Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-333.jpg?resize=750%2C375&ssl

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்.

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.

இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

DIA என்பது பென்டகனின் உளவுத்துறைப் பிரிவாகும்.

மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையுடன் இணைந்து, தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு பணியாற்றியது.

அறிக்கையின்படி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களை சில மாதங்களுக்குள் மீண்டும் இயக்க முடியும்.

இதன் பொருள் ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவில் அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும் என்பதாகும்.

அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரான் 400 கிலோ யுரேனியக் குவியலை, 60 சதவீதம் செறிவூட்டப்பட்டதாக மாற்றியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதல்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படங்கள், தளத்தின் நுழைவாயிலில் நிலைநிறுத்தப்பட்ட 16 சரக்கு லொறிகளைக் காட்டியது.

அவை கையிருப்பை ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்ற ஜனாதிபதி ட்ரம்பின் கூற்றுக்கு முரணானது.

சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டினார்.

“இந்தத் தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றியாகும், இதன் மூலம் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து கூறினார்.

ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி தளங்களில் மூன்று, நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை அமெரிக்கா அழித்துவிட்டதாகவும் மார்தட்டிக் கொண்டார்.

ஆனால், பென்டகனின் உள் அறிக்கை வேறுபட்ட கோணத்தை தற்சமயம் வெளிக்காட்டுகிறது.

குறிப்பாக ஃபோர்டோ, தாக்குதல்களில் இருந்து தப்பியதற்கான அறிகுறிகளைக் காட்டியதாகவும் அறிக்கை கூறியது.

ஃபோர்டோ குறித்து பென்டகன் எச்சரிக்கை

ஃபோர்டோ ஈரானின் மிகவும் பாதுகாக்கப்பட்ட வசதிகளில் ஒன்றாகும்.

இது ஜாக்ரோஸ் மலைகளுக்கு அடியில் சுமார் 45 முதல் 90 மீட்டர் (தோராயமாக 150 முதல் 300 அடி) கடினமான பாறையின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபோர்டோவின் நிலத்தடி இருப்பிடம் பென்டகனுக்கு ஏற்கனவே ஒரு கவலையாக இருந்தது.

ஜனவரி மாதம் நடந்த ஒரு மாநாட்டில், அமெரிக்காவின் வலிமையான அணுசக்தி அல்லாத குண்டு – 30,000 பவுண்டுகள் எடையுள்ள GBU-57 ‘பதுங்கு குழி வெடிப்பு’ – கூட அந்த வசதியை முழுமையாக அழிக்காது என்று பென்டகனின் உயர் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.

கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில், B-2 குண்டுவீச்சு விமானங்கள் இந்த GBU-57 குண்டுகளில் 12 குண்டுகளை ஃபோர்டோ மீதும், மேலும் இரண்டு நடான்ஸ் மீதும் வீசின.

இதற்கிடையில், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் இஸ்பஹானில் சுமார் 30 டோமாஹாக் ஏவுகணைகளை ஏவியது.

GuPS55TXoAA1Nob?format=jpg&name=medium

அறிக்கையை கடுமையாக சாடிய ட்ரம்ப்

வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களை அவமானப்படுத்தியதற்காக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் செய்திச் சேவை ஆகியவற்றை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.

“ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் தாக்கப்படுகின்றன,” என்று அவர் ட்ரூத் சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்டார்.

அதேநேரம், வெள்ளை மாளிகையும் உளவுத்துறை மதிப்பீட்டை மறுத்து, அந்த அறிக்கையை “போலி செய்தி” என்று அழைத்தது.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில்,

இந்த அறிக்கை ஜனாதிபதி ட்ரம்பை இழிவுபடுத்துவதற்கும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க ஒரு கச்சிதமாக செயல்படுத்தப்பட்ட பணியை நடத்திய துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும் ஒரு தெளிவான முயற்சியாகும் – என்று கூறினார்.

இதேவ‍ேளை ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரான் மீதான தாக்குதல் பணியை வழிநடத்த உதவிய கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், அணுசக்தி தளங்கள் “கடுமையான சேதத்தையும் அழிவையும் சந்தித்துள்ளன” என்று கூறினார்.

ஆனால், இறுதி சேத மதிப்பீடு இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2025/1436979

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு சில மாதபின்னடைவே - முற்றாக அழிக்கப்படவில்லை - பென்டகன்

25 JUN, 2025 | 10:20 AM

image

ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றாக அழிக்கப்படவில்லை சில மாதபின்னடைவை சந்தித்துள்ளது என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

போர்டோ நட்டன்சா மீதான அமெரிக்காவின் தாக்குதலால் அமெரிக்கா எதிர்பார்த்த அளவிற்கு சேதம் ஏற்படவில்லை என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஈரான் அமெரிக்க தாக்குதலிற்கு முன்னரே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அங்கிருந்து அகற்றவிட்டது என பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் குண்டுவீச்சினால் ஈரானின் அணுஉலைகளில நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்படவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் குண்டுவீச்சினால் ஈரானின் அணுஉலைகளில நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்படவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.

இலக்குவைக்கப்பட்ட அணுஉலைகளின் வாயில்கள்குண்டுவீச்சினால் மூடப்பட்டுள்ளன,நிலத்தடியில் இருந்த கட்டிடங்கள் அழிக்கப்படவில்லை,ஈரானின் அணுசக்தி திட்டம் ஆறுமாதகால பின்னடைவை சந்தித்துள்ளது என பாதுகாப்பு  புலனாய்வு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/218391

  • கருத்துக்கள உறவுகள்

இரான் அணுசக்தி கட்டமைப்பு முற்றிலும் அழியவில்லையா? அமெரிக்காவின் தாக்குதல் பற்றி கசியும் புதிய தகவல்

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, ஃபோர்டோ, டிரம்ப், அணுசக்தி திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானின் அணுசக்தி திட்டம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்ற டிரம்ப் நிர்வாகத்தின் கூற்றுகளில் அமெரிக்காவின் தாக்குதல் குறித்த பென்டகன் உளவுத்துறையின் ஆரம்பகால மதிப்பீடு சந்தேகம் எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்களை "பதுங்கு குழி" குண்டுகள் மூலம் அமெரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலுக்குப் பிறகும் இரானின் சென்ட்ரிஃபியூஜ் கட்டமைப்புகள் பெரும்பாலும் "அப்படியே" இருப்பதாகவும், நிலத்தடிக்கு மேலே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்ததாகவும் பென்டகன் மதிப்பீடு பற்றி நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

"இரண்டு அணுசக்தி நிலையங்களுக்கான நுழைவு வாயில்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டன, சில உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன, ஆனால் நிலத்தடியில் ஆழமாக உள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் அப்படியே உள்ளன." என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் இரான் அணுசக்தி திட்டத்தை "சில மாதங்கள்" பின்னுக்குத் தள்ளியதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவது சேதங்களை சரி செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைப் பொருத்தது என்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரான் கையிருப்பில் இருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதி தாக்குதல்களுக்கு முன்னரே வேறிடங்களுக்கு நகர்த்தப்பட்டுவிட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, ஃபோர்டோ, டிரம்ப், அணுசக்தி திட்டம்

புலனாய்வுத் தகவல்கள் கசிவு - டிரம்ப் விமர்சனம்

இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து கசிந்த உளவுத்துறை மதிப்பீடு குறித்த செய்திகளுக்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், அமெரிக்க ஊடகங்களையும் மற்றும் அவர்கள் வெளியிட்ட தகவல்களையும் கடுமையாக சாடியுள்ளார்.

"போலி செய்தி சிஎன்என், தோல்வியுற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையுடன் இணைந்து, வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றின் மாண்பை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் விமர்சிக்கப்படுகின்றன!" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, ஃபோர்டோ, டிரம்ப், அணுசக்தி திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'தேசத்துரோகம்' என்று சாடும் டிரம்ப் சிறப்புத் தூதர்

இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து உளவுத்துறை மதிப்பீடு கசிந்திருப்பதை "தேசத் துரோகம்" என்று மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார்.

"இது கொடியது, இது துரோகம். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்களே பொறுப்பேற்க வேண்டும்," என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.

அனைத்து சேத மதிப்பீட்டு அறிக்கைகளையும் தான் படித்ததாகவும், அமெரிக்கா தாக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களும் "அழிக்கப்பட்டன" என்பதில் "சந்தேகமில்லை" என்றும் அவர் கூறினார்.

தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஃபாக்ஸ் டிவிக்கு விட்காஃப் அளித்த நேர்காணலின் ஒரு கிளிப்பை இடுகையிட்டு அவரது கருத்துகளை டிரம்ப் எதிரொலித்தார்.

"ஃபோர்டோவில் 12 பதுங்கு குழி குண்டுகளை வெடிக்கச் செய்தோம். அது விதானத்தை உடைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அழிக்கப்பட்டுவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, நாம் இலக்கை அடையவில்லை என்னும் வகையில் வெளியாகும் அறிக்கை முற்றிலும் அபத்தமானது!" விட்காஃப் கூறியதாக டிரம்ப் மேற்கோள் காட்டினார்:

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c056mjgqp8go

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய அணுசக்தி நிலையங்கள் சேதம் - ஒப்புக்கொண்ட ஈரான்

General26 June 2025

1750901235_5571432_hirunews.jpg

அமெரிக்கா, சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால், தமது முக்கிய அணுசக்தி நிலையங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக ஈரான் முதல் தடவையாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஈரானில் உள்ள ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Nadans) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 முக்கிய அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து,அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது.

'ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்' (Operation Midnight Hammer) என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், அமெரிக்கா B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள், சக்திவாய்ந்த பதுங்கு குழி பஸ்டர் குண்டுகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தின.

இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

எனினும் ஈரான் அதனை மறுத்திருந்தது.

இந்நிலையில், முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://hirunews.lk/tm/408380/iran-admits-damage-to-key-nuclear-facilities#google_vignette

Edited by கிருபன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.