Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

இந்த 25+ நிமிட காணொளியை காணவும்.

https://youtu.be/vOL8YgX0suY?si=M4BWna4Inscy51gg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to துணுக்காயில் இருந்தது இந்திய இலங்கை படைமுகாமே! மக்களின் வாக்குமூலம்
  • கருத்துக்கள உறவுகள்

அங்கே, இந்திய, இலங்கை இராணுவத்துடன் ஒட்டுக்குழுக்களும் இயங்கி இருந்தன. இவ்வளவு காலமாக தேடாத தந்தையை, இப்போ தனியாக தேடுகிறாராம். சுன்னாகத்தில் அலுவலகத்தில் சலீம் என்பவரை அன்று சென்று விசாரித்தனராம். அந்த நேரம் சுன்னாகத்தில் அலுவலகம் நடத்திய துணை ஆயுதக்குழு எது? சலீம் என்பவர் யார்? என்பதை விசாரித்தால் உண்மை வெளிவரும். செம்மணி புதைகுழி விடயம் வெளிவரும் வரை இந்தப்பெண் தனது தந்தையை தேடாமல், முறையிடாமல், ஏனையோரைபோல் போராடாமல் காத்திருந்த மர்மம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அருண் சித்தார்த்தைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இங்கு நடந்தது என்னவென்பதை புரிந்துகொள்வதில் எந்தச் சிரமும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால் தமிழர்களின் அவலங்கள் குறித்தும், அவர்களின் இழப்புக்கள் குறித்தும் பேசப்படும்போதெல்லாம் அருண் சித்தார்த் தவறாது புலிகள் செய்த கொடுமைகள் என்று போராட்டம் ஒன்றினை யாழ்ப்பாணத்திலோ அல்லது வடக்குக் கிழக்கின் வேறு ஒரு பகுதியிலுமோ நடத்துவார். இப்போராட்டங்களின் ஒற்றை நோக்கம் எமது மக்களின் அவலங்களைக் கொச்சைப்படுத்துவதும், மலிடனப்படுத்துவதும் மட்டுமே. தமிழர்களின் எந்தப் பிரச்சினை குறித்தும் அவர் பேசுவதில்லை. தமிழர்களுக்கென்று பிரச்சினை இருக்கின்றதென்பதையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை. நல்லூர்க் கோயிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்று இன்றுவரை விடாப்பிடியாக இருப்பவர்.

இவர் குறித்து முன்னர் சிரச தொலைக்காட்சியில் வந்த நேர்காணல் ஒன்றுபற்றி எழுதியிருந்தேன். அதில் இவரது உண்மையான சுயரூபம் வெளித்தெரிந்திருந்தது.

இப்போது செம்மணியில் இடம்பெற்றும் மனிதப் புதைகுழி குறித்த செய்திகள் இவரை அலைக்கழிக்கின்றன. செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்படுவதால் ஆத்திரப்பட்டு நிற்கும் சிங்களப் பேரினவாதத்தை மகிழ்விக்கவேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்த்தான் தனது மனைவி என்று அடையாளப்படுத்தும் ஒரு பெண்ணை அழைத்துவந்து துணுக்காயில் புலிகளின் சித்திரவதை முகாம் இருந்ததென்றும் அங்கு 4,000 தமிழர்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்றும் கூறுகிறார். செம்மணியில் 400 தமிழர்களைச் சிங்கள இராணுவத்தினர் புதைத்தனர் என்றால், துணுக்காயில் அதைப்போல பத்துமடங்கு தமிழர்களை புலிகள் கொன்று புதைத்தனர் என்று காட்டுவது அவருக்குத் தேவையாக இருக்கிறது. ஆகவேதான் சிங்கள மக்கள் மட்டுமே பார்க்கும் ஒரு இனவாதச் சிங்கள யூடியூப்பரைக் கூட்டிவந்து 4,000 தமிழர்கள் புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டி மகிழ்கிறார்.

இவரையும், இவரைப் பின்னால் நின்று இயக்கும் இனவாதிகளையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆகவே அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

அரசின் மனித உரமை மீறல்கள் VS புலிகளின்மனித உரிமை மீறல்கள் – ஒன்றுக்கொன்று சமனாகுமா?

நடராஜா_குருபரன்

புலிகளின் துணுக்காய் முகாம் சமன் = செம்மணி மனிதப் புதைகுழி அல்ல!

ஜே.வி.பியின் கொலைகள் சமன் = பட்டலந்தை வதை முகாம் அல்ல! 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெற்கின் குடிமக்கள் கொல்லப்பட்டதல்ல.

அனுராதபுரம், காத்தாண்குடி படுகொலைகள் + தற்கொலைத் தாக்குதல்கள் சமன் = முள்ளிவாய்க்கால் அல்ல!

அரசுகள் செய்த தவறுகளும், ஆயுத அமைப்புகள் செய்த தவறுகளும் ஒழுக்கம், பொறுப்பு, சட்டம் என்பவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

இரண்டையும் சமமாகக் மதிப்பிடுவதென்பது “திட்டமிட்டு மெதுவாக ஒழுங்குபடுத்தப்பட்ட துஷ்பிரயோகத்துக்கும்”, “தற்காப்பு அல்லது எதிர்ப்புச் செயல்களுக்குமான” வேறுபாட்டை நீர்த்துப் போகச் செய்துவிடும். அது நீதிக்கே விரோதமானது.

குறிப்பாக “அரசுகள் செய்யும் மனித உரிமை மீறல்களை, யுத்தக் குற்றங்களை ஆயுத அமைப்புகள் செய்யும் மீறல்களுடன் ஒப்பிட்டு சமப்படுத்த முயலும் போது, மனித உரிமைகள், அதிகாரம் சார் ஒழுக்கநெறிகள், அரசியல் நியாயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்க வேண்டும்.

ஒரு நாடு அல்லது குடிமக்களின் அரசு என்பது சட்டத்தால், மக்களால், சர்வதேச ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அதிகார அமைப்பு.

மக்களின் பாதுகாப்பு, உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவை அரசின் அடிப்படை கடமைகளாக உள்ளன.

அதனால், அரசு செய்த செய்யும் தவறுகள் "சாதாரணக் குற்றங்கள்" அல்ல அவை அதிகாரத்தையும், நம்பிக்கையையும் சிதைப்பது, சமூகத்திற்கே எதிரானது.

அரசு மனித உரிமைகளை மீறும்போது, அது சட்ட ஒழுங்கின் மேல் தன்னுடைய உரிமையை இழக்கும். அவ்வாறு செய்யும் போது, அது அதிகாரத் தவறை மட்டுமல்லாமல், சமூக ஒழுங்கைப் பற்றிய புரிதலையும் பிழையாக்குகிறது.

ஆனால் பெரும்பாலான ஆயுத அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்பெற்ற அமைப்புகள் அல்ல. அவை அரசுக்கு எதிராக, சட்டத்திற்கு பறம்பாக உருவாகின்றன. அவை பெரும்பாலும் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு முயற்சிகளாகவும் தோன்றுகின்றன.

அரசிடம் அதிகாரமும் பொறுப்பும் இரண்டும் உள்ளன.ஆயுத அமைப்புகளிடம் குறிப்பட்ட அளவில் அதிகாரம் இருக்கலாம், ஆனால் பொறுப்புக்கட்டமைப்பு நிச்சயமற்றது. இதுவே அவற்றை அரசுகளுடன் ஒப்பீடு செய்ய முடியாத முக்கிய புள்ளியாகிறது.

அரசும், அதற்கு சமமாக ஆயுதஅமைப்புகளும் தவறு செய்தார்கள் - தவறு செய்கிறார்கள் என்ற சமப்படுத்தல்கள் அரசியல் சீரழிவுக்கு வழிவகுக்கும்.

இது அதிகாரத்தின் தவறுகளையும், வன்முறையின் பிறழ்வுகளையும் சமமாக்கும் தோற்றத்தை உருவாக்குகிறது.

இதனால், சமூகங்கள் வன்முறையின் காரணங்களை புரிந்துகொள்ளாமல், இருவரையும் ஒரே அளவில் நிராகரிக்கும் நிலையை அடைகின்றன.

ஒருவேளை ஒரு ஆயுத இயக்கம் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை, பழிவாங்கல்களை, சித்திரவதைகளை, கொலைகளை செய்தது என்றால் அது தவறானதே.

ஆனால் அதனைச் செய்வதற்கான சூழ்நிலைகளையும், அரசியல் ஒடுக்குமுறைகளையும், அடக்கு முறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமூகவியல் பார்வையில், அது ஒரு வன்முறையின் வடிவக் குரல் (violence as political expression) என்ற கருத்து நிலவுகிறது.

அதனைத் தவிர்த்து தவறுகளை மதிப்பீடு செய்வது, சமூகத்தின் அடிப்படை அமைப்பு ஏற்கும் வன்முறையை மறைக்கும் நிலையாகிவிடும்.

அரசுகள் உலகளாவிய ஒப்பந்தங்களுக்கு (UDHR, Geneva conventions, etc.) கையெழுத்திட்டுள்ளன. அதனால் அவர்களின் செயல்கள் ஒரு சர்வதேச நியாயக் கோட்பாட்டின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

மாறாக ஆயுத அமைப்புகள் பெரும்பாலும் அந்தப் பொறுப்புகளுக்கு உட்பட்டதாகவோ – உட்பட்டிருப்பதாகவோ இருப்பதில்லை.

மக்கள் மீது ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும், தவறாக நடந்துகொள்ளும் கட்டமைக்கப்பட்ட அரசே, எதிர்ப்பு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

ஆக அரசின் தவறுகளை - சட்டவியல், ஒழுக்கநெறி, சர்வதேச ஒப்பந்தம் ஆகிய அனைத்தையும் மீறும் கட்டமைக்கப்பட்ட துஷ்பிரயோகமாக சர்வதேச சட்டங்கள் வரையறுக்கின்றன.

ஆயுத அமைப்பின் தவறுகள், பொறுப்பு இன்மை, சட்டப்பூர்வ அடையாளம் இன்மை, அல்லது அரசியல் கோணத்தின் கீழ் எதிர்ப்பு வன்முறை என இவை அனைத்தையும் கொண்ட ஒரு குழப்பநிலையாக கருதப்படுகின்றன.

அதனால் "அவர்கள் செய்தார்கள், நாமும் செய்தோம்" என்பது நீதியின் மொழியல்ல.

ஒவ்வொரு செயலையும் அதன் அதிகார பின்புலத்தோடு, அரசியல் சூழலோடு, சமூகக் காரணங்களோடு மட்டுமே மதிப்பீடு செய்யவேண்டும்.

மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் பேசுகிறோம். அவை பெரும்பாலும் இரு திசைகளில் நிகழ்கின்றன.

ஒரு பக்கம் அரசுகள் – சட்டமும் அதிகாரமும் கையில் கொண்ட அமைப்புகள் – மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்கின்றன.

மறுபக்கம், ஆயுதங்களைத் தூக்கிய இயக்கங்கள், எதிர்ப்பின் அரச எதிர்ப்பின் பெயரால், சில வேளைகளில் அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன.

இவை இரண்டுமே தவறுதான். ஆனால், இவை இரண்டையும் ஒரே தட்டில் – ஒரே தராசில் வைத்து எடையிட முடியாது.

ஒரு அரசு என்பது தனிப்பட்ட ஒருவரின் செயல்கள் அல்ல. அது ஒரு கட்டமைப்பின் நிழல். அதனை சட்டம் ஒழுங்கு, பொறுப்புக் கூறல் பதிலளிக்கும் கடப்பாடு, அதிகாரம், உரிமை என அனைத்தும் சூழ்ந்திருக்கின்றன.

அதனால் அரசுகள் செய்வது சாதாரண தவறு அல்ல – அது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கையை சிதைப்பதாக, துரோகிப்பதாக அடையாளப்படுத்தப்படும்

போர்குற்றம் செய்கிற அரசும், சித்திரவதை செய்கிற அதிகாரியும், நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டியவர்களே.

ஆனால் விடுதலை இயக்கங்களும், ஆயுத குழுக்களும் பெரும்பாலும் ஒரு அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பிறக்கின்றன. அவற்றின் வன்முறைகளையும், செயல்களையும் தயவுதாட்சன்யம் இன்றி விமர்சிக்க வேண்டும். வெளிப்படுத்த வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும்.

ஆனால், அந்த வன்முறையின் பிறப்பிடமும், கண்ணீரோடு சேர்ந்த கோபமும், கவலையும் சரியாக மதிப்பீடு செய்யப்படுவது அவசியம்.

ஒரு அரசு, தன்னுடைய குடிமக்களை வஞ்சிக்கையில், அந்த வஞ்சனையில் ஏற்பட்ட பிளவு, சில சமயங்களில் பாறைகளை பிளக்கும் நதியாக ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கின்றன.

அந்த நதி திசை தவறி ஓடினாலும், அதன் பிறப்பிடம் – அரசின் அநீதி என்பதை மறக்கக் கூடாது.

அதனால், அவர்கள் சித்திரவதை செய்தார்கள், இவர்கள் செய்ததில் என்ன தவறு?” என்ற வாதம், நீதியின் வேரில் நைவேதியமிட்டுவிடும்.

இரு பக்கமும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இருவரையும் ஒரே தரத்தில் சமப்படுத்துவது, அதிகாரமற்றவரின் அழுகையையும், அதிகாரத்துடன் செய்கிற அடக்குமுறையையும் ஒரே கோடில் வரைவது போல ஆகிவிடும் அது ஒரு தவறான ஒப்பீடாகிவிடும்.

அதிகாரத்தின் பெயரில் செய்யப்படும் வன்முறைக்கும், அதிகாரமற்றவரின் எதிர்ப்பின் வன்முறைக்கும் இடையே ஒழுக்கமும் சட்டமும் வரையக்கூடிய வரம்புகள் உள்ளன.

அரசுகளுக்கு சட்டப் பிணையங்கள் உள்ளன. அவை சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அவை மனித உரிமைகளை காக்கவே ஏற்படுத்தப்பட்டவை.

அந்த அரசுகளே அந்த உரிமைகளை மீறும்போது, அது வன்முறையைவிட மோசமான ஒரு துரோகமாகிவிடும்.

அரசியல், சமூகம், நீதிமுறை – இவை மூன்றும் அதிகாரத்தின் தரக்கோலாக இருக்க வேண்டும்.

ஆனால், அவை அதிகாரவந்தத்துக்கு பணிந்து விடும் பொழுது, ‘நீதி’ என்ற வார்த்தையே அர்த்தமற்றதாக மாறிவிடும்.

நம் பார்வை நுணுக்கமாக இருக்க வேண்டும். தவறுகள் இருதரப்பிலும் இருக்கலாம். ஆனால், அவற்றை சமப்படுத்துவதில் உள்ள குற்றவுணர்வின்மையான தன்னிலை நம்மை மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும்.

அரசுகள் நிழல்களை விழுங்கும்போது, அந்த நிழல்களில் அடியெடுத்துச் செல்லும் எச்சங்களும் கூட நாம் மறக்கக்கூடாத உண்மைகள்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை புலிகளின் துணுக்காய் முகாமோடு ஒப்பீடு செய்து அதனை நீர்த்துப்போகச் செய்ய முனைவோர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். #ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalist #

நடராஜா_குருபரன்

https://www.facebook.com/share/p/1ZRkwXtxcE/

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி அகழ்வை திசைதிருப்பி, அங்கே இராணுவ உடல்கள் என ஆதாரப்படுத்த சில அடையாளங்களை புதைப்பதற்கும் அகழ்வை நிறுத்துவதற்கும் செய்யப்படும் தந்திரோபாயமாக இருக்கலாம். அங்கே ஒரு மர்மம் வாகனம் நோட்டமிடுவதாக செய்தி வருகிறது. துணுக்காயில் சடலங்கள் புதைக்கப்படிருந்தால் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை, இந்திய, மற்றும் துணை ஆயுதக்குழுக்களே பொறுப்பு. அவர்களை விசாரியுங்கள். தனது தந்தை என்ன தொழில் செய்து தன்னை படிக்க வைத்தார் என்று சொல்லும் அருண் சித்தார்த், தான் படித்தாரா என்று சொல்லவில்லை. பாவம் அந்த தந்தை! தன்னைப்போல் கஷ்ரப்படாமல் மகன் படித்து முன்னேற வேண்டுமென்று நினைத்திருப்பார், ஆனால் நடந்தது, தனது சமூகத்தாலேயே வெறுத்தொதுக்கும் வேலையை செய்து அந்த தந்தையின் கனவை சிதறடித்துள்ளார். தனது தந்தையையும் சமூகத்தையும் கேவலப்படுத்துகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.