Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-226.jpg?resize=750%2C375&ssl

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர உயிரிழந்தார்.

வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தவிசாளரிடம் கையொப்பம் பெற வந்ததாகக் கூறி, பிரதேச சபை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது.

பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர் உடனடியாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

https://athavannews.com/2025/1450861

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

570353767_24649266321363012_232896743076

தவிசாளர் கதிரையில் சுடப்பட்டு இறந்தார் மிதிகம லசா..!
மாத்தறை, வெலிகம பிரதேசசபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் இறந்துள்ளார். பிரதேச சபை தவிசாளர் அறைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டதாக முதற்கட்ட தகவல்.
லசந்த விக்கிரமசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர். அவரது மரணம் தொடர்பில் பாராளுமன்றில் பேசிய சஜித் பிரேமதாச, பொதுப்பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்கின்றனர்.
🔴 வெலிகம பிரதேச சபை சார்ந்த சில பின்னணிகள்.
* வெலிகம பிரதேச சபையின் கன்னி அமர்வு 27.06.2025 அன்று கூடியபோது சபை வளாகத்தில் உறுப்பினர்கள் மோதல் இடம்பெற்றது. - அன்று தவிசாளர் தெரிவுக்காக சென்ற இரு NPP உறுப்பினர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.
* வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டின்மீது 16.07.2025 அன்று துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டது.
🔴 யார் இந்த மிதிகம லசா (Midigama Lasa)?
* தெற்கின் பாதாள உலகில் அறியப்பட்ட 38 வயதான ஒரு நபர்.
* ஹரக் கட்டா எனப்படும் பாதாளகுழு தலைவனின் நெருக்கத்துக்குரிய ஒருவர்.
* 2020 செப்டெம்பரில் கொலைச்சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்ட ஒருவர்.
* 2025 இல் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வழக்கறிஞர் தாரக நாணயக்காரவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் உள்ளது.
🔴 வெலிகம பற்றிய அண்மைய செய்திகள்
* சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் (22.09), ரஸ்ய நபரின் வழிகாட்டலில் இயங்கிய இடத்தில் மீட்கப்பட்ட மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்ட பிரதேசமே வெலிகம. அங்கே மோல்டா நாட்டவரும் கைதாகியிருந்தார்.
* 24.09 அன்று, துப்பாக்கிகள், ரவைகள், போதைப்பொருட்களோடு பெண் உட்பட 2 பேர் வெலிகமவில் கைதாகினர்.
* முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வெலிகம பகுதியில் ஹோட்டல் அருகில் 2023ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
🔻
ஆக மொத்தத்தில், மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அரசியல் அதிகார கதிரையில் இருந்த ஒரு குற்றப்பின்னணியான நபர் இன்று சுடப்பட்டு இறந்துள்ளார்.
இத்தகைய பின்னணியுள்ள ஒருவரை தவிசாளராக மட்டுமல்ல வேட்பாளராக நியமிக்கவேண்டிய தேவை ஏன் ஐ. ம. சக்திக்கு ஏற்பட்டது?
நீதிமன்ற வழக்கும், பிடியாணையும் விதிக்கப்பட்டிருந்த போதும் அவரது பதவியை பறிக்காகததும், உறுப்பினர் பதவியை வறிதாக்காமல் விட்டதும் ஐ. ம. சக்தியின் பெரும் தவறு.
பொதுப்பாதுகாப்பு குறித்து பாராளுமன்றில் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சித்தலைவர், இவற்றுக்கும் பொறுப்பேற்று அதே சபையில் விளக்கமளிக்க வேண்டியது கட்டாயமானது.

Janakan Sivagnanam 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணொளி: 👉 https://www.facebook.com/reel/1573701207336196 👈

சுட்டுக் கொல்லப் பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர்.... மிதிகம லசா.

  • கருத்துக்கள உறவுகள்

“மிதிகம லசா”வுக்கும் “ஹரக் கட்டா”வுக்கும் இடையில் தொடர்பு?

22 Oct, 2025 | 02:52 PM

image

படுகொலை செய்யப்பட்ட “மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவருக்கும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்பவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“மிதிகம லசா”  இன்று புதன்கிழமை (22) காலை 10.30 மணியளவில் வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், அலுவலக அறைக்குள் நுழைந்து கதிரையில் அமர்ந்திருந்த “மிதிகம லசா” மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு மோட்டார் சைக்கிளில்  தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த “மிதிகம லசா” சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கருப்பு நிற முகமூடிகளை அணிந்திருந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அத்துடன், “மிதிகம லசா” பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ள விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் பாதாள உலக கும்பலின் மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

“மிதிகம லசா”வுக்கும் “ஹரக் கட்டா”வுக்கும் இடையில் தொடர்பு? | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பாதாள உலக ஆட்களை முன்னைநாள் பிலிபைன்ஸ் அதிபர் பாணியில் ஜேவிபி என்கவுண்டர் பண்ணுகிறது.

ஒரு கட்டத்துக்கு மேல் இது அரசியல் எதிரிகள் மீதும், விமர்சனம் செய்வோர் மீதும் திரும்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பாதாளக் குழு குற்றவாளி - ஆனந்த விஜேபால

22 Oct, 2025 | 04:49 PM

image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

வெலிகம பிரதேச சபையின் தலைவர்  லசந்த விக்கிரமசேகர பாதாளக்  குழு  குற்றவாளி  பல சமூக விரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளார். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின்  பிரதிபலனாகவே இது காணப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22)  நடைபெற்ற அமர்வின்போது  வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பல விடயங்களை குறிப்பிட்டார்கள்.இந்த கொலை மற்றும் இதற்கு முன்னரான படுகொலைகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.

இந்த நாட்டில் பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளார்கள். அவர்கள் பல குழுக்களாக பிரிந்துள்ளார்கள்.அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. அவர்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இவ்விடயம் தொடர்பில் நான் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி சபைக்கு விடயங்களை வெளிப்படுத்தினேன்.

வெலிகம பிரதேச சபை உறுப்பினரான  லசந்த விக்கிரமசேகர என்ற பெயருடைன இவர்  வெலிகம லசந்த என்று அழைக்கப்படுவார்.இவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், அவர் பாதாளக்குழு குற்றவாளி.இவருக்கு எதிராக 6 வழக்குகள் உள்ளன. சிறைதண்டனை அனுபவித்துள்ளார்.தற்போதும் ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை ஊடாகவே இருந்துள்ளார்.இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டுள்ளார். இந்த நபர் தொடர்பில் பல விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளன. அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாதாளக் குழுக்களின் உறுப்பினர்கள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பாதாள குழுக்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இந்த சம்பவமும் அவ்வாறானதே, ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறானவர்களை தமது கட்சிக்கு எவ்வாறு தெரிவு செய்தது என்பதை அறிய முடியவில்லை. பாதாள குழுக்கள் மற்றும் ஏனையோர் இவ்வாறு மோதிக் கொண்டு, இறப்பதை ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

பாதாள குழுக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பின்னர் மக்கள் பிரதிநிதியான ஒருவர் பாதாளக் குழுக்களின் முரண்பாடுகளினால் கொலை செய்யப்பட்டவுடன் அதனை மக்கள் பிரதிநிதி கொலை என்று எவ்வாறு குறிப்பிடுவது.  வெலிகம பிரதேச சபையின் தலைவர் பாதாள குழுக்களுடனும், சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புப்பட்டுள்ளார். இவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/228395

  • கருத்துக்கள உறவுகள்

தவிசாளர் கொலையும் தேசிய பாதுகாப்பும்

--------- -------------- -----

*வடக்கு கிழக்கில் இடதுகை, தெற்கில் வலது கை.

--- --- --

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, அலுவலகத்தில் இருக்கும் போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, சஜித் பிரேமதாச, இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இலங்கைத் தேசியப் பாதுகாப்பு இதுதானா? எனவும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அவருடைய கேள்வி அமைந்துள்ளது.

ஆனால் ---

முப்பது வருட போரின் போதும், அதன் பின்னரான 16 வருடங்களிலும் வடக்கு கிழக்கில் கொலைகள் - குழு மோதல்கள் தூண்டிவிடப்பட்டிருக்கின்றன.

அங்கு அளவுக்கு அதிகமான இரணுவ முகாம்களும் பல சோதனைச் சாவடிகளும் உள்ளன.

அப்படியிருந்தும் கொலை - கொள்ளை - மண் அகழ்வு - போதைப்பொருள் வியாபாரம“ போன்ற பல குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன.

இக் குற்றச் செயல்கள் பற்றியெல்லாம் சஜித் பிரேமதாசா மாத்திரமல்ல, எந்தவொரு சிங்கள தலைவர்களும் கேள்வி எழுப்புவதில்லை.

ஏனெனில், “தமிழ்த்தேசியம்” என்ற சிந்தனை - ”அரசியல் விடுதலை உணர்வுகள்” எல்லாமே இளைஞர்கள் - பெண்கள் மத்தியில் இருந்து மங்கிப் போகட்டும் என்ற போக்கு, கொழும்பு நிர்வாக மையத்திடம் உண்டு.

ஆனால் ----

வடக்கு கிழக்கு வெளியே ஏதுவும் நடந்தால், அதற்கு தேசிய பாதுகாப்பு இல்லை என கேளவி எழுப்புவர். தேவை ஏற்பட்டால் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கும் முறைப்பாடுகள் போகும்.

ஆனால் வடக்கு கிழக்கு தமிழர்கள் சார்ந்த விவகாரம் என்றால், அது “பயங்கரவாத ஒழிப்பு” ”பிரிவினைவாதம்” என்ற கோணத்தில் தான் சிங்கள அரசியல் தலைவர்கள் அணுகுவர்...

13 ஆவது திருத்தச் சட்டம் கூட பிரிவினைவாதம் என்ற வரையறைக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளது.

ஆனால் ---

இயற்கை நீதி என்றோ ஒரு நாள் பதில் சொல்லும். அதற்குக் காலம் எடுக்கும்...

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/share/p/1BaKyC8aJ2/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

பாதாள உலக ஆட்களை முன்னைநாள் பிலிபைன்ஸ் அதிபர் பாணியில் ஜேவிபி என்கவுண்டர் பண்ணுகிறது.

ஒரு கட்டத்துக்கு மேல் இது அரசியல் எதிரிகள் மீதும், விமர்சனம் செய்வோர் மீதும் திரும்பும்.

இந்த சூட்டு சம்பவங்கள் பாதாள உலக தலைமைகளில் வந்த வெற்றிடத்தால் நடக்கிறது. மகிந்த கோத்தா டீம் பாதாள உலகை கண்டு கொள்ளாமலும், தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டும் இருந்தார்கள். ஜெவீபி சில பெரிய பாதாள உலக தலைகளை தூக்கினார்கள். மகிந்த தனது ரகசியங்களை பாதுகாக்க இன்னும் சிலரை போட்டார். பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். எஞ்சியவர்கள் தங்களுக்குள் அடிபடுகிறார்கள். களையெடுக்கப் பட வேண்டியவர்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

பாதாள உலக ஆட்களை முன்னைநாள் பிலிபைன்ஸ் அதிபர் பாணியில் ஜேவிபி என்கவுண்டர் பண்ணுகிறது.

ஒரு கட்டத்துக்கு மேல் இது அரசியல் எதிரிகள் மீதும், விமர்சனம் செய்வோர் மீதும் திரும்பும்.

நினைத்துப் பார்த்திருக்க முடியாத..... பல பாதாள உலக கோஷ்டிகளின் தலைவர்களையும், அவர்களின் அடியாட்களையும்... அனுர அரசு கைது செய்திருக்கும் நிலையில்...

விசாரணையின் பிடிகள் இறுக... அடுத்த கட்டமாக, இயக்கிய தம்மை இவர்கள் அடையாளம் காட்டி விடுவார்கள் என்ற முன் எச்சரிக்கையுடன் பழைய கொழுத்த அரசியல்வாதிகள் இக்கொலையை செய்திருக்கலாம் என்று ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை.

அனுர அரசு காலத்திலேயே.... நீதிமன்றத்திற்குள் குற்றவாளிக் கூண்டில் நின்ற கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்லப் பட்ட போது... நீதிமன்றத்துக்குளேயே பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் நிலையில்.... மீண்டும் ஒரு கொலையை வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து அதன் தலைவரை... அனுர அரசு சுட்டுக் கொன்று, எதிர்க் கட்சிகளுக்கு பிடி கொடுக்க நினைத்து இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

அனுர அரசு... இவரை கொல்ல வேண்டும் என்றால், வேறு எத்தனையோ வழிகள் இருக்க.... பிரதேச சபை அலுவலகத்தை தேர்ந்து எடுத்து இருக்க மாட்டார்கள் என்பதே எனது கணிப்பு.

தற்போது... இளைய தளபதி நாமலும் நாட்டில் இல்லை. அவர் இல்லாத நேரம் இந்தக் கொலை நடந்த படியால்.. சந்தேகம் தன் மேல் வராமல் பார்த்துக் கொண்டார் போலுள்ளது.

உங்களுக்கு, அனுர அரசு மேல் இருக்கும் கடுப்பில், "சந்துல... சிந்து பாடுகின்றீர்கள்" போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நினைத்துப் பார்த்திருக்க முடியாத..... பல பாதாள உலக கோஷ்டிகளின் தலைவர்களையும், அவர்களின் அடியாட்களையும்... அனுர அரசு கைது செய்திருக்கும் நிலையில்...

விசாரணையின் பிடிகள் இறுக... அடுத்த கட்டமாக, இயக்கிய தம்மை இவர்கள் அடையாளம் காட்டி விடுவார்கள் என்ற முன் எச்சரிக்கையுடன் பழைய கொழுத்த அரசியல்வாதிகள் இக்கொலையை செய்திருக்கலாம் என்று ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை.

அனுர அரசு காலத்திலேயே.... நீதிமன்றத்திற்குள் குற்றவாளிக் கூண்டில் நின்ற கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்லப் பட்ட போது... நீதிமன்றத்துக்குளேயே பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் நிலையில்.... மீண்டும் ஒரு கொலையை வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து அதன் தலைவரை... அனுர அரசு சுட்டுக் கொன்று, எதிர்க் கட்சிகளுக்கு பிடி கொடுக்க நினைத்து இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

அனுர அரசு... இவரை கொல்ல வேண்டும் என்றால், வேறு எத்தனையோ வழிகள் இருக்க.... பிரதேச சபை அலுவலகத்தை தேர்ந்து எடுத்து இருக்க மாட்டார்கள் என்பதே எனது கணிப்பு.

தற்போது... இளைய தளபதி நாமலும் நாட்டில் இல்லை. அவர் இல்லாத நேரம் இந்தக் கொலை நடந்த படியால்.. சந்தேகம் தன் மேல் வராமல் பார்த்துக் கொண்டார் போலுள்ளது.

உங்களுக்கு, அனுர அரசு மேல் இருக்கும் கடுப்பில், "சந்துல... சிந்து பாடுகின்றீர்கள்" போலுள்ளது. 😂

நீங்களும் தும்பளையானும் சொல்லும் கோணமும் நியாயமானதே.

ஆனால் எனது gut feeling - இந்த களை எடுப்பு அரசாலும் நடத்தபடுகிறது என்பதே.

பார்ப்போம், ஸ்டாலின், பொல்பொட், இடி அமீன், பிலிபைன்ஸ் அதிபர் பலரும் ஆரம்பத்தில் இப்படித்தான் களை எடுத்தார்கள். மக்களும் ஆதரித்தனர். அடுத்து பயிர்களையும் மேய ஆரம்பித்தனர்.

ஜேவிபி இதை செய்யும் காலம் தொலைவில் இல்லை என்பது என் ஆரூடம்.

8 hours ago, Thumpalayan said:

இந்த சூட்டு சம்பவங்கள் பாதாள உலக தலைமைகளில் வந்த வெற்றிடத்தால் நடக்கிறது. மகிந்த கோத்தா டீம் பாதாள உலகை கண்டு கொள்ளாமலும், தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டும் இருந்தார்கள். ஜெவீபி சில பெரிய பாதாள உலக தலைகளை தூக்கினார்கள். மகிந்த தனது ரகசியங்களை பாதுகாக்க இன்னும் சிலரை போட்டார். பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். எஞ்சியவர்கள் தங்களுக்குள் அடிபடுகிறார்கள். களையெடுக்கப் பட வேண்டியவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

பாதாள உலக ஆட்களை முன்னைநாள் பிலிபைன்ஸ் அதிபர் பாணியில் ஜேவிபி என்கவுண்டர் பண்ணுகிறது.

வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர்

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை அரசாங்க அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்ற சந்தேகம் இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கட்சி தலைமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பியின் முயற்சி

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள துமிந்த, “வெலிகம பிரதேச சபையில் ஜே.வி.பி தலைமையிலான திசைகாட்டி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்தது. அது நம் அனைவருக்கும் தெரியும்.

வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர் | Weligama Chairman Murder Govt Crackdown Duminda

தேர்தலின் போது உறுப்பினர்கள் கடத்தப்பட்டனர். ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

வெலிகம பிரதேச சபையில் அதிகாரத்தைப் பெற ஜே.வி.பி பெரும் முயற்சி எடுத்தது. ஆனால், அதை ஐக்கிய மக்கள் சக்தி வென்றது.

படுகொலை

அவர்கள் தேர்தல் மூலம் அதைக் கைப்பற்ற முயன்றனர், பின்னர் அவர்கள் வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தினர். ஆனால் அதிகாரம் எதிர்க்கட்சிக்குச் சென்றது.

வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர் | Weligama Chairman Murder Govt Crackdown Duminda

இந்த நிலையில் அதன் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அரசாங்கத்தின் அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/weligama-chairman-murder-govt-crackdown-duminda-1761136664

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர்

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை அரசாங்க அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்ற சந்தேகம் இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கட்சி தலைமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பியின் முயற்சி

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள துமிந்த, “வெலிகம பிரதேச சபையில் ஜே.வி.பி தலைமையிலான திசைகாட்டி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்தது. அது நம் அனைவருக்கும் தெரியும்.

வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர் | Weligama Chairman Murder Govt Crackdown Duminda

தேர்தலின் போது உறுப்பினர்கள் கடத்தப்பட்டனர். ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

வெலிகம பிரதேச சபையில் அதிகாரத்தைப் பெற ஜே.வி.பி பெரும் முயற்சி எடுத்தது. ஆனால், அதை ஐக்கிய மக்கள் சக்தி வென்றது.

படுகொலை

அவர்கள் தேர்தல் மூலம் அதைக் கைப்பற்ற முயன்றனர், பின்னர் அவர்கள் வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தினர். ஆனால் அதிகாரம் எதிர்க்கட்சிக்குச் சென்றது.

வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர் | Weligama Chairman Murder Govt Crackdown Duminda

இந்த நிலையில் அதன் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அரசாங்கத்தின் அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/weligama-chairman-murder-govt-crackdown-duminda-1761136664

நன்றி.

ஜேவிபி மிக மெதுவாக, ஆனால் தெளிவாக, கிட்டதட்ட ரகசியமாக ….

ஒற்றை கட்சி ஆட்சியை நோக்கி இலங்கையை நகர்த்தி வருவதாக எனக்கு படுகிறது.

போதை மாபியா பற்றிய மக்களின் பயம் அவர்களுக்கு நன்றாக கைக்கொடுக்கிறது.

இதுதான் கடைசி ஜனாதிபதி தேர்தல் என்றார் டில்வின். ஆனால் அது சம்பந்தமாக எதுவும் இல்லை.

மிக விரைவாக, அரச இயந்திரம், முப்படைகள், பொலிசில் அதிகாரம் உள்ள பதிவிகளை தம் கொள்கை சார்ந்தோரால் நிரப்புகினறாம்.

யூ என் பி, சு க வின் தொழில்சங்கங்கள் கூட நெருக்குதலுக்கு ஆளாகிறனவாம்.

இத்தனை வருட தியாகத்தின் பின் கிடைத்த அதிகாரத்தை அவர்கள் அவ்வளவு லேசில் விடப்போவதில்லை.

இது போக..போகத்தான் புலப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-10.jpeg?resize=750%2C375&ssl=1

வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபையின் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளை அடையாளம் காண இரண்டு பொலிஸ் குழுக்கள் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆராய்ந்து வந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்புப் பிரிவில் இருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து மாத்தறை வரை ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்ததாகவும், மாத்தறையில் வைத்து வேறொரு நபர் அவருக்கு மற்றொரு மோட்டார் சைக்கிளை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து இனந்தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451124

  • கருத்துக்கள உறவுகள்

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் படுகொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

Published By: Vishnu

26 Oct, 2025 | 07:48 PM

image

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் படுகொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் மஹரகமவின் நாவின்ன பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து நடத்திய நடவடிக்கையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு மாநில புலனாய்வுப் பிரிவும் அரச நுண்ணறிவு சேவையின் உதவியுடனும் மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/228734

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-10.jpeg?resize=750%2C375&ssl=1

வெலிகம பிரதேசசபை தலைவர் கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாகவும் இருந்ததாக கூறப்படும் மேலும் ஒரு சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பொலிஸாரால் காலியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை பெண் ஒருவர் உள்ளடங்கலாக நான்கு சந்தேகேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, உயிரிழந்த லசந்த விக்ரமசேகரவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறுகின்றன.

https://athavannews.com/2025/1451160

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-2-1.jpeg?resize=750%2C375&ssl=

வெலிகம துப்பாக்கிசூடு- தப்பிச்சென்ற நபரை கைது செய்ய பொதுமக்களிடம் பொலிசார் உதவி!

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் மேலும் ஒரு சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கையின் பின்னர், அநுராதபுரம் – கெகிராவ பொலிஸ் பிரிவின் 50 வீட்டு தொகுதியில், இக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்டனர்.

இதன்போது, பெண் ஒருவர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக எனும் சந்தேகநபர் ஒருவர் தப்பி சென்றுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கைது செய்யவே பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார்.

இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) – 071 859 8888 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு – 011 233 7162 / 071 859 2087

இதேவேளை, குறித்த வீட்டில் சந்தேகநபர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1451164

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-11.jpeg?resize=750%2C375&ssl=1

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் ஒருவர் காவல்துறையினரால் நேற்று மலை(26) மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் மஹரகம, நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை, துபாயிலிருந்து பெறப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் , கொலைக்கு முன்னர் அந்தப் பணம் கொலையாளிக்கு ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் விசாரணைகள் தற்போது வெளிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட  7 பேர் மேலதிக விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்தக் கொலை தொடர்பான விசாரணை பொலிஸ் மா அதிபரின் முழு மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.

இதற்காக, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவை, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, கொழும்பு மாவட்டம் பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணம் தெற்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், குற்ற அறிக்கைகள் பிரிவின் பணிப்பாளர் மற்றும் தெற்கு அதிவேகச் நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவு பணிப்பாளர் ஆகியோர் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

https://athavannews.com/2025/1451256

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.