Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Oct 23, 2025 - 02:06 PM -

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். 

"தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள் சிறையில் உள்ளனர். 

தூக்கிலிடப்பட உள்ள 21 பெண்களும் உள்ளனர். 

தூக்கிலிடப்பட உள்ள 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும் அடங்கியுள்ளனர். 

தென் மாகாணம் தான் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. 

இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

எப்படி பாரிய அளவில் போதைப்பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள். 

இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். 

ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழிக்கிறார்கள். 

எனவே, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவம் அல்ல." என்றார்.

https://adaderanatamil.lk/news/cmh3640l70165qplpb1ahhitk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனையா?

கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கத்தினால் போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் என பலதரப்படடவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என சில புத்திஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கையில் மரண தண்டனையினை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என இப்பதிவு விளக்குகின்றது. மரண தண்டனையினை எதிர்ப்பதற்கான காரணங்களாவன

whatsapp-image-2025-10-22-at-15.34.50_29

image-14.png?w=765

  1. இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடக்க சாத்தியம் அதிகம் உள்ளது. சட்ட விரோத கைதுகள், வழக்குகள் போன்றவை நடைபெறும். இலங்கையின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் 2 கிராம் ஹெரோயின்  வைத்திருந்தாலே மரணதண்டனை இந்நிலையில் (மிக சிறிய அளவு – இலகுவாக ஒளித்து வைக்கலாம்  ) தனது எதிரிகளை இல்லாது ஒழிக்க பலர் இச்சட்டத்தினை பாவிக்க முற்படுவர்

  2. போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான நபர்கள் மற்றும் அதில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் மற்றும் பண பலத்தினை பாவித்து நிச்சயம் தப்பிவிடுவார்கள். மேலும் அவர்களுக்காக சிறந்த சட்டதரணிகள் வாதாடி சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் அவர்கள் நிச்சயம் வெளிவந்து விடுவார்கள். பணவசதியற்ற ஏழைகளின் தலைகளே எதிர்காலத்தில் உருளும். மேலும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பெரும்பாலும் தமது வருமானத்திற்காகவே செய்வார்கள். அவர்களை இயக்கும் நபர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள்.

  3. போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகள் குற்றவியல் வழக்குகள் ஆகும். இவ்வாறன  ஒரு குற்றவியல் விசாரணையின் பொழுது சம்பந்தப்படும் பல தரப்புக்கள் தவறினை விடலாம். உதாரணமாக போலீசார் உரிய சந்தேக நபரினை கைது செய்யாமல் விடலாம், போலீசார் உரிய சாட்சியினை வழங்காது விடலாம், அதிகாரிகள் தவறான சான்று பொருட்களை சமர்ப்பிக்கலாம், போலீசார் நீதி மன்றினை தவறாக வழிநடத்தலாம் மற்றும்  சிறந்த  குற்றவியல் சட்ட தரணியின் சேவை சந்தேக நபருக்கு  கிடைக்காமல் விடலாம்.

  4. அரசியல்வாதிகளை பழிவாங்கவும், சிறுபான்மையினரை பழிவாங்கவும் மரணதண்டனை பயன்படலாம் மேலும் இதன் காரணமாக பொருளாதாரத்தில் நலிவுற்றோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

  5. நீதித்துறையின் தவறு காரணமாக மரண தண்டனை வழங்கப்படலாம். அமெரிக்காவில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 மேற்பட்டவர்கள் பிற்பாடு நடந்த தீவிர விசாரணை மீளாய்வு காரணமாக மரண தண்டனையில் இருந்து கடந்த காலங்களில் விடுதலை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  6. மரண தண்டனை போன்ற பாரிய தண்டனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டதாய் விஞ்ஞான ரீதியில் சான்றுகள் ஏதும் இல்லை.

எனவே மரண தண்டனையினை எதிர்ப்போம்.

https://rb.gy/j0twu8

கட்டுரையாளர் பற்றி

பொதுசுகாதார மற்றும் தனி நபர்சுகாதார  விடயங்கள் (public and personal hygiene) போன்றவற்றை அறிந்து வைத்திருப்பது போல சட்ட மருத்துவ விடயங்கள் பலவற்றையும்  சாதாரண மக்கள் பகுதியளவில்லேனும் அறிந்து இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் அனாவசியமான உயிரிழப்புகள் மற்றும் பாரதூரமான காயங்கள் என்பவற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். மேலும் பாலியல் துஸ்பிரயோகங்கள், பால்நிலைக்கு எதிரான வன்முறைகள், மனித சித்திரவதைகள். தொழிற்ச்சாலை காயங்கள் (Occupational injuries)… போன்றவற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் அத்தோடு அவற்றிக்கு எதிராகவும் போராடவும் முடியும்.

Dr. கனகசபாபதி வாசுதேவா  ஆகிய நான்  MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) ஆகிய கற்கை நெறிகளை கற்றுள்ளேன்.   சட்ட மருத்துவராக மேற்படிப்பு கற்பதற்கும்  கடமை ஆற்றுவதற்கும் பெரும்பாலான வைத்தியர்கள் விரும்பாத நிலையில் என்னை ஊக்குவித்து இந்நிலைக்கு உயர்த்திய எனது பெற்றோர்களான திரு. செல்லத்துரை கனகசபாபதி மற்றும் சிவகுரு சிவசக்தி ஆகியோருக்கு எனது இவ்வலைப்பூவினை காணிக்கை ஆக்குகின்றேன்.

Edited by ஏராளன்
கட்டுரையாளர் பற்றி

என்னைப் பொறுத்தவரைக்கும் போதைப் பொருள் விற்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய அதி குறைந்த பட்ச தண்டனை தான் மரண தண்டனை. மரண தண்டனை கண்டிப்பாக அவசியமான ஒன்று. சிறுவர் மீது பாலியல் வல்லுறவு புரிகின்றவர்களுக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும், மரண தண்டனை மிக அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கஜே-கயே குழுவைச் சேர்ந்த யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனும் அய்ஸ் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளார். அது மாத்திரம் இல்லை தன்னை விடுவிக்க போலிசாருக்கு 20 ரூபாய் லஞ்சம் கொடுக்கவும் முற்பட்டுள்ளார்.

கனபேர் அடக்கி வாசிக்கினம். இப்ப தமிழரசுகட்சியின் உறுப்பினராக இவர் இருந்திருந்தால், பட்டாசு குழு பறந்து பறந்து வெடிவெடித்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

யாழ்ப்பாணத்தில் கஜே-கயே குழுவைச் சேர்ந்த யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனும் அய்ஸ் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளார். அது மாத்திரம் இல்லை தன்னை விடுவிக்க போலிசாருக்கு 20 ரூபாய் லஞ்சம் கொடுக்கவும் முற்பட்டுள்ளார்.

தகவலுக்கு நன்றி.

6 hours ago, வாலி said:

கனபேர் அடக்கி வாசிக்கினம். இப்ப தமிழரசுகட்சியின் உறுப்பினராக இவர் இருந்திருந்தால், பட்டாசு குழு பறந்து பறந்து வெடிவெடித்திருக்கும்!

🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.