Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்!

August 28, 2025

கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்!

— கருணாகரன் —

அரசியல் மோசடிகள் பலவிதமானவை. அத்தகைய மோசடிகளை, தவறுகளை, குற்றங்களை இழைத்தவர்கள் எல்லாம் இலங்கையில் தண்டனை பெறும் காலமொன்று உருவாகியுள்ளது. 

‘அரகலய‘ என்ற மக்கள் எழுச்சி உருவாக்கிய வெற்றிகளில் இதுவும் ஒன்று. அதுவே ஆட்சிமாற்றம், அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்தது. 

அத்தகைய விழிப்புணர்வும் எழுச்சியும் தமிழ்ச் சமூகத்திலும் நிகழ வேண்டும். நிகழும். அப்படி நிகழ்ந்தால்தான் மோசடிக்காரர்களும் பிற்போக்கானோரும் சமூக விரோதிகளும் விலக்கப்படுவார்கள், தண்டனைக்குள்ளாக்கப்படுவர். 

தமிழ்த் தரப்பில் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருபவர் சிவஞானம் சிறிதரன். எத்தகைய கூச்சமும் தயக்கமும் இல்லாமல் தன் நெஞ்சறியப் பொய் சொல்வதிலிருந்து அடாத்தாக நடப்பது, ஏமாற்றுவது, மோசடி செய்வது எல்லாமே அவருக்குப் பெருங்கலை என்று பார்ப்பவர்களும் உண்டு. 

இதைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள் ஆயிரமாக இருந்தாலும் அதில் இதுவரையில் அவர் வெற்றிகளையே பெற்றுள்ளார். அதொரு தீராச் சுவையாக மாறியுள்ளது. அதனால் அதையே அவர் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார். அந்தச் சுவை அவரை எல்லை கடந்து செல்ல வைக்கிறது என்று பார்க்கப்படுகின்றது. 

இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. எளிய – அண்மைய உதாரணம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவுக்கு (25.08.2025) சென்று, அதனுடைய இயங்கு நிலை பற்றிப் பேசியிருப்பதாகும். 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதைச் செய்வதற்கு அவருக்கு உரிமையும் தகுதியும் உண்டு. 

ஆனால், அதை அவர் செய்திருக்க வேண்டியது நேற்றல்ல. அதற்கு முன்பாகவே செய்திருக்கவேண்டும். 

அதற்கு முன்பு என்றால், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு (திறந்து வைக்கப்பட்டு) ஓராண்டாகிய பின்னரும் அது இயங்காமலே உள்ளது. 

மட்டுமல்ல, பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு இயங்காமல் இருப்பதைக் காரணம் காட்டி, அந்தப் பிரிவிலுள்ள சில உபகரணங்களை பிற மருத்துவனைகளுக்கு  இடமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அப்போதெல்லாம் சிறிதரன் இதைப்பற்றிப் பேச முன்வரவேயில்லை. அதைப் பற்றி அவருக்கும் தெரியாது. அவருடைய ஆட்களுக்கும் தெரியாது. அவர்களுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறையே இல்லை. 

இந்த நிலையில் மருத்துமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் 05.06.2025 இல் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனைச் சந்தித்து இந்தப் பிரிவின் நிலைமையை விளக்கிப் பேசியிருந்தது. 

அத்துடன் கண் சிகிச்சைக்குரிய நிபுணர் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தது. மட்டுமல்ல, Medical ward பற்றாக்குறையையும் எடுத்து விளக்கியது. பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு புதிய தொகுதியில் இயங்கத் தொடங்கினால், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் மகப்பேற்று விடுதிகளை Medical ward களுக்கு வழங்க முடியும் என்பதையும் எடுத்துக் கூறியது. 

இதனை அடுத்து, ஆளுநர் அடுத்த வாரமே கிளிநொச்சி மாவட்டப் பொதுமருத்துவமனைக்கு நேரிற் சென்று குறித்த பிரிவைப் பார்வையிட்டு, பணிப்பாளருடனும் பேசியிருந்தார். கூடவே வடமாகாண சுகாதார செயலாளரும் பார்வையிட்டிருந்தார். 

ஆனாலும் நிலைமைகளில் உடனடிச் செயற்பாட்டு விளைவு கிட்டியிருக்கவில்லை. அல்லது தாமதங்கள் ஏற்பட்டன. அதற்குரிய தயார்ப்படுத்தல்களை அவர்கள் மேற்கொண்டிருக்கக் கூடும். 

செயற்பாடுகள் தாமதமடைய பிரச்சினைகள் வேறு விதமாக மாறத் தொடங்கின. ஏற்கனவே இயங்கி வருகின்ற மகப்பேற்றுப் பிரிவின் கட்டில்களே உக்கிச் சிதைவடைந்த கட்டத்துக்கு வந்திருந்தன. அத்துடன். கண் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவு போன்றவற்றுக்கும் நிபுணர்கள் இல்லாமல் அதுவும் இயங்கா நிலைக்குள்ளாகி, நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர்.

இந்த நிலையில் நோயாளர் நலன்புரிச் சங்கம் தவிர்க்க முடியாமல் நோயாளரின் நிலை நின்று செயற்பட வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டது. 

ஆகவே இவற்றை இயங்க வைப்பதற்கான அழுத்தங்களை – ஊக்கத்தை அளிக்க வேண்டும் என நோயாளர் நலன்புரிச் சங்கம் பல்வேறு தரப்புகளோடும் பேசி தொடர்ந்தும் முயற்சிகளை எடுக்கத் தொடங்கியது.

அதேவேளை இதற்கான அழுத்தப் போராட்டமொன்றை 29.98.2025 வெள்ளிக்கிழமை காலை நடத்துவதற்குத் தீர்மானித்து, அதற்கான ஊடகவியலாளர் சந்திப்பை 22.08.2025 இல் நடத்தியது. இந்தச் செய்தி அன்று இணையத் தளங்களிலும் மறுநாள் பத்திரிகைகளிலும்  வெளியாகியிருந்தது. 

அத்துடன், இந்தப் போராட்டத்துக்கு மக்களின், மாவட்ட பொது அமைப்புகளின் ஒத்துழைப்பைக் கோரும் பிரசுரமொன்றையும் அச்சிட்டு விநியோகித்திருந்தது. திட்டமிட்டபடி அழுத்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. 

இதேவேளை மறுபக்கத்தில் இந்தப் பிரிவை இயங்க வைப்பதற்கான சிறப்புக் கூட்டமொன்றை 25.08.2025 பி.ப 5.00 மணிக்கு வடமாகாண ஆளுநர் ஏற்பாடு செய்திருந்தார். மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறைத் தலைவர்,  யாழ் போதானா மருத்துவமனைப் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், குறித்த பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர் அணி,  கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனைப் பணிப்பாளர், கிளிநொச்சிப் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் போன்ற பல்வேறு தரப்பினருடன் நடத்துவதற்கு இந்த ஏற்பாட்டை அவர் செய்திருந்தார். 

இந்த நிலையில்தான் (இந்தத் தகவல்களை எல்லாம் எப்படியோ அறிந்து கொண்ட) சிறிதரன், திடீரென விழித்துக் கொண்டவராக மாவட்டப் பொதுமருத்துவமனைக்குச் சென்று (25.08.2025) குறித்த பிரிவைப் பார்வையிட்டு, இயங்க வைப்பது பற்றிப் பேசுவதாகப் படங் காட்டியிருக்கிறார். 

அதாவது தானே இந்த பெண் நோயியல் சிறப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கிறேன். தன்னுடைய முயற்சியின் விளைவாகத்தான் இனிமேற் காரியங்கள் எல்லாம் நடக்கப்போகின்றன என்ற விதமாக.

இது தொடர்பாக சிறிதரனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள்… சிறிதரனே முதன்முதலாக மின்சாரத்தைக் கண்டு பிடித்தவர், சிறிதரனே அவரே இந்தப் பூமியில் அதியற்புதமான விடயங்களை எல்லாம் செய்து கொண்டிருப்பவர் என்ற றேஞ்சில் உள்ளது. 

இது எவ்வளவு சிரிப்புகிடமானது? 

எத்தனை பெரிய ஏமாற்று? 

என்னமாதிரியான கோமாளித்தனம்? 

பெரிய அரசியல் மோசடி?

எத்தகைய சிறுமை?

இதொன்றும் சிறிதரனுக்குப் புதியது இல்லை. அவர் ஆசிரியராகக் கற்பித்தகாலத்திலிருந்தே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார் என்கின்றனர் அவருடன் கூடப் பணியாற்றியவர்கள். 

அதனால்தான் அவரால் ஒரு சிறந்த ஆசிரியராக எந்த மாணவராலும் எந்தப் பாடசாலையினாலும் நினைவு கூர முடியவில்லை எனவும் வாதிடுகின்றனர். 

அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பிறகு சிறிதரன் சொன்ன, சொல்லி வரும் பொய்களும் செய்த, செய்து வரும் ஏமாற்றுகள் அதிகம். 

இங்கே பிரச்சினை அதுவல்ல. ஏனென்றால் சிறீதரன் அப்படித்தான் (இவ்வாறான குணங்களுடன்தான்) இருக்கிறார். இருக்கப்போகிறார். அவருடைய ருசியும் வழியும் அதுவாகும். 

ஆனால் 2010 இலிருந்து இப்போது வரையான 15ஆண்டுகள், (நான்கு தடவை) பாராளுமன்றப் பிரதிநிதியாக இருப்பவர், தான் பிரதிநிதித்துவம் செய்து வருவதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்ன? 

கல்வித்துறையில் – 

மருத்துவத்துறையில் – 

விவசாய மேம்பாட்டுக்கு –

சூழல் விருத்திக்கும் சூழல் பாதுகாப்புக்கும் – 

கடற்றொழில் விருத்திக்கு –

பனை தென்னை வளத் தொழிலுக்கும் தொழிலாளர் நலனுக்கும் –

பெண் தலைமைத்துவக் குடும்பத்தினரின் வாழ்க்கை உயர்வுக்கு -மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்துக்கு – விடுதலைப் புலிகளின் போராளிகளாகச் செயற்பட்டு – இன்று சிரமமான வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கைக்கு – 

பிிரதேசங்களின் அபிவிருத்திக்கு –

இளைய தலைமுறையினரின் திறன் விருத்தி, தொழில் வாய்ப்புகளுக்கு –

பண்பாட்டு வளர்ச்சிக்கு –

வரலாற்றுத்துறைக்கு –

இலக்கிய மேம்பாட்டுக்கு – 

சமூக வளர்ச்சிக்கு –

இதில் எத்தகைய பங்களிப்புகளையும் வழங்கியதாகக் குறிப்பிட முடியாத நிலையில்தான் அவருடைய பிரதிநிதித்துவச் சிறப்பு உள்ளது. 

ஏற்கனவே பதவியில் இருந்த முருகேசு சந்திரகுமார், விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, அங்கயன் ராமநாதன், மனோ கணேசன், திகாம்பரம் போன்றோரின் நிதி ஒதுக்கீடு, செயற்திட்டங்களை தன்னுடைய வேலையாகவும் முயற்சியின் விளைவாகவும் கிடைத்ததாகவோ நடைபெற்றதாகவோ காட்டுவதே அவருடைய தந்திரோபாயமாக இருந்தது.

மற்றும்படி சுயமாகச் சிந்தித்து, சரியாக ஒரு திட்டத்தை இனங்கண்டு, அதைச் செயலாக்கமாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்போடு சிறிதரனோ அவருடைய அணியினரோ முயற்சித்ததே இல்லை. 

அவர்களுடைய அரசியல் முதலீடுகளும் செயற்பாடுகளும் வாய்ப்பேச்சிலும் முகநூல் வம்பளப்பிலுமே கழிந்தது. 

சிறிதரனின் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேச சபைகளினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள்தான் குறித்துச் சொல்லக் கூடியன. அவற்றில் பல இயங்கா நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றில் ஒன்று, ஆனையிறவு சந்தை வளாத்தில் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதிகள். மற்றது, பூநகரி வாடியடியில் கட்டி இடிக்கப்பட்ட சந்தை. அடுத்தது, கரடிப்போக்குச் சந்தியில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் போராளிகளுக்கான உதவி என்ற பேரில் கட்டி இடிக்கப்பட்ட கடைகள். இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.  

ஆனால், எங்காவது, எவராவது ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசினால் அங்கே ஓடோடிப்போய் தானே அதைப் பார்த்துச் சீர்ப்படுத்துகின்றவராக நிற்கிறார்; தோற்றம் காட்ட முற்படுகிறார். (இதற்காக சிலர் கையாட்களாக இருக்கிறார்கள் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் காட்டலாம். அப்படியானவர்கள்தான் சிறிதரன் போன்றவர்களைக் காப்பாற்றுவதற்கும் தொடர்ந்து தீங்குகள் நடப்பதற்கும் காரணமானவர்கள். இதில் ஆசிரியராக இருப்பர் தொடக்கம் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் உண்டு). 

இது ஏன்?

பதிலாக தானாகவே ஒன்றைக் கண்டு பிடிக்கவோ, ஒன்றைப் புதிதாகத் திட்டமிடவோ, ஒரு விடயத்தைச் செய்து முடிக்கவோ அவராலும் அவருடைய ஆதரவாளர்களாலும் முடியாதிருப்பது ஏன்?

கிளிநொச்சி மாவட்டத்தில் அதி கூடிய காலம் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துக் கொண்டிருப்பவர் சிறிதரன். இந்தப் பதினைந்து ஆண்டு காலப்பகுதியில் எவ்வளவு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி – உருவாக்கி வெற்றியடையச் செய்திருக்க முடியும்!

குறைந்த பட்சமாக இரண்டு படை முகாம்களையாவது விலக்குவதற்குப் போராடியிருக்கலாம். 

அல்லது உண்மையைப் பேசி, சமூகங்களின் நல்லிணக்கத்தைப் பேணி, மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வைக் காண முயற்சித்திருக்கலாம். 

தான் படித்த, படிப்பித்த, வாழ்ந்த கிளிநொச்சி மாவட்டம் போரினால் முற்றாகவே அழிந்தது. அதை மீளக் கட்டியெழுப்பவும் அங்கே கல்வியை மேம்படுத்தவும் உழைத்திருக்கலாம். 

அப்படியெல்லாம் சிறிதரன் செயற்படவும் இல்லை. முயற்சிக்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லாவற்றையும் குழப்பிப் பாழ்படுத்தினார். அமைப்புகளையும் மக்களையும் தன்னுடைய அரசியலுக்காகப் பிளவுபடுத்தினார். எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், வர்த்தகர்கள் தொடக்கம் கோயில்களின் நிர்வாகம், கூட்டுறவு அமைப்புகள், விவசாய அமைப்புகள் எனச் சகலவற்றையும் பிளவுபட வைத்திருக்கிறார்.

கிளிநொச்சிக்கு வெளியே முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற அயல் மாவட்டங்களில் இந்த நோயில்லை. அங்கும் மாற்றுக் கருத்தாளர்கள், மாற்று அரசியற் சிந்தனையுடையோர், மறு அரசியற் தரப்பினர், அவற்றின் ஆதரவாளர்கள், மாற்று அணிகள் எல்லாம் உண்டு. ஆனால், அங்கே ஒரு ஜனநாயக அடிப்படை பேணப்படுவதுண்டு. விழுமியங்களுக்கான மதிப்புண்டு. 

கிளிநொச்சியில் அதெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டாயிற்று. 

இங்கே பிரதேச சபைகளின் நூலகங்களில் கூட சாதி பார்ப்பதைப்போல வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. இதற்கு ஒத்து ஊதும் நிர்வாக அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது மிகக் கவலைக்குரியது. 

இதைக்குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களை அவதூறு செய்து அடக்குவதற்கு முற்பட்டார் சிறிதரன். இதற்காக அவர் தன்னோடு ஒரு மூன்றாந்தரமான அணியொன்றை உருவாக்கியும் வைத்திருந்தார்; வைத்திருக்கிறார்.

இதெல்லாம் அவர் மீதான குற்றச்சாட்டுகளோ விமர்சனங்களோ மட்டுமல்ல, அவரைக் குறித்த உண்மையான விவரங்களாகும்.  

இப்படியானவரை எப்படி தமிழரசுக் கட்சி தன்னுடைய அரசியற் பயணத்தில் அனுமதித்திருக்கிறது? 

சிறிதரனை மக்கள் ஆதரிப்பதால், தமிழரசுக் கட்சி அதற்கு – அந்த மக்கள் தெரிவுக்கு மதிப்பளித்து அனுமதித்துள்ளது – அதனால் அவரைக் கட்சியில் வைத்திருக்கிறது என்று சுமந்திரனோ அல்லது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வேறு எவருமோ சொல்லலாம். 

கோட்டபாய ராஜபக்ஸவையும் மக்கள்தான் ஆதரித்தனர். மேர்வின் சில்வாவையும் விமல் வீரவன்ஸவையும்தான் ஆதரித்தனர். வாக்களித்தனர். அதற்காக அவர்கள் எல்லாம் சரியாகச் செயற்படும் ஆட்களா? மெய்யாகவே நாட்டுக்கும் சமூகத்துக்கும் நன்மையைத் தரக்கூடிய நபர்களா?

சிறிதரனை முதன்மைப்படுத்தி மேடைகளில் ஏற்றிப் போற்றும் எழுத்தாளர்கள் இதைக்குறித்தெல்லாம் என்ன விளக்கம் சொல்ல முடியும்?  

இவர்கள் தாம் கொண்டுள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, சிறிதரனை நெறிப்படுத்தலாம். பயனுள்ள பணிகளைச் செய்விக்கலாம். அந்தப் பொறுப்பு அவர்களுக்குண்டு. அல்லது அவரிடம் இவற்றைக் குறித்துக் கேள்விகளை எழுப்ப வேண்டும்.

எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் சமூகத்தின் பிரதிநிதிகளாவர். ஒரு வகையில் சமூகத்தை வழிப்படுத்துகின்றவர்கள், பண்படுத்துகின்றவர்கள். சமூக விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டோர். என்பதால் இவர்களுக்கெல்லாம் இதில் பொறுப்புண்டு.   

சிறிதரனை ஆதரிக்கும் அமைப்புகள், உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள் எல்லோரும் இதைக் குறித்தெல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள்?

ஆனால் ஒன்று, இவர்கள் எல்லோரும் இந்தத் தீமைக்கு – தவறுக்கு – ஏமாற்றுக்குப் பொறுப்பாளிகள்…

அப்படி இவர்கள் பொறுப்பெடுக்கத் தவறினால் இந்தத் தவறுகள் பெருகிச் செல்லும். ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டம் அனைத்து நிலைகளிலும் மிகப் பின்தங்கியே உள்ளது. தவறுகளின் விளைவே அதுவாகும். அரசியற் பழிவாங்கல்களும் தனக்கு வேண்டியவர்களுக்குச் சார்பான நடவடிக்கைகளும் சமூகத்தையும் மாவட்டத்தையும் பின்தள்ளியுள்ளது. வேண்டுமானால்  பழிவாங்கப்பட்டோரின் பட்டியலை சமர்ப்பிக்க முடியும். 

புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, மாவீரர்களின் தியாகத்தைச் சொல்லி அரசியல் லாபத்தை அறுவடை செய்கின்ற சிறிதரன் தரப்பு, மாவீர்கள் குடும்பங்களுக்கு ஆற்றிய பங்களிப்புகள் என்ன? புலிகளின் செயற்பாடுகளில், அவர்கள் உருவாக்கிய விழுமியங்களில் எவற்றைப் பின்பற்றுகின்றனர்? குறைந்த பட்சம் நான்கு இடங்களில் மரங்களையாவது உருப்படியாக நட்டிருக்கின்றனரா? பதிலாக மணலை அகழ்ந்தெடுப்பதும் மரங்களை – காடுகளை அழிப்பதும் சூழலைக் கெடுப்பதுமே நிகழ்த்தப்படுகின்றன. 

போதாக்குறைக்கு கிளிநொச்சியில் உள்ள சனத்தொகை ஒரு லட்சத்து எண்பது ஆயிரம். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மதுச்சாலைகளின் எண்ணிக்கை 20 க்கு மேல். 

இதைக்குறித்து ஒரு  சொல் சிறிதரன் இதுவரையில் வெளியே பேசியதில்லை. 

பல பொதுக்காணிகள் (அரச காணிகள்) வசதி, அதிகாரம் படைத்தோரால் அபகரிக்கப்பட்டுள்ளன. 

இவற்றைப் பற்றி மக்கள் பிரதிநிதி, மண் பற்றாளன் வாய் திறப்பதே இல்லை. 

இவையெல்லாம் சிறிதரனின் கோட்டைக்குள்தான் நடக்கின்றன. ஆனால், சிங்கம் கண்மூடித் தூங்குகிறது.

(தொடரும்)

https://arangamnews.com/?p=12284

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சரியான கட்டுரை. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள் தான் என்றாலும் கருணாகரன் எழுதியிருக்கிறார். இனி கருணாகரனுக்கு இருக்குது சிறி அடிப்பொடிகளின் பூசை😂!

ஊடக வெளிச்சம் பாயும் விடயங்களில், கடைசியாக உள் நுழைந்து இலவச விளம்பரம் தேடும் சிறிதரன் பா.உ, முன்னர் ஒரு தடவையும் மொக்கேனப் பட்டிருக்கிறார். கிளிநொச்சியில் ஒரு ஊழல் பிரமுகரால் மிரட்டப் பட்ட பெண் வைத்தியருக்கு ஆதரவாகப் பேசி தொலைபேசி எடுத்த சிறிதரன் பா.உ வின் உரையாடல் வெளியே யாராலோ ஊடகங்களுக்குக் கசிந்தது. இதனால், கோபம் கொண்ட சிறிதரன் பா.உ, தன் பாராளுமன்ற உரை நேரத்தை பெண் மருத்துவர் மீது விசாரணை வேண்டுமென்று கேட்டு உரையாற்றியதன் மூலம், தனக்கு முக்கியமானது எதுவென அப்பவே வெளிக்காட்டியிருந்தார்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.