்றைச் சேர்த்து தண்ணீர்விட்டுக் கலக்கினால் பத்தாயிரம் லிட்டர் கலப்படக் கள் கிடைக்கும்.

க்ளோரல் ஹைட்ரேட் என்னும் இந்த வேதிப் பொருள் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகும். இதைக் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் மயக்கம், இருதய பாதிப்பு, வாந்தி எனப் பல்வேறு உடல்நலக் கேடுகள் வருவதோடு கல்லீரல் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி இதைத் தொடர்ந்து பாவித்துவந்தால் அந்த நபர் நிரந்தரமாக இதற்கு ‘அடிக்ட்‘ ஆகிவிடுவாரென்றும் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

ஆக, கள் இயற்கை உணவு என்பதும் அதைக் குடித்தால் உடம்புக்கு நல்லது என்பதும் அப்பட்டமான பொய்யே தவிர வேறொன்றுமில்லை. கள் குடிப்பதற்கு ஆதரவான பேச்சு யாவும் அடிப்படையில் மதுவுக்கு ஆதரவான பேச்சே தவிர வேறில்லை. கள்ளுக் கடைகளால் லாபம் ஈட்டி முதலாளிகள் ஆனவர்கள் வேண்டுமானால் சுயநலத்துக்காக அதை ஆதரிக்கலாம். கள்ளுக் கடைகளால் சுயமரியாதையையும் வாழ்க்கையையும் இழந்தவர்கள் அதை ஆதரிக்க முடியாது.

மது ஆதரவு பிரசாரத்துக்கு தடை

மது அருந்துவதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய சட்டப்படி அனுமதி இல்லை. மது அருந்துவதை ஆதரித்து விளம்பரம் செய்வது 1995 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

கள் இறக்கினால் 3 மாதங்கள் சிறை

Kal1.jpeg

கள் இறக்குவதென்பது தமிழ்நாட்டில் சட்டப்படி குற்றமாகும். Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி ஒருவர் கள் இறக்கினால் 3 மாதங்கள் வரை அவருக்கு சிறை தண்டனை விதிக்கலாம் .

Kal2.jpeg

சனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கத் தயங்கும் தமிழ்நாடு அரசு இதுபோன்ற போராட்டங்களை எப்படி அனுமதிக்கிறது ? என்பது வியப்பளிக்கிறது.

Ref:
https://indiankanoon.org/doc/77545447/

கட்டுரையாளர் குறிப்பு:

image-1599.png

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்  (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

https://minnambalam.com/oes-the-law-permit-protests-supporting-toddy/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

Gtec7NrbgAAHd1D-683x1024.jpg

பெரும் தலைவரின் பேச்சை கேட்டாலே கள்ளு குடித்த மாதிரி தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டாஸ்மாக்கின் விஷ மதுவில் இருந்து விடுதலை கிடைக்குமா?

-சாவித்திரி கண்ணன்

Once_part_of_S.jpg

பனை தமிழ்நாட்டின் தேசிய மரம். நமது அடையாளம், பாரம்பரியம், பண்பாடு, வாழ்வாதாரம்…அனைத்தும் பனையே. அதிகாரத்தில் உள்ளவர்களின் பேராசைக்காக மெல்லக் கொல்லும் விஷமான டாஸ்மாக் மதுவை அருந்தி தமிழனம் மாய்ந்தழிவதா? கள் எனும் உணவு நம் உரிமை அல்லவா..? பனை ஏறுவது குற்றமா? சீமானை கைது செய்வீர்களா…?

பனை மரம் மீதேறி சீமான் பனங்கள்ளை எடுத்தது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.  பெரிய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுதி வருகின்றனர் சிலர்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும், வி.சி.கவின் ரவிக்குமாரும் இந்த விவகாரத்தில் சீமானை இன்னும் ஏன் கைது செய்யவில்லை எனக் கேட்கின்றனர்.

பல்லாயிரம் வருடங்கள் பனங்கள்ளை உண்டு வளர்ந்த சமூகத்திடம் அதை உண்ணாதே, இதோ நான் கொடுக்கும் மெல்லக் கொல்லும் விஷமான சீமை மதுவைக் குடி என அரசாங்கம் அழுத்தம் தருகிறது..என்றால், தமிழ் சமூகத்தை இழிச்சவாய் சமூகம் என கருதுகிறார்கள் என்று தான் அர்த்தமாகும். நாம் அதற்கு இடம் தரலாமா?

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியாவில் பல கோடிப் பேர் மது அருந்துகிறார்கள். இதை எந்தக் காலத்திலும், எந்த அரசாலும் முற்றிலும் ஒழிக்க முடிந்ததில்லை.  இவை அளவுக்கு மீறி சமூகத்தை ஆக்கிரமிக்காமல் தடுப்பது தான் ஒர் மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும். ஆனால், நம்மை ஆளும் அரசுகளோ மக்கள் வேண்டாம் என எதிர்த்து போராடினலும் வலுக்கட்டாயமாக டாஸ்மாக் கடைகளை  திரும்பும் திக்கெல்லாம் ஏற்படுத்தி மக்கள் பணத்தையும், ஆரோக்கியத்தையும் ஒருசேர சூறையாடுகின்றன.

டாஸ்மாக்கில் அதிகார மையத்தினரின் பாக்கெட்டை நிரப்புகின்ற அந்த மதுவை IMFL  என அழைக்கிறார்கள். அதாவது, Indian Made Foreign Liquor  என்று பொருளாகும். உண்மையிலேயே சீமை சரக்கை குடித்தவர்கள் டாஸ்மாக் மதுவை சீண்ட மறுக்கிறார்கள். சாக்கடையில் வீசுங்கள் எனச் சீறுகிறார்கள்.

304867.jpg

மிக மோசமான தரத்தில் அதிக இரசாயனக் கலவையுடன், அதிக ஆல்கஹால் கலந்து விற்கப்படும் இந்த மது, தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டில் பல லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஏராளாமான அடித்தட்டு உழைப்பாளிகளை உறிஞ்சி எடுத்து எதற்கும் லாயக்கற்றவர்களாக குப்பையில் வீசி எறிந்துள்ளது. கணக்கற்ற விதவைகளை உருவாக்கி உள்ளது. பல லட்சம் குடும்பங்களை நிராதரவற்ற நிலைக்கு தள்ளி உள்ளது.

48 சதவிகித ஆல்கஹால் கொண்ட இந்தக் கொடூர மதுவின் தரம் குறித்த, எந்த விவாதமும் இங்கு ஊடகங்களில் நடப்பதில்லை. இதை தடுப்பதற்கும் வழியில்லை என்பதாக தமிழ்ச் சமூகம் விழி பிதுங்கிக் கொண்டுள்ளது. ஆனால், இயற்கை பானமான கள் உண்ணும் உரிமைக்கு எதிராகத் தான் எத்தனை குரல்கள் வீரியத்துடன் வருகின்றன…!

இந்திய அரசியல் சட்டப்படி கள் என்பது ஒரு உணவு தான். அது தடை செய்யப்பட வேண்டியதல்ல. அதில் ஆல்கஹால் இருக்கிறதா? என்றால், இருக்கிறது. ஆம், 4 சதவிகித ஆல்கஹால் இருக்கிறது. நாம் உண்ணும் உணவில் கூட ஓரளவு குறைந்த ஆல்கஹால் உள்ளது. பழைய சோற்றில் மிதமான ஆல்கஹால் உள்ளது. புளித்த மோர், புளித்த இட்லி,தோசை மாவு, திராட்சை பழரசம் ஆகியவற்றிலும் உள்ளது. இவை எதுவும் சட்டப்படி தடை செய்யப்பட்டதல்ல. அவ்வளவு ஏன்? மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற இருமல் சிரப்பு மருந்திலும் ஆல்கஹால் உள்ளது.

process-aws.jpg

ஆகவே, பனங் கள்ளை பார்த்து பயமுறுத்தக் கூடாது. தென்னங் கள்ளைக் காட்டி திகில் உருவாக்கக் கூடாது. சில மேதாவிகள் பக்கம்பக்கமாக கள்ளின் தீமை பற்றி எழுதுகிறார்கள். அதைவிட பத்து மடங்கு வீரியமுள்ள அரசாங்க மது குறித்து இவர்கள் கள்ளமெளனம் சாதிக்கிறார்கள்.

ஆகவே தான், நாம் வலியுறுத்த விரும்புவதெல்லாம் மதுவில் இருந்து கொள்ளை லாபம் ஈட்டும் மனப்பான்மையே மனிதகுலத்திற்கு எதிரானது. இதை கட்டுப்படுத்தி அளவில் வைக்க வேண்டும். அத்துடன் மக்கள் குடிக்கும் மது அதிக தீமை இல்லாததாக இருக்க வேண்டும். மது தயாரிப்பு, விநியோகம் என்பதை மையப்படுத்தாமல் அந்தந்த மண் சார்ந்து மக்களின் பழக்க வழக்கம் சார்ந்து இருப்பதை கூர்ந்து அவதானித்து அவற்றை முறைப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும்.

சில இடங்களில் மது தயாரிப்பு என்பது பழங்களில், தானியங்களில், மூலிகை சாறுகள், தேன் போன்றவற்றின் கலவையில் உருவாக்கப்படுகிறது. இந்த பழத்தயாரிப்பு மது என்பது எந்தெந்த பழங்கள் அந்தப் பகுதிகளில் அதிகம் கிடைக்கிறதோ அதைக் கொண்டு உருவாக்கபடுவதாகும்.

201802181315265464_Womens-are-prepare-an பீகாரில் இலுப்பை பூவைக் கொண்டு அருமையான இனிமையான மலிவான மது தயாரிக்கிறார்கள் எளிய தலித் மக்கள்! அசாம் போன்று பழங்குடிகள் வாழும் மாநிலங்களில் ரைஸ்பீர் எனப்படும் ஆரோக்கிய மதுபானத்தை தயாரிக்கிறார்கள். கோவாவில் முந்திரி பழத்தைக் கொண்டு ஃபென்னி என்ற மதுபானத்தை தயாரிக்கிறார்கள்.

திராட்சை, ஆப்பிள், முந்திரிப் பழம், பிளம்ஸ், செர்ரி, பெர்ரி போன்ற பழங்கள் தீமை குறைவான ஆரோக்கிய மது தயாரிப்புக்கு மூலமாகும். இது தவிர பார்லி, சோளம், அரிசி போன்ற தானியங்களைக் கொண்டும் சிறந்த மது தயாரிக்க முடியும்! இதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு நம் டாஸ்மாக்கில்  கரும்பு சக்கையில் இருந்து கிடைக்கும் மோலாசஸைக் கொண்டு மெத்தனால், ஸ்பிரிட் கலந்து ஒரு செயற்கை மதுவை – கேடுதரும் மதுவை – வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள்.

தமிழகத்தில் முந்திரி பழங்கள் கேட்பாரற்று பல்லாயிரம் டன்கள் பயனின்றி வீணடிக்கப்படுகின்றன! இதில் இருந்து ஆரோக்கியமான மதுபானம் தயாரிக்க முடியும்! இவை விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் பலன் இல்லாமல் அழிகின்றன. நமது சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வீணாகும் முந்திரி பழத்தை பயன்படுத்தி பழச்சாறு மற்றும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க  வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். அதே போல தென்னங் கள்ளை விவசாய கூட்டுறவில் தயாரித்து விற்க அதிமுக அரசாங்கத்தில் எடுத்த முயற்சிகளையும் சாராய அதிபர்கள் தடுத்துவிட்டார்கள்.

ஐந்து கோடி பனைமரங்கள் இருந்த தமிழ் நாட்டில் இன்று அது சரிபாதிக்கும் கீழாகி விட்டது. காரணம், பனையை பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்திருப்பதால், பனை மரம் ஏறுவதையே குற்றச் செயலாக அறிவித்து இருப்பதால் பனை வளர்ப்போர் விரக்தி அடைந்து அதனை வெட்டி செங்கற் சூளைகளுக்கு அனுப்பி வருகின்றனர். பனை விவசாயிகளும், பனையேறிகளும் பல போராட்டங்கள் நடத்தி ஓய்ந்துவிட்டனர். நாம் இவர்களை ஆதரிக்காதது தான் காரணம்.

0d9be544b705bb06ac6b054e7b45b7d8_origina

பனங்கள்ளு இறக்கும் உரிமை கேட்டு நடந்த போராட்டம்

பனை தான் தமிழ்நாட்டின் தேசிய மரம். ஆம், நமது அடையாளம், நமது பாரம்பரியம். நமது வாழ்வாதாரம். பனையேறுவது நம் தொழில் உரிமை. பசிக்கின்ற ஏழைக்கு மட்டுமல்ல, பறவையினங்கள் பலவற்றுக்கும் பனையே சரணாலயம்.

அப்படிப்பட்ட பனையை பகை மரமாக பாவித்து, இல்லாத சட்டங்களை போட்டு இன்னல்கள் பல தந்து பனையேறிகளை வேட்டையாடி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பனை வளர்ப்பையே படு பாதளத்திற்கு தள்ளிவிட்டன, மாநிலத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள்!

ஏன் இவ்வாறு செய்தார்கள். பக்கத்தில் உள்ள கேராளவில் கள்ளுக் கடைகள் உள்ளன. மற்ற பல  மாநிலங்களில்  புழக்கத்தில் இருக்கும் இயற்கை பானங்கள் தமிழ் நாட்டை பொறுத்த வரை சர்வாதிகாரமாக மறுக்கப்பட்டு வருகின்றது.

பனங்கள் புழக்கத்தில் வந்தால் அதில் கண்டதைக் கலப்பார்கள். இதனால் விபரீதங்கள், மரணங்கள் ஏற்படும். இன்னும் அதிகமானோர் மதுவை நாடிச் சென்று சீரழிவார்கள்…அது பாதுகாப்பற்றது, ஆபத்தானது..எனச் சொல்கிறார்கள்.

இதைத் தடுப்பதற்கு அரசாங்கமே பாலை கொள்முதல் செய்து ஆவீனை நடத்துவதை போலக் கள்ளை கொள்முதல் செய்து முறையாக பதப்படுத்தி குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும்படி செய்யலாம். அல்லது விவசாயக் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவர்களுக்கு எப்படி செயல்படுவது என வழிகாட்டி கண்காணிக்கலாம். இது ஒன்றும் செய்ய முடியாததல்ல. நல்ல நோக்கமும், மக்கள் நலனில் அக்கறையும் இருந்தால், சாத்தியமே. இதற்கு கட்டுபடியாகக் கூடிய எளிய வரிவிதிப்பு முறையை கையாளலாம்.

இதனால், அதிகாரத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் இது வரை சாராய அதிபர்களிடம் பார்த்து வந்த பெரிய கையூட்டு பணம் இதில் தடைபடும் என்பதால், பல சாக்கு போக்குகளைச் சொல்லி அமல்படுத்த மறுப்பார்கள். மக்கள் வீறு கொண்டு பொங்கி எழுந்து உணவு என்பது எங்கள் உரிமை. அதை தடுக்கும் அதிகாரம் ஆள்வோருக்கு இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.

மூத்த விவசாயி நல்லுசாமி இதைத் தான் பல்லாண்டுகளாக வலியுறுத்தி வந்தார். சீமான் எடுத்த முன்னெடுப்பை மக்கள் நலன் கருதி தமிழ் நிலத்தில் வாழும் அனைவருமே கட்சிகளைக் கடந்து ஒன்றிணைந்து இதை சாத்தியப்படுத்த வேண்டும். பனை, தென்னை விவசாயிகள் வாழ்வில் இது பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். 2026 தேர்தலின் மைய விவாத பொருளாக இதை செயல்படுத்த வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/21902/palm-trees-panangkallu-seeman/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் இணைத்த இரு கட்டுரைகளும் பல தில்லாலங்கடி விடயங்களை விசமாக சொல்கின்றன.

இரசாயன கலப்புகள் நிறைந்த மேலைத்தேய மதுபானங்கள் மீது ஒரு வித பரிதாபத்தை காட்டி இயற்கையாக உருவாகும் கள் மதுபானத்தை கலப்படம் அது இது என உப்புச்சப்பில்லாமல் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். கஞ்சாவை அளவோடு பாவிக்க மேலைத்தேய அரசுகள் பரிந்துரை செய்கின்றது என்பதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அறிவியல் கட்டுரையாளர்களும் அறிந்து கொள்வார்களாக.

வியாபார உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாள் வருத்தம் என்று பொக்கிளிப்பான், சின்னமுத்து போன்ற நோய்களுக்கு உள்ளாகி நான் வருந்தியபோது பனம்கள் வாங்கி வெங்காயம் போட்டு அம்மா அருந்தத் தருவா, ஓரிரு நாட்களில் நோய் பறந்துவிடும்.😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.