Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1752287117-AIRINDIA-6.jpg?resize=650%2C3

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற எயார் இந்தியா விமான விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது வெளியில் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது.

இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு உள்ளது.

இதில், விபத்து இடம்பெற்ற தினத்தில் விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களும் கண்டுபிடிக்கப்பட்டு விமான நிலையத்தின் ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாகங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானம் புறப்படும்போது இறக்கை மற்றும் தரையிறங்கும் சக்கரங்கள் சரியான நிலையில் இருந்ததாகவும் ஆனால் விபத்துக்குப் பின்னர் எரிபொருள் கட்டுப்பாட்டு கருவிகள் அணைந்த நிலையில் இருந்ததாகவும் இதன் மூலம் விமானம் நடுவானில் பறக்கும்போது எரிபொருள் தடைபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில்,
விமானத்தை முறையாகப் பராமரித்துள்ளார்களா என்பதை அறிய, விமானப் பராமரிப்புப் பதிவுகளை ஆய்வு செய்தார்கள். அதன்படி, விமானத்தில் கடைசியாக L1-1 மற்றும் L1-2 ஆகிய பெரிய பராமரிப்புப் பணிகள் 38,504:12 மணி நேரங்களுக்கு முன்பும், 7,255 முறை விமானம் இயக்கப்பட்ட பின்பும் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த பெரிய பராமரிப்புப் பணி (D-check) டிசம்பர் 2025-ல் செய்யப்பட இருந்தது. இடது பக்க என்ஜின் (ESN956174) மே 1, 2025 அன்றும், வலது பக்க என்ஜின் (ESN956235) மார்ச் 26, 2025 அன்றும் நிறுவப்பட்டன.

விபத்து நடந்த அன்று, விமானத்தில் நான்கு Category ‘C’ Minimum Equipment List (MEL) குறைபாடுகள் இருந்தன. இவை ஜூன் 9, 2025 அன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஜூன் 19, 2025 வரை அவை சரி செய்யப்படாமல் இருந்தன. விமானத்தின் கதவு கண்காணிப்பு கேமரா, விமான நிலைய வரைபடம், கம்ப்யூட்டர் நெட்வேர்க் மற்றும் விமானத்தில் இருந்த பிரிண்டர் ஆகியவை பழுதடைந்திருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2025/1438853

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

517375639_4032081130367185_2545728062880

இன்ஜினுக்கு தேவையான எரிபொருள் மற்றும் காற்று செல்லாமல் தான் மேலே எழும்பும்போது இழுவை திறன்(pulling power) இல்லாமல் இஞ்சின் செயலிழந்து கீழே விழுந்து விட்டது என்று ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு கூட தெரியும்.

கடமை என்பது காலில் கிடக்கும் செருப்புக்கு சமம் என்று கருதக்கூடிய பணியாளர்களை ஒவ்வொரு நிறுவனமும் பதவியில் அமர்த்திருக்கிறது .ரயில் வரும்போது கேட்டை திறந்து விடுவது, சாலையில் பள்ளத்தை தோண்டி போட்டு விட்டு எந்த எச்சரிக்கை பலகையும் வைக்காமல் செல்வது, மனித உயிர்களுடன் விளையாடும் பொறுப்பற்ற பணியாளர்களால், அதிகாரிகளால் அனைத்து நிலைகளிலும் மனித உயிர்கள் மாண்டு போகிறது.

உண்மை உரைகல்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக அனைத்து ஊகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள், ஆறுதலான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

கடைசியாக அனைத்து ஊகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள், ஆறுதலான விடயம்.

முற்றுப்புள்ளியா? விமான ஓட்டிகளில் ஒருவர்தான் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தினார் என ஒரு கருத்து பரவுகின்றது. இன்னும் சரியான காரணம் அறியப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விமானிகளின் உரையாடல் ஏர் இந்தியா விமான விபத்தின் மர்மத்தை இன்னும் அதிகரிப்பது ஏன்?

ஏர் இந்தியா விமான விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • சௌதிக் பிஸ்வாஸ்

  • பிபிசி

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜூன் மாதம் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான முதல் கட்ட விசாரணையில் புலனாய்வாளர்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில வினாடிகளில், 12 ஆண்டு வயதுடைய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் திடீரென "கட்-ஆஃப்" நிலைக்கு மாறியதால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்று, முழுமையாக செயலிழந்தது. "கட்-ஆஃப்" செய்வது பொதுவாக விமானம் தரையிறங்கிய பிறகு மட்டுமே நடக்கும் செயல்.

காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம், "நீ ஏன் கட்-ஆஃப் செய்தாய்?" என்று கேட்க, அதற்கு அவர், "நான் செய்யவில்லை," என்று பதிலளிக்கிறார்.

இந்த குரல் பதிவு யார் கேள்வி கேட்டது, யார் பதிலளித்தது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

விமானம் புறப்படும் நேரத்தில், துணை விமானி விமானத்தை இயக்க, கேப்டன் கண்காணித்துக் கொண்டிருந்தார்.

எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மீண்டும் விமானத்தின் இயல்பான நிலைக்குத் திரும்பியதால், தானாகவே என்ஜின் மீண்டும் செயல்பட முயற்சி செய்தது.

ஆனால், விபத்து நிகழ்ந்தபோது ஒரு எஞ்சின் உந்துதலை மீட்டெடுத்து வந்தது, மற்றொரு எஞ்சின் இயங்க தொடங்கியிருந்தாலும், அதன் முழு சக்தியையும் மீட்டெடுக்கவில்லை.

ஏர் இந்தியா விமானம் 171, புறப்பட்ட 40 வினாடிகளுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இது இந்தியாவில் ஏற்பட்ட மிகவும் குழப்பமான விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

விமானம் புறப்பட்டவுடன் என்ன தவறு நடந்தது என்பதை அறிய, புலனாய்வாளர்கள் இடிபாடுகளையும் காக்பிட் பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

ஃபிளைட்ராடார்24 தரவுகளின்படி, தெளிவான வானிலையில் விமானம் 625 அடி உயரத்தை எட்டியது, ஆனால் 50 வினாடிகளில் தொடர்பை இழந்தது. சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள 15 பக்க அறிக்கை இந்த விபத்து குறித்த ஆரம்பத் தகவல்களை வழங்குகிறது.

ஏர் இந்தியா

இந்திய அதிகாரிகள் தலைமையில், போயிங், ஜிஇ (General Electric), ஏர் இந்தியா, இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் பிரிட்டன் நிபுணர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணை, இந்த விமான விபத்து குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி இந்த லிவர் லாக் எரிபொருள் சுவிட்சுகள் தவறுதலாக இயக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுவிட்சுகளின் இயக்கத்தை மாற்றுவதற்கு முன்பாக இதன் பாதுகாப்பு லிவரை மேல் நோக்கி இயக்கி அன்லாக் செய்ய வேண்டும். இந்த பாதுகாப்பு அம்சங்கள் 1950 முதல் பயன்பாட்டில் உள்ளன. துல்லியமான தரநிலைகளைக் கொண்ட இந்த சுவிட்சுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை.

பாதுகாப்பு காப்பான்கள் (Protective guard brackets) இந்த சுவிட்சுகள் தவறுதலாக இயக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.

"ஒரு கையால் ஒரே இயக்கத்தில் இரண்டு சுவிட்சுகளையும் இழுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே, இது தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை," என்று பெயர் வெளியிட விரும்பாத கனடாவைச் சேர்ந்த விமான விபத்து விசாரணையாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனால் தான் ஏர் இந்தியா விபத்து மிகவும் தனித்துவமானதாகவும், மர்மமானதாகவும் உள்ளது.

ஏர் இந்தியா

விமானிகளில் ஒருவர், வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ, எரிபொருள் சுவிட்சுகளை அணைத்திருந்தால், "ஏன் சுவிட்சுகளை ஆஃப் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது," என்று ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விமான விபத்து ஆய்வாளரும், விமான நிபுணருமான ஷான் ப்ருச்னிக்கி பிபிசியிடம் கூறுகிறார்.

"இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது குழப்பத்தால் ஏற்பட்டதா? ஆனால் விமானிகள் அசாதாரணமான எதையும் தெரிவிக்கவில்லை என்பதால் அதற்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

காக்பிட் அவசர சூழல்களில், விமானிகள் தவறான சுவிட்சுகளை அழுத்துவது அல்லது தவறானவற்றை தேர்வு செய்வது போன்ற சம்பவங்கள் நடக்கலாம். ஆனால், இங்கு அப்படியான எந்த அறிகுறியும் இல்லை. எரிபொருள் சுவிட்சுகள் தவறுதலாக அணைக்கப்பட்டதாகவும் எந்த விவாதமும் இல்லை. இத்தகைய பிழை, ஏதேனும் வெளிப்படையான பிரச்னை இல்லாமல் பொதுவாக நடக்காது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆமதாபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆமதாபாத்தில் நெரிசலான பகுதியில் ஏர் இந்தியா விமானம் 171 மோதியது.

"விமானம் பறந்த சில வினாடிகளில் எரிபொருள் சுவிட்சை ஒரு விமானி அணைத்துவிட்டார் என்பது மிகவும் கவலையளிக்கிறது" என்கிறார் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான பீட்டர் கோயல்ஸ்.

"காக்பிட் குரல் பதிவில் இதுவரை வெளியானவற்றை விட அதிக தகவல்கள் இருக்கலாம். 'ஏன் சுவிட்சுகளை அணைத்தாய்?' என்ற ஒற்றை வார்த்தை மட்டும் போதாது," என்று கோயல்ஸ் கூறினார்.

"காக்பிட்டில் யாரோ ஒருவர் எரிபொருள் வால்வுகளை மூடியிருக்கிறார் என்பதை புதிய தகவல்களின்படி அறியமுடிகிறது. ஆனால், யார் மூடியது? ஏன் மூடினார்கள்? என்பதுதான் கேள்வி. இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டு, சில வினாடிகளில் மீண்டும் இயக்கப்பட்டன. எஞ்சினை மீண்டும் இயக்க முயன்றது விமானத்தை இயக்கிய விமானியா அல்லது கண்காணித்த விமானியா? என்பது குறித்த விவரங்களை குரல் பதிவு வெளிப்படுத்தும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏர் இந்தியா விமானம் 171 விபத்து குறித்த விசாரணையில், காக்பிட் குரல் பதிவு முக்கிய திறவுகோலாக உள்ளதாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த பதிவில் விமானிகளின் மைக்குகள், ரேடியோ அழைப்புகள் மற்றும் காக்பிட் சுற்றுப்புற ஒலிகள் உள்ளன, இவை விபத்தைச் சுற்றியுள்ள மர்மத்தை அவிழ்க்க உதவும்.

"அவர்கள் குரல்களை இன்னும் அடையாளம் காணவில்லை, இது மிகவும் முக்கியமானது. பொதுவாக, குரல் பதிவை ஆய்வு செய்யும்போது, விமானிகளை நன்கு அறிந்தவர்கள் உடன் இருந்து அதில் கேட்கும் குரல்களை,விமானிகளின் குரல்களோடு பொருத்துவார்கள். ஆனால், இப்போது வரை, எந்த விமானி எரிபொருள் சுவிட்சுகளை அணைத்து மீண்டும் இயக்கினார் என்பது தெரியவில்லை," என்று பீட்டர் கோயல்ஸ் கூறினார்.

தெளிவான குரல் அடையாளம், பேசியவர்களின் பெயர்களுடன் முழு காக்பிட் உரையாடல் பதிவு, மற்றும் விமானம் வாயிலில் இருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளாகும் வரையிலான அனைத்து தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏர் இந்தியா

மேலும், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் பரிந்துரைத்தபடி, காக்பிட் வீடியோ பதிவு கருவிகள் தேவை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

காக்பிட்டில் உள்ள விமானிகளின் செயல்பாடுகளை, அவர்களின் தோள்பட்டைக்கு மேலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகள், கட்-ஆஃப் சுவிட்சை யார் இயக்கினார் என்பதை காட்டியிருக்கக்கூடும்.

விமானம் 171-ஐ பறக்கத் தொடங்குவதற்கு முன், விமானிகளும் பணியாளர்களும் சுவாச பரிசோதனையில் (மது அருந்தியுள்ளார்களா என்ற சோதனை) தேர்ச்சி பெற்று, பறக்கத் தகுதியானவர்களாக இருந்ததாக அறிக்கை கூறுகிறது.

மும்பையைச் சேர்ந்த விமானிகள், விமானம் புறப்படுவதற்கு முந்தைய நாள் ஆமதாபாத்துக்கு வந்து, போதுமான ஓய்வு எடுத்திருந்தனர்.

ஆனால், அறிக்கையில் ஒரு முக்கிய விவரத்தையும் புலனாய்வாளர்கள் ஆராய்கின்றனர்.

2018 டிசம்பரில், அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) ஒரு சிறப்பு விமானத் தகுதி அறிக்கை (SAIB) வெளியிட்டது.

இதில், சில போயிங் 737 விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில், லாக் செய்யும் அம்சம் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

ஆனால் இந்தப் பிரச்னை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டாலும், இது பாதுகாப்பற்ற நிலையாகக் கருதப்படவில்லை.

போயிங் 787-8 விமானங்களிலும் இதே சுவிட்ச் வடிவமைப்பு பயன்படுத்தப்படுகிறது, இதில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் VT-ANB விமானமும் அடங்கும். SAIB-ன் அறிக்கை ஒரு ஆலோசனை மட்டுமே என்பதால், ஏர் இந்தியா பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.

போயிங் 787 ட்ரீம்லைனர்

பட மூலாதாரம்,BLOOMBERG VIA GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவில் நடந்த விமான கண்காட்சியில் ஏர் இந்தியாவால் இயக்கப்படும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் காக்பிட்.

எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்று யோசிப்பதாகக் கூறுகிறார் ப்ருச்னிக்கி .

இதுகுறித்து பேசிய அவர், "அறிக்கையில் உள்ள இந்த பகுதி சரியாக என்ன சொல்கிறது? ஒரு முறை சுவிட்சை அணைத்தால், இயந்திரம் அணைந்து எரிபொருள் விநியோகம் தடைபடுமா? லாக் அம்சம் துண்டிக்கப்படும்போது, என்ன நடக்கும்? சுவிட்ச் தானாகவே 'ஆஃப்' ஆகி இயந்திரத்தை நிறுத்த முடியுமா? இது உண்மையாக இருந்தால், இது மிகவும் தீவிரமான பிரச்னை. இல்லையெனில், இதை தெளிவாக விளக்க வேண்டும்"என்கிறார்.

ஆனால், மற்றவர்கள் இது ஒரு இது முக்கிய பிரச்னையாக இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகின்றனர்.

"இது FAA வெளியிட்ட ஒரு சிறிய அறிவிப்பு என்று தோன்றுகிறது, இதைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. விமானிகள், பொதுவாக விரைவாக புகார் கூறுபவர்கள், இந்த சுவிட்சுகள் குறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆராய்வது நல்லதுதான் , ஆனால் இது ஒரு கவனச்சிதறலாகவும் இருக்கலாம்," என்று கோயல்ஸ் கூறுகிறார்.

இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) முன்னாள் புலனாய்வாளர் கேப்டன் கிஷோர் சிந்தா, விமானத்தின் மின்னணு கட்டுப்பாட்டு அலகில் ஏற்பட்ட (Electronic Control Unit) பிரச்னையால் எரிபொருள் சுவிட்சுகள் செயலிழந்திருக்கலாமா என்ற கோணத்தில் சிந்திக்கிறார் .

"விமானியின் ஈடுபாடு இல்லாமல், மின்னணு கட்டுப்பாட்டு அலகு மூலம் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகளை மின்னணு முறையில் இயக்க முடியுமா? அப்படி மின்னணு முறையில் சுவிட்சுகள் செயலிழந்தால், அது மிகவும் கவலைக்குரியது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

அறிக்கையின்படி, எரிபொருள் நிரப்பும் டேங்கில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் "திருப்திகரமானவை" என்று கண்டறியப்பட்டன.

முன்னதாக, இரட்டை இயந்திர செயலிழப்புக்கு எரிபொருள் மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதியிருந்தனர். மேலும், முழுமையான விசாரணை நிலுவையில் உள்ளதால், இயந்திரக் கோளாறு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா

"இப்போதெல்லாம், நான் 787 விமானத்தில் பறக்கும்போது, தரையிறங்கும் கியர் பின்வாங்கும் செயல்முறையை உன்னிப்பாகக் கவனிக்கிறேன். கியர் கைப்பிடியை இழுக்கும்போது, நாங்கள் ஏறக்குறைய 200 அடி (60.9 மீட்டர்) உயரத்தில் இருப்போம். முழு கியர் பின்வாங்கும் செயல்முறை சுமார் 400 அடி உயரத்தில், மொத்தம் எட்டு வினாடிகளில் முடிவடைகிறது. இது விமானத்தின் உயர் அழுத்த ஹைட்ராலிக் அமைப்பு காரணமாக சாத்தியமாகிறது."என்கிறார் ப்ருச்னிக்கி .

விமானத்தை இயக்கியவர் சிந்திக்க நேரமே இல்லாமல் இருந்திருக்கலாம் என அந்த விமானி கருதுகிறார்.

"இரண்டு என்ஜின்களும் செயலிழந்து, விமானம் கீழே செல்லத் தொடங்கும்போது, நீங்கள் வெறுமனே அதிர்ச்சியடையவில்லை, மரத்துப் போய்விடுவீர்கள். அந்த நொடியில், தரையிறங்கும் கருவி உங்கள் கவனத்தில் இருப்பதில்லை. உங்கள் மனம் ஒரே விஷயத்தில் நிலைத்து இருக்கும். அதாவது, இந்த விமானத்தை எங்கு பாதுகாப்பாக இறக்க முடியும்? என விமானப் பாதையின் மீது தான் உங்களது கவனம் இருக்கும். ஆனால், இந்த விபத்தில், அதற்கு போதுமான உயரம் இல்லை," என்றும் அவர் விளக்கினார்.

விமானக் குழு நிலைமையை சரி செய்ய முயன்றது, ஆனால் எல்லாம் மிக விரைவாக நடந்துவிட்டது என்று கூறுகின்றனர் புலனாய்வாளர்கள் .

"என்ஜின்கள் அணைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் இயக்கப்பட்டன. இயந்திரங்கள் உந்துதலை இழப்பதை விமானிகள் உணர்ந்தனர். முதலில் இடது என்ஜினை மீண்டும் ஆன் செய்து, பின்னர் வலது என்ஜினிலும் முயன்றிருக்கலாம்," என்று ஷான் ப்ருச்னிக்கி கூறினார்.

"ஆனால், வலது என்ஜின் மீண்டும் இயங்க போதுமான நேரம் கிடைக்கவில்லை, உந்துதலும் போதுமானதாக இல்லை. இறுதியில் இரண்டு என்ஜின்களும் "இயங்கும் நிலைக்கு" மாற்றப்பட்டன. ஆனால், இடது என்ஜின் முதலில் அணைக்கப்பட்டு, வலது என்ஜின் மீட்கப்படுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதால், சூழலை சரி செய்யும் முயற்சி பயனளிக்கவில்லை." என்பது ப்ருச்னிக்கியின் கூற்றாக உள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy0w1rvzz11o

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

முற்றுப்புள்ளியா? விமான ஓட்டிகளில் ஒருவர்தான் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தினார் என ஒரு கருத்து பரவுகின்றது. இன்னும் சரியான காரணம் அறியப்படவில்லை.

இந்தியா ஒரு முழு நேர்மையான விசாரணையினை நடாத்தி அதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது (பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளிற்கு செய்யும் குறைந்த பட்ச நலன்), இல்லாவிட்டால் இந்த ஊகங்கள் மழை நின்றாலும் நிற்காத தூரலாக தொடரும் நிலைதான்(பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை உளவியலாக தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாக்கும் விடயமாக இருக்கும்).

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயம் said:

முற்றுப்புள்ளியா? விமான ஓட்டிகளில் ஒருவர்தான் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தினார் என ஒரு கருத்து பரவுகின்றது. இன்னும் சரியான காரணம் அறியப்படவில்லை.

இது ஆரம்ப கட்ட அறிக்கை என கருதுகிறேன், இந்த அறிக்கையின் பிரகாரம் தவறுதலாக இயந்திரத்திற்கான சக்தியினை நிறுத்தியிருக்க முடியாது எனவே கூறப்பட்டுள்ளது, ஆரம்பத்தில் யூரியூப்பர்கள் மிக மோசமான காணொளியினடிப்படையில் கூறிய பிளாப் டேக் ஓப் நிலையில் இருக்கவில்லை என்ற ஊகத்திற்கு இந்த அறிக்கையில் தெளிவாக 5 பாகை பிளாப் கான்டில் டேக் ஓப் நிலையில் உள்ளதனை படம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்கள், அத்துடன் வலது பக்க இறக்கையின் படத்தினையும் இணைத்துள்ளார்கள், இதனாலேயே ஆரம்பத்திலேயே மோசமான தரத்தில் உள்ள காணொளியினடிப்படையில் வெறும் ஊகங்களை வெளியிடுவது ஒரு தவறான செயலாகும் என அந்த திரியிலே குறிப்பிட்டிருந்தேன்.

முழுமையான அறிக்கை வெளியாக கால தாமதம் ஏற்படலாம், ஊடகங்கள் அதுவரை பொறுமை காக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அகமதாபாத்தில் எயார் இந்தியா பேரழிவில் சிக்கியது எப்படி? நொடிக்கு நொடி நடந்து என்ன? ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை

13 JUL, 2025 | 11:19 AM

image

விமானம் புறப்பட்ட ஒரு நொடிக்குள், இயந்திர எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் 'ரன்' நிலையிலிருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நிகழ்ந்த எயார் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்து, இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகப் பதிவாகியுள்ளது. 260 உயிர்களைப் பலிகொண்ட இந்த துயரச் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தால் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, விபத்துக்கான அதிர்ச்சியூட்டும் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது: 

விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே, அதன் என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் 'RUN' நிலையிலிருந்து 'CUTOFF' நிலைக்கு ஒரு நொடி இடைவெளியில் மாறியதே விபத்துக்குக் காரணம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது

இந்த ஆரம்ப அறிக்கை, நிகழ்வின் ஒவ்வொரு நொடியையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது, இது விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான மிகத் துல்லியமான தகவலை அளிக்கிறது.

நொடிக்கு நொடி நடந்து என்ன?

காலை 11:17: எயார் இந்தியா ட்ரீம்லைனர் VT-ANB விமானம் டெல்லியில் இருந்து AI423 விமானமாக அகமதாபாத்தில் தரையிறங்குகிறது.

பிற்பகல் 1:18:38: விமானம் விமான நிலையத்தின் பே 34 இல் இருந்து புறப்படுவது கவனிக்கப்படுகிறது.

பிற்பகல் 1:25:15: விமான ஊழியர்கள் டாக்ஸி அனுமதி கோர, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அனுமதி அளிக்கிறது. விமானம் ரன்வே 23 நோக்கி டாக்ஸிவே R4 வழியாகச் சென்று, புறப்படுவதற்காக வரிசையில் நிற்கிறது.

பிற்பகல் 1:32:03: விமானத்தின் கட்டுப்பாடு தரைக்கட்டுப்பாட்டில் இருந்து டவர் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படுகிறது.

பிற்பகல் 1:37:33: புறப்படுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

பிற்பகல் 1:37:37 மணி: விமானம் புறப்படத் தொடங்குகிறது.

பிற்பகல் 1:38:39 மணி: விமானம் தரையிலிருந்து மேலே எழும்புகிறது. விசாரணை அதிகாரிகள், காற்று/தரை சென்சார்கள் 'ஏர் மோட்'க்கு மாறுவதைக் குறிப்பிடுகின்றனர், இது புறப்படுதலுக்கு இணக்கமானது.

பிற்பகல் 1:38:42 மணி: விமானம் அதிகபட்சமாக 180 நாட்ஸ் வேகத்தை அடைகிறது. உடனடியாகப் பிறகு, என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் 'ரன்' நிலையிலிருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறுகின்றன, ஒரு வினாடி இடைவெளியில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக. "என்ஜின்களுக்கு எரிபொருள் வழங்கல் துண்டிக்கப்பட்டதால், என்ஜின் N1 மற்றும் N2 அவற்றின் புறப்படும் மதிப்புகளிலிருந்து குறையத் தொடங்கின."

india_plane_crash_2025.jpg

காக்பிட் குரல் பதிவுகள் ஒரு குழப்பமான தருணத்தைப் பதிவு செய்துள்ளன: ஒரு விமானி மற்ற விமானியிடம் ஏன் எரிபொருளைத் துண்டித்தார் என்று கேட்க, மற்றொரு விமானி தான் செய்யவில்லை என்று பதிலளிக்கிறார்.

விமான நிலைய சிசிடிவி காட்சிகள், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஆரம்பகட்ட ஏறும் போது ராம் ஏர் டர்பைன் (RAT) வெளியேறுவதைக் காட்டுகின்றன. "விமான நிலைய சுற்றுச்சுவரைக் கடக்கும் முன் விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியது," என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டது.

பிற்பகல் 1:38:47 மணி: இரண்டு என்ஜின்களின் மதிப்புகளும் குறைந்தபட்ச செயலற்ற வேகத்திற்குக் கீழே குறைகின்றன. RAT இன் ஹைட்ராலிக் பம்ப் ஹைட்ராலிக் சக்தியை வழங்கத் தொடங்குகிறது.

பிற்பகல் 1:38:52 மணி: என்ஜின் 1 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்ச் மீண்டும் 'கட்ஆஃப்' நிலையிலிருந்து 'ரன்' நிலைக்கு மாற்றப்படுகிறது.

பிற்பகல் 1:38:56 மணி: என்ஜின் 2 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சும் இதேபோல் 'ரன்' நிலைக்கு மீட்டமைக்கப்படுகிறது.

விசாரணை அறிக்கை கூறுகிறது: "விமானத்தில் இருக்கும்போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் CUTOFF இலிருந்து RUN க்கு நகர்த்தப்படும்போது, ஒவ்வொரு என்ஜினின் முழு அதிகார டிஜிட்டல் என்ஜின் கட்டுப்பாடு (FADEC) தானாகவே மறுதொடக்கம் மற்றும் உந்துவிசை மீட்பு வரிசையை நிர்வகிக்கிறது." "என்ஜின் 1 இன் மைய வேகம் குறைவது நின்று, தலைகீழாகி, மீட்சிக்கு முன்னேறத் தொடங்கியது." "என்ஜின் 2 மீண்டும் பற்றவைக்க முடிந்தது, ஆனால் மைய வேகக் குறைவை தடுக்க முடியவில்லை."

பிற்பகல் 1:39:05: விமானிகளில் ஒருவர் "MAYDAY, MAYDAY, MAYDAY" என்று அவசர அழைப்பை விடுக்கிறார்.

பிற்பகல் 1:39:11: விமானத்தில் இருந்து தரவு பதிவு நிறுத்தப்படுகிறது.

பிற்பகல் 1:44:44: விபத்து தீயணைப்பு வாகனங்கள் மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகளுக்காக விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறுகின்றன.

இந்த அறிக்கை, ஒரு சில நொடிகளில் எடுக்கப்பட்ட தவறான அல்லது தற்செயலான ஒரு செயல், எப்படி ஒரு பேரழிவிற்கு வழிவகுத்தது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்த விபத்துக்கான முழுமையான காரணங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விரிவான விசாரணை தொடரும் நிலையில், இந்த ஆரம்ப அறிக்கை எதிர்கால விமானப் பாதுகாப்பிற்கான முக்கியமான பாடங்களை வழங்குகிறது.

https://www.virakesari.lk/article/219848

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, vasee said:

கடைசியாக அனைத்து ஊகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள், ஆறுதலான விடயம்.

ஓம் தமிழ் யுரியுப்பர்கள் விமானம் விபத்து பற்றி தங்களது கற்பனை கதைகளை தொடர்ந்து விட முடியவில்லையே என்ற கவலை தான் ஆனாலும் விடுவது இல்லை என்று சிங்கல அடியான் ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராம் வேண்டும் என்றே செய்யபட்ட தவறு விமான விபத்து - தலைப்பு. காணொளி பார்க்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தின் குறைபாட்டை 7 ஆண்டுக்கு முன்பே சுட்டிக்காட்டிய அமெரிக்காவின் எஃப்ஏஏ - நிபுணர்கள் கூறுவது என்ன?

ஆமதாபாத் விமான விபத்து, குஜராத், இந்தியா, ஏர் இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆமதாபாத் விமான விபத்து குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஜூலை 12-ஆம் தேதி இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் விமானத்தின் இரு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கட் ஆஃப் நிலைக்குச் சென்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக 2018 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் பரிந்துரை செய்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்ன பரிந்துரை? ஆமதாபாத் விமான விபத்துக்கு அதுதான் காரணமா?

முதற்கட்ட அறிக்கை கூறுவது என்ன?

ஆமதாபாத் விமான விபத்து, குஜராத், இந்தியா, ஏர் இந்தியா

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு, ஏர் இந்தியா ஏஐ 171 விமானத்தின் கேப்டன் சுமித் சபர்வால் (இடது), இணை விமானி க்ளைவ் குந்தர் (வலது)

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏஐ 171 விமானம், பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் விபத்தில் சிக்கியது.

விமான நிலையத்தின் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 241 பேர் உள்பட கிட்டத்தட்ட 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்ற பிரிட்டிஷ் குடிமகன் மட்டும் உயிர் பிழைத்தார்.

விபத்து நடந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், இயக்க (RUN) என்ற நிலையில் இருந்து கட் ஆஃப் (CutOff) நிலைக்குச் சென்றதால், இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் செல்வது தடைப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் இரு என்ஜின்களும் செயல்படாமல் போனதாக முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான விபத்து பிற்பகல் 1.40 மணியளவில் நடந்துள்ள நிலையில், காலை 11.17 மணியில் இருந்து என்ன நடந்தது என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா விமானம் கிளம்புவதற்கு முன்பு விமானத்தை இயக்குவதற்கு விமானிகள் தகுதியானவர்களா என்பதற்கான சோதனைகள் நடத்தப்பட்டன. சுவாசப் பகுப்பாய்வு சோதனையில், அவர்கள் விமானத்தை இயக்கத் தகுதியானவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

விமானத்தின் எரிபொருள் மாதிரிகளும் திருப்திகரமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமானிகளின் அறையில், 'ஏன் துண்டித்தீர்கள்? (எரிபொருள் சுவிட்ச்)' என விமானி கேட்ட போது, 'நான் அணைக்கவில்லை' என்று மற்றொரு விமானி கூறியுள்ளார். ஆனால், அடுத்த சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்த விமானம, கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

விமானத்தில் இரண்டு என்ஜின்களின் கட் ஆஃப் நேரத்துக்கு இடையில் ஒரு விநாடி நேரம் இருந்துள்ளது. எரிபொருள் விநியோகம் தடைபட்டதால், வேகம் குறையத் தொடங்கியதாக விமான புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ள 15 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'திட்டமிட்டு செய்யவில்லை, ஆனால்?'

ஆமதாபாத் விமான விபத்து, குஜராத், இந்தியா, ஏர் இந்தியா

படக்குறிப்பு, எலக்ட்ரிக்கல் மற்றும் மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்கிறார் அசோக் ராஜா.

"ஏஏஐபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட் ஆஃப் சுவிட்ச் தொடர்பாக விமானிகள் பேசியது குறித்து கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், திட்டமிட்டு இதனைச் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா.

"விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு மனநல ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை" என்பது முன்பே உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் அவர், "விமானம் கிளம்புவதற்கு முன்பு அவர் எவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்தாலும் எரிபொருள் உள்பட அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை வாய் விட்டுக் கூற வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அசோக் ராஜா, "அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் இந்த விமானங்களை தயாரித்துள்ளது. இதற்கு அந்நாட்டின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA)) ஒப்புதல் வழங்குகிறது. 2018 ஆம் ஆண்டு போயிங் விமானத்தின் தொழில்நுட்ப பிரச்னைகள் தொடர்பான சில பரிந்துரைகளை எஃப்ஏஏ வழங்கியுள்ளது" எனக் கூறுகிறார்.

2018 ஆம் ஆண்டு பரிந்துரை என்ன?

ஆமதாபாத் விமான விபத்து, குஜராத், இந்தியா, ஏர் இந்தியா

'787 ட்ரீம்லைனர் விமானங்களில் எரிபொருள் கட் ஆஃப் வால்வுகளில் தொழில்நுட்ப சிக்கல்கள் வரலாம்' எனவும் அது சரியாக உள்ளதாக என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எஃப்ஏஏ பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அது கட்டாயம் என்பதாகக் குறிப்பிடாமல் பரிந்துரை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டதால் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார் அசோக் ராஜா.

"இது விதிமீறல் என்பதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் போயிங் விமானம் தொடர்பான இந்தப் பரிந்துரையை செயல்படுத்தியிருக்கலாம்" எனக் கூறும் அசோக் ராஜா, "எலக்ட்ரிக்கல் மற்றும் மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" எனக் குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்ஏஏ (FAA) அளித்துள்ள பரிந்துரையில், போயிங் நிறுவனத்துக்கு விமானத்தை இயக்குகிறவர்களிடம் இருந்து கிடைத்த அறிக்கையின்படி, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளின் லாக்கிங் சிஸ்டம் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் (Flight deck) அமைக்கப்பட்டு, என்ஜினுக்கு எரிபொருளை வழங்கவும் துண்டிக்கவும் செய்ய விமானியால் கையாளப்படுகிறது. இதில் கவனக்குறைவு நேரிடுவதைத் தடுக்கும் வகையில் லாக்கிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா, ஏஏஐபி முதல் கட்ட விசாரணை அறிக்கை

லாக்கிங் சிஸ்டம் செயல்படாவிட்டால் என்ன நடக்கும்?

'லாக்கிங் சிஸ்டம் சரிவர செயல்படாவிட்டால், ரன் மற்றும் கட் ஆஃப் நிலைகளுக்கு ஆகிய 2 நிலைகளுக்கு இடையே எரிபொருள் சுவிட்சை மாற்றலாம். இதில் கவனக்குறைவுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதனால் விமானத்தின் இயந்திரம் நிறுத்தப்படுவது போன்ற எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம்' என எஃப்ஏஏ எச்சரித்துள்ளது.

'விமான உரிமையாளர்களும் அதனை இயக்கும் விமானிகளும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் லாக்கிங் சிஸ்டத்தை ஆய்வு செய்து அதன் தன்மையை உறுதி செய்ய வேண்டும்' எனவும் எஃப்ஏஏ அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

'ஒத்துப் போகும் அறிக்கை'

'தரையில் விமானம் இருக்கும் போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை உயர்த்தாமல் (Lift) இரண்டு நிலைகளுக்கு இடையில் நகர்த்த முடியுமா எனப் பார்க்க வேண்டும். சுவிட்சை உயர்த்தாமல் நகர்த்த முடிந்தால் லாக்கிங் சிஸ்டம் துண்டிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் என்பதால் சுவிட்சை மாற்ற வேண்டும்' எனவும் எஃப்ஏஏ தெரிவித்துள்ளது.

இதனை மேற்காள் காட்டிப் பேசிய முன்னாள் விமானி அசோக் ராஜா, "இரண்டு விமானிகளுக்கு நடுவில் கட் ஆஃப் வால்வு இருக்கும். அது கைதவறி அணைக்கும் அளவுக்கு இருக்காது. அதற்கான வாய்ப்புகளே இல்லை" எனக் கூறுகிறார்.

"கடந்த காலங்களில் விமானத்தின் இயக்கம் முழுவதும் கைகளால் கையாளப்பட்டன. அதாவது நேரடியாக மெக்கானிக்கல் செயல்பாடு இருக்கும். தற்போது எலக்ட்ரானிக் முறையில் கையாளப்படுகின்றன" எனவும் அசோக் ராஜா குறிப்பிட்டார்.

எஃப்ஏஏ கூறிய பரிந்துரைகளுடன் விமான விபத்து தொடர்பான இந்திய விமான புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையும் ஒத்துப் போவதாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'பரிந்துரை தான், கட்டாயம் இல்லை'

ஆமதாபாத் விமான விபத்து, குஜராத், இந்தியா, ஏர் இந்தியா

படக்குறிப்பு, விமானத்தின் மென்பொருளில் கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எலக்ட்ரிகல் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.குருசாமி.

"எஃப்ஏஏ கூறிய அம்சங்களில் (Special Airworthiness Information Bulletins (SAIB) 'கட்டாயம்' என இல்லாவிட்டால் அதை விமானங்களின் உரிமையாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை" என்கிறார், அசோக் ராஜா.

விமானத்தின் எலக்ட்ரிகல் வயர்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தன்னிச்சையாக எரிபொருள் கட் ஆஃப் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இறுதிக்கட்ட அறிக்கை வெளிவரும்போது முழு விவரங்களும் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த கோவை நேரு ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ் கல்லூரியின் பேராசிரியர் எஸ்.குருசாமி, ""இரண்டு சுவிட்சுகளும் வெவ்வேறு மின் இணைப்புகள் மூலம் செயல்படும். அப்படித் தான் விமானம் வடிமைக்கப்பட்டிருக்கும். தவறுதலாக இதை அணைப்பதற்கு வாய்ப்பில்லை. இரண்டு என்ஜின்களுக்கும் தனித்தனி எரிபொருள் அமைப்புகள் உள்ளன" என்கிறார்.

"ஒன்று ஆஃப் செய்யப்பட்டாலும் மற்றொன்று கட் ஆஃப் ஆக வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறும் அவர், "இதற்கு மனித தவறு காரணமா? தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது முழு அறிக்கை வரும்போது தெரியவரும்" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c939eqgd9zno

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் தமிழ் யுரியுப்பர்கள் விமானம் விபத்து பற்றி தங்களது கற்பனை கதைகளை தொடர்ந்து விட முடியவில்லையே என்ற கவலை தான் ஆனாலும் விடுவது இல்லை என்று சிங்கல அடியான் ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராம் வேண்டும் என்றே செய்யபட்ட தவறு விமான விபத்து - தலைப்பு. காணொளி பார்க்கவில்லை

தவறுதலாக சக்தியினை நிறுத்த முடியாதவாறு வடிவமைத்துள்ளார்கள் என கூறுகிறார்கள் ஆழி (சுவிட்ச்) பக்கவாட்டில் இரண்டு தடுப்புக்கள் தற்செயலாக ஆழியின் மீது கை படுவதனை தவிர்ப்பதற்கு வைத்துள்ளார், மற்றது ஆழியின் இயங்கு நிலையில் இருந்து இயக்கமற்ற நிலைக்கு மாற்றுவதற்கு முதலில் ஆழியினை மேல் நோக்கி இழுத்து பின்னர் இயக்கமற்ற நிலைக்கு மாற்றவேண்டும் அதனால் தற்செயலாக கை படுவதன் மூலம் இயங்காநிலைக்கு மாறாது என கூறுகிறார்கள்.

ஆனால் இவற்றின் செயற்பாட்டுத்தன்மை (பாதுகாப்பு பொறிமுறை) சரியான நிலையில் இயங்கு நிலையில் இருந்ததா என முழு அறிக்கையில் தெரியவரும், விமான பயணத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் விமானம் இயங்கு நிலையில் உள்ளதாக கூறுகிறார்கள் அந்த அறிக்கை முழுமையான பரிசோதனை அறிக்கையாக இருந்திருக்குமா என்பது முழுமையான விசாரணையின் பின்னர் வெளிவரும்.

விமானிகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்கள் என கூறியுள்ளார்கள், இந்த நிலையில் முழுமையான அறிக்கை வெளிவரும் வரை மக்கள் பொறுபுணர்வுடன் செயற்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://i2.res.24o.it/pdf2010/Editrice/ILSOLE24ORE/ILSOLE24ORE/Online/_Oggetti_Embedded/Documenti/2025/07/12/Preliminary%20Report%20VT.pdf

ஏயார் இந்தியா விபத்து ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை.

Edited by vasee

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.