Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

27 Nov, 2025 | 05:14 PM

image

இலங்கைக்குக் அருகில் வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த தாழ் காற்றழுத்தம், இன்று (27) சில நேரங்களுக்கு முன் வலுவடைந்து சூறாவளியாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த புதிய சூறாவளிக்கு "டித்வா"(Ditwah) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் பெயர் யேமன் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டது. யேமனில் உள்ள சொகோத்ரா தீவின் பிரசித்தி பெற்ற டிட்வா லகூனை குறிக்கும் இந்தப் பெயர், அப்பகுதியின் தனித்துவமான கடல்சார் மற்றும் கரையோர சுற்றுச்சூழலை வெளிப்படுத்துகிறது.

உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐ.நா. ESCAP ‘புயல்கள் தொடர்பான குழு’ முன்பே அங்கீகரித்துள்ள நாடுகளின் பெயர் பட்டியலிலிருந்து சூறாவளிகளுக்கான பெயர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் யேமன் பரிந்துரைத்த பெயராக ‘டித்வா’, அந்த நாட்டு கரையோர மரபையும் கடல் வளங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இதேவேளை, இலங்கையின் கடல் பகுதியில் குறித்த சூறாவளி நீடிப்பதாலும் மற்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலத்தின் ஒரு பாதி இலங்கையின் நிலப்பகுதியில் நீடிப்பதாலும் இதன் நகர்வு தற்போது வரை குழப்பமான நிலையில் உள்ளதாகவும் எங்கு கரையை கடக்கும் என்பது தற்போது பெரும் சந்தேகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இந்திய வானிலை மையம் இது குறித்து இப்போது வரை கரைய கடக்கும் இடம் பற்றி தெரிவிக்கவில்லை ஆனால் நிகழ்வானது சென்னை வரை பயணிக்கும் போல் வரைபடத்தில் காண்பித்துள்ளனர்.

590306336_1559158868549428_5317527966519

https://www.virakesari.lk/article/231682

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளக் காடாக மாறிய இலங்கை - பாதிப்புகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு

வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை - புகைப்படத் தொகுப்பு

19 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள நிலவரம், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலை ஆகியவற்றைக் காட்டும் சில புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

மண் சரிவில் சேதமடைந்த வீடு

படக்குறிப்பு, இரத்தினபுரி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு வீடு அழிந்தது

கொத்மலை பகுதியில் உள்ள இரத்தினபுரியில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு வீடு கிட்டத்தட்ட முழுமையாக அழிந்தது.

நல்வாய்ப்பாக இதில் யாரும் காயமடையவில்லை. அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சேதமடைந்து போக்குவரத்து இல்லாமல் காணப்படும் சாலை

படக்குறிப்பு, மூடப்பட்ட சாலை வெறிச்சோடியிருக்கும் காட்சி

கொழும்பு - பதுளை பிரதான சாலையில் உள்ள ஒய் சந்திப்பில் இருந்து பண்டாரவெல செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.

அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தியத்தலாவ வழியாகச் செல்லும் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காடியன்லெனா நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது

படக்குறிப்பு, மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது

நாவலப்பிட்டி - தலவாக்கலை வீதியில் உள்ள காடியன்லெனா நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

காடியன்லேன அருவிக்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, நாவலப்பிட்டி - தலவாக்கலை வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நகரில் மழை பாதிப்பு

படக்குறிப்பு, நுவரெலியா நகர் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று அடுத்த சில நாட்களுக்குத் தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் தீவு முழுவதும் 100 மி.மீ-ஐ தாண்டி கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மண்சரிவில் சேதமடைந்த சாலை

படக்குறிப்பு, பதுளையில் ஏற்பட்ட மண்சரிவால் இரண்டாகப் பிளந்த சாலை

பதுளை மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவுகள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக, பதுளை இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலம்

படக்குறிப்பு, பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் ஓஹிய - ஹார்டன் சமவெளி சாலை மூடப்பட்டது

வெள்ள பாதிப்பால் மூடப்பட்ட சாலை

படக்குறிப்பு, பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் ஓஹிய - ஹார்டன் சமவெளி சாலை மூடப்பட்டது

ஒஹிய பகுதியில் பாலம் ஒன்று மூழ்கியதால் ஓஹிய - ஹார்டன் சமவெளி சாலை மூடப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களை மீட்கும் இலங்கை விமானப் படை

படக்குறிப்பு, வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களை மீட்கும் இலங்கை விமானப் படை

சீரற்ற வானிலை காரணமாக மாஹோ எல்ல பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொதுமக்களை இலங்கை விமானப் படை உதவியுடன் மீட்டுள்ளனர். பெல் -212 ஹெலிகாப்டர் மூலம் இவர்கள் மீட்டுள்ளனர்.

இலங்கை, கடும் மழை, வெள்ளம்

இலங்கையில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நாடு முழுவதும் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அடுத்து, தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c79x14jn0xjo

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் நந்தாவில் வெள்ளப் படங்கள் இருக்குதா? பழைய ஞாபகங்களை கொண்டுவரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை புரட்டிப்போட்ட திட்வா புயல்: 56 பேர் பலி; இன்றும் கனமழை எச்சரிக்கை

இலங்கை- திட்வா புயல்

28 நவம்பர் 2025, 02:45 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் திட்வா புயல் தாக்கத்தால் 56 பேர் பலியாகியுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 21 பேர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவம்பர் 27) புயலாக மாறியது. இதற்கு திட்வா (Ditwah) என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி இலங்கையில் கண்டி மற்றும் மதாலே மாவட்டங்களில் சில பகுதிகளில் 40 செ.மீக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. கம்மதுவா பகுதியில் 57.8 செ.மீ மழை பெய்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹாவெலி, தெதுரு ஒயா, மஹா ஒயா, காலா ஒயா, மெனிக் கங்கா, மல்வாது ஒயா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக இலங்கையின் நீர்பாசனத்துறை எச்சரித்துள்ளது.

எனவே, இந்த ஆறுகளுக்கு அருகில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும், வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு செல்வது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 51 ஆயிரம் ஏக்கரிலான நெல் வயல்கள் சேதமடைந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை- திட்வா புயல்

பட மூலாதாரம்,Tharindu Niroshan / Facebook

இன்று விடுமுறை

கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இலங்கை முழுவதும் இன்று அரசு நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களுக்கு தேவையான அவசர சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இலங்கையின் பொது நிர்வாகத்துறை இதனை பிபிசியிடம் தெரிவித்தது.

மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், எனினும், மருத்துவம் போன்ற அவசர சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு, பேரிடர் மேலாண்மை மையத்தை 117 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

மீட்புப் பணியில் 20,500 ராணுவ துருப்புகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்குவதற்காக சுமார் 20,500 துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.

நேற்று (நவம்பர் 27) மத்திய மலைப்பகுதி உட்பட இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள 3,740 பேரை பாதுகாப்பாக வெளியேற்ற ராணுவ துருப்புகள் நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.

இலங்கை, திட்வா புயல்

இன்றும் கனமழை பெய்யும்

இலங்கையில் இன்றும் பல பகுதிகளில் 20 செ.மீக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நாட்டின் வடக்கு, வட-மத்திய, மத்திய, வடமேற்கு, மற்றும் மேற்கு பிராந்தியங்களில் 20 செ.மீக்கு அதிகமான மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, திரிகோணமலை, பதுல்லா, படியகலோஆ, மதரா மாவட்டங்களில் 15 செ.மீக்கு அதிகமான மழை பெய்யக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c93wl5gv9x5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற வானிலை : பாதிக்கப்பட்டோருக்கு அவசர உதவிகளை வழங்க ஐ.நா. ஒருங்கிணைப்பு

Published By: Digital Desk 1

28 Nov, 2025 | 12:59 PM

image

சீரற்ற வானிலையின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான இயற்கை அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்க இலங்கையின் உரிய கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளோம் என இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரூ பிரெஞ்ச் தெரிவித்துள்ளார்.

வான் வழி மற்றும் நிலவழி மீட்பு, நிவாரணம் மற்றும் தற்காலிக முகாம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் முழுமையான ஒத்துழைப்பு நடைபெற்று வருவதாக, அவருடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. நிறுவனம் மற்றும் தேசிய, பிராந்திய அதிகாரிகள் இணைந்து, பாதிக்கப்பட்டோருக்கு உணவு, நீர் மருந்து மற்றும் தற்காலிக தங்குமிடங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/231791

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2016ஆம் ஆண்டுக்கு பின் மிக மோசமான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

28 Nov, 2025 | 01:24 PM

image

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியீட்டின்படி, தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை 2016ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகிய  மிக மோசமான வானிலையென  குறிப்பிடப்பட்டுள்ளது.

திணைக்களம் தெரிவித்துள்ள தகவலின் படி, கடுமையான கனமழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் பல பகுதிகளில் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இதனால் வீடுகள் சேதமடைதல், மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வீதிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன என் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகாரிகள் வழங்கும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். 

வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்தடுத்து வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து வழங்கி, பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

https://www.virakesari.lk/article/231796

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“டித்வா” புயல் - 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கான விசேட அறிக்கை!

28 Nov, 2025 | 05:21 PM

image

டிட்வா புயல் சற்று தீவிரம் பெறுகின்றது.மிகக்கனமழை, வேகமான காற்று வீசுகை மற்றும் கடல்நீர் உட்புகுதல் தொடர்பான எச்சரிக்கையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ளார்.

டிட்வா புயலின் வெளி வளையம் வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளது. இன்று இரவு  டிட்வா புயலின் மையம் வட மாகாணத்துக்குள் பிரவேசிக்கும் வாய்ப்புள்ளது. 

வெளி வளையம் தொட்டிருப்பதனால் படிப்படியாக மழை அதிகரித்து மிகக் கனமழை கிடைக்கும். காற்றின் வேகமும் அதிகரிக்கும். பல குளங்களுக்கு மிக அதிக நீர் வரத்தொடங்கியுள்ளது. 

தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும். பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சில குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. மேலும் சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளன. 

ஆகவே குளங்களுக்கு அண்மித்துள்ள மக்களும், தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்களும் மிக அவதானமாக இருப்பது அவசியம். தேவையேற்படின் இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு நகருங்கள். குறிப்பாக யாழ்ப்பாண நகரை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் ஏனைய மக்கள் நிலைமையைப் பொறுத்து இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். 

முக்கியமாக மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்கரையோரங்களில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகும் அபாயம் உள்ளது. ஆகவே  வடக்கு மாகாணக் கடற்கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்.  

மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணத்திலும் தொடர்ந்த கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/231854

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மலை சரிந்து எங்கள் கிராமத்தையே புதைத்தது' - இலங்கையில் வெள்ள பாதிப்புகளின் நிலவரம் என்ன?

இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம்

பட மூலாதாரம்,Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சூறாவளி தாக்கத்தினால் வரலாறு காணாத பெரும் பாதிப்புகளை நாடு எதிர்நோக்கி வருகின்றது.

இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாகத் திரட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சுமார் 1000க்கும் அதிகமான கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் பாதிப்புகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பாதிப்புகளின் அளவு நொடிக்கு நொடி அதிகரித்து வருகின்றது.

மலை சரிந்து எங்கள் கிராமத்தையே புதைத்தது'

"மதியம் 1:30 மணியளவில் என் தந்தை எனக்கு போன் செய்தார். மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. இப்போது பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எங்கள் வீட்டில் கூடியுள்ளனர்" என்று பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார் ரம்போடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யோஹன் மலக. இவர் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

"ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மலை சரிந்து விழுந்து எங்கள் கிராமத்தையே புதைத்துவிட்டது" என்று கூறிய அவர், "நுவரெலியா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக செய்தி வந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு, ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் குறைந்தது 10 அல்லது 15 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள்."

இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம்

படக்குறிப்பு,ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மலைதான் இடிந்து விழுந்து கிராமத்தையே புதைத்தது என்கிறார் ரம்போடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யோஹன் மலக.

"சில வீடுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இடிந்து விழுந்த வீட்டில் இரண்டு சிறுமிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைக் காப்பாற்றவோ அல்லது வேறு ஏதும் செய்யவோ வழி இல்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வழி இல்லை" என்றார் யோஹன் மலக.

தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு அல்லது மூன்று மாதக் குழந்தை உள்பட மூன்று பேர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர். குழந்தை இறந்துவிட்டதாக நாங்கள் அறிந்தோம். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழி இல்லை என்று குடும்பத்தினர் கூறினர். அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன, எங்கும் செல்ல வழி இல்லை, அனைவரும் எங்கள் வீட்டில் சிக்கிக் கொண்டனர். அவரை மீட்க வந்தவர்கள்கூட இன்னும் வந்து சேரவில்லை."

"இரண்டு குடும்பங்கள் எங்கும் செல்ல வழியில்லாமல் ஒரு தீவில் சிக்கித் தவிக்கின்றன. இதுவரை வீட்டிலிருந்து நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற வழி இல்லை என்பதுதான்" என்றும் அவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்.

திட்வா புயல், இலங்கை

10 நாட்களில் 1000 மி.மீ மழை

எதிர்வரும் 24 மணிநேரத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் எதிர்பாராத அளவு வெகுவாக அதிகரிக்கக்கூடும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை அண்மித்து வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஆபத்து நிலைமை காணப்படும் பட்சத்தில் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலையையொட்டி, மலையகத்தின் எந்தவொரு பகுதியிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம்

மலையகத்தில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகுமாக இருந்தால், மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகளவில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

அதனால், மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மலையகம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளுக்கு சுமார் 500 மி.மீ.க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களில் மாத்திரம் 1000 மில்லீமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம்

பட மூலாதாரம்,Getty Images

பேராதனை பல்கலைக் கழகத்திற்கு வரலாறு காணாத பாதிப்பு

தெற்காசியாவின் மிக முக்கியமான பல்கலைக் கழகமாகக் கருதப்படும் பேராதனை பல்கலைக் கழகம் வரலாறு காணாத அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது.

பல்கலைக் கழகத்தை அண்மித்து ஊடறுத்துச் செல்லும் மகாவளி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்ததை அடுத்து, பேராதனை பல்கலைக் கழகத்திற்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளது.

பல்கலைக் கழகத்தின் மைதானம், பல்கலைக் கழகத்தின் மிக முக்கியமான பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

அத்துடன், பல்கலைக் கழகத்தை அண்மித்துள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக் கழக வளாகத்திற்குள் காணப்பட்ட பல மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

அத்துடன், கண்டி நகரின் முக்கியமான பௌத்த விகாரையான கெட்டம்பே விகாரையும் நீரில் மூழ்கியுள்ளது. அதேவேளை, கண்டி நகரில் பல இடங்கள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன.

மேலும், கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கண்டி மாவட்டத்தின் ஹசலக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

காணாமல் போனோரை மீட்கும் பணிகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதுடன், இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நுவரெலியா, நாவலபிட்டிய, கெலிஓயா, கம்பளை உள்ளிட்ட பல நகரங்களுக்குள் வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளது. இதனால், பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம்

பட மூலாதாரம்,Sri Lanka Air Force

படக்குறிப்பு,அநுராதபுரம் கலாவௌ ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து, தென்னை மரமொன்றில் ஏறியிருந்த ஒருவரை விமானப் படையினர் மீட்டனர்.

மீட்புப் பணிகள் தீவிரம்

பொலன்னறுவை மனம்பிட்டிய பாலத்தின் மீது சிக்குண்டிருந்த 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரின் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அநுராதபுரம் கலாவௌ ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து, தென்னை மரமொன்றில் ஏறியிருந்த ஒருவரை விமானப்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

மின்சாரம், தொலைபேசி துண்டிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 வீதமானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

பல்வேறு பகுதிகளில் மின்சார தூண்கள் உடைந்து வீழ்ந்துள்ளமை, மின்சார தூண்களின் ஊடாக வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளமை, மண்சரிவு காரணமாக மின்சார தூண்கள் உடைந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

அத்துடன், மின்சார துண்டிப்பை அடுத்து, பெரும்பாலான பகுதிகளில் கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினாலும், சில பகுதிகளுக்குள் அவர்களால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

மின்சார விநியோகத்தை இயலுமான அளவுக்கு விரைவில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான பேருந்து போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ரயில் தண்டவாளங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ரயில் தண்டவாளங்களுக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வீதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பேருந்து போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

முச்சக்கரவண்டி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டு இருப்பதால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, இலங்கைக்கு வரும் சில விமானங்கள் இந்தியாவை நோக்கித் திருப்பி விடுவதற்கும் நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyke19yd17o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடிந்து விழுந்த மொரகஹகந்த பாலம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை - மொரகஹகந்த லக்கல பாலமும் இடிந்து விழுந்துள்ளது.

மேலும், முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வானிலை ஆய்வுத் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பொதுமக்கள் முடிந்தவரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுவதைத் தவிர்க்கவும் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

25-6929955d24226.webp

25-6929955db59e1.webp

25-6929968f5a62d.webp

25-6929969026ace.webp

25-6929972fd4d7b.webp

25-692997308fed6.webp

https://ibctamil.com/article/vehicles-washed-away-by-floods-1764332891

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிட்வா சூறாவளியால் நாட்டில் 80 பேர் பலி! 34 பேர் மாயம்

புதிய இணைப்பு

'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட மோசமான வானிலையைத் தொடர்ந்து 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.

சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் 61,175 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 219,282 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 266 பாதுகாப்பு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 5,890 குடும்பங்களைச் சேர்ந்த 18,443 பேர் தங்கியுள்ளனர்.

களனி, களு ஆறு, யான் ஓயா, மகாவலி , தெதுரு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, அத்தங்கலு ஓயா, மாணிக்க கங்கை ஆறு மல்வத்து ஓயா உட்பட பல முக்கிய ஆறுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் இணைப்பு

கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.

நவம்பர் 16 முதல் இன்றுவரை பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகவும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 39 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

25-69290b757437e.webp

மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 79 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் மோசமான வானிலை காரணமாக பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

மடுல்சீமை பட்டாவத்த தோட்டத்தைச் சேர்ந்த வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தமையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுள் மூன்று வயது சிறுவன் மற்றும் தாய், சகோதரிகள் அடங்குவதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கண்டி கங்கொடவில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறைந்தது 17 காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துமவ நிலயைம் தெரிவித்துள்ளது.

அசாதாரணமான வானிலை

நாட்டில் நிலவும் அசாதாரணமான வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களில் உள்ள 79 பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த அனர்த்தங்கள் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளதுடன், 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 பாதுகாப்பு மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

https://ibctamil.com/article/heavy-rain-flood-death-toll-in-sri-lanka-today-1764239729

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

28 Nov, 2025 | 10:39 PM

image

டிட்வா புயல் 28.11.2025 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி நிலைவரப்படி, திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5 கிலோமீற்றர் வேகத்திலேயே நகருகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
 
டிட்வா புயலின் மையப்பகுதி நாளை 29 ஆம் திகதி காலை வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்துக்கு அண்மையாக கடலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்வு வேகம் குறைவாக உள்ளமையால் கரையைக் கடக்கும் நேரமும் தாமதமாகும். 

அதனால் நாளையும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு  அவ்வப்போது மிதமானது முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களுக்கு  தற்போது கிடைத்து வரும் கனமழை இரவு 2.00 மணிவரை (29.11.2025) நீடிக்கும் வாய்ப்புள்ளது. காற்றின் வேகமும் வடக்கு மாகாணத்தில் படிப்படியாக அதிகரிக்கும். 

ஆகவே வடக்கு மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகிறார்கள். குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியம். வெள்ளநீர் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தினை உணர்ந்தால் முன்கூட்டியே உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்வது சிறந்தது. 

அதேவேளை வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு கரையோரப்பகுதிகள் மற்றும் தீவுப்பகுதிகளில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகுதல் செயற்பாடு இடம்பெறும். ஆகவே கரையோரப் பகுதி மக்கள் இது தொடர்பாகவும் அவதானமாக இருப்பது அவசியம். 

கடந்த சில நாட்களாக இலங்கையைப் புரட்டிப் போட்ட, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போது இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுத் துன்பியல் நிகழ்வுகளுக்கு காரணமான 'டிட்வா'  புயல் நாளையுடன் இலங்கையை விட்டு நீங்குகிறது என்பது இலங்கையர்கள் அனைவருக்கும் மிக மகிழ்ச்சியான செய்தியாகும்.

https://www.virakesari.lk/article/231865

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டியில்

Nov 29, 2025 - 08:13 AM

24 மணிநேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டியில்

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 

கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmijoswdm024zo29nouiwxzg3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிட்வா புயல் தாக்கம் - மரணங்கள் 132 ஆக அதிகரிப்பு

Nov 29, 2025 - 03:28 PM

டிட்வா புயல் தாக்கம் - மரணங்கள் 132 ஆக அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmik4ctpl025qo29njdj0gnzv

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற வானிலை: உயிரிழப்பு 153 ஆக அதிகரிப்பு

Nov 29, 2025 - 06:35 PM

சீரற்ற வானிலை: உயிரிழப்பு 153 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. 

அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இன்று (29) மாலை 6.00 மணிக்கு அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தற்போதைய நிலையில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல், 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 பேர் தற்போது 798 பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmikb0jtm0264o29nz7prtcbc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருக்கும் - இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்!

29 Nov, 2025 | 12:09 PM

image

இலங்கை முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்திய “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் அன்பு உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் மனம் ஒற்றுமையில் நிற்கிறது என  இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். 

இந்த கடினமான நேரத்தில் துயரங்களை எதிர்கொள்ளும் அனைவரின் துயரத்தையும் என் இதயம் உணர்கிறது. தேவைப்படும் மக்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவும் பகல் இரவு பாராமல் பாடுபடும் அவசர மீட்புப்படையினர், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிக ஆழமாக பாராட்டப்படுகின்றன.

ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருந்துள்ளது, மேலும் இனியும் உங்கள் பக்கம் நிற்கும். பாதிக்கப்பட்ட அனைவரும் வலிமை, நம்பிக்கை பெற்று விரைவில் பாதுகாப்பான மற்றும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிடுவீர்கள் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/231906

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலைதீவு நிதியுதவி!

29 Nov, 2025 | 12:31 PM

image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 50,000 டொலர் நிதியுதவியையும், 25,000 டூனா மீன் டின்களையும் நிவாரணமாக வழங்க மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

https://www.virakesari.lk/article/231909

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராஜங்கனை - கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் மீட்ட விமானப்படையினர்!

29 Nov, 2025 | 02:07 PM

image

இராஜங்கனையின் கிரிபாவ பகுதியில் இன்று சனிக்கிழமை காலை (29) வெள்ளத்தில் சிக்கித் தவித்த 33 பேரை, அனுராதபுரம் விமானப்படை தளத்தின் எண் 06 படைப்பிரிவுக்குச் சொந்தமான MI-17 ஹெலிகாப்டரை விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

அனைத்து மக்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அனுராதபுரம் விமானப்படை தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/231925

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொத்மலை ரம்பொடை பகுதியில் மண்சரிவு : 14 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 1

29 Nov, 2025 | 03:04 PM

image

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கொத்மலை ரம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த மண்சரிவில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒரு குழுவினர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொத்மலை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/231923

குருணாகல் - அலவ்வ பகுதியில் பாரிய மண்சரிவு!

29 Nov, 2025 | 02:02 PM

image

குருணாகல் - அலவ்வ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 22 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

https://www.virakesari.lk/article/231924

அரநாயக்க மண்சரிவு; குழந்தைகள் உட்பட 120 பேர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்!

29 Nov, 2025 | 03:36 PM

image

கேகாலை - அரநாயக்க பகுதியில் இன்று சனிக்கிழமை (29) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவில் 20 குழந்தைகள் உட்பட 120 பேர் சிக்கியுள்ளனர்.

மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/231938

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது -  அடுத்த கட்டங்கள்  எப்படி அமையும்!

Published By: Priyatharshan

29 Nov, 2025 | 04:08 PM

image

டிட்வா புயல் 29.11.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி நிலைவரப்படி, புயலின் மையத்தின் பின்பகுதி தற்போது நிலத்திலிருந்து கடலுக்குள் சென்றது. புயலின் மையம் எப்போதும் அமைதியானது. அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது. அதன் விளைவே தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெற்றுக்கொள்ளும் சற்று கனமான மழை. இந்த மிதமான அல்லது சற்று கனமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

அத்தோடு வடக்கு மாகாணத்தில் இந்த புயல் முழுவதும் கடலைச் சென்றடையும் வரை காற்று சற்று வேகமாக வீசும் ( மணிக்கு 40-60 கி.மீ.) என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஆகவே காற்று வேகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். 

ஒரு புயலின் மிக ஆபத்தான பகுதி உள்வளையமே. வலுவான காற்றையும், அடர்த்தியான ஈரப்பதன் மிக்க முகில்களையும் கொண்ட உள்வளையமே புயலின் மிக ஆபத்தான பகுதி. 

அது நீர்ப் பகுதியிலிருந்து நிலப்பகுதிக்குள் வரும்போதும், நிலப்பகுதியிலிருந்து நீர்ப் பகுதிக்கு செல்லும்போதும் அமைதியாக செல்லாது. இதுவே இலங்கை முழுவதும் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 

இன்று இரவு இதன் வெளிவளையமும் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   ஆனால் மழை குறைந்தாலும்  குளங்களுக்கான நீர்வரத்து அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகமாகவே இருக்கும்

ஆகவே வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம். 

இந்த புயல் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலவும் என்பதனால் வடக்கு, வட மேற்கு, கிழக்கு கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என  நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/231942

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலவத்துகொடை பகுதியில் பாரிய மண்சரிவு - சுமார் 20 குடும்பங்கள் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்!

29 Nov, 2025 | 04:50 PM

image

கண்டியில் அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்புக்கே ஆறு பகுதியில் இன்று சனிக்கிழமை (29) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் இருந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 

https://www.virakesari.lk/article/231949

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற 'டித்வா'

Nov 30, 2025 - 06:27 AM

இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற 'டித்வா'

"டித்வா" புயலானது நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில்) மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்படி, நிலவும் மழையுடனான வானிலை இன்று (30) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://adaderanatamil.lk/news/cmil0gz81026fo29nxfcmrnyq

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பளை - எஸ்கடேல் பகுதியில் மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

30 Nov, 2025 | 04:47 PM

image

நுவரெலியா - இராகலை பிரதான வீதியில் கந்தப்பளை,  எஸ்கடேல் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி  இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர்.

மண்ணில் புதையுண்டவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள்  இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இந்த பகுதியில் பெய்து வந்த கடும் மழை காரணமாக மீட்பு பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலையிலேயே இன்றைய தினம் வானிலை வழமைக்கு திரும்பி மழை இல்லாத காரணத்தால் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதுவரையில் மண்ணில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்தும் மீட்பு பணிகளை பொலிஸாரும் பொது மக்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியை,  தரம் 9 தரம் 6 கல்விபயிலும் இரண்டு மகன்கள் மற்றும்  வயோதிப பெண் ஒருவர் என நான்கு பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

https://www.virakesari.lk/article/232060

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திட்வா புயல் - இலங்கையின் தற்போதைய நிலவரத்தை காட்டும் 20 புகைப்படங்கள்

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

படக்குறிப்பு,வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வங்கக்கடலில் உருவான திட்வா புயலால் இலங்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலரையும் காணவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

படக்குறிப்பு,நுவரெலியாவிற்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மண் சரிவால் மூடப்பட்டுள்ளது.

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

படக்குறிப்பு,வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர்.

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

படக்குறிப்பு,வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம்

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

படக்குறிப்பு,கடைகளைச் சூழ்ந்துள்ளா மழை வெள்ளம்

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

படக்குறிப்பு,மீட்புப் பணிகளுக்காக படகுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC

இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c74x3zxelw3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்துக்கு முன் – பின்: இலங்கை பாதிப்பை காட்டும் 5 செயற்கைக்கோள் படங்கள்

இலங்கை, திட்வா புயல், வெள்ள பாதிப்பு

பட மூலாதாரம்,Planet Labs PBC

5 டிசம்பர் 2025, 07:22 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் திட்வா புயல் காரணமாக கன மழையால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் தற்போதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன.

களனி ஆறு, மகாவலி ஆறு, தெதுறு ஓயா ஆறு, மல்வத்து ஓயா போன்ற ஆறுகளின் கரையோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடுவளை, தந்திரி மலை போன்ற இடங்களும் தற்போது கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ளது.

திட்வா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

களனி ஆறு

தெதுறு ஓயா ஆறு

வெருகல் ஆறு

மகாவலி ஆறு

மல்வத்து ஓயா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8e94de2wpro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இரவு முழுக்க தென்னை மரத்தில்' - இலங்கையில் உயிர் தப்பியவரின் நேரடி அனுபவம்

இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்

பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நவம்பர் 27 அன்று திட்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் பெய்த கடும் மழை காரணமாக கலாவௌ ஆறு பெருக்கெடுத்த நிலையில், அநுராதபுரம் அவுகண பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது அவுகண பகுதியை சேர்ந்த சம்ஷூதீன் தனது வீட்டை அண்மித்துள்ள பகுதியொன்றுக்கு சென்றுள்ளார்.

வெள்ளப்பெருக்கு காரணமாக நான்கு பக்கமும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், அருகிலுள்ள தென்னை மரத்தில் ஏறியதாக சம்ஷூதீன் கூறுகிறார்.

தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள சம்ஷூதீனுக்கு அந்த சந்தர்ப்பத்தில் வேறு எந்தவொரு வழியும் இருக்கவில்லை.

இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்

பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE

சம்ஷூதீன் சிக்குண்டிருந்ததை பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் அவதானித்து, அவரை காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர்.

எனினும், ஒரு நபருக்கு கூட அந்த தென்னை மரத்தை அண்மித்து செல்வதற்கான இயலுமை கிடைக்கவில்லை. காரணம், வெள்ளம் எல்லை மீறி சென்றதாக பிரதேசத்தைச் சேர்ந்த ரகுமான், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடற்படையினர் சம்ஷூதீனை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர்களினாலும் அவரை காப்பாற்றுவதற்கான இயலுமை கிடைக்கவில்லை.

சம்ஷூதீனை காப்பாற்றும் இறுதி முயற்சியாகவே களமிறங்கியது இலங்கை விமானப்படை.

இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர், சம்ஷூதீனை காப்பாற்றும் நடவடிக்கைகளுக்கு களமிறங்கியது.

விமானப்படையின் மீட்பு குழு உறுப்பினர்கள், தென்னைமரத்தில் செய்வதறியாதிருந்த சம்ஷூதீனை காப்பாற்றினார்கள்.

தான் எதிர்கொண்ட ஆபத்து நிறைந்த அந்த அனுபவங்களை சம்ஷூதீன் பிபிசி தமிழுடன் பகிர்ந்துக்கொண்டார்.

இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்

பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE

'மாடுகளை காப்பாற்ற முடியவில்லை'

'' நீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று அன்று காலை தொலைபேசி அழைப்பொன்று வந்தது. நான் ஓடிச் சென்று பார்த்தேன். நீர் மட்டம் வெகுவாக அதிகரித்திருந்தது. இதற்கு முன்னர் அவ்வாறு வந்ததில்லை. நீர் பெருக்கெடுத்திருந்தது. ஒன்றுமே செய்ய முடியவில்லை.

வீட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் கட்டப்பட்டிருந்த நான் வளர்த்த மாடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாடுகளை காப்பாற்றுவதற்காக நான் நீந்தி சென்றேன். ஐந்து மாடுகள் இருந்தன. நீர் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொன்றாக அடித்துச் சென்றது. ஒரு மாடு கூட காப்பாற்றப்படவில்லை. அனைத்தும் இறந்து விட்டன." என தெரிவித்தார் சம்ஷூதீன்.

''நீர் மட்டம் சடுதியாக அதிகரித்தது. எனக்கு நீந்த தெரியும். ஆனால், நீந்த முடியாதளவு நீர் மட்டம் அதிகரித்திருந்தது. ஒன்றுமே செய்ய முடியாமையினால், அந்த இடத்திலிருந்த தென்னை மரத்தில் ஏறினேன்.'' என சம்ஷூதீன் கூறினார்

தென்னை மரத்தில் ஏறிய பின்னர் என்ன நடந்தது என்பது குறித்தும் சம்ஷூதீன் விளக்கினார்.

இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்

பட மூலாதாரம்,RAHUMAN

படக்குறிப்பு,மரத்திலிருந்த சந்தர்ப்பத்தில் தான் உணவு உட்கொண்ட விதத்தையும் அவர், பிபிசி தமிழிடம் கூறினார்.

என்ன சாப்பிட்டார்?

''யாராவது வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தென்னை மரத்தில் இருந்தேன். பிரதேச மக்கள் படகொன்றை கொண்டு வந்தார்கள். படகை நான் இருந்த இடத்துக்கு கொண்டு வர முடியவில்லை. கயிறுகளை வழங்க இளைஞர்கள் நீந்தி முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை." என்றார்.

மேலும் பேசிய அவர், "ஒரு புறத்தில் காடு, வாழைமரங்கள், பாக்கு மரங்கள் இருந்தன. நான் அங்கு அடித்து சென்றிருந்தால் இறந்திருப்பேன். சுனாமி வந்ததை போன்று ஒரே சந்தர்ப்பத்தில் நீர் சடுதியாக அதிகரித்தது."

மரத்திலிருந்த சந்தர்ப்பத்தில் தான் உணவு உட்கொண்ட விதத்தையும் அவர் கூறினார்.

''என்ன சாப்பிடுவது? சாப்பிடாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் பசி பொறுக்க முடியாமல் இளநீர் ஒன்றை அருந்தினேன். மீண்டும் இளநீரை குடித்தேன். அடுத்த நாள் வரை உண்பதற்கு ஒன்றும் இல்லை. இரவு முழுக்க அங்கேயே கழித்தேன். காலை வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. ஒரு நொடி கூட மழை விடவில்லை. அந்த மழையில் இளநீரை அருந்திக் கொண்டே இருந்தேன்.'' என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்

பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE

'மரம் முறிந்து விழும் அளவுக்கு காற்று'

''யாராவது வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன். அருகில் வந்திருந்தால் பாய்ந்து படகை பிடித்துக்கொண்டிருப்பேன். படகால் வர முடியவில்லை. வருவார்கள் என்று இரவு வரை பார்த்துக்கொண்டிருந்தேன். வரவில்லை. மனதை உறுதியாக வைத்துக்கொண்டு அப்படியே இருந்தேன். மரம் சரிந்தால் பாய்ந்து நீந்திச் செல்லும் எண்ணத்துடன் தயாராகவே இருந்தேன்.'' என அவர் கூறினார்.

நவம்பர் 28 அன்று விமானப்படையினர் வருகை தந்து தன்னை காப்பாற்றியமை குறித்தும் சம்ஷூதீன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''என்னை காப்பாற்றுவதற்காகவே வருகின்றார்கள் என்று நான் அறிந்துகொண்டேன். நான் எழுந்து நின்று அவர்களுக்கு கைகளை காட்டினேன். 'கொஞ்சம் இருங்கள்' என்று கூறி, இரண்டு தடவைகள் சுற்றினார்கள். தென்னை மரம் முறிந்து விழும் அளவுக்கு காற்று வந்தது. என்னால் இருக்க முடியவில்லை. நான் பிடித்துக்கொண்டிருந்தேன்." என அவர் தெரிவித்தார்.

'மீண்டு வருவேன்'

மேலும் பேசிய அவர், "கடவுள் புண்ணியத்தில் என்னை காப்பாற்றினார்கள். எனது உயிரை காப்பாற்றியமைக்காக அவர்களுக்கு புண்ணியம் சேரட்டும். என்னுடைய நண்பரே என்னை காப்பாற்றினார். அவரை கண்ட பின்னர் எனக்கு நம்பிக்கை வந்தது." என்றார்.

தன்னை மீட்ட பின்னர் அநுராதபுரத்திற்கு அழைத்து செல்ல முயன்றதாகவும் அவர் கூறினார்.

"குளிராக இருந்தது. கை, கால்கள் மரத்துப் போயிருந்தன. இந்த காலத்தில் அங்கும் இங்கும் சென்று வர முடியாது என்று சொன்னேன். அதன் பின்னர் கலாவௌ பகுதியில் இறக்கினார்கள். போலீஸாரினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்'' என அவர் கூறினார்.

விவசாயத்தில் ஈடுபடும் சம்ஷூதீன், தன் அனைத்து விளை நிலங்களும் சேதமடைந்துள்ளன என்று கூறினார். எவ்வாறேனும், ''நான் மீண்டு வருவேன்'' என அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3e07jg9q90o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.