"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 63
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 63 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை
புத்தர், ஞானமடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் இரண்டு நாகர் அரசர்களுக்கு இடையே இரத்தின அரியணை [சிம்மாசனம்] தொடர்பாக போர் ஏற்படப் போவதை உணர்ந்தார். உடனே, புத்தர் இலங்கைக்கு பறந்து சென்று, நாகர்களை பயமுறுத்தி, தனக்காக அந்த அரியணையைப் பெற்றார். இங்கு, உலகைத்தை துறந்த புத்தரின் கொள்கையை, மகாவம்சம் வெளிப்படையாக மீறுகிறது. புத்தர், தனது 29 வயதில், தனது சொந்த அரியணையைத் துறந்து, தனது இளம் மனைவி, மற்றும் பிறந்த குழந்தை ராகுலன் [ராகுலா / Rahula] மற்றும் அரச அரண்மனை வாழ்க்கையின் சுகம் போன்றவற்றை விட்டு வெளியேறினார். புத்தர் பிம்பிசார மன்னரின் [King Bimbisara] தலைநகரான ராஜகஹாவுக்கு [ராஜகஹா, ராஜ்கிர் என்றும் அழைக்கப்படுகிறது, இது மகத இராச்சியத்தின் தலைநகராக இருந்த இந்தியாவின் ஒரு பண்டைய நகரமாகும். / Rajagaha, also known as Rajgir, was an ancient city in India that was a capital of the Magadha kingdom.] கால்நடையாகச் சென்றார். அங்கு பிம்பிசார புத்தருக்கு தனது அரசை வழங்கினார். புத்தர் இந்த வாய்ப்பை நிராகரித்தார். எனவே புத்தர் இரண்டு முறை அரியணையைத் துறந்தார், புத்தர் ஞானம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிம்மாசனத்தை ஏற்றுக்கொண்டார் என்பது அபத்தமானது. 1- 58, 59 & 60 பார்க்கவும். போர்க் களத்துக்கு மேலாக வானவெளியில் சஞ்சரித்த வண்ணம் மன இருளை அகற்றும் மகானாகிய குருநாதர், நாகர்கள் மீது அடர்ந்த இருள் கவியச் செய்தார். பீதியினால் துயரமுற்றவர்களைத் தேற்றி மீண்டும் அங்கு ஒளி ஏற்படச் செய்தார். அருள் ஞானியைக் கண்டதும் அவர்கள் களிப்புடன் அவர்தம் பாதத்தைப் போற்றினர். பின்னர் அச்சந் தீர்க்கும் அண்ணல், அவர்களுக்குச் சமாதான நெறியைப் போதித்தார். போரிட்ட இரண்டு நாகர்களும் மகிழ்வுடன் ஒன்று பட்டு தங்கள் சண்டைக்குக் காரணமாக இருந்த சிம்மாசனத்தை புத்தருக்கே அளித்தனர். புத்தர் கீழே இறங்கி அங்கிருந்த அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாம தேரர், புத்தரின் புனிதம் அல்லது தெய்வீக ஒளியைக் குறித்துக் காட்டிட, வரையப்படும் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டப் படத்தை உண்மையில் களங்கப்படுத்துகிறார். அது மட்டும் அல்ல, இந்த நிகழ்வும், "நாகதீப வருகை இதோ முடிவடைகிறது" என்று முடிவுக்கு வருகிறது. அதே நிகழ்வு தீபவம்சத்தில், "இங்கு நாகர்களை வெல்வது முடிவடைகிறது.". அதாவது தீபவம்சம் வெளிப்படையாக நாகர்களை அடக்கி வெல்வதை மறைக்காமல் கூறும் அதே நேரத்தில், மகாவம்சம், அதே நிகழ்வை, [புத்தரின்] நாக தீப வருகை முடிவுக்கு வருகிறது என்று முடிகிறது. மகாநாம தேரர், இராஜதந்திர வசனங்களால் குற்றச் செயல்களை மறைப்பதை எவரும் உணரமுடியும்? அது தான் நாம் இன்றும் இலங்கை அரசிடம் காண்பது?
நாக மன்னன் மணியக்கிகன் [Maniakkhika] புத்தரை கல்யாணியில் [Kalyani / இலங்கை பௌத்த மரபின்படி, இலங்கையில் "கல்யாணி" என்பது களனிப் பகுதியைக் குறிக்கிறது] உள்ள தனது இராச்சியத்திற்குச் வரும்படி கேட்ட அழைப்பை ஏற்று, புத்தர் தான் ஞானமடைந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கைக்கு மூன்றாம் தடவையாக, நாகத்தின் சக்தியின் இருப்பிடமான கல்யாணிக்குச் ஐந்நூறு தேரர்களுடன் பறந்து சென்றார். அங்கே இரத்தினங்கள் பதித்த மண்டபத்தின் கீழே பிக்குகளுடன் அமர்ந்தார். பின்னர், இரக்கமே உருவான பகவான், அங்கு உபதேசம் செய்த பின்பு எழுந்து அங்கிருந்து புறப்பட் டார் என்று மகாவம்சம் கூறுகிறது. இன்னும் ஒன்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது புத்தரின் மூன்றாவது வருகையும் போதனையும் ஆகும்.
அவ்வாறாயின், புத்தரின் மூன்றாம் வருகையின் பொழுது, புத்தருடன் ஐந்நூறு தேரர்கள் ஏற்கனவே வருகை தந்து, கூடியிருந்த பெரும் கூட்டத்திற்கு சமய உரை நிகழ்த்தி, அனைவரையும் பௌத்த மதத்திற்கு மாற்றியபின், சுமார் இருநூற்று முப்பது வருடங்களின் பின்னர், இலங்கையில் புத்த மதத்தை போதித்து நிலை நாட்டிட, மகிந்த தேரரின் வருகையின் அவசியம் என்ன? ஒருவேளை தேரர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான சுற்றுலாப் பயணமாக இருக்கலாம்! மகிந்த தேரர் ஒரு கற்பனையில் கண்டுபிடித்த நபர் என்பதற்கு இந்த நம்பமுடியாத நிகழ்வும் ஒரு காரணமாகும். மகாவம்சத்தின் அத்தியாயம் 1 புத்தரின் மூன்று இலங்கை வருகைகளை உள்ளடக்கியது. புத்தரின் காற்றில் பறந்து வரும் மூன்று பயணங்கள் வெறுமனே கற்பனையான நிகழ்வுகளாகத் தான் இருக்க வேண்டும். மேலும் இந்த அத்தியாயம் இலங்கை வரலாறுகளுடன் எந்த தொடர்பும் இல்லை. புத்தர், மனிதனாக இருந்ததால், 500 தேரர்களுடன் சேர்ந்து காற்றில் பறக்கும் திறன் இருந்திருக்க முடியுமா? 'பறவையை கண்டான்.. விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான்' இது தான் நான் அறிந்தது.
எனக்கு இன்னும் புரியாதது என்னவென்றால், புத்தர் இலங்கைக்கு வருகை தந்தபோது லட்சக்கணக்கான ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டால், அவர்களுக்கு என்ன ஆனது? மீண்டும் அவர்களை மதமாற்றம் செய்ய மகிந்த தேரர் அனுப்பப்பட்டது ஏன் ? அல்லது புத்தர் சரியாக போதிக்கவில்லையா?
கேவத்தா (கேவாத்தா என்றும் உச்சரிக்கப்படுகிறது / Kevatta) புத்தரைப் பின்பற்றிய நாலந்தாவைச் சேர்ந்த ஒரு வீட்டுக்காரராக பௌத்த நூல்களில் கூறப்படுகிறது. இவர் புத்தரை அணுகி, மக்களில் நம்பிக்கையைத் தூண்டுவதற்காக அற்புதங்களைச் செய்ய தனது துறவிகளை ஊக்குவிக்குமாறு பரிந்துரைத்தார். இருப்பினும், புத்தர் இந்த யோசனையை நிராகரித்தார், அமானுஷ்ய சக்திகளின் அற்புதக் காட்சிகள் ஞானத்தின் உயர்ந்த வடிவம் அல்ல என்று விளக்கினார்.
அதற்கு பதிலாக, புத்தர் மிகப்பெரிய அதிசயம் "அறிவுரையின் அதிசயம்" என்று கற்பித்தார் - ஞானம் மற்றும் புரிதல் மூலம் மற்றவர்களை அறிவொளியை நோக்கி கற்பிப்பதற்கான திறன். அது என்றார்.
அதாவது,
புத்தர் பதிலளித்த போது, அங்கே மூன்று வகையான அமானுஷ்ய நிலைகள் இருப்பதாக கீழே உள்ளவற்றைக் கூறினார்:
1. பல மனிதர்களாகத் தோன்றுவது, கண்ணுக்குத் தெரியாமால் தன் உருவத்தை மறைப்பது, சுவர்களைக் கடந்து செல்வது, காற்றில் பறப்பது, தண்ணீரில் நடப்பது போன்ற அமானுஷ்ய சக்தியின் அற்புதம். இவை அனைத்தும் சாதாரண மக்களால் செய்ய முடியாத உடல் ரீதியான செயல்கள்.
2. மற்றவர்களின் மனதைப் படிக்கும் அதீத சக்தி.
3. மனிதர்களின் மனவளர்ச்சிக்கு ஏற்ப, அவர்களின் நலனுக்காக, அவர்களுக்கு ஏற்ற தகுந்த முறைகளைப் பயன்படுத்தி வழிகாட்டும் அமானுஷ்ய சக்தி.
மக்களைக் கவர்வதற்காக முதல் இரண்டு அமானுஷ்ய சக்திகளை தங்கள் சொந்த நலனுக்காக வெளிப்படுத்தும் ஒரு துறவி, ஒரு ஷாமன் [ஒரு ஷாமன் என்பவர் அமானுஷ்ய சக்திகளை பாவித்து ஆன்மீக குணப்படுத்துபவர் மற்றும் அதை பயிற்சி செய்பவர் / A shaman is a spiritual healer and practitioner] அல்லது ஒரு மந்திரவாதியின் செயல்பாட்டிலிருந்து வேறுபட்டவர் அல்ல என்று அவர் கற்பித்தார். இவ்வாறான உலக அதிசயங்களைச் செய்யும் துறவி, அவமானம் மற்றும் அருவருப்புக்கு ஆளாவதாக புத்தர் கூறினார். ஏனென்றால், இத்தகைய செயல்கள் மதம் மாறுபவர்களையும் பின்பற்றுபவர்களையும் ஈர்க்கலாம் மற்றும் வெற்றி பெறலாம், ஆனால் அவை அவர்களின் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவாது. அதனால்த் தான், இதுபோன்ற அற்புதங்களின் ஆபத்தை கண்டு, நான் அவற்றை வெறுக்கிறேன், நிராகரிக்கிறேன், ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
இப்போது சொல்லுங்கள், புத்தர் மழை, இருள் மற்றும் பலவற்றால் அவர்களின் இதயங்களை பயமுறுத்தி, தீவின் பூர்வீக குடிமகனை விரட்டியடிப்பாரா? மேலும் அவர் பல சகோதர, தேரர்களுடன் வான்வழியாக இலங்கைக்குச் பறந்து செல்வாரா? நீங்களே முடிவெடுங்கள்.
Part: 63 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37
The Buddha, after five years of his enlightenment, perceived the potential war about to occur between two Naga kings in Lanka over a gem set throne. The Buddha, flew to Lanka, and terrorized the Nagas, and got the throne for himself. The Mahavamsa violates the principle of the Buddha who renounced the world. The Buddha, when he was 29 years of age, renounced his own throne and walked away leaving his young wife, and the just born infant son Rahula, the comfort of the Royal palace life etc. The Buddha went on foot to Rajagaha, the capital of King Bimbisara where Bimbisara offered his kingdom to the Buddha. The Buddha declined the offer. The Buddha therefore renounced throne twice and it sounds absurd that the Buddha accepted a throne again, five years after attaining the enlightenment, Please check, 1- 58, 59 & 60 [58 Hovering there in mid-air above the battlefield the Master, who drives away (spiritual) darkness, called forth dread darkness over the nagas. Then comforting those who were distressed 59 by terror he once again spread light abroad. When they saw the Blessed One they joyfully did reverence to the Master's feet. Then preached the Vanquisher to them the 60 doctrine that begets concord, and both [nagas] gladly gave up the throne to the Sage]. Mahanama, the author of the Mahavamsa, is really tarnishing the halo image of the Buddha hollow. This event is described as; “Here ends the Visit to Nagadipa”. The same event is described in the Dipavamsa as; here ends the conquering of the Nagas. Mahanama is camouflaging the criminal actions with diplomatic verses.
The Naga king Maniakkhika invited the Buddha to visit his kingdom at Kalyani, and the Buddha visited Kalyani, the seat of Naga’s power, eight years after his enlightenment. The Buddha again flew to Lanka along with five hundred brotherhoods, Theras. If so, What is the need for the visit by Mahinda Thera after about two hundred and thirty years as five hundred Theras have already visited, along with the Buddha and deliver religious address to an assembled large group of people to convert all of them to buddhism? Perhaps it was a pleasure trips for the Theras! This is also an indication that Mahinda Thera, is an invented personality. The Chapter 1 of the Mahavamsa covers the three visits of the Buddha to Lanka. The Buddha’s three flying visits are simply imagined events, and have no historical relevance to Ceylon. As the Buddha, being a human, couldn’t have had the ability to fly at all along with 500 Theras?
What I still don't understand is, if millions of souls were converted to Buddhism when the Buddha visit to Srilanka, what happened to them? Why was Mahinda sent to convert them again ? or did the Buddha not teach correctly?
When Buddha replied, "Kevatta, He said that there were three kinds of supernormal levels:
1. The marvel of supernormal power to appear as many persons, to pass through walls, to fly through the air, walk on water. All these are physical actions the ordinary people cannot perform.
2. The supernormal power to read other people's minds.
3. The supernormal power to be able to guide people according to their mental development, for their own good, using suitable methods that fit these people.
He taught that a monk who displays the first two supernormal powers for their own sake in order to impress people, is no different from the performance of a shaman or a magician. The Buddha said that a monk who practices such worldly miracles is a source of shame, humiliation and disgust. This is because such actions may impress and win converts and followers, but they do not help them put an end to their suffering. He further said That is why, seeing the danger of such miracles, I dislike, reject and despise them. Now tell me will Buddha struck terror to their hearts by rain, darkness and so forth & chased away the original inhabitant of the island? and further will he fly through air with many number of brotherhoods, Theras to Lanka?
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 64 தொடரும் / Will follow
துளி/DROP: 1938 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 63]
https://www.facebook.com/groups/978753388866632/posts/32800741409574416/?
By
kandiah Thillaivinayagalingam ·