Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரவு நேரத்தில் இலங்கை காவல்துறையால் அழைத்துச் செல்லப்படும் மீனவர்கள்

பட மூலாதாரம், MATHIVANAN

படக்குறிப்பு, இலங்கையில் பேருந்தில் ஏற்றப்படும் கைதான இந்திய மீனவர்கள்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை கடற்றொழில் அமைச்சு கூறுகிறது.

இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள், கடற்றொழில் திணைக்களம் மற்றும் போலீஸாரின் உதவியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் மீன்பிடிப் படகுகளை, இலங்கை அரசாங்கம், அரசுடமையாக்கி வருகின்றது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 127க்கும் அதிகமான படகுகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மன்னார் பகுதிகளில் இந்தப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

''கைப்பற்றப்பட்ட படகுகள் சில கடலில் மூழ்கடிக்கப்படவுள்ளன. ஏனைய படகுகள் இரும்புக்கு விற்பனை செய்யப்படவுள்ளன'' என இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதோடு, இந்த ஆண்டில் இதுவரையான காலம் வரை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 40 இந்திய படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த 167 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கைதாகும் மீனவர்களுக்கு விலங்கிட்டு, தடுத்து வைப்பு

செய்தியாளரை மிரட்டும் காவல்துறையினர்

பட மூலாதாரம், MATHIVANAN

படக்குறிப்பு, இந்திய மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுவதை வீடியோ எடுக்க விடாமல் தடுக்கும் சிறைச்சாலை அதிகாரிகள்

இலங்கை கடற்பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் நாகை மாவட்ட மீனவர்கள் நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து வரப்பட்டமை மற்றும் மருத்துவமனையில் தளபாடங்களில் விலங்கிட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் கடந்த 17ஆம் தேதி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களை நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்ல இரவு வேளை வரை ஆகியுள்ளது.

இதன்போது, இந்தச் செய்தியை சேகரிப்பதற்காக நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு வெளியில் செய்தியாளர்கள் காத்திருந்தனர். அவர்களில் ஒருவரே ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன்.

கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்களை சிறைச்சாலையின் பேருந்துக்கு மீள அழைத்து வந்து ஏற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதை வீடியோ பதிவு செய்ய ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் முயற்சி செய்துள்ளார். இதை அவதானித்த சிறைச்சாலை அதிகாரி, ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணனின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதை அவதானிக்க முடிந்தது.

ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன்

பட மூலாதாரம், MATHIVANAN

படக்குறிப்பு, தான் சிறைச்சாலை அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாகக் கூறுகிறார் ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன்

இந்திய மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுவதை வீடியோ பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் சிறைச்சாலை அதிகாரியின் செயல்பாடு காணப்பட்டதாக ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து, இவர்களை சிறைச்சாலை பேருந்தில் ஏற்றும்போது, அதை வீடியோ பதிவு செய்தேன். வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் வந்து, வீடியோ எடுக்க இயலாது என்றார், நான் மீடியா எனக் கூறினேன்.

'இல்லை இல்லை எடுக்க இயலாது' எனச் சொல்லி கேமராவுடன் சேர்த்து என்னையும் தள்ளிவிட்டார். நான் ரெகோட் ஆவதை நிறுத்தவில்லை. நான் கொஞ்சம் பின்னால் வந்து, ரெகோட் போட்டுக்கொண்டு நிற்க, போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வந்து வீடியோ எடுக்க வேண்டாம் எனச் சொல்லி மறித்தார்" என்று தெரிவித்தார்.

அப்போது, "யார் எடுக்கக்கூடாது எனச் சொன்னது என்று நான் கேட்டேன். அப்போது 'நான் தான் சொன்னேன்' என்று சொல்லிக் கொண்டு சிறைச்சாலை அதிகாரி வந்தார். நீதிமன்றத்திற்கு வெளியில் எடுப்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் தடை செய்ய வேண்டாம் என்று கூறினேன். அவர் 'இல்லை எடுக்க முடியாது' எனச் சொன்னார்.

நீதிமன்றத்திற்குள்ளும் நான் வரவில்லை. சிறைச்சாலைக்குள்ளும் நான் வரவில்லை. நான் வீதியில் இருந்தே எடுக்கின்றேன் என சொன்னேன். வழமையாக நாங்கள் முறைப்படியே வீடியோக்களை எடுப்போம் எனச் சொன்னேன். இல்லை முடியாது. நான் உங்களைக் கைது செய்வேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என சொன்னார். நான் பரவாயில்லை என்றேன்'' என ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் கூறுகிறார்.

இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

பட மூலாதாரம், RAMALINGAM CHANDRASEGARAN

படக்குறிப்பு, இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

''நாங்கள் பல வழக்குகள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்குச் சென்றுள்ளோம். இதுவரை யாரும் தடை விதித்தது இல்லை. இப்போது அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது" எனவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், விலங்கிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை மாத்திரமன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் காலில் சங்கிலியிட்டு, அந்த சங்கிலி மருத்துவமனை கட்டிலில் கட்டப்பட்டிருக்கும் விதத்திலான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் பிபிசி தமிழ் வினவியது.

குறித்த விடயம் தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் பதிலளித்தார்.

சிறைச்சாலை திணைக்களம் கூறுவது என்ன?

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விலங்கிடப்பட்டு, சங்கிலியில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மற்றும் இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் பிபிசி தமிழ், சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்கவிடம் வினவியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் பதிலளித்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் தற்போதைய நிலை என்ன?

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 31 பேர் தற்போது சிறையில் இருப்பதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் க.கிரிஷாந்தன் தெரிவிக்கின்றார்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அளித்த தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 40 இந்திய படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த 167 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறாகக் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறைவைக்கப்படுவதுடன், பின்னரான காலத்தில் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் விடுவிக்கப்படுவதாகக் கூறுகிறார் கிரிஷாந்தன்.

இந்த நிலையில், எல்லை தாண்டி வரும் மீனவர்கள் எந்த அடிப்படையில் கைது செய்யப்படுவார்கள் என்பது குறித்தும் கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் க.கிரிஷாந்தன் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

''படகின் உரிமையாளர், படகோட்டி ஆகியோருக்கு உடனடியாகவே சிறைத் தண்டனை வழங்கப்படும். ஏனைய மீனவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்படும். இரண்டாவது முறை அதே மீனவர் கைது செய்யப்படும் பட்சத்தில் முதல் குற்றத்திற்கும் சேர்த்து சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்."

அதோடு, "கைவிரல் அடையாளங்களை எடுத்த பிறகே மீனவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைப்போம். அவர்கள் மீண்டும் வரும்போதும் கைவிரல் அடையாளங்கள் எடுக்கப்படும். பொதுவாக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்.

ஒரு குற்றச்சாட்டுக்கு 6 மாதங்கள் என்ற அடிப்படையில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, அந்த சிறைத் தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும். இந்த ஐந்து வருட காலத்திற்குள் வந்து மீண்டும் பிடிபடும் பட்சத்தில், பழைய குற்றச்சாட்டு மற்றும் புதிய குற்றச்சாட்டு இரண்டுக்கும் சேர்த்து சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்" என்றும் கிரிஷாந்தன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

எல்லைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு, அவர்களின் உடமைகள் அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு மீண்டும் அறிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj414q8xj59o

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

எல்லைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு, அவர்களின் உடமைகள் அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு மீண்டும் அறிவித்துள்ளது.

எல்லை தாண்டும் மீனவர்களுக்காக முடடைக் கண்ணீர்விடும் பத்திரிகையாளர் மீனவர்களை எல்லை தாண்டி போகாமல் மீன் பிடிக்க சொல்லலாமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லை தாண்டுவதை விட உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையே பாரிய பிரச்சனை அந்த முறை மூலம் அவர்கள் நாட்டுக்குள் அண்டை மாநில மீனவர்களை இதே வேதாரணியம் மீனவர்கள் சிறை பிடித்து பாரிய சர்ச்சைகள் உருவாகுவது வழமை ஆனால் வேண்டும் என்றே அந்த செய்திகள் மழுங்கடிக்கப்பட்டு போகின்றன . இந்த விளக்கம் கூட தெரியாத வகையில் இலங்கை மீன்பிடி அமைச்சர் இருக்கிறார் . பி பி சி தமிழ் இங்கிலாந்து வரி பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்திய மத்திய அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊது குழல் அவர்களிடம் உண்மை வருமா ?

செய்தி இருட்டடிப்பு தாண்டி உண்மை செய்திகள் அத்தி பூத்தது போல் வரும் அதில் ஒன்று கிழே இணைக்கிறேன் .

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோரால் தாக்கப்பட்டுள்ளனர். படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.

வாக்கிடாக்கி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுவிட்டனர். சமாதான பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தொழில் போட்டியால் மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த 2024 மார்ச்சில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரள மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, அங்குள்ள மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர்.

கிழக்குக் கடற்கரையில் மட்டும்தான் இந்த மோதல் என்றில்லை. மேற்குக் கடற்கரையில் கர்நாடக மீனவர்கள் கோவா கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்து வருவதாகக் கூறி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2022 முதல் 2024 வரையில் அவ்வாறான மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே காரணம் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறுவதுதான் வேடிக்கை.

நாட்டைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் பகுதிகளிலும் சுமார் 12 கடல் மைல் பகுதிக்கு முழுமையான இறையாண்மை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சுமார் 200 கடல் மைல் பகுதி வரையில் உள்ள பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகள் அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே செய்துகொள்ள முடியும்.

ஒரு மாவட்ட, மாநில மீனவர்கள் கடலைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மற்ற மீனவர்களை தங்களது எல்லைகளுக்குள் வரக் கூடாது என சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஆனால், மீனவர்கள் அவரவர் பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கையான எல்லை ஒன்றை வகுத்துக் கொண்டு மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது.

நாட்டின் கடல் பகுதியை எல்லையாகக் கொண்ட 9 மாநிலங்களிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணம், கடலில் மீன் வளம் குறைந்து வருவதும், மாறி வரும் நவீன மீன்பிடி தொழில்நுட்ப முறைகளும்தான். அதிவேக விசைப் படகுகள் மற்றும் இரட்டைமடி வலைதான் பிரச்னையின் மையப்புள்ளி.

ஆந்திர மீனவர்கள் 200 முதல் 300 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், காரைக்கால் மீனவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வலைகள் மற்றும் மீன் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக ஆந்திர மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

இதே காரணங்களால் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. அதனால்தான், ராமேசுவரம் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இங்கு மீன் வளம் குறைந்துள்ள நிலையில், எஞ்சி இருக்கும் கொஞ்ச வளத்தையும் அபகரித்துச் செல்ல வரும் குளச்சல் மற்றும் கேரள மீனவர்களைச் சிறைபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

ஆந்திர கடல் பகுதியிலும் மீன் வளம் குறைந்துவிட்டதாலும், அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதாலும் அம்மாநில மீனவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆதலால், அண்டை மாநில மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடிப்பது உள்ளூர் மீனவர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது.

தடை செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அவற்றால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.

கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம் கண்காணிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டால் இந்த மோதல்களைத் தடுக்க முடியும்.

மோதல்களுக்கான காரணங்கள் கண்கூடு. அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

https://www.dinamani.com/editorial/2025/Oct/07/marine-resources-are-dwindling

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லை தாண்டும் மீனவர்களுக்காக முடடைக் கண்ணீர்விடும் பத்திரிகையாளர் மீனவர்களை எல்லை தாண்டி போகாமல் மீன் பிடிக்க சொல்லலாமில்ல.

அண்மைக்காலங்களில் சிங்களம் தமிழர்களை கடற்தொழில் அமைச்சர்களாக நியமிக்கும் போதே பல சூட்சுமங்கள் விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு காலத்தில் நீதி அமைச்சராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டார்.அப்போதுதான் தமிழருக்கெதிரான பல அநியாயங்கள் நடந்தன.

தமிழர் பதவிகளை முன்னணியாக வைத்து ஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களம் வலு கில்லாடிகள்..சேர் பொன் இராமநாதன் தொடக்கம் கதிர்காமர் ஊடாக இன்றைய கருணா,சம்பந்தன்,சுமந்திரன் வரை அந்த யுக்தியை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.