Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-108.jpg?resize=750%2C375&ssl

முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

கடந்த ஆண்டு மாணவர் எழுச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ளது. 

ஹசீனா இல்லாத நிலையில் நடத்தப்பட்ட பல மாத கால விசாரணையைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

2024  ஆகஸ்ட் 5, அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்தபோது நாடுகடத்தப்பட்டு டெல்லியில் வசித்து வரும் 78 வயதான அவாமி லீக் கட்சித் தலைவர், வன்முறையைத் தூண்டுதல், போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவு பிறப்பித்தல் மற்றும் மாணவர்கள் தலைமையிலான கிளர்ச்சியின் போது அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம், ஒரு கொடிய அடக்குமுறையை ஏற்பாடு செய்வதில் ஹசீனாவின் பங்கை விவரித்தது.

நிராயுதபாணியான மாணவர் போராட்டக்காரர்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தூண்டும் வகையில் உத்தரவுகளை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

ஆர்ப்பாட்டக்காரர்களை “அழிக்க” கொடிய ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நேரடி கட்டளைகளை அவர் பிறப்பித்ததாகவும் நீதிமன்றம் கண்டறிந்தது.

கூடுதலாக, அரசுப் படைகளால் நடத்தப்பட்ட கொலைகள், சித்திரவதைகள், காணாமல் போதல்கள் மற்றும் தீ வைப்புகளுக்கும், அவரது நிர்வாகத்திற்குள் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கும் ஹசீனா பொறுப்பேற்றார். 

பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின்படி, கலவரத்தின் போது 1,400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஹசீனா இந்த புள்ளிவிவரங்களை மறுத்து, சுயாதீன விசாரணையைக் கோரியிருந்தார்.

https://athavannews.com/2025/1452968

  • கருத்துக்கள உறவுகள்

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - இந்தியாவுக்கு வங்கதேசம் விடுத்த கோரிக்கை

கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தார்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தார்

17 நவம்பர் 2025, 09:45 GMT

வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது.

டாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், அந்த உத்தரவு "ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது" என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு இந்திய அரசும் பதிலளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் இல்லாத நேரத்தில் (in absentia) நடத்தப்பட்டது.

விசாரணைகள் முடிவடைந்த நிலையில் 453 பக்க தீர்ப்பை வாசித்த நீதிபதி முகமது குலாம் முர்தாசா மஜும்தார், இது ஆறு பகுதிகளாக வழங்கப்படும் என்று கூறினார்.

தீர்ப்பு அறிவிப்பு வங்கதேச தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ஜூன் மாதம் வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக ஐந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

இதன் அடிப்படையில், ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோருக்கு எதிராகவும் தீர்ப்பாயம் கைது வாரண்டுகளை பிறப்பித்தது.

கடந்த ஆண்டு, வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது தொடர்ச்சியான வன்முறைகள் நடந்தன. அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால், ஷேக் ஹசீனா ஆட்சியை இழக்க வேண்டியிருந்தது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டிலிருந்து தப்பிக்க நேர்ந்தது. அப்போதிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.

திங்கட்கிழமை தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

படக்குறிப்பு, திங்கள் கிழமை தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

'உடனடியாக ஷேக் ஹசீனாவை அனுப்புக' - இந்தியாவுக்கு கோரிக்கை

தற்போது இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோரை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரியுள்ளது.

வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த முடிவைத் தொடர்ந்து, வங்கதேச வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது .

அதில், "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தப்பியோடிய ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது.

"மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இந்த நபர்களுக்கு எந்த நாடு அடைக்கலம் வழங்கினலும் அது நட்பற்ற நடத்தையாகவும், நீதியை அவமதிக்கும் ஒரு செயலாகவும் இருக்கும்."

"இந்திய அரசாங்கம் உடனடியாக இரு குற்றவாளிகளையும் வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி இது இந்தியாவின் பொறுப்பாகும்" என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக பல கடிதங்களை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த கோரிக்கைகளுக்கு இந்தியா பதிலளிக்கவில்லை.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வங்கதேச வெளியுறவு ஆலோசகர், அவர்களை திருப்பி அனுப்பக் கோரி வங்கதேசம் பலமுறை கடிதங்களை அனுப்பியதாகவும், ஆனால் இந்தியாவிடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

இந்திய அரசின் பதில் என்ன?

இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து அந்நாட்டின் "சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்" வழங்கிய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம்.

நெருங்கிய அண்டை நாடாக, இந்தியா அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை உள்ளிட்ட வங்கதேச மக்களின் நலன்களுக்கு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா எப்போதும் அனைத்து தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நிலவிய சூழல்

டாக்காவில் உள்ள பிபிசி செய்தியாளர் அருணோதய் முகர்ஜி நீதிமன்றத்தில் நிலவிய சூழல் குறித்து விவரித்துள்ளார். அதன்படி, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்பு, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த பலர் கொண்டாடியுள்ளன.

சிலர் அவரை "தூக்கில் போட வேண்டும்" என முழக்கமிட்டதை பிபிசி செய்தியாளர் பார்த்துள்ளார். இது சில நொடிகள் நீடித்த நிலையில், பின்னர் அவர்களை கண்ணியம் காக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்

கடந்த ஜூன் மாதத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அரசின் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், "கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 25,000 பேர் காயமடைந்தனர்" என வாதிட்டார். இறந்தவர்களின் பட்டியலையும் அரசு தரப்பு தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.

ஷேக் ஹசீனா உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 747 பக்க ஆவணமும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மூன்று பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி, சதி, உதவி செய்தல், உடந்தையாக இருத்தல் என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

"ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்களை 'ரசாக்கர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள்' என்று கூறி ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்" என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

வங்கதேசத்தில், ரசாக்கர் என்பது தேசதுரோகி அல்லது துரோகி என்று பொருள்படும் ஒரு இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்து கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பிட பயன்படுகிறது.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதே தீர்ப்பாயத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.

படக்குறிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதே தீர்ப்பாயத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில், "குற்றம் சாட்டப்பட்ட அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் சவுத்ரி அப்துல்லா அல் மாமூல் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலும், உதவியுடனும், சட்ட அமலாக்க முகமைகளும் அவாமி லீக்கின் ஆயுதமேந்திய ஆட்களும் கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் அப்பாவி மற்றும் நிராயுதபாணியான மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பெரியளவில் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் துன்புறுத்த உதவினர்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் இந்தக் குற்றங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தே செய்யப்பட்டவை என்று கூறுகிறது.

ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது, ரங்பூரில் உள்ள பேகம் ரோகையா பல்கலைக்கழக மாணவர் அபு சயீத்தை தூண்டுதலின்றி கொலை செய்ததாகவும், தலைநகரில் உள்ள சங்கர் புல்லில் ஆறு பேரைக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தவிர, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளில் அஷுலியாவில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களின் உடல்களை எரித்ததாகவும், ஒருவரை உயிருடன் எரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஷேக் ஹசீனா கூறியது என்ன?

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஷேக் ஹசீனா ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

"அவாமி லீக்கை ஒரு அரசியல் சக்தியாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இடைக்கால அரசாங்கம் பயன்படுத்தும் வழிமுறையே மரண தண்டனை" என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கு ஓர் 'கேலிக்கூத்து' என்று கூறி, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

மேலும், "சாட்சியங்களை உண்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சோதிக்கக்கூடிய ஒரு முறையான நீதிமன்றத்தில் என் மீது குற்றம் சாட்டுபவர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறும் அவர் இடைக்கால அரசுக்கு சவால் விடுத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gw1yn0037o

  • கருத்துக்கள உறவுகள்

“இந்த தீர்ப்பு பாரபட்சமானது ; அரசியல் உள்நோக்கம் கொண்டது” - ஷேக் ஹசீனா 

17 Nov, 2025 | 06:02 PM

image

டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது என நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷில் 2024ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களின்போது ஷேக் ஹசீனா தனது அரசியல் மற்றும் பதவி பலத்தை பிரயோகித்து பிறப்பித்த கடுமையான உத்தரவுகளால் பல வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக இன்று (17) டாக்கா நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டது. 

அத்துடன் அவர் பதவி நீக்கப்பட்டது முதல்  இந்தியாவில் தலைமறைவாகியிருக்கிறார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளின்போதும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் தலைமறைவாக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்திலேயே இவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தனக்கு எதிராக டாக்கா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விதித்த மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“நான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. 

எனக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தீரப்பு, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பு பாரபட்சமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. 

கடந்த ஆண்டு போராட்டம் நடந்தபோது நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம். எனவே, அதனை குடிமக்கள் மீதான முன்கூட்டிய திட்டமிட்ட தாக்குதல் என்று வகைப்படுத்த முடியாது” என குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/230607

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

இந்தியாவுக்கு பக்கத்திலை இருக்கிற நாடுகளுக்கு உந்த அரசியல் சோகம் நெடுக இருக்கும் போல....அயல் நாடுகள் கலகலப்பாக இல்லாமல் இருக்க கண்ணுக்குள் எண்ணை விட்டு பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை,பங்களாதேஷ்,பர்மா,மாலைதீவு,பூட்டான்,பாக்கிஸ்தான்,தீபெத்,நேபாளம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இந்தியாவுக்கு பக்கத்திலை இருக்கிற நாடுகளுக்கு உந்த அரசியல் சோகம் நெடுக இருக்கும் போல....அயல் நாடுகள் கலகலப்பாக இல்லாமல் இருக்க கண்ணுக்குள் எண்ணை விட்டு பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை,பங்களாதேஷ்,பர்மா,மாலைதீவு,பூட்டான்,பாக்கிஸ்தான்,தீபெத்,நேபாளம்.....

இந்தியா….. முதுகில் குத்தும் நேர்மை அற்ற சகுனி நாடு.

இந்த நாட்டால், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு என்றும் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.