Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 AUG, 2025 | 04:48 PM

image

(எம்.நியூட்டன்)

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, எதிர்வரும் 30ஆம்  திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம், அதனை வலுப்படுத்த பேதங்களற்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடத்திய ஊடக சந்திப்பில்   மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் ஐ.நா பிரதிநிதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செம்மணியின் தடயங்களை பார்வையிட்டார். அவரது இந்த செயலால், நீதிக்கான சமிக்ஞை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அத்தனையும் கலைந்துவிட்டது.

ஐ.நாவின் பிரதிநிதி உள்ளக பொறிமுறையை எம்மிடம் திணித்துச் சென்றதைப் போன்று அவரது கருத்து இருக்கிறது.

நாம் சர்வதேச விசாரணையையே கோருகின்றோம். அதனையே இன்றும் வலியுறுத்துகின்றோம். எனவே, எமக்கு உள்ளக பொறிமுறை வேண்டாம். அதில் எமக்கு நம்பிக்கை இல்லை.

எனவே, எதிர்வரும் 30ஆம் திகதி செம்மணியில் போராட்டம் ஒன்றை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளோம்.

அந்தப் போராட்டத்துக்கு மதத் தலைவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அனைவரும் பேதங்களற்ற வகையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

https://www.virakesari.lk/article/223336

  • கருத்துக்கள உறவுகள்

காணமல் ஆக்கப்பட்டவர் சங்கத்தையே வடக்கு கிழக்காக பிரித்துவிட்டீர்கள் ... இனியார் உங்கல் கத்தலைக் கேட்ட்கப் போகின்றான்..

  • கருத்துக்கள உறவுகள்

வட- கிழக்கில் சர்வதேச நீதி கோரிய போராட்டம்; தமிழர் தேசமாக அணிதிரள்க – யாழ்.பல்கலை ஒன்றியம்!

jaffna-uni.jpg

சர்வதேச நீதி கோரிய மாபெரும் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியிலே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு தற்காலம் வரையிலும் பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புகளுக்கு தமிழர் தாயகமானது முகம் கொடுத்து வருவதுடன் அந்த காலப்பகுதியிலே எமது பல உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக இன்றளவும் அவர்களது உறவினர்கள் அவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் நிறைய தாய்மார்கள் இறந்தும் கூட இருக்கின்றனர். இன்றும் நம் மக்கள் வாழ்கின்ற நிலப்பகுதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள், சிங்கள பௌத்தமயமாக்கல், தமிழர்களுடைய பூர்வீக காணிகள் விடுவிக்கப்படாமை என அதிகார ரீதியாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்றமையானது எங்கள் மக்களுக்கான நீதி இந்த நாட்டில் தொடர் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றமையையே குறிக்கின்றது.

தமிழ் மக்கள் தங்கள் தாயக பகுதியில் அரசியல் கலாச்சார பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவதையும் எமக்கான நீதி மறுக்கப்படுவதையும் நாம் உரத்துச் சொல்வதே போராட்டங்களின் தார்மீக நோக்கமாகும்.

இன்றளவும் தமிழர் நிலங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளேயே இருக்கின்றன. வலிகாமம் கிழக்கு காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு விடுவிக்கப்படாத நிலையிலேயே எங்கள் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த வேளையில் முத்தையன்கட்டு கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இராணுவத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டமை அரசினுடைய சர்வாதிகாரத்தன்மையினையே வெளிப்படுத்துகின்றது.

தமிழ் மக்கள் கேட்பதற்கு யாருமற்ற எதிலிகளாக சொந்த நிலத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆட்சிக்கு வரும் முன் அரசியல் கைதிகளின் விடுதலையை பற்றி கதைத்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி அரசியல் கைதிகளை விடுவிக்கமுடியாது என்று சொல்லியிருப்பது என்பது அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையின்மையையே காட்டுகின்றது.

கொக்குத்தொடுவாய் மற்றும் செம்மணி மனிதபுதைகுழிகளில் இருந்து தமிழ் சமூகத்தின் மீதான இனப்படுகொலை வெட்ட வெளிச்சத்துக்கு வருவது தெரிந்தும் எதுவித நீதியும் இதுவரை எட்டப்படவில்லை.

மனித புதைகுழி பற்றி சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் தங்கள் சொந்த நிலங்களுக்காக போராடுபவர்கள் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் அதிகாரத்தின் அதி உச்ச கொடூர போக்கையே காட்டுகின்றது.

இந்த வேளையில் வீதி எங்கும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதுவித நீதியுமற்று போராடி வருகின்றனர்.

யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் நீதிக்கான தவிப்புக்கள் தணியப்படவில்லை. அவர்களுக்கான நீதி மாறி மாறி வரும் எந்த ஒரு அரசாங்கத்தாலும் வழங்கப்படவில்லை வழங்கப்படாது.

இதனாலேயே வரும் ஆவணி 30 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தங்கள் பிள்ளைகளை தேடி சர்வதேச நீதி விசாரணை கோரி போராட முனைந்துள்ளனர்.

வடக்கில் கிட்டுப்பூங்காவிலிருந்து செம்மணி வரையிலும் கிழக்கில் கல்லடிப்பாலத்திலிருந்து காந்திப்பூங்காவரையிலும் சர்வதேச நீதிக்கான மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்;.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களாக அவர்களது போராட்டத்திற்கு முற்றுமுழுதான ஆதரவினை வழங்குவதுடன் பக்கபலமாகவும் இருப்போம் என்று சொல்லிக் கொள்கின்றோம்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தேசமாக போராட்டக் களத்திற்கு நாங்கள் அணி திரள வேண்டும் என்று கோரிக்கை வைப்பதுடன் இந்திய அரசியலில் ஆர்வம் செலுத்தும் எங்கள் தமிழ் இளந்தலைமுறையினர் எங்கள் மக்களின் பிரச்சினைகளில் பெரிதும் அக்கறையின்றி இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயமாகவே காணப்படுகின்றது.

எனவே எங்கள் நிலத்தினுடைய அரசியலை புரிந்து கொண்டு எங்கள் மக்களுக்காக காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்காக போராட்ட களத்திற்கு அனைவரும் ஒன்று கூடி வரவேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கேட்டுக் கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தனர்.

https://akkinikkunchu.com/?p=338540

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : வட, கிழக்கில் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள்

29 Aug, 2025 | 09:20 AM

image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) சனிக்கிழமை வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும்.

அதன் நீட்சியாக இம்முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி வடக்கிலும் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கி கிழக்கிலும் தனித்தனியாக இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க தெற்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் பிரிட்டோ பெர்னாண்டோ தலைமையிலான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதமர் ஹரினி அமரசூரியவிடமும், நீதியமைச்சிடமும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திடமும் கொழும்பிலுள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களிடமும் இன்றைய தினம் கையளிக்கவுள்ளனர்.

மேலும் காணாமல்போனோர் விவகாரத்தின் தற்போதைய நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றும் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/223654

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைய போராட்டத்துக்கு கட்சி, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கவேண்டும் - கோவிந்தன் கருணாகரம் 

29 Aug, 2025 | 06:51 PM

image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் நாளை முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்கவேண்டிய கடமை இருக்கிறது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

நாளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். அதை முன்னிட்டு வடக்கு, கிழக்கு தழுவிய ஆர்ப்பாட்டம் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெறவிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த பேரணிக்கு சிவில் சமூகங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். அதேபோன்று அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். 

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் இந்த பேரணிக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் வேலை செய்துகொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாங்களும் எங்களுடைய முழு ஒத்துழைப்பை கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் என்கிற விதத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது மாத்திரமன்றி, இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அதாவது கடந்த போராட்ட காலங்களில் எங்களுடைய மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதற்கு மேலாக பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். 

அதேபோன்று இறுதி யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தங்களுடைய உறவினர்களினால் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களது நிலைமை பதினாறு ஆண்டுகளை கடந்தும் இன்னமும் அவர்கள் எங்கு, எவ்வாறு இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகங்கள் எங்களுடைய மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த புதிய அரசாங்கம் இன்று பல கடந்த கால சம்பவங்களுக்கான நீதியை கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களது நிலைமையும் கருத்தில் கொண்டு அவர்களுடைய உறவினர்கள் படும் துன்பங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா, அவ்வாறு இருந்தால் அவர்களை கண்டுபிடித்து தங்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கவேண்டிய கடமைப்பாடு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது.

ஏனென்றால், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின்போதும் ஏன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போதும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்து, இன்று வடக்கு, கிழக்கில் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கின்றார்கள். 

அந்த வகையில் இந்த அரசாங்கத்திற்கு ஒரு பெரிய கடமை இருக்கிறது. இந்த தமிழ் மக்களது துயரங்களை நீக்குவதற்காக இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது என்பது ஒரு விடயமாக இருந்தாலும், புதிய அரசியல் அமைப்பை கொண்டுவந்து, இன பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினைக் காண்போம் என்று கூறிய இந்த அரசு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் ஒரு நீதியை கொடுக்க வேண்டும்.

நாளைய தினம் நடைபெற இருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்கு நாங்கள் கட்சி பேதமின்றி இன, மத பேதமின்றி அனைவரும் வலுச்சேர்க்க வேண்டிய ஒரு தேவையில், கடமையில் இருக்கின்றோம். 

அந்த வகையில் நாங்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நாளை நடத்தவுள்ள பேரணிக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும். 

இந்த பேரணியை ஒரு பிரமாண்டமான பேரணியாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எங்களுடைய மக்களுக்கு ஒரு அறைகூவல் விடுக்கிறது. 

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கட்சி பேதங்களை மறந்து ஒன்றாக தெற்கிலே அணி திரண்டிருக்கிறார்கள். எங்களை பொருத்தமட்டில் பல விதமான கதைகள் இந்த கைது சம்பந்தமாக இருக்கின்றன. வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ அரச சொத்துக்களை பிழையாக பயன்படுத்தினார்கள் என்பது போன்ற காரணங்கள் பல இருக்கின்றன.

இவ்விடயமாக தனிப்பட்ட ரீதியிலே எமது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இந்த கைது நடவடிக்கையை பற்றி தற்போதைய நிலைமையில் பெரிதாக விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய தினம் 29ஆம் திகதி அரசியல் கட்சிகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முன்னெடுப்புடன் வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இந்த செம்மணி புதைகுழி உட்பட வடக்கு, கிழக்கில் இருக்கின்ற புதைகுழிகள் தொடர்பாகவும் கடந்த காலங்களில் வடகிழக்கில் ஏற்பட்ட போர்க்குற்றம் சார்பாகவும் ஒரு கையெழுத்துப் போராட்டத்தை நடத்தி ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்த கையெழுத்துகளை அனுப்புவதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.

அந்த வகையில் ஒரே நாளில் அதாவது இன்றைய நாள் வடக்கு, கிழக்கு தழுவிய அந்த கையெழுத்துப் போராட்டத்தை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும், இன்றைய தினம் வடக்கில் அந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெறுகிறது. நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. இந்த தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுடன் கேட்டிருக்கிறோம்... இன்னும் ஒரு திகதியை தீர்மானித்து அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொள்ளும் ஒரு கையெழுத்துப் போராட்டமாக கிழக்கில் செய்ய வேண்டும் என்று.

இன்று வடக்கில் நடைபெற்றாலும் இன்னுமொரு திகதியில் மிக விரைவில் கிழக்கில் அந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெறும்.

அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அரசாங்கம் அப்படி அரசியல் பழிவாங்கல் அல்ல. கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்களும் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் அதேபோன்று புதிதாக வந்த அரசாங்கமும் பல நூற்றுக்கணக்கான கொள்கலன்களை எவ்விதமான பாதுகாப்பு பரிசோதனைகளும் இல்லாமல் விடுவித்திருக்கின்றார்கள். அதுவும் ஒரு ஊழல்தான் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எங்களைப் பொறுத்தளவில் ஊழல் செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் ஆட்சேபனை இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/223735

  • கருத்துக்கள உறவுகள்+
58 minutes ago, ஏராளன் said:

ஆடுகள் நனைகிறது என்று இந்த கோவிந்தன் ஓநாய் அழுகிறது...

இவன் செய்யாத படுகொலைகளா? பச்சை கொலைகாரப் பாவி... இவன்ட தம்பி ரேப்பிற்கு புகழ் போனவன்

கோவிந்தன் கருணாகரம் எ ஜனா (ரெலோ) என்பவர் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காப் படைத்துறையுடன் இணைந்து மட்டக்களப்பில் பெருமளவான படுகொலைகளில் ஈடுபட்டவராவர். இவர் தொடர்பில் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலைத் தொகுத்து கோர்வையாக கீழே தந்துள்ளேன் 

  1. குறிப்பாக, 01/12/1990 அன்று வன்புணர்ச்சிக்குள்ளாகி படுகொலையான மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியின் வணிகவியல் பிரிவு மாணவியான ஆரையம்பதியைச் சேர்ந்த நல்லதம்பி அனுஷ்யா (05/04/1972 - 01/12/1990) என்ற விஜி அவர்களின் படுகொலையுடன் தொடர்புடையவன் ஜனா ஆவான்; அமரர் விஜி அவர்கள் பரதநாட்டியத்திலும் மெய்வல்லுநர் போட்டிகளிலும் சிறந்து விளங்கியதோடு மிகவும் வடிவானவருமாவார். இவர் கல்லடியில் தங்கியிருந்து படித்து வந்தார். தன் விடுமுறைக் காலங்களின் போது தனது சொந்த ஊரான ஆரையம்பதிக்கு வந்து போவது வழக்கமானதொன்றாகும். அவ்வாறு வந்து செல்லும் வேளையில் அவரை கண்ணுற்ற ரெலோ காவாலிகள் அவரை அடைய வேண்டுமென்ற இச்சையால் இவரது தாய் மாமனான மூதூர் முற்றுகையின் போது மேஜர் கஜேந்திரனுடன் வீரச்சாவடைந்த 2ம் லெப். கோபி (நாகமணி ஆனந்தராசா) அவர்களைக் காரணம் காட்டி இரவில் வந்து தொல்லை கொடுத்துச் சென்றனர். இதனால் இவர் இரவு நேரங்களில் அருகிலிருந்த தோழியின் வீட்டில் சென்று தங்கியிருந்தார். அப்போதொருநாள் இரவு அன்னாரை ரெலோ காவாலிகளான ராபர்ட் (சாவொறுப்பு), வெள்ளையன் (சாவொறுப்பு), லோகேஸ்வரராஜா எ ராம், அன்வர் (சோனக இனக்குழுவைச் சேர்ந்தவன்/ சாவொறுப்பு) மற்றும் இந்த ஜனாவின் தம்பியான கோவிந்தன் கருணாநிதி எ ரெலோ மாமா (30.10.2017  அன்று லண்டனில் பார்வை இழந்த நிலையில் இயற்கையால் சாவடைந்தான்) ஆகியோர் அவரது தோழியின் வீட்டில் வைத்து கடத்திச் சென்று வன்புணர்ச்சி செய்த பின்னர் படுகொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிச் சென்றார்கள். கடத்தப்பட்டவுடன் அன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ரெலோ பொறுப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்டப் பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டுவந்தவனுமான இவனிடம் சென்று கேட்ட போது தாங்கள் கைது செய்யவில்லை என்று கூறி மழுப்பினான், அன்னாரின் குடும்பத்தாரிடம். இதில் இன்னும் கொடுமையென்னவெனில் இவரது சடலத்தை எடுக்க வேண்டுமெனில் அவர் ஒரு புலி உறுப்பினர் என்று கையெழுத்து வைத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு சிங்கள அரசு தரப்பிலிருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டமையே ஆகும். இத்தனைக்கும் இவர் எந்தவொரு இயக்கத்தையும் சாராதவராவார். 

  2. அத்துடன் 22.10.1990 அன்று படுகொலையான "நாட்டுப்பற்றாளர்" சின்னத்துரை பூரணலட்சுமியின் படுகொலைக்கு உத்தரவிட்டவனும் இவனே ஆவான்; இவரை அவனது உத்தரவிற்கு அமைவாக அன்னாரின் வீட்டிற்கு வந்து கிழவி ரவி, வெள்ளை (சாவொறுப்பு), மற்றும் ராபட் (சாவொறுப்பு) ஆகியோரைக் கொண்ட ரெலோ கும்பல் சுட்டுத் தள்ளியது. 

  3. மேலும் ஜனா நேரடியாகவே தன்கையால் 2ம் லெப். கலா (பொன்னம்பலம் சதானந்தரத்தினம்) என்ற தமிழீழ விடுதலை வீரனை 19.04.1988 அன்று செட்டிபாளையத்தில் வைத்து சம்மட்டியால் கொன்றான் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வலிந்து காணாமல் ஆககப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்

30 Aug, 2025 | 12:11 PM

image

(எம்.நியூட்டன்)

சர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றத்திலிருந்து செம்மணி நோக்கி பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இப்போராட்டமானது உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வடகிழக்கில் சனிக்கிழமை (30) முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இப் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1000462742.jpg

1000462738.jpg

1000462733__2_.jpg

https://www.virakesari.lk/article/223766

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.