Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்

August 18, 2025 10:33 am

பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்

வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வழமை போல் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.

வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தும் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை , சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.

இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது.

பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது.

மேலும் வியாபார நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பாடசாலைகள், மருந்தகங்கள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.

எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/hartal-ends-in-chaos-business-as-usual-in-mullaitivu-and-ampara/

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சுமந்திரன் மட்டுமே ஹர்த்தால் செய்துள்ளார் போலுள்ளது.

அடுத்த போராட்டமாக… சுமந்திரன் 🔥 தீக்குளிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இன்று சுமந்திரன் மட்டுமே ஹர்த்தால் செய்துள்ளார் போலுள்ளது.

அடுத்த போராட்டமாக… சுமந்திரன் 🔥 தீக்குளிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றார்கள். 😂

அதுவும் பாண்டிருப்பு அல்லது உடப்பு..

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

இன்று சுமந்திரன் மட்டுமே ஹர்த்தால் செய்துள்ளார் போலுள்ளது.

யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் வெற்றி - சுமந்திரன்

Monday, August 18, 2025 செய்திகள்

25-67b4e515720bd.webp.jpeg


யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். 


யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்தனர்.  இந்த ஊடகச் சந்திப்பில், 


வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி தமிழரசு கட்சி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், இதற்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்தது.  யாழ்ப்பாண நகரப் பகுதியில் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. இந்தப் பகுதியில் ஆதரவு கிடைக்காதது மனவருத்தம் அளிப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

 

ஹர்த்தால் அறிவிப்பு வெளியான உடனே, ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தமிழரசு கட்சியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார். 


- பிரதீபன் -

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

காரைதீவு,

நாங்க சுமந்திரன் கதையெல்லாம் கேட் க மாட்டம்

21 hours ago, தமிழ் சிறி said:

இன்று சுமந்திரன் மட்டுமே ஹர்த்தால் செய்துள்ளார் போலுள்ளது.

அடுத்த போராட்டமாக… சுமந்திரன் 🔥 தீக்குளிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றார்கள். 😂

அடுத்த வட மாகாண முதலமைச்சர் சொல்லிப்போட்டன் யாழ்பாணிகளை நம்ப இயலாது முதல்வர் ஆக்குங்கள்

அப்பாடா தனகியாச்சு😎😎😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். 

விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை. சுட்ட மண்போலும்.🤔

  • கருத்துக்கள உறவுகள்

535975033_1189686849862952_2608547908043

534426535_1189697209861916_1139149075711

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.