Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

536280651_1342221374136327_3455018282553

536274554_1342221257469672_1192542487522

534601150_1342221544136310_5161841896817

535895511_1342221540802977_8591363453382

அண்மைக் காலமாக சிறிய ரக கார்கள் அதிகமாக விபத்துக்குள்ளாகுவதையும் பட்டா ரக கூடாரம் அடித்த சிறிய ரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகுவதையும் உயிர்ச்சேதம் உருவாகுவதையும் அவதானித்திருப்பீர்கள்.

இந்த விடயத்தினை கொஞ்சம் ஆழமாக அவதானித்தால் இன்னொரு விடயத்தினையும் புரிந்து கொள்வீர்கள்.

இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள் பல வீதியைவிட்டு விலத்தி கடலுக்குள் பாய்தல் , வீதியோரம் அடித்து விபத்துக்குள்ளாகுதல் , சிறிய பட்டா ரக மற்றும் சின்ன கண்டர் ரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகுதல் அதிகம் பதிவு செய்யப்படுகின்றது.

இந்திய தயாரிப்பிலான இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் இந்த "சோப்பு டப்பா" என்று பலர் அழைக்கின்ற வலுக்குறைந்த சின்ன கார்கள் பல பாரம்/ எடை குறைந்தவை. ஒரு கார் அல்லது வாகனம் அதிக வேகத்தில் தெருவில் பிரயாணிக்கும் போது அது தெருவோடு ஒட்டி பற்றிபிடித்தவாறு செல்லகூடியவாறே பல பிரபல கார் நிறுவன கார் தயாரிப்புக்கள் இருக்கும். அதன் எடை அதிகமாக இருக்கும் எனவே அதன் நிறை புவியை நோக்கி அதன் புவியீர்ப்பு மையத்தினூடாக ஈர்க்கப்பட்டு அதிக வேகத்திலும் பாதையினை விட்டு விலகி செல்லாது தெருவில் பற்றி பிடித்தவாறு பயணிக்கும்.

ஆனால் இந்திய சோப்பு டப்பா போன்ற சின்ன கார்கள்( எந்த ரகம்-brand என்று உங்களுக்கே தெரியும்) அதிக எடை இல்லாதவை . அவற்றினால் மத்திய அளவான வேகத்திலேயே ( medium Speed) தெருவை பற்றிப்பிடித்தபடி பயணிக்க முடியும். அவை மணிக்கு 70-80 கிலோமீற்றர்(70km/hr - 80km/h) வேகத்தினை விட அதிக வேகத்தினை பெறும் போது அவற்றின் எடை குறைவு காரணமாக வளியோட்டடத்தில் அவை நிதானமிழந்து பறப்பது போன்ற உணர்வை பல சார்திகள் உணர்ந்திருக்கலாம்.

அதாவது எடைபோதாமை காரணமாக அதிக வேகத்தில் ஆடி அசைவது போல உணர்வீர்கள். உதாரணமாக எடை குறைந்த காட்போட் மிதமான காற்றில் சும்மா இருந்துவிட்டு காற்றோட்டம் அதிகரிக்க அவை காற்றின் திசைக்கேற்றது போல இழுத்து பறந்து செல்லப்படுதல் போன்ற நிகழ்வுகளை நினைத்து பாருங்கள்.

அதுபோல தான் இந்த இந்திய சிறிய வாகனங்கள் தம்மால் ஈடுகொடுக்கமுடியா வேகத்தினை அடையும் போது அவற்றின் எடை தெருவோடு சேர்ந்தியங்க முடியாமல் போக வளியோட்டத்தில் காற்றின் பக்கம் ஓர் பக்கம் இழுத்து செல்லப்படும். இதன்போது பாதையோரம் சென்று மோதலாம், அல்லது பாதையின் அருகே /எதிரே செல்லும் வாகனங்களுடன் மோதி விபத்தடையலாம். இதனால் பாரிய விபத்துக்களும் உயிர் சேதங்களும் ஏற்படும்.

அதுபோலவே இந்த பட்டாரக வாகனங்களும் .

அவை சின்ன சின்ன பொருள் எற்றி இறக்க பயன்படுத்த சிறிய ரக கன்ரர் வாகனம் போல தயாரிக்கப்பட்டவை . அவற்றினை வாங்கி ஓடும் இளசுகளை தெருவில் பார்த்தால் ரொக்கற்று வேகத்தில் தான் ஓடுவார்கள். அந்த வாகனத்தின் எடை அதிக வேகத்தினை தாங்காத நிலை வரும் போது பாதையில் இருந்து விலகும்/ மோதும்/ தூக்கி வீசப்படும்.

இப்படி அதிக எடையற்ற வாகனங்கள் அதிக வேகத்தினை பெறும்போது மிதத்தல் நிலையினை அடைவதனால் அருகே / எதிரே இன்னொரு பெரிய டிப்பரோ / லொறியோ/ பேருந்தோ அதிக வேகத்தில் போகும் போது இந்த ரக வாகனக்கள் ஆட்டம் காணும், இழுத்து கொண்டு செல்வது போல் இருக்கும் அதை அனுபவித்தவர்கள் உணர்வீர்கள்.

அதோடு விஞ்ஞான ரீதியாக இன்னொன்று!

இந்த பட்டா ரக சின்ன வாகனங்களை பயன்படுத்துவோரை பார்த்திருப்பீர்கள். அந்த வாகனம் தயாரித்து இறக்குமதி செய்து சந்தையில் விற்கும் தோற்றத்தில் யாரும் ஓடுவதில்லை(Original Appearance) பலர் வாங்கிய பின் பின்னுக்கு பெட்டி போல கூடாரங்களினை உலோகம் கொண்டு மேலதிக இணைப்புக்களினை பொருத்துவார்கள். இவை வாகனம் தயாரிக்கப்பட்டபோது வாகனத்தில் இருந்த "புவியீர்ப்பு மையத்தினை" (Gravitational point )வெகுவாக மாற்றியமைக்கும். உருவத்தினை மாற்றி அமைத்தபின் அவர்கள் அந்த வாகனத்தின் கொள்ளளவு தாங்குதிறனுக்கும் (carrier Capacity) அதிக எடையில் பொருட்களை ஏற்றிசெல்லும் போதும் வாகனத்தின் புவியீர்ப்பு மையம் வேறொறு இடத்துக்கு இடம்மாறுகிறது.

இவற்றையெல்லாம் கணிக்காத அனுபவமில்லாத சாரதிகள் அதிக வேககத்தில் பிரயாணிக்கும் போது வாகனம் இழுத்து செல்லப்படும்/ மோதும்/ குடைசாயும் இவற்றால் பாரிய விபத்துக்கள் உண்டாகும்.

அதைவிட இன்னொன்று இந்த சிறிய கார்கள், பட்டா ரக வாகனங்கள் வளைவான பதைகளில் பயணிக்கும் போது சாரதி அதற்கேற்ற வகையில் வேகத்தினை கட்டுபடுத்தி சீராக வளைவில் திருப்ப வேண்டும். இல்லையேல் "மைய நீக்க விசையினால்" அது பாதையினை விட்டு விலத்தி மோதும், தூக்கி வீசப்படும், விபத்துக்குள்ளாகும்.

இன்றைய பல விபத்துக்களுக்கு பல அனுபவமில்லா இளைய வாகனவோட்டிகளும், பந்தா காட்டி முறுக்கி ஓடும் சாரதிகளும் , வாகனத்தின் விஞ்ஞான தன்மை அறியாத சாரதிகளும் கூடியதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதைவிட முன்னனுபவம் இல்லா தெருக்களில் அதிக வேகத்தில் ஓடும் போது திடீரென வளைவு வரும் போது அவர்களினால் வேகத்தினை கட்டுபடுத்த முடியாமல் விபத்தடைகின்றன.

முன்னையகாலங்களில் வடக்குமக்கள் பலரும் யப்பான் ரக வாகனங்களினை விரும்பி வாங்கி தலைமுறை தலைமுறையாக பாவித்தமைக்குரிய காரணங்களில் ஒன்று நீண்டகாலம் பாவிக்கும் என்பதற்கப்பால் அவற்றின் எடை , அவற்றின் புவியீர்ப்பு மையம் எந்த வேகத்திற்கும் இடம்மாறமல் இருத்தல் போன்ற பல காரணங்கள் உண்டு. இதனால் அன்றிருந்த சீரில்லாத தெருக்களிலேயே லாவகமாக ஓட்டி சென்றார்கள்.

ஆக எல்லா விபத்துக்களிற்கும் பெரிய ரக வாகனங்களினை குறைகூறி அவர்களை பிடித்து அடிக்காமல் சிறிய ரக வாகனங்களின் விஞ்ஞான கோட்பாடுகள் மற்றும் சாரதிகளின் மிதவாத அனுபவமில்லா சாரத்தியம் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இது ஒரு வீதியில் பெண்பிள்ளை விபத்தடைந்தால் அது வாகனத்தினை செலுத்திய பெண்ணில் தான் பிழையாக இருந்தாலும் இடித்த மற்றைய ஆணின் மேல் தான் அனைவரும் வசைபாடிபேசுவார்கள் அதுபோல தான் இந்த சிறியரக பெரியரக வாகன மோதல் நிலைகளும் அமைகின்றன.

ஆக எந்த வாகனமாக இருந்தாலும் அது துவிச்சக்கரவண்டியாக இருந்தாலும் ஏன் நடந்து பயணிப்பவராக இருந்தாலும் அனைவருமே அவதானத்துடனும் விழிப்புணர்வோடும் பொறுப்புணர்வோடும் பயணிப்பதனாலேயே எல்லா விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் கட்டுப்படுத்தலாம்.

மதுசுதன்.

18.08.2025

நம்ம யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டு ராஜா இது பற்றி உண்மையை தெரிவித்துள்ளார் .👇

[ வடக்கிலே அதிக விபத்துக்கள் ஒரு பஸ் நடத்துனரிடம் கேட்டன் உண்மையில் வட மாகாணத்தில் உள்ள சாரதிகள் ( வாகனங்கள் ஓடுபவர்கள்) சரியான போக்குவரத்து விதிகள் தெரியவில்லையென்றார் அதாவது வாகனத்தில் இருந்து தனது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி வீதியில் திரிவது வளைவுகளை நின்று பார்க்காமல் செல்வது என சொன்னார் ]

அங்கே நேரிலேயே தெரிவித்தனர் போக்குவரத்து விதிகளை பொருட்படுத்தாமல் போட்டிக்கு ஓடுகிறார்கள்

வளைவான பதைகளில் திருப்பும் போது வேகத்தை குறைக்க வேண்டும் Truck போன்றவற்றை கடக்கும் போது வருகின்ற காற்று அழுத்த பிரச்சனைகளை கார் பாடசாலையில் சொல்லி கொடுப்பது இல்லையா இந்திய சோப்பு டப்பா போன்ற எடை இல்லாத சின்ன கார்கள் தான் விபத்துக்கு காரணம் என்கின்றார் கட்டுரையாளர்

5 hours ago, தமிழ் சிறி said:

ஆக எந்த வாகனமாக இருந்தாலும் அது துவிச்சக்கரவண்டியாக இருந்தாலும் ஏன் நடந்து பயணிப்பவராக இருந்தாலும் அனைவருமே அவதானத்துடனும் விழிப்புணர்வோடும் பொறுப்புணர்வோடும் பயணிப்பதனாலேயே எல்லா விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் கட்டுப்படுத்தலாம்.

இது சரியானது

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இந்திய கார்கள் என்றே கூறப்பட்டுள்ளது.

பொத்தாம் பொதுவாக கூறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் புரியும்படியாக இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது. இந்திய கார்களுக்கு மட்டுமல்ல அனைத்து சிறிய மலிவான வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் வாகன உற்பத்தியாளர்கள் புதிய கார்களை உருவாக்கும்போது அவற்றின் வடிவமைப்பில் aerodynamics (காற்றியக்கவியல்) என்னென்ன தாக்கங்களை உருவாக்கும் என்பதை பல்வேறு கட்டங்களாக ஆய்வுகூடங்களில் வைத்து பரிசோதித்து பார்த்தபின் உரிய மாற்றங்களை செய்வார்கள். இந்திய தயாரிப்புகளில் இந்த பரிசோதனைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு நம்பிக்கையான சான்றுகள் உண்டா என்பது தெரியவில்லை.

காற்றியக்கவியலுக்கு இசைவாக வடிவமைக்காப்படாத வாகனங்கள்வேகமாக செலுத்தப்படும்போது அதை ஒரு விமானம் ஓடுபாதையில் ஓடி வேகமெடுத்து தரையைவிட்டு உயர்ந்து கிளம்ப தயாராவதை ஒப்பிடலாம். வேகமாக செலுத்தப்படும் மேற்சொன்ன வாகனங்களின் சக்கரங்கள் காற்றியக்கவியல் காரணமாக படிப்படியாக உயர்த்தப்பட்டு தரையில் முட்டாமல் அந்தரத்தில் செல்லவேண்டி ஏற்படலாம். இதனால் வேகமாக செல்லும் இந்த வாகனங்களில் உள்ள பிரேக் இயங்காமல்போக வாகனம் விபத்துக்குள்ளாவதையும் சாரதியால் தவிர்க்கமுடியாமல் போகலாம். வாகனங்களில் உள்ள பிரேக் சிறப்பாக இயங்குவதற்கு சில்லுகள் எப்போதும் தரையை இறுக்கமாக தொட்டு நிற்கவேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சாலைகள் அனைத்தும் ஒரெ தரத்தில் இல்லை.நகரங்களில் கூடநெரிசல், கிராமப்புறங்களில் மோசமான சாலை, திடீர் தடைகள், நடுவேநடக்கும் பாதசாரிகள், விலங்குகள் போன்றவை விபத்துக்கு வழிவகுக்கின்றன. சிறிய கார்கள் எடை குறைவாகவும், உட்புறம் சுருங்கியதாகவும் இருக்கும், பெரிய வாகனங்களுடன் மோதும்போது சிறிய கார்கள் அதிக சேதத்தை சந்திக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வாகனங்கள் பக்கத்து நாடுகளை வெருட்டி விற்பதைவிட

உலகில் வேறு எங்காவது விற்கிறார்களா?

உலகின் தராதரத்துக்கு அந்த வாகனங்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2025 at 11:33, ஈழப்பிரியன் said:

இந்திய வாகனங்கள் பக்கத்து நாடுகளை வெருட்டி விற்பதைவிட

உலகில் வேறு எங்காவது விற்கிறார்களா?

உலகின் தராதரத்துக்கு அந்த வாகனங்கள் இல்லை.

எப்படி வேறு நாடுகளில் இந்தியக் கார்களை விற்பது? வட அமெரிக்காவில் எந்த நாட்டு வாகனத்தை விற்பதாக இருந்தாலும் IIHS , NHTSA ஆகிய இரு அமைப்புகளால் பரிசோதிக்கப் பட்டு மதிப்பீடு செய்ய்ப் பட்டிருக்க வேண்டும். அதே போலவே ஐரோப்பாவிலும் ஒரு பரிசோதனை அமைப்பு இருக்கிறது -இதுவும் அமெரிக்காவின் தராதரமுடையது.

இந்தியா தன் தயாரிப்புகளைப் பரிசோதிக்க GNCAP என்ற அமைப்பை வைத்திருக்கிறது. ஊழல் மலிந்த நாடு என்பதால் இதன் பரிசோதனை முடிவுகளை யாரும் நம்புவதில்லை. ஜப்பானிய வாகனங்களை விட விலை குறைவாக இருப்பதாலும், சில சமயங்களில் அரச திணைக்களங்களுக்கு இலவசமாக வழங்கப் படுவதாலும் இலங்கை போன்ற நாடுகளில் இந்திய வாகனங்கள் ஓடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்திய வாகனங்களை விரும்பி வாங்குவது இல்லையாம் அவர்கள் விரும்பி வாங்குவது ரொயோட்டா யாறிஸ் சுசுகி Wagon R போன்ற யப்பான் வாகனங்களை அப்படி இருக்க இலங்கை வாகன விபத்துக்களுக்கு காரணமாக இந்திய வாகனங்களை கட்டுரரையாளர் கொண்டுவந்திருக்க வேண்டியது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2025 at 01:22, vanangaamudi said:

அனைவருக்கும் புரியும்படியாக இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது. இந்திய கார்களுக்கு மட்டுமல்ல அனைத்து சிறிய மலிவான வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் வாகன உற்பத்தியாளர்கள் புதிய கார்களை உருவாக்கும்போது அவற்றின் வடிவமைப்பில் aerodynamics (காற்றியக்கவியல்) என்னென்ன தாக்கங்களை உருவாக்கும் என்பதை பல்வேறு கட்டங்களாக ஆய்வுகூடங்களில் வைத்து பரிசோதித்து பார்த்தபின் உரிய மாற்றங்களை செய்வார்கள். இந்திய தயாரிப்புகளில் இந்த பரிசோதனைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு நம்பிக்கையான சான்றுகள் உண்டா என்பது தெரியவில்லை.

காற்றியக்கவியலுக்கு இசைவாக வடிவமைக்காப்படாத வாகனங்கள்வேகமாக செலுத்தப்படும்போது அதை ஒரு விமானம் ஓடுபாதையில் ஓடி வேகமெடுத்து தரையைவிட்டு உயர்ந்து கிளம்ப தயாராவதை ஒப்பிடலாம். வேகமாக செலுத்தப்படும் மேற்சொன்ன வாகனங்களின் சக்கரங்கள் காற்றியக்கவியல் காரணமாக படிப்படியாக உயர்த்தப்பட்டு தரையில் முட்டாமல் அந்தரத்தில் செல்லவேண்டி ஏற்படலாம். இதனால் வேகமாக செல்லும் இந்த வாகனங்களில் உள்ள பிரேக் இயங்காமல்போக வாகனம் விபத்துக்குள்ளாவதையும் சாரதியால் தவிர்க்கமுடியாமல் போகலாம். வாகனங்களில் உள்ள பிரேக் சிறப்பாக இயங்குவதற்கு சில்லுகள் எப்போதும் தரையை இறுக்கமாக தொட்டு நிற்கவேண்டியது அவசியம்.

உங்கள் அளவுக்கு எனக்கு பொறியியல் அறிவு எல்லாம் இல்லை. ஆனால் அடியேனின் சிறிய சந்தேகம் என்ன என்றால் இந்திய கார்களின் சக்கரங்கள் தரையில் முட்டாமல் பறக்க பார்க்கின்றன என்றால் இவற்றை பறக்கும் கார்கள் என்று சொல்லி விற்பனை செய்யலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

சாலை விதிகளை பொருட்படுத்தாமல் ஓடினால் அல்லது தெரியாமல் ஓடினால் லொறியும் கவிழும்.

ஹொரவப்பொத்தானையில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிர் இழந்தனர்

https://www.virakesari.lk/article/223640

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.