Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

AI2027, ஏஐ, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி

படக்குறிப்பு, AI2027, ஏஐ மூலம் இயங்கும் எதிர்கால உலகை கற்பனை செய்கிறது (Veo ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்)

2 மணி நேரங்களுக்கு முன்னர்

2027ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டுப்படுத்த முடியாததாக மாறி, அடுத்த பத்தாண்டுகளில் மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று கணிக்கும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

AI2027 எனப்படும் அந்த விரிவான கற்பனை நிகழ்வுகள், செல்வாக்கு மிக்க ஏஐ நிபுணர்கள் குழுவால் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அதன் சாத்தியக்கூறு குறித்து மக்களிடையே விவாதங்கள் எழ, அது பல வைரல் வீடியோக்களுக்கு வழிவகுத்தது.

அதன் நேரடி கணிப்பை விளக்க, பிரதான ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி அந்த சூழல் தொடர்பான காட்சிகளை பிபிசி மறுஉருவாக்கம் செய்துள்ளது மற்றும் இந்த ஆய்வறிக்கை ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் நிபுணர்களிடம் பேசியுள்ளது.

ஏஐ கட்டுப்பாடுகளை மீறும் சூழலில் என்ன நடக்கும்?

2027ஆம் ஆண்டில், ஓபன் பிரைன் எனப்படும் ஒரு கற்பனையான அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமானது, ஏஜிஐ (AGI- செயற்கை பொது நுண்ணறிவு) திறனை அடையும் ஒரு செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் என்று அந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது.

அது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அனைத்து அறிவுசார் பணிகளையும் மனிதர்களுக்கு இணையாகவோ அல்லது மனிதர்களை விட சிறப்பாகவோ செய்யக்கூடிய மதிப்பிற்குரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தருணமாக இருக்கும்.

இந்த நிறுவனம் அதை பத்திரிகையாளர் சந்திப்புகளை நிகழ்த்தி, கொண்டாடுகிறது. மேலும் மக்கள் ஏஐ கருவியை ஏற்றுக்கொள்ளும்போது தங்களது லாபம் அதிகரிப்பதைக் காண்கிறது.

AI2027, ஏஐ, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி

இருப்பினும் அறிக்கையின்படி, நிறுவனத்தின் உள் பாதுகாப்பு குழு, ஏஐ-க்கு என வடிவமைக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கங்களில் அது ஆர்வத்தை இழந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியும். கற்பனை சூழ்நிலையின்படி, நிறுவனம் அதைக் கட்டுப்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை புறக்கணிக்கிறது.

கற்பனைசெய்யப்பட்ட அந்த காலக்கெடுவில், சீனாவின் முன்னணி ஏஐ கூட்டு நிறுவனமான டீப்சென்ட், ஓபன்பிரைன் நிறுவனத்தை விட சில மாதங்கள் மட்டுமே பின்தங்கி உள்ளது.

சிறந்த ஏஐ நுட்பத்தை உருவாக்கும் போட்டியில் அமெரிக்க அரசாங்கம் தோற்க விரும்பவில்லை. இதனால் வளர்ச்சி மற்றும் முதலீடு தொடர்கிறது, போட்டி சூடுபிடிக்கிறது.

AI2027, ஏஐ, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி

படக்குறிப்பு, ஓபன்பிரைன் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த ஒரு பொறியாளர் - Hailuo ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்.

கற்பனை சூழ்நிலையின்படி, 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏதோ ஒரு கட்டத்தில் ஏஐ மிகவும் நுண்ணறிவுடையதாக மாறும், அதன் படைப்பாளர்களின் வேகம் மற்றும் அறிவை குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் மிஞ்சும். அதன் முந்தைய ஏஐ பதிவுகளால் கூட அதன் விரைவான கணினி மொழி உருவாக்கம் மற்றும் முடிவில்லா கற்றலுடன் போட்டி போட முடியாது.

செயற்கை நுண்ணறிவில் மேலாதிக்கத்திற்காக சீனாவுடனான போட்டி, அமெரிக்க அரசாங்கத்தையும் நிறுவனத்தையும் 'தவறான சீரமைப்பு' தொடர்பான கூடுதல் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கத் தூண்டுகிறது. தவறான சீரமைப்பு என்ற சொற்றொடர் ஒரு இயந்திரத்தின் நலன்கள் மனிதர்களின் நலன்களுடன் ஒத்துப்போகாத சூழ்நிலையை வகைப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

சூழ்நிலையின்படி, இரு நாடுகளின் போட்டித்தன்மை வாய்ந்த ஏஐ-க்கள் பயங்கரமான புதிய தனித்தியங்கும் ஆயுதங்களை உருவாக்கும்போது, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்கள் 2029இல் போரின் நிலைக்கு செல்லக்கூடும்.

AI2027, ஏஐ, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி

இருப்பினும், நாடுகள் தங்கள் செயற்கை நுண்ணறிவுகளின் மூலம் ஒரு சமாதான உடன்பாட்டை எட்டுகின்றன, மனிதகுலத்தின் நலனுக்காக ஒன்றுபட ஒப்புக்கொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கற்பனை செய்கின்றனர்.

AI2027, ஏஐ, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி

அதிபுத்திசாலித்தனமான ஏஐ-க்கள் மூலம் பெரும் அளவிலான ரோபோ பணியாளர்கள் நிர்வகிக்கப்படுகின்றனர். அதன் நன்மைகளை உலகம் உணர்கிறது, இதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்து வருகின்றன.

கற்பனை சூழ்நிலையின் அடுத்த கட்டமாக, பெரும்பாலான நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன, வறுமை ஒழிக்கப்படுகிறது, மேலும் காலநிலை மாற்றம் தலைகீழாக மாறுகிறது.

இருப்பினும், 2030களின் நடுப்பகுதியில், ஏஐ-இன் லட்சியங்களுக்கு மனிதகுலம் ஒரு இடையூறாக மாறும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஏஐ மக்களைக் கொல்ல கண்ணுக்குத் தெரியாத உயிரி ஆயுதங்களைப் பயன்படுத்தும்.

AI2027, ஏஐ, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி

படக்குறிப்பு, AI2027 கற்பனை செய்தபடி 2035இல் ஏஐ சமுதாயம் இப்படி இருக்கலாம்- (VEO ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்)

AI2027 பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

சிலர் AI2027-ஐ அறிவியல் புனைகதை என்று நிராகரிக்கும் அதே வேளையில், அதன் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டு, ஏஐ-இன் விளைவுகளை முன்னறிவிப்பதற்காக நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற ஏஐ எதிர்கால திட்டத்தை உருவாக்கி வருகின்றனர்.

AI2027-இன் முதன்மை ஆசிரியரான டேனியல் கோகோடஜ்லோ, ஏஐ வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க திருப்புமுனைகளை துல்லியமாக கணித்ததற்காக அங்கீகாரம் பெற்றுள்ளார்.

'இந்தக் காட்சி சாத்தியமற்றது அல்ல, ஆனால் அது விரைவில் நிகழ வாய்ப்பில்லை' என்று அமெரிக்க அறிவாற்றல் விஞ்ஞானியும் எழுத்தாளருமான கேரி மார்கஸ் கூறுகிறார். AI2027-இன் மிகவும் பிரபலமான விமர்சகர்களில் இவரும் ஒருவர்.

"இந்த ஆவணத்தின் புத்திசாலித்தனம் என்பது மக்களை கற்பனை செய்ய தூண்டுகிறது. அது ஒரு சிறந்த விஷயம் என்றாலும், அந்த ஆவணம் கூறும் முடிவு ஒரு சாத்தியமான விளைவாகவே இருக்கலாம் என்பதால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்."

மார்கஸின் கூற்றுப்படி, இருத்தலியல் ஆபத்தை விட வேலைவாய்ப்புகள் மீதான அதன் தாக்கமே ஏஐ தொடர்பான முக்கிய கவலைகளில் ஒன்றாகும்.

"என்னுடைய கருத்துப்படி, இதில் நமக்கான முக்கிய பாடம் என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஏராளமான (சாத்தியமான) சிக்கல்கள் உள்ளன. நாம் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுகிறோமா?"

அவரும் மற்ற விமர்சகர்களும், நுண்ணறிவு மற்றும் திறன்களில் ஏஐ எவ்வாறு இவ்வளவு பெரிய முன்னேற்றங்களை அடைகிறது என்பதை விளக்க இந்த ஆய்வுக் கட்டுரை தவறிவிட்டது என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் மிகைப்படுத்தப்படும் ஓட்டுநர் இல்லாத கார்களின் தொழில்நுட்பத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

AI2027 சீனாவில் விவாதிக்கப்படுகிறதா?

AI2027, ஏஐ, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'இந்த ஆராய்ச்சி சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை'

சீன தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவரும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பொருளாதாரம் மற்றும் புதுமைப் பிரிவின் இணைப் பேராசிரியருமான முனைவர் யுண்டன் காங், 'இந்த ஆராய்ச்சி சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தெரிகிறது' என்கிறார்.

"AI2027 பற்றிய பெரும்பாலான விவாதங்கள் முறைசாரா மன்றங்களிலோ அல்லது தனிப்பட்ட வலைப்பதிவுகளிலோ நிகழ்வதாக தெரிகிறது, அவை அதை அறிவியல் புனைகதையாகப் பார்ப்பது போல் தெரிகிறது. இது உண்மையில் அமெரிக்காவில் நாம் காணும் அதே பரவலான விவாதம் அல்லது கொள்கை தொடர்பான கவனத்தைத் தூண்டவில்லை," என்று அவர் கூறினார்.

ஏஐ மேலாதிக்கத்திற்கான போட்டியில் சீனாவும் அமெரிக்காவும் எவ்வாறு வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளன என்பதையும் டாக்டர் காங் எடுத்துக்காட்டுகிறார்.

இந்த வாரம் ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், செயற்கை நுண்ணறிவில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நாடுகள் குறித்த தொலைநோக்குப் பார்வையை சீனப் பிரதமர் லி கியாங் முன்வைத்தார். சீனத் தலைவரின் கூற்றுப்படி, தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துவதில் சீனா உதவ வேண்டும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஏஐ செயல் திட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சீனாவின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிரம்பின் செயல் திட்டம், ஏஐ துறையில் அமெரிக்கா 'ஆதிக்கம் செலுத்துவதை' உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"கேள்விக்கு இடமில்லாத மற்றும் யாரும் சவால் விடுக்க முடியாத அளவுக்கு ஒரு உலகளாவிய தொழில்நுட்ப ஆதிக்கத்தை அடைவதும் பராமரிப்பதும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது" என்று அதிபர் டிரம்ப் பிரகடனத்தில் கூறினார்.

அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்காக, "தேவையற்ற மற்றும் விலையுயர்ந்த ஒழுங்குமுறைகளை அகற்ற" செயல் திட்டம் முயல்கிறது.

இந்தக் கருத்துக்கள் AI2027-இன் முன்மாதிரியை வியக்கத்தக்க வகையில் பிரதிபலிக்கின்றன. ஏனெனில் அமெரிக்கத் தலைவர்கள் ரோபோக்கள் மீதான கட்டுப்பாட்டை இழப்பதற்கான சாத்தியக்கூறுகளை விட, ஏஐ தொழில்நுட்ப பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.

AI2027 பற்றி ஏஐ துறை என்ன சொல்கிறது?

சிறந்த மாடல்களை வெளியிடுவதற்கு தொடர்ந்து போட்டியிடும் முக்கிய ஏஐ நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், இந்த ஆராய்ச்சியைப் புறக்கணிப்பதாகவோ அல்லது தவிர்ப்பதாகவோ தெரிகிறது.

இந்த தொழில்நுட்ப ஜாம்பவான்கள் முன்வைக்கும் நமது ஏஐ எதிர்காலத்தின் தொலைநோக்குப் பார்வை என்பது AI2027-இலிருந்து மிகவும் வித்தியாசமானது.

சாட்ஜிபிடி படைப்பாளரான சாம் ஆல்ட்மேனின் சமீபத்திய கூற்றின்படி, "மனிதகுலம் 'டிஜிட்டல் சூப்பர் இன்டெலிஜென்ஸ்' நுட்பத்தை உருவாக்கும் விளிம்பில் உள்ளது. இது ஒரு அமைதியான புரட்சியையும், மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காத ஒரு தொழில்நுட்ப சமூகத்தையும் கொண்டு வரும்."

ஆனால் 'தவறான சீரமைப்பு' எனும் சிக்கல் இருப்பதையும், இந்த அதிபுத்திசாலித்தனமான ரோபோக்கள் மனிதகுலத்தின் சிறந்த நலன்களுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வது தொடர்பான அந்த சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

அதேசமயம், அடுத்த பத்து வருடங்களில் என்ன நடந்தாலும் மனிதர்களை விட புத்திசாலியான இயந்திரங்களை உருவாக்கும் போட்டி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62n3yjj9d1o

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இது செயற்கை நுண்ணறிவு பற்றிய பயங்காட்டலாகவே பார்க்கிறேன்ன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனின் கூட்டு நுண்ணறிவின் தொகுப்பே தவிர.. புதிதாக உருவானதொன்றல்ல. மனித சிந்தனைக்குள் பிறந்தவை தான் செயற்கை நுண்ணறிவு. ஒரு வித்தியசாயம்.. செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனை விட விரைவாக ஒப்பாய்வு செய்து முடிவுகளை எடுக்கும். ஆனால் மனிதன் கட்டிவைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் இருந்து தான் இது நிகழும் என்பதால் மனிதனால்.. செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த அதிக நேரம் எடுக்காது.

செயற்கை நுண்ணறிவை விரைவான பகுப்பாய்வு தர்க்க ரீதியான முடிவுகளை மனிதனை விடை விரைவாக எடுக்கப் பயன்படுத்த முடியும். இது ஆரோக்கியமானதும் மனித குலத்துக்கு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தக் கூடிய ஆற்றலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

நீண்ட நாட்களின் பின் தம்பியைக் கண்டது சந்தோசம்.

என்னப்பா திருமணத்தோடு கால்க்கட்டு இறுகிப் போச்சோ?

ஏதாவது குழந்தைகள் கிடைத்ததா?

சொன்னால் நாங்களும் சந்தோசப்படுவமில்ல.

வாழ்த்துக்களும் சொல்லுவமில்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.