Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!

August 19, 2025

ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!(வெளிச்சம்:073)

 — அழகு குணசீலன் —

முத்தையன்கட்டு குளத்தில் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம், அவரது  மரணம் குறித்து பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் இளைஞனின் கொலைக்கு இராணுவமே காரணம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிய நிலையிலேயே, தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் ஹர்த்தால் அழைப்பு வெளியானது. சுமந்திரனின் இந்த அழைப்பு தனிநபர் அழைப்பு என்பதே மக்களதும், பொது அமைப்புக்கள், கட்சிகளின் நிலைப்பாடாக ஆரம்பம் முதல் இன்று வரை இருக்கிறது.

இடையில் இது குறித்த விசாரணைகள் வேறு பல குற்றவியல் உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளன. இந்த உண்மைகள் மரணம் குறித்து மக்களுக்கு இருந்த ஆத்திரத்தை தணித்தன. இராணுவ பக்கம் நீட்டப்பட்ட சுட்டுவிரலை மக்கள்  சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பக்கம் திருப்பினர். இதனால் அறிவித்த வேகத்தில் ஹர்த்தாலை முன்னெடுப்பதில் மக்கள் ஒத்துழைப்பில் இருந்து விலகி இருந்தனர். கஞ்சா வியாபாரிக்கும், திருட்டு கும்பலுக்கும் நியாயம் கோரி ஹர்த்தாலா? என்று கேட்டனர்.

அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்தது. குறிப்பிட்ட முகாமைச் சேர்ந்த மூன்று இராணுவச்சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கட்டத்திலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமந்திரனுடன் தொடர்பு கொண்டு  “அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் ஹர்த்தால் அறிவிப்பு எதற்கு” ? என்று கேட்டுள்ளார்.

மறுபக்கத்தில் சுமந்திரன் தன்னிச்சையான இந்த முடிவு குறித்து தமிழரசுக்கட்சிக்கு உள்ளும், வெளியும், தமிழ்த்தேசிய பரப்பிலும் அதிருப்திகள் வெளியிடப்பட்டன. ஹர்த்தாலுக்கு திகதியிடப்பட்ட 15ம்திகதி குறித்து விமர்சனங்கள் வெளிவந்தன. திகதி 18 க்கு மாற்றப்பட்டது. விமர்சனங்கள் குறையவில்லை. முழுநாள் ஹர்த்தால் அறிவிப்பை சில மணித்தியாலங்களுக்கு குறுக்க வேண்டிய நெருக்குவாரம் சுமந்திரனுக்கும், சிவஞானத்திற்கும் ஏற்பட்டது.

நல்லூர் ஆலய நிருவாகம் இந்த ஹர்த்தால் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. யாழ்.குடாநாட்டில்  சுமந்திரனின் ஹர்த்தால் அறிவிப்பின் தாக்கம் ஒரு “புஷ்வாணம்” என்று நிருவாகம் நினைத்திருக்கலாம். இதை  யாழ்ப்பாணத்தில் ஹர்த்தாலின் தோல்வியாக  எம்.ஏ. சுமந்திரனும், சி.வி.கே. சிவஞானமும்  ஊடகச் சந்திப்பில் ஏற்றுக்கொண்டனர்.  நல்லூர் அலட்டிக்கொள்ளாதபோதும், மன்னார் ஆயர் இல்லம் குறிப்பிட்ட 15ம் திகதி நிர்ணயம் குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது.

இதனால் பதறியடித்த ஹர்த்தால் அறிவிப்பாளர் சுமந்திரன் மன்னார் சென்று ஆயரைச்சந்திக்க முயற்சித்துள்ளார். கடையடைப்பைக் கோரிய சுமந்திரன் ஆயர் தனக்கு கதவடைப்பை செய்வார் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார். சுமந்திரனை சந்திக்க ஆயர் மறுத்துவிட்டார். குருவானவர் ஒருவரை சந்தித்து விட்டு வெறுங்கையோடு வந்த சுமந்திரன் விடுத்த மறு அறிவிப்பு தான் ஹர்த்தால் 18ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதாகும். மறுநாள் அது மற்றொரு திருத்தத்துடன் 18ம்திகதி காலை மட்டும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கோணல் முற்றும் கோணல்.

இவை அனைத்தும் எதனைக் காட்டுகின்றன? 75 ஆண்டுகள் பழம்பெரும் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் எடுக்கும் சக்தியையா? பெருமையையா? 

தமிழரசுக்கட்சியின் யாப்பு கட்டமைப்பில் அரசியல் குழு, மத்திய குழு, வேட்பாளர் தெரிவுக்குழு, பாராளுமன்றக்குழு, மாவட்டக்குழு, பிரதேசக்குழு, கிராமியக்குழு என்பனவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டையா?  ஹர்த்தாலுக்கான இந்த முடிவை எந்த குழு, எங்கு கூடி, எப்போது எடுத்தது என்று அறியலாமா….? இவை தமிழ்ச்சமூகம் எழுப்பிய கேள்விகள்.

வடக்கு கிழக்கு மக்களோடு தொடர்பு பட்ட, மக்கள் அரசியல் செயற்பாட்டு முடிவில் உள்வாங்கப்பட்ட பொது சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக சமூகம், வடக்கு கிழக்கில் செயற்படும் பெண்கள் அமைப்புகள், மத நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், …. மற்றும் அமைப்புகள் எவை? என்ற கேள்வியும் வலுப்பெற்றது.

“இராணுவ பிரசன்னத்தை குறைத்தல்”  என்ற இந்த ஹர்த்தாலுக்கான மகுடத்தில் உள்வாங்கப்பட்ட தமிழ்த்தேசிய, தமிழ்த்தேசியம் சாராத அரசியல் கட்சிகள் எவை? 

 வடக்கு கிழக்கின் ரெலோ, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழர் முற்போக்கு முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லீம் காங்கிரஸ் போன்று வெறும் ஆதரவு அறிக்கை கட்சிகள் வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கத்திற்கு, கொழும்பு அரசாங்கத்தை திரும்பி பார்க்க வைப்பதற்கு இன்றைய ஹர்த்தாலுக்கு வழங்கிய வகிபாகம் என்ன?  ஒரு வகையில் இந்த ஆதரவு அறிக்கைகளும் சுமந்திரன் பாணியிலான தனிநபர் அறிக்கைகள் தான். இந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் ஹர்த்தாலுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை.

வேறு தமிழ்த்தேசிய கட்சி ஒன்று இப்படி தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்து தமிழரசிடம் ஆதரவு கோரியிருந்தால் அந்த கோரிக்கையை ஏற்று தமிழரசு -சுமந்திரன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பாரா?  ரி.என்.ஏ. உடைவு, பொதுவேட்பாளர், உள்ளூராட்சி தேர்தல் பொறிமுறை,  தேர்தலுக்கு பின்னர் ஒன்றிணைதல்….. போன்ற அரசியல் ஏமாற்று செயற்பாடுகளில் ஒத்துப்போகாத தமிழரசுக்கும் -சுமந்திரனுக்கும் தன்னிச்சையாக முடிவை எடுத்து விட்டு மற்றைய தரப்புமீது ஆதரவு கோருவதற்கான -திணிப்பதற்கான யோக்கியதை உண்டா…?

இதனால் தான் இந்த ஹர்த்தால் அறிவிப்பு சுமந்திரன் எதேச்சையாக, எடுத்த எடுப்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு என்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. அத்தோடு இந்த ஹர்த்தால் படுதோல்வியில் முடிவடைந்திருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். இதற்கான முற்று முழுதான பொறுப்பும் சுமந்திரனைச்சாரும். சமூக ஊடகங்களும், வடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்களும் ஹர்த்தால் தோல்வியையே பதிவு செய்துள்ளன.

 மதியாபரணம்  ஆபிரகாம்  சுமந்திரன் கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல்மாவட்ட மக்களால் பாராளுமன்றத்திற்கு வெளியே ஜனநாயக வழியில் தூக்கி வீசப்பட்டவர். 

இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று 2010 முதல் தமிழ் தேசிய அரசியல் ரீதியான சுமந்திரனின் செயற்பாடுகள் மீதான அதிருப்தி. மற்றையது என்.பி.பி. அநுர அலையில் யாழ்ப்பாணம் அள்ளுண்டு போனது.

எனினும் தமிழரசு என்றால் சுமந்திரன், சுமந்திரன் என்றால் தமிழரசு என்ற நிலைப்பாட்டை கட்சிக்குள் வளர்ப்பதில், தன்னைச் சுற்றி ஒரு ஆதரவாளர் கூட்டத்தை அவர்  கடந்த தேர்தலுக்கு முன்னர் இருந்தே திட்டமிட்டு உருவாக்கி வந்தார். ஆனாலும் தேர்தல் தோல்வியில் இருந்து தப்பிக்க முடியவில்லை. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தனது கையில் இல்லை என்பது சுமந்திரனுக்கு மெல்ல மெல்ல வெளிச்சமாகியது. இதன் மிகப் பிந்திய வெளிப்பாடே அவரே ஏற்றுக்கொண்ட ஹர்த்தால் தோல்வி.

இப்போது சுமந்திரனுக்கு இருக்கின்ற நெருக்கடி தனது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான மாற்று தளம் ஒன்றை தேடவேண்டும். அது யாழ்ப்பாண குடா நாட்டிற்கு வெளியே  வன்னியில் அல்லது கொழும்பிலேயே சாத்தியம். இந்த நெருக்கடியில் விடப்பட்ட வெள்ளோட்டம் தான் இந்த ஹர்த்தால். வன்னியில் இராணுவ கெடுபிடிகள் அதிகம், இராணுவ பிரசன்னம் அதிகம், நில அபகரிப்பு, விகாரைகள், குடியேற்றங்கள், போரின் விளைவுகள் என்று பல பிரச்சனைகள் உண்டு இவற்றை தனது அரசியலுக்கு முதலிடும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த ஹர்த்தால் வெள்ளோட்டம். 

வன்னி மக்களைப் பொறுத்தமட்டில் இராணுவ அடக்குமுறையை அவர்கள் எதிர்க்கின்ற போதும் அதைவிடவும் கடுமையாக சுமந்திரனின் அரசியலை எதிர்க்கின்றனர். வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்த சுமந்திரனுக்கு குடா நாட்டில் ஆதரவற்ற நிலையில், அதை ஈடுசெய்ய வன்னியில் வாக்கு கேட்கவேண்டிய நிலை. இது இந்த ஹர்த்தால் அறிவிப்பின் பின்னணி. 2020 வரை இராணுவத்தின் பாதுகாப்பில் பவனிவந்த சுமந்திரன் இப்போது அதே “பாதுகாப்பு” இராணுவத்தை வெளியேறத் கோருகிறார். தனக்கு பாதுகாப்பு வழங்கியது இராணுவம் அல்ல எஸ்.ரி.எப். என்ற விசேட அதிரடிப்படை என்று தமிழ்பேசும் மக்களை முட்டாள்கள் ஆக்கும் கயிறு திரிப்புகள் வேறு. 

இது நீதிமன்றத்தில் சட்டவாதத்திற்கு சரியாகலாம் மக்கள் அரசியலுக்கு அல்ல. இலங்கை பேரினவாத அரச இயந்திரத்தை பாதுகாக்கின்ற படைகளைக் கொண்ட பல இராணுவ கட்டமைப்புகள் உண்டு. இதில் இராணுவம் – விசேட அதிரடிப்படை இடையேயான வித்தியாசம் என்ன? எஸ்.ரி.எப். தமிழ்பேசும் மக்களின் பாதுகாப்பு படையா? கிழக்கு மாகாணத்தை சூறையாடிய விசேட அதிரடிப்படை பயங்கரவாதத்தை அழிக்க அமெரிக்க, இஸ்ரேல் ஆலோசனையில் ஜே.ஆர்.காலத்தில் அமைக்கப்பட்ட எஸ்.ரி.எப். இராணுவத்தை விடவும் மிகவும் மோசமான விசேட பொலிஸ்  படையணி என்பது சுமந்திரனுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை.

சம்பவம் நடந்த இராணுவ முகாம் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் உள்ளது. 200 பேர்வரை இருந்த இந்த முகாமில் தற்போது 25 பேர் வரைதான் உள்ளனர். மூடப்படுகின்ற முகாமில் உள்ள எச்சசொச்ச பொருட்களை எடுக்கவே இந்த இளைஞர்கள் அங்கு சென்றுள்ளனர். இது அரசாங்கம் படிப்படியாக முகாம்களை மூட எடுத்துள்ள முடிவின் ஒரு விளைவு. இதில் அணில் கிணறு தோண்டிய கதையாக பேரெடுக்கும் அரசியல் செய்ய பார்க்கிறார் சுமந்திரன்.

இந்த ஹர்த்தால் தவறானதல்ல ஆனால் அதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை அணுகுமுறை, காலப்பொருத்தம், தவறானது. சிலர் இராணுமுகாம்களால் இராணுவம் – மக்கள் உறவு வளர்கிறது என்று கதிகலங்குகின்றனர். இராணுவம் நிலை கொண்டு இருப்பதால் தான் அரசாங்கம் அரசியல் தீர்வில் அக்கறையற்று இருக்கிறது என்றும் கதை விடுகிறார்கள். இராணுவம் இல்லாத காலத்தில் அரசியல் தீர்வு கிடைத்ததா? இராணுவம் – மக்கள் உறவு துரோகத்தனம் என்று சென்.ஜோன்ஸ். அதிபர் ஆனந்தராஜா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் அரசியல் தீர்வு கிடைத்ததா?  சுட்டுக்கொண்டவர்களும் படைத்தளபதிகளும் கை குலுக்கவில்லையா? அல்லது கிடைத்த தீர்வைத்தான்  ஏற்றுக் கொண்டீர்களா? 

இந்த ஹர்த்தாலுக்கு பதிலாக கொழும்பில் ஒரு போராட்டத்தை ஏன்? செய்யமுடியாது என்ற கேள்வி சமூக ஊடகங்களில் கேட்கப்பட்டது. பல பதிவுகள் உண்ணாவிரதத்தை முன்மொழிந்தன. அந்த உண்ணாவிரதத்தை தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டும்பேரும் செய்யவேண்டும் என்றும், முடியுமானால் சாகும்வரை செய்யவேண்டும் என்றும் கேட்கப்பட்டது. இவை ஒரு பகுதி தமிழ்பேசும் மக்களின் கருத்துக்கள். இதற்கு தமிழரசின் பதில் என்ன? முடியுமானால் ஹர்த்தாலுக்கு ஆதரவு அறிக்கை விட்டவர்களும் நோன்பிருந்தால் அதன் கனதி சர்வதேசத்தில் அதிகமாக இருக்கும். 

இப்பவும் காலம் கடந்து விடவில்லை. ஹர்த்தால் போட்டு அன்றாடம் உழைக்கும் கூலிகளை பட்டினி போடுவதை விடவும் இது இதயசுத்தியான அரசியல். அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் காலத்தில், ஜனாதிபதி ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றும் காலத்தில்  தமிழரசு எம்.பி.க்கள் சாகும்வரை உண்ணாவிரதம்?  இது எப்படி இருக்கு? இதைச் செய்யலாமே.  ஒரு வகையில் மக்களுக்கு கட்டளையிட்டு அவர்களை வதைப்பதை விடவும், மக்கள் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டதாகவும் வரலாற்றில் அமையும்.

இராணுவ முகாம்களை மூடுவது என்பது நூறு வீதம் அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது. காலாவதியாகிப்போன ஹர்த்தால்களால் அதை சாதிக்க முடியாது. இந்திய இராணுவம் வந்திறங்கிய போது இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவின் படி இராணுவம் முகாமுக்குள் முடங்கவில்லையா? அரசியல் தீர்வுக்கும் – இராணுவ பிரசன்னத்திற்கும் போடும் முடிச்சு முழங்காலுக்கும், மொட்டத்தலைக்குமானது. ஜதார்த்தமற்றது, உண்மையான, நேர்மையான அரசியல் அற்றது.

அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் போது இராணுவம் வரையறுக்கப்பட்ட வகையில் குறைக்கப்படலாம். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்றால், தனிநாடே வழி. இதற்கு போராட, புருடா விடாமல் சுமந்திரனும், தமிழரசுக்கட்சியும் தயாரா? 

அரசாங்கம் நல்லெண்ண அடிப்படையில் இந்த யுத்த சூழல் எச்சங்களை படிப்படியாக குறைக்க முயற்சிக்கிறது. அரசாங்கம் தென்னிலங்கை சிங்கள பௌத்த தீவிர அரசியல் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாத தமிழ்த்தேசிய உணர்ச்சி எதிர்ப்பு அரசியல் இராணுவத்தை நிலைநிறுத்தவும், இனப்பிரச்சினைக்கான தீர்வை பின் தள்ளவும், பயங்கரவாத சட்டத்தின் நீக்கத்தை தடுக்கவும் தமிழ்த்தேசியம் அரசாங்கத்திற்கு செய்யும் சேவகமாக அமையும். எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.

இதுதான் தமிழரசுக்கட்சியினதும், சுமந்திரனதும் பின்கதவு இலக்கா….?

இது தந்தை செல்வாவின் அசரீரி,

“சுமந்திரா..!  உனது முதலமைச்சர் கனவு வில்லங்கமானது. உன்னை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஆமேன்..!”

https://arangamnews.com/?p=12259

  • கருத்துக்கள உறவுகள்

மக்களிடம் இழந்துபோன தன் செல்வாக்கை கட்டியெழுப்ப இவர் என்னவெல்லாமோ செய்யப்பார்க்கிறார், அது காலம் கடந்துவிட்டது. இனி தனது தொழிலுக்கு திரும்புவதே நல்லது. ஆனால் அரசியலில் இறங்கி செய்த குழறுபடிகளால் இருந்ததையும் இழந்துவிட்டார் பாவம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாயிற்று. அவரை களத்தில் இறங்கியவர்கள் ஒதுக்கப்பட்ட பின் இவருக்கு அங்கு என்ன வேலை? மாறி மாறி பதவி சுகம் அனுபவித்தவர், எல்லோரும் தன்னை உபசரிப்பார்கள் என்கிற கனவு கலைந்தது. "பிறர்க்கு இடு பள்ளம், தான் விழும் குழி."

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின்… ஹர்த்தால் எனும் கபட நாடகத்தை, தோல் உரித்துக் காட்டிய அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான கட்டுரை.

சுமந்திரனின் ஹர்த்தால் தோல்வியின் மூலம்… தமிழ் மக்களிடம் தனக்கு ஆதரவு அறவே இல்லை என்பதும், வட மாகாண முதலமைச்சர் கனவும் தவிடு பொடியாகி… கவிண்டு கொட்டுண்டது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின்… ஹர்த்தால் எனும் கபட நாடகத்தை, தோல் உரித்துக் காட்டிய அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான கட்டுரை.

சுமந்திரனின் ஹர்த்தால் தோல்வியின் மூலம்… தமிழ் மக்களிடம் தனக்கு ஆதரவு அறவே இல்லை என்பதும், வட மாகாண முதலமைச்சர் கனவும் தவிடு பொடியாகி… கவிண்டு கொட்டுண்டது. 😂 🤣

சரி சரி எனக்கு இனி யாழ்ப்பாணம் வேண்டாம்.

இனிஒரு தேர்தல் என்றால் அது கொழும்பில்த் தான்.

அதையும் கெடுத்துப் போடாமல் இருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி சரி எனக்கு இனி யாழ்ப்பாணம் வேண்டாம்.

இனிஒரு தேர்தல் என்றால் அது கொழும்பில்த் தான்.

அதையும் கெடுத்துப் போடாமல் இருங்கோ.

சுமந்திரனுக்கு கொழும்பில்… சிங்கள சம்பந்திகளிடம் இருந்து வாக்குகள் விழுந்தாலும், பாராளுமன்றம் போகிற அளவுக்கு காணாதே. 😂

சுமந்திரன் இப்ப… அரசியல் அனாதை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

534426535_1189697209861916_1139149075711

535975033_1189686849862952_2608547908043

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின்… ஹர்த்தால் எனும் கபட நாடகத்தை, தோல் உரித்துக் காட்டிய அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான கட்டுரை.

சுமந்திரனின் ஹர்த்தால் தோல்வியின் மூலம்… தமிழ் மக்களிடம் தனக்கு ஆதரவு அறவே இல்லை என்பதும், வட மாகாண முதலமைச்சர் கனவும் தவிடு பொடியாகி… கவிண்டு கொட்டுண்டது.

அதைவிட பெரும் காமெடி..கல்முனையில் சுமந்திர தேசிக்காய் வால்கள் ஏழு மணிக்கே தொலைபேசியும் கையுமாக திரிந்திருக்கின்றனர் கடைகள் எல்லாம் சாத்தப்பட்டு ஹர்த்தால் நடைபெறுவதாக காட்ட ... இங்கே கடைகள் பத்து மணியும் தாண்டித்தான் திறப்பினம். சுமந்திரன் என்றாலே சுத்துமாத்து சுத்துமாத்து என்றாலே சுமந்திரன் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அதைவிட பெரும் காமெடி..கல்முனையில் சுமந்திர தேசிக்காய் வால்கள் ஏழு மணிக்கே தொலைபேசியும் கையுமாக திரிந்திருக்கின்றனர் கடைகள் எல்லாம் சாத்தப்பட்டு ஹர்த்தால் நடைபெறுவதாக காட்ட ... இங்கே கடைகள் பத்து மணியும் தாண்டித்தான் திறப்பினம். சுமந்திரன் என்றாலே சுத்துமாத்து சுத்துமாத்து என்றாலே சுமந்திரன் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை

கல்முனையில்.... பூட்டிய கடைகளுடன் இணையத்தில் வந்த படத்தை நான் பார்த்து, சிலவேளை சாணக்கியன் சொன்ன படியால்... வியாபாரிகள் ஹர்த்தாலை முழுமையாக கடைப் பிடிக்கின்றார்கள் என நினைத்தேன்.

நீங்கள் கூறியதை பார்த்த பின்புதான் தெரிந்தது காலி ஏழு மணிக்கு எடுத்த சுத்துமாத்து படங்கள் அவை என்று. சுமந்திரன் எப்பவும் சுத்துமாத்து செய்து கொண்டே இருந்தால்... மக்களும் பொறுமையின் எல்லை தாண்டி, செமையாக வாங்கிக் கட்டுவார் என்பது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அதைவிட பெரும் காமெடி..கல்முனையில் சுமந்திர தேசிக்காய் வால்கள் ஏழு மணிக்கே தொலைபேசியும் கையுமாக திரிந்திருக்கின்றனர் கடைகள் எல்லாம் சாத்தப்பட்டு ஹர்த்தால் நடைபெறுவதாக காட்ட ... இங்கே கடைகள் பத்து மணியும் தாண்டித்தான் திறப்பினம். சுமந்திரன் என்றாலே சுத்துமாத்து சுத்துமாத்து என்றாலே சுமந்திரன் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை

கல்முனையில்.... பூட்டிய கடைகளுடன் இணையத்தில் வந்த படத்தை நான் பார்த்து, சிலவேளை சாணக்கியன் சொன்ன படியால்... வியாபாரிகள் ஹர்த்தாலை முழுமையாக கடைப் பிடிக்கின்றார்கள் என நினைத்தேன்.

நீங்கள் கூறியதை பார்த்த பின்புதான் தெரிந்தது காலி ஏழு மணிக்கு எடுத்த சுத்துமாத்து படங்கள் அவை என்று. சுமந்திரன் எப்பவும் சுத்துமாத்து செய்து கொண்டே இருந்தால்... மக்களும் பொறுமையின் எல்லை தாண்டி, செமையாக வாங்கிக் கட்டுவார் என்பது நிச்சயம்.

இதைவிட இரவு 10 மணியில் இருந்து காலை 7 மணிவரை ஹர்த்தால் என்று அறிவித்திருக்லாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.