Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

01 Aug, 2025 | 10:58 PM

image

அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கவுள்ள கடிதத்தில் கையெழுத்திடுவது குறித்து வெள்ளிக்கிழமை (1) நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் கூறியிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் என்பன கடந்த வாரம் ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொண்டிருந்தன.

அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அதில் பங்கேற்பதில்லை என்று கட்சி தீர்மானித்திருப்பதாகப் பதிலளிக்கப்பட்டது.

இருப்பினும் தாம் அனுப்பிவைக்கவுள்ள வரைபினைத் தயாரிக்கும் பணிகள் இவ்வாரத்துக்குள் நிறைவுசெய்யப்படும் எனவும், அவ்வரைபு தமிழரசுக்கட்சிக்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் வெள்ளிக்கிழமை (1) கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவிட்ஸர்லாந்து நாட்டின் தேசிய தின நிகழ்வைத் தொடர்ந்து, அதே ஹோட்டலிலேயே இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (தமிழ்த்தேசிய பேரவை) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரும், தமிழ்த்தேசிய பேரவை சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும், சிவில் சமூகம் சார்பில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மற்றும் பி.என்.சிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள கடிதம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததுடன் அவ்விடயங்களுடன் உடன்படும் பட்சத்தில் அதுபற்றி விரைவில் ஒரு முடிவை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை (1) யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடி தீர்மானமொன்றை அறிவிப்பதாகக் குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/221589

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணி தயாரித்த கடிதத்தில் கையொழுத்திடோம் – சுமந்திரன் உறுதி!

adminAugust 3, 2025

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் தயாரித்த ஜெனீவா தொடர்பான கடிதத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதில் வழங்கியபோதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவா தொடர்பான கடிதத்தை தயாரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார்கள். நாங்கள் அந்த கூட்டத்திலே பங்கு கொள்ளவில்லை. அதற்கான காரணங்களை ஏற்கனவே எமது கட்சி தலைவர் ஊடகங்களுக்கு சொல்லி இருக்கிறார்.

அவர்கள் அந்த கூட்டத்தில் ஏதோ ஒரு கடிதம் ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கடிதத்தை தயாரித்திருக்கின்றார்கள். தயாரித்த கடிதத்தை எனக்கும் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்கள். கடிதம் தொடர்பாக நாங்கள் கூடி பேசி ஒரு தீர்மானத்தை எடுப்போம் என தலைவர் அவர்களுக்கு சொன்னார். அதை சொன்ன பிறகும் கூட எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அதனை தனித்தனியாக அனுப்பி அவர்களுடைய கையொப்பத்தையும் கேட்டிருக்கிறார்கள். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே கட்சி தீர்மானமாக தான் நாங்கள் செயல்படுவோம். நாங்கள் தனியாக கையொப்பம் வைக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

வேறு பல முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக நாம் கூடியிருந்தாலும் கூட இந்த விடயமும் ஒன்று இருந்த அடிப்படையினால் அதைப்பற்றி நாங்கள் இறுதியில் பேசியிருக்கிறோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்கள் சார்பாக எப்படியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் பலதரப்பட்ட எங்களுடைய பிரதிநிதித்துவத்தை சொல்லியிருக்கிறோம்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வந்தபோது கூட 2021ம் ஆண்டு நானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதி செய்த ஆவணம், அது சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கையெழுத்திட்டார்கள். அது எமது நிலைப்பாடு. அதில்  மாற்றமில்லை. ஆனால் இன்றைய சூழலில் நாங்கள் எதை சொல்ல வேண்டும். அதை எப்படியாக சொல்ல வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஒரு கருத்து பரிமாற்றம் செய்திருக்கிறோம்.

அதன் அடிப்படையில அவர்கள் தாங்களாக தயாரித்துவிட்டு எங்களுடைய மேசையிலே வைத்து கையொப்பம் கேட்கிற கடிதத்தில் நாங்கள் கையொப்பம் இடவில்லை. நாங்கள் அதைவிட தீர்க்கமாக பல விடயங்களை ஆராய்ந்து, நாங்கள் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டிய முறையிலே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதான கட்சி என்ற வகையிலே, உகந்த தருணத்திலே சரியான நேரத்திலே நாங்கள் அதை வெளிப்படுத்துவோம். கடிதம் மூலமாகவோ வேறு விதமாகவோ அதனை செய்வோம்.

ஆனால் தற்போதைக்கு அவர்கள் தாங்களாக தயாரித்துவிட்டு நீங்களும் கையொப்பம் வையுங்கள் என்று சொல்லி தரும் கடிதத்தில் கையொப்பம் இடுவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது – என்றார்

https://globaltamilnews.net/2025/218756/

  • கருத்துக்கள உறவுகள்

Ilankai_Tamil_Arasu_Kachchi_Logo_1200px_

தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன்.

செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது.

ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்வத்தை தூண்டி வருகின்றன. குறிப்பாக முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான நடவடிக்கையானது பொறுப்புக் கூறத் தொடர்பில் அரசாங்கம் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றது என்பதைக் காட்டுகின்றன. பகிரங்க சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்பதும் இந்த உள்நோக்கத்தை கொண்டதுதான்.

செம்மணியில் அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்ற ஒரு பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டியெழுப்புவதன் மூலம் உள்நாட்டு நிதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது என்ற தனது நிலைப்பாட்டை கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக தெரிவித்த பின் அரசாங்கம் அதிகம் உற்சாகமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் அரசாங்கத்தின் ஓர் அலகு போல செயல்படுகின்றது என்ற பொருள்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விமர்சித்து வரும் ஒரு பின்னணிக்குள், அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் முடிவுகளை தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய விதத்தில் அரசாங்கம் திட்டமிட்டு உழைக்கின்றது என்பதைத்தான் செம்மணி விசாரணைகளில் அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் நமக்கு உணர்த்துகின்றது.

இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு என்ன செய்யப் போகின்றது? முதலாவதாக செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண்பதற்கும் அந்த விடயத்தில் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உதவக்கூடிய விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு;தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உண்டு; தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கு உண்டு.

நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் உரிய முறைப்படி திரட்டி,உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்கூடாக முன்னெடுப்பதுதான்.

இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் குடிமக்கள் அமைப்புகளிடமும் நீண்ட கால அடிப்படையிலான பரந்தகன்ற,வேலைத் திட்டம் ஏதாவது உண்டா? குறிப்பாக ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவதற்கும் அப்பால் பரிகார நீதியை நோக்கி நிலைமைகளை புத்திசாலித்தனமாக நகர்த்தக்கூடிய வழி வரைபடம் ஏதாவது உண்டா ?

இந்த விடயத்தில் முன்கை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டியது பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான்.2015 இலிருந்து 2018 வரையிலும் அக்கட்சி நிலைமாறு கால நீதியின் பங்காளியாக செயற்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் நிலைமாறு கால நீதியை நிராகரித்து பரிகார நீதியைக் கோரினார்கள்.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதை சட்டத்துறை சார்ந்த வார்த்தைகளில் சொன்னால் நிலை மாறு கால நீதிக்கானது. தமிழரசுக் கட்சி காலகட்டத்தில் நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயல்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஐநாவோடும் இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்து செயல்பட்டார்கள்.

நிலைமாறு கால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிசோதனை செய்தோம். அந்தப் பரிசோதனை தோற்றுப் போய்விட்டது “என்று சுமந்திரன் சொன்னார். அவர் இதைச் சொன்னது வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில். அந்த சந்திப்பு முக்கியமானது. 2021 ஆம் ஆண்டு மன்னாரைச் சேர்ந்த சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு அது. ஜெனிவாக கூட்டத் தொடரை முன்னிட்டு ஐநாவுக்குக் கொடுக்க கடிதம் ஒன்றை ஏழுதுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது சந்திப்பு அது. சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். அந்த சந்திப்பில்தான் சுமந்திரன் மேற்கண்டவாறு சொன்னார்.அந்த சந்திப்பின் பின் நிகழ்ந்த மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்,சென் திரேசாள் மண்டபத்தில் இடம் பெற்றது.அதில்தான் ஒரு கூட்டுக் கடிதம் இறுதி செய்யப்பட்டது.

வவுனியாவில் சுமந்திரன் சொன்னதை இன்னொரு விதமாகச் சொன்னால் இலங்கை தீவில் நிலை மாறுகால நீதியை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் அதாவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் ஐநா தோற்றுப் போய்விட்டது என்றும் சொல்லலாம்.

2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்காளிகள்.ஆட்சி மாதத்தைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் கூடாது தொடர் செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. அப்பொழுது உருவாக்கப்பட்ட ரணில் மைத்திரி அரசாங்கமானது ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியதுதான் நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானம் ஆகும். அதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட எல்லா தீர்மானங்களிலும் அப்போது இருந்த இலங்கை அரசாங்கங்கள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அரசாங்கம் ஐநா தீர்மானங்களுக்கு எதிராக விவாக்களித்தது.ஏன் அதிகம் போவான்? புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகிய விகித ஹேரத் கடந்த ஐநா கூட்டத்தொடரில் பேசும் பொழுது ஐநா தீர்மானங்களுக்கு எதிராகவும் அனைத்துலக பொதுமுறைக்கு எதிராகவுமே பேசியிருக்கிறார்.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஏற்கனவே ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும் ஆகப்பிந்திய அனுபவங்களின் பின்னணியில்,ஒரு புதிய அரசாங்கம் கொழும்பில் ஆட்சி செய்யும் ஒரு பின்னணியில்,கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது.

அக்கட்சியானது சிவில் சமூகத்தோடு இணைந்து ஒரு கடிதத்தைத் தயாரித்து அந்த வரைபை தமிழரசுக் கட்சிக்கும் அனுப்பியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சி கூடியது. முடிவில் கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று சுமந்திரன் அறிவித்திருக்கிறார்.

எனினும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் நிகழ்வு ஒன்றில் சுமந்திரன் கஜேந்திரகுமார் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அச்சந்திப்பில் சுமந்திரனுக்கும் கஜனுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு தகவல்.கடிதம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் முடிவை சுமந்திரன் அறிவித்திருக்கும் ஒரு பின்னணியில் அந்தச் சந்திப்பு இனி நடக்குமா இல்லையா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் கட்சியின் பதில் தலைவர், பொதுச் செயலாளருக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று சிவஞானமும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்களிடமிருந்து கழட்டி எடுத்து கடிதத்தில் அவர்களுடைய கையெழுத்தை வாங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதற்குள் மறைந்திருக்கிறது.

இந்தக் கூட்டுக் கடித விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழரசுக் கட்சியினர் மத்தியில் உண்டு.கடிதத்தின் பிரதிகள் தனித்தனியாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டமையை மேற்சொன்ன சந்தேகத்துக்கு ஊடாகத்தான் தமிழரசுக் கட்சி பார்க்கின்றது என்று தெரிகிறது.

எனவே ஐநாவுக்கு அனுப்பப்படப் போகும் கூட்டுக் கடிதம் மெய்யான பொருளில் ஒரு பலமான கடிதமாக அமைவதற்கான வாய்ப்புகள் இனிமேல்தான் உருவாக வேண்டும். தமிழரசுக் கட்சியின் கூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் அக்கடிதத்தில் தமிழ்த் தேசியப் பேரவைச் சேர்ந்த கட்சிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மட்டும்தான் கையெழுத்திடுவார்கள் போல் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்று சொன்னால் அந்த கூட்டுக் கடிதத்துக்கு அங்கீகாரம் குறைவாகவே இருக்கும்.

இந்த விடயத்தில் கூட்டுக் கடிதத்தின் அங்கீகாரத்தைக் கூட்டுவதா? அல்லது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதா? என்ற இரண்டு தெரிவுகளில் எதனை தமிழ்த் தேசிய பேரவை எடுக்கப் போகிறது ?

https://athavannews.com/2025/1441586

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

நாங்கள் அதைவிட தீர்க்கமாக பல விடயங்களை ஆராய்ந்து, நாங்கள் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டிய முறையிலே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதான கட்சி என்ற வகையிலே, உகந்த தருணத்திலே சரியான நேரத்திலே நாங்கள் அதை வெளிப்படுத்துவோம். கடிதம் மூலமாகவோ வேறு விதமாகவோ அதனை செய்வோம்.

அநுரா அரசாங்கத்திற்கும் கால அவகாசம் பெற்றுக்கொடுக்கப் போகிறீர்களா அதுதானே உங்கள் வழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

528385121_1170581515105221_4467832131744

ஒற்றுமையாக இருந்து, இனத்துக்கு நன்மை செய்ய மாட்டோம்.

மறு பக்கம் அன்றைய தலையாட்டிகளான.... டக்ளஸ் மற்றும் சந்திரகுமாரோடு கூட்டணி அரசியல் செய்வோம்.

- சுமந்திரனின் தமிழரசு கட்சி. -

அடுத்த தேர்தலுக்கு... ஊருக்குள் வருகின்ற தமிழரசு கட்சிகாரனுக்கு... செருப்பு பிய்ய, சம்பவம் காத்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புலவர் said:

அநுரா அரசாங்கத்திற்கும் கால அவகாசம் பெற்றுக்கொடுக்கப் போகிறீர்களா அதுதானே உங்கள் வழக்கம்.

புலவர், கஜேந்திரகுமார் பா.உவுக்குத் தான் தன் ஆசனத்தைக் காப்பாற்றும் "தமிழரசு எதிர்ப்பு" அரசியல் இந்த நேரம் தேவைப்படுகிறதென்றால், அரசியல் வாதியல்லாத உங்களுக்கும் அதே பிரச்சினையா?

கடிதத்தை தமிழரசுக் கட்சியின் பங்களிப்பில்லாமலே அனுப்பலாம். விளைவில் மாற்றம் இருக்காது. இங்கிலாந்தில் (பெயரளவிலாவது) பரிஸ்ரரான கஜேந்திரகுமார் அவர்கள், இதை முன்னின்று இயக்கி, றோகிங்கியாக்கள் பாவித்த மாற்று வழி மூலம் ICJ முன் இலங்கையின் வழக்கைக் கொண்டு செல்ல என தடை இருந்தது/ இப்போது இருக்கிறது என்று சொல்லுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2025 at 15:21, Justin said:

கடிதத்தை தமிழரசுக் கட்சியின் பங்களிப்பில்லாமலே அனுப்பலாம். விளைவில் மாற்றம் இருக்காது. இங்கிலாந்தில் (பெயரளவிலாவது) பரிஸ்ரரான கஜேந்திரகுமார் அவர்கள், இதை முன்னின்று இயக்கி, றோகிங்கியாக்கள் பாவித்த மாற்று வழி மூலம் ICJ முன் இலங்கையின் வழக்கைக் கொண்டு செல்ல என தடை இருந்தது/ இப்போது இருக்கிறது என்று சொல்லுங்கள்?

தமிழ்மக்களின் அதிக பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தமிழரசுக்கட்சியும் இணைந்து கடிதம் அனுப்பும் போது அது வலிமையான கோரிக்கையாக இருக்கும் என்பதாலேயே அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.தமிழரசுக்கட்சி உடன்படாது விட்டால் கடிதம் அனுப்பப்படாது என்று பொருளல்ல.பெரிய சட்டத்தரணிகள் தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்கின்ற சட்டதரணிகள் கிழித்தது எதுவுமில்லை. அவர்கள் களவு கொள்ளை கொலை வழக்குகளில் எதிரிகளுக்காக வாதாடி பொக்கற்றை நிரப்பி கொள்ளட்டும். அவர்களுக்கு சொந்தக்கட்சிக்கு சூனியம் வைக்கவே நேரம் போதாது.இனத்திற்காக வாதாட யாரும் முன்வராத போது கஜேந்திரகுமார் முன்வருவது நல்ல விடயம். ஆகவே பெயரளவுக்கு சட்டத்தரணியாக இருக்கும்கஜேந்திரகுமார் கடிதம் அனுப்புவதில் தவறல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, புலவர் said:

தமிழ்மக்களின் அதிக பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தமிழரசுக்கட்சியும் இணைந்து கடிதம் அனுப்பும் போது அது வலிமையான கோரிக்கையாக இருக்கும் என்பதாலேயே அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.தமிழரசுக்கட்சி உடன்படாது விட்டால் கடிதம் அனுப்பப்படாது என்று பொருளல்ல.பெரிய சட்டத்தரணிகள் தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்கின்ற சட்டதரணிகள் கிழித்தது எதுவுமில்லை. அவர்கள் களவு கொள்ளை கொலை வழக்குகளில் எதிரிகளுக்காக வாதாடி பொக்கற்றை நிரப்பி கொள்ளட்டும். அவர்களுக்கு சொந்தக்கட்சிக்கு சூனியம் வைக்கவே நேரம் போதாது.இனத்திற்காக வாதாட யாரும் முன்வராத போது கஜேந்திரகுமார் முன்வருவது நல்ல விடயம். ஆகவே பெயரளவுக்கு சட்டத்தரணியாக இருக்கும்கஜேந்திரகுமார் கடிதம் அனுப்புவதில் தவறல்ல.

இதுவல்லவே நான் கேட்டது?

பா.உவாக வர முதலும் சரி, வந்த பின்னரும் சரி கஜேந்திரகுமார் அவர்கள் இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை இவை தொடர்பாக சர்வ தேச நீதிமன்றங்களில் எதை நகர்த்தினார்? அப்படி எதையும் நகர்த்த முடியவில்லையானால் ஏன் முடியவில்லை?

கஜேந்திரகுமார் பா.உ போன மாதம் தான் சட்டத்தரணியானாரா அல்லது ஐ.நாவுக்குக் கடிதம் அனுப்ப ஒரு இங்கிலாந்து பரிஸ்ரரால் மட்டும் தான் முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அனுப்பிய கடிதம் கிடைத்ததாக பதிலும் வந்திருக்கிறது. 13 அமுல்படுத்தச் சொல்லிதமிழ்க்கட்சிகள் கடிதம் அனுப்ப முயற்சித் பொழுது கடைசி நேரத்தில' உள்ளே புகுந்து கடிதம் எழுதும் பொறுப்பையும் எடுத்து இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு பதில்வந்ததாகஎந்தத்தகவலும் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.