Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!

adminAugust 28, 2025

anura-kumara-dissanayake.jpg?fit=1140%2C

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 01ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க பயணம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணம் செல்லும்  ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மறுநாள் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

https://globaltamilnews.net/2025/219695/

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-1-15.jpg?resize=600%2C300&ss

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்க, ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க எதிர்வரும் 01ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதியின் அன்றைய நாளுக்கான செயற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 01ஆம் திகதி காலை 08.30 மணியளவில் மயிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதேவேளை, மறுநாள் 02ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

https://athavannews.com/2025/1444982

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி செல்லவுள்ளார் ஜனாதிபதி?

28 Aug, 2025 | 10:51 AM

image

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ள ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார். 

யாழில். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ஊடகவியலாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்திற்கு முதலாம் திகதி ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.  மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்படும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும். அது ஜனாதிபதி வருகை தரும் நாள் அன்றோ , அதற்கு முதலோ பின்னரோ நடைபெறலாம். அதனை எப்ப என தற்போது உறுதியாக கூற முடியாது. ஆனாலும் காணிகள் விடுவிக்கப்படும் என்பது நிச்சயம். 

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிடுவாரா என்பதனையும் தற்போது நிச்சயமாக கூற முடியாது. சில வேளைகளில் அவற்றை பார்வையிட சந்தர்ப்பம் உண்டு என தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/223557

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கடவுசீட்டு அலுவலகத்தை நாளை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்

anura-7-720x470.jpg

யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து , யாழ்.பொது நூலகத்தில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

https://akkinikkunchu.com/?p=339064

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கு ஜனாதிபதி அநுர இன்று விஜயம் : பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் அங்குரார்ப்பணம்

01 Sep, 2025 | 06:13 AM

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட பணிகளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் யாழ் பிரதேச காரியாலயம் காலை 11 மணிக்கு  யாழ்ப்பாணம் செயலக பிரிவில் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வில் ஜனாதிபதி கலந்துக்கொள்ளவுள்ளதுடன், யாழ் நூலகத்தின் அபிவிருத்தி பணிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச புதிய கிரிக்கெட் மைதானத்தின் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை (2) ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு விஜயம் செய்து 'தென்னை தினம்' அபிவிருத்தி கருத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.அத்துடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டவுள்ளார்.

அத்துடன் பளை பகுதியில் தென்னை நாற்று உற்பத்தி நிலையத்தையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

https://www.virakesari.lk/article/223883

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது

01 Sep, 2025 | 04:29 PM

image

(எம்.நியூட்டன்)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில்  திங்கட்கிழமை (01) நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின்  முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள்  அமைச்சர் இ.சந்திரசேகர் உரையாற்றினார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. இதனை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் நெறிப்படுத்தினார். 

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் ஆனந்த விஜயபால,  பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,  மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

IMG-20250901-WA0022.jpg

IMG-20250901-WA0024.jpg

IMG-20250901-WA0026.jpg

IMG-20250901-WA0023.jpg

https://www.virakesari.lk/article/223944

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் 

01 Sep, 2025 | 03:05 PM

image

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

919d8139-aca4-4994-85b8-2c36b4055be2.jpe

722660a3-f55b-4d2e-9946-843a01af308a.jpe

8bbc405e-81ca-4062-aae1-4de225726321.jpe

https://www.virakesari.lk/article/223916#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் விதை தென்னந்தோட்டம் ஜனாதிபதி அநுரவினால் ஆரம்பிப்பு

02 Sep, 2025 | 10:14 AM

image

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை (02) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார்.  

வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன. சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது  திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் துறைசார் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொலில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

8bff7b1e-1749-4f7f-a8d4-487075bada60.jpg

504b1a24-1f6e-41ff-8b4c-ff111d8a8655.jpg

b38e2202-6689-4f23-960d-18f20905d8cd.jpg

47b760d6-2c8a-43a8-a799-f53d1fb19193.jpg

07381d2b-e028-4f63-a1ad-93bb27d567ae.jpg

e3490c98-7514-44ff-a7ef-ad8499064b56.jpg

af07cd3c-5376-403d-b5cb-708ef7cf4028.jpg

0c23f2fe-91de-463a-a101-2d9e00abc611.jpg

https://www.virakesari.lk/article/223989

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2025 at 02:58, கிருபன் said:

செம்மணி செல்லவுள்ளார் ஜனாதிபதி?

28 Aug, 2025 | 10:51 AM

image

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ள ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார். 

யாழில். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ஊடகவியலாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்திற்கு முதலாம் திகதி ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.  மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்படும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும். அது ஜனாதிபதி வருகை தரும் நாள் அன்றோ , அதற்கு முதலோ பின்னரோ நடைபெறலாம். அதனை எப்ப என தற்போது உறுதியாக கூற முடியாது. ஆனாலும் காணிகள் விடுவிக்கப்படும் என்பது நிச்சயம். 

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிடுவாரா என்பதனையும் தற்போது நிச்சயமாக கூற முடியாது. சில வேளைகளில் அவற்றை பார்வையிட சந்தர்ப்பம் உண்டு என தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/223557

செம்மணிப் புதைகுழிக்கு செல்லவில்லை ஜனாதிபதி

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணிப் புதைகுழிக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளார்.

ஜனாதிபதி செம்மணிப் புதைகுழியையும் பார்வையிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால், ஜனாதிபதி செம்மணிக்குச் செல்வாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. எனினும் செம்மணிக்குச் செல்வதை அநுர தவிர்த்துள்ளார்.

செம்மணிப் புதைகுழிக்கு செல்லவில்லை ஜனாதிபதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.