Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-370.jpg?resize=750%2C375&ssl

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சாரதி அனுமதி பத்திரம் மற்றும் அவர்களின் நாட்டின் சாரதி அனுமதி பத்திரம் உள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர்,

தங்கள் நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் நாட்டுக்கு வருபவர்களும் இலங்கையில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொழும்பிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ள வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அலுவலகத்தில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேநேரம், தேவையான சாரதி அனுதிப் பத்திரம் அல்லது சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் இலங்கையில் வாகனங்களை செலுத்துவதை சுற்றுலா பயணிகள் தவிரக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தவுடன் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு வசதியாக இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வசதிகளை அறிமுகப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1441072

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலாப் பயணிகள் சாரதி அனுமதி பத்திரத்தை விமான நிலையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்

Published By: Digital Desk 3

03 Aug, 2025 | 05:18 PM

image

நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) முதல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாக தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுகொள்ளலாம்.

சுற்றுலா பயணிகளின் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு குறிப்பாக விமான நிலையத்திற்கு அருகில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் போது வாகனம் ஓட்ட விரும்பும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு on-arrival சேவை மையத்தால் இன்றையதினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர், சுற்றுலாப் பயணிகள் வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலேயே நேரடியாக தற்காலிக சாரதி அனுமதி பெற்றுகொள்ளக் கூடியதாக இருந்தது.

தற்போது, பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் பயணிக்க மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் இலகுரக வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

எனினும், புதிய முறையின் கீழ், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகுரக வாகன வகைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதி பத்திரம் விமான நிலையத்தில் மூலம் வழங்கப்படாது.

விமான நிலையத்தில் தற்காலிக இலங்கை சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க, வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாட்டில் பயன்படுத்திய செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரத்தை சமர்பிக்க வேண்டும். பயிற்சி, தகுதிகாண், தற்காலிக உரிமங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. உரிமம் ஆங்கிலத்தில் இல்லையென்றால், சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு தேவை. விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் கடவுசீட்டு மற்றும் வீசாவையும் சமர்பிக்க வேண்டும்.

வெளிநாட்டு சாரதி அனுமதி பத்திரம் மாற்றப்பட்ட திகதியிலிருந்து குறைந்தது ஒரு வருடத்திற்கு செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.

இந்த நடைமுறை மூலம் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் அதிகபட்சம் ஐந்து மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும். வெளிநாட்டு உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும், திருத்தும் லென்ஸ்கள், தானியங்கி டிரான்ஸ்மிஷன் அல்லது செவிப்புலன் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான தேவைகள் - மாற்றப்பட்ட உரிமத்திற்கும் பொருந்தும்.

ஒரு மாதத்திற்கு 2,000 ரூபாய் கட்டணம் அறவிடப்படும்.

https://www.virakesari.lk/article/221714

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சாரதி அனுமதி பத்திரம் பெறும் நடைமுறை குறித்து அறிவுறுத்தல்

03 Aug, 2025 | 06:45 PM

image

ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதி பத்திரம் வைத்திருந்தால், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கு நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அந்த நாட்டிற்கான சாரதி அனுமதி பத்திரம் வைத்திருந்தால், இந்தக் கிளை அலுவலகத்திலிருந்து சாரதி அனுமதி பத்திரங்களைப் பெறலாம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகஅறிவுறுத்ல்ள், அவர்களின் சாரதி அனுமதி பத்திரம்  மற்றும் விசா காலத்தின் அடிப்படையில், 5 நிமிடங்களுக்குள் செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரத்தைப் பெற உதவும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் புதிய கிளை அலுவலகம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்கவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க, விமானப் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் தலைவர் (ஓய்வு) ஹர்ஷா அபேவிக்ரம, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAAS) தலைவர் சுனில் ஜெயரத்ன மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்  பிமல் ரத்நாயக்க,

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் விண்ணப்பங்களை இந்த அலுவலகங்களில்  மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம், இந்த திட்டம் பத்திரங்களை  வழங்குவதற்கான நேரத்தை மேலும் குறைக்கும்.

சில மாதங்களில், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளுக்கு கையடக்கத்தொலைபேசி வழங்கப்படும் என்றும், பின்னர் இந்த அலுவலகங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு QR குறியீட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முன்னர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கான செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு வேரஹெராவில் உள்ள மோட்டார் வாகனத் திணைக்களத்தின் சாரதி உரிமக் கிளைக்குச் செல்ல வேண்டியிருந்தது , இதற்காக அவர்கள் தங்கள் பயண நேரத்திலிருந்து சில நாட்களை ஒதுக்க வேண்டியிருந்தது  என மேலும் தெரிவித்தார்.

முதல் சாரதி அனுமதி பத்திரம் ஒரு இந்திய நாட்டவருக்கும், இரண்டாவது சாரதி அனுமதி பத்திரம் ஒரு இத்தாலிய நாட்டவருக்கும் அமைச்சரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250803-WA0065.jpg

IMG-20250803-WA0066.jpg

IMG-20250803-WA0068.jpg

20250803_144210__1_.jpg

https://www.virakesari.lk/article/221723

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் விண்ணப்பங்களை இந்த அலுவலகங்களில்  மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம், இந்த திட்டம் பத்திரங்களை  வழங்குவதற்கான நேரத்தை மேலும் குறைக்கும்.

மின்னஞ்சலைக் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

மின்னஞ்சலைக் காணவில்லை.

போக்குவரத்து திணைக்களம்

முகவரி: இல. 341, எல்விட்டிகல மாவத்தை,

கொழும்பு 05, நாராஹேன்பிட்ட,

இலங்கை.

தொலைபேசி: +94 112 033333

E mail - Werahera : dmtweraheracom@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

போக்குவரத்து திணைக்களம்

முகவரி: இல. 341, எல்விட்டிகல மாவத்தை,

கொழும்பு 05, நாராஹேன்பிட்ட,

இலங்கை.

தொலைபேசி: +94 112 033333

E mail - Werahera : dmtweraheracom@gmail.com

தகவலுக்கு நன்றி ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 120 தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தங்கள் விசா செல்லுபடியாகும் தன்மை மற்றும் சொந்த நாட்டு உரிமத்தின் அடிப்படையில் தற்காலிக அனுமதி அனுமதி பத்திரங்களைப் பெற தகுதியுடையவர்களாவர்.

10 நிமிடங்களுக்குள்

இருப்பினும் முச்சக்கர வண்டி மற்றும் கனரக வாகன உரிமங்களுக்கான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் | 120 Temporary Driving Licenses For Tourists

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்தவுடன் 10 நிமிடங்களுக்குள் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tamilwin
No image preview

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெள...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-66.jpg?resize=750%2C375&ssl=

120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்!

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

24 மணி நேரமும் செயல்படும் சேவை கவுண்டர், தகுதியுள்ள வெளிநாட்டினரின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப் பத்திங்களின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப் பதிரங்களை வழங்க உதவுகிறது.

தற்காலிக அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு முதல் ஐந்து மாதங்கள் வரை இருக்கும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான உரிமங்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1442019

  • கருத்துக்கள உறவுகள்

வௌிநாட்டினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் வழியாக 120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். 

கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற வெளிநாட்டினரிடமிருந்து அதிகளவான கோரிக்கை இருக்கும் நிலையில், அவ்வாறு அனுமதிப்பத்திரத்திரம் வழங்கப்படாது என்றும் அவர் கூறினார். 

"சுற்றுலாவை ஊக்குவிக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தடுக்கவும், ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக அனுமதிகளை வழங்க கருமபீடத்தை திறந்துள்ளோம். 

இது 24 மணி நேரமும் திறந்திருக்கும். கோரிக்கைகள் முன்வைத்தாலும் சில அனுமதிகளை வழங்க முடியாது. 

குறிப்பாக முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை செலுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை. அத்தகைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. 

வௌிநாட்டினரின் விசா காலத்தின் அடிப்படையில் இரண்டு மாதம் முதல் 5 மாதங்கள் வரை விசா அனுமதிப் பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுப்படியாகும் காலத்திற்கு அமைய தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது. 

மேலும், நாங்கள் ஒரு நிரந்தர அனுமதியை வழங்குகிறோம். நாங்கள் விமான நிலையத்தில் அதை வழங்குவதில்லை. 

வழக்கம் போல், இது வெரஹெர அலுவலகத்தில் செய்யப்படுகிறது." என்றார். 

புதிய வாகனங்களை பதிவு செய்வது குறித்தும் கமல் அமரசிங்க தனது கருத்துக்களை வௌியிட்டார். 

"ஜனவரி முதல், நாங்கள் 133,678 வாகனங்களைப் பதிவு செய்துள்ளோம். 

இதில் மிகப் பெரிய எண்ணிக்கை மோட்டார் சைக்கிள்கள் ஆகும், அவற்றில் 100,451 பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அடுத்த பெரிய எண்ணிக்கையாக 20,535 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அத்துடன், இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொறிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் போன்ற வாகனங்கள் உள்ளன. 

பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்." என்றார்.

https://adaderanatamil.lk/news/cmdziqq8y026sqp4kbwkduttd

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.