Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!

24 December 2025

1766544241_2494574_hirunews.jpg

நாட்டின் வடக்கு தொடருந்து மார்க்கம் இன்று (24) முதல் பயணிகள் தொடருந்து போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் அதன் வழக்கமான கால அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து முற்பகல் 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இந்த தொடருந்தின் முதலாம் வகுப்பு (குளிர்சாதன வசதி) மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கான ஆசன முன்பதிவு வசதிகளையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மட்டக்களப்பு வரையான கிழக்கு தொடருந்து மார்க்கத்தின் சேவைகளும் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகள், காலை 6 மணிக்கு திருகோணமலை நோக்கிப் புறப்படும் தொடருந்தில் பயணித்து, கல் ஓயா சந்தி தொடருந்து நிலையத்தை அடைய வேண்டும்.

பின்னர் அங்கிருந்து மதியம் 12:40 க்குப் புறப்படும் இலக்கம் 6011 ஐ கொண்ட தொடருந்து ஊடாக மட்டக்களப்பைச் சென்றடைய முடியும்.

அதேநேரம், மட்டக்களப்பிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் தொடருந்தில் கல் ஓயா சந்தி நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து கொழும்பு நோக்கிய தொடருந்தில் பயணிகள் தமது பயணத்தைத் தொடரலாம் என தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு நோக்கிய தொடருந்து சேவை

all_24_12_2025.jpg

மட்டக்களப்புக்கான தொடருந்து சேவை

all_12_24.jpg

https://hirunews.lk/tm/437350/from-today-you-can-travel-by-train-to-kankesanthurai-and-batticaloa

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு-யாழ்ப்பாணம் புகையிரத நாளாந்த நேர அட்டவணை எங்கு பெறலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

கொழும்பு-யாழ்ப்பாணம் புகையிரத நாளாந்த நேர அட்டவணை எங்கு பெறலாம்.

இங்கே தேடலாம்

https://eservices.railway.gov.lk/schedule/homeAction.action?lang=en

  • கருத்துக்கள உறவுகள்

Mobitel வட்டிக்கையாளர் எனில் இங்கே டிக்கெட் வாங்கலாம்.

நான் டயலாக் ஆனால் நண்பர் வாங்குவார்.

https://www.mobitel.lk/online-ticket-reservation#e-Ticket

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

Mobitel வட்டிக்கையாளர் எனில் இங்கே டிக்கெட் வாங்கலாம்.

நான் டயலாக் ஆனால் நண்பர் வாங்குவார்.

https://www.mobitel.lk/online-ticket-reservation#e-Ticket

விமான நிலையத்திலிருந்து கோட்டடைக்கு ஒரு பேருந்து ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு போகுதாம்.அது இப்பவும் இருக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

மழை வெள்ளத்தில் சிலிப்பர்கட்டைகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன, ரயில்வே பாலங்கள் உடைந்துவிட்டன என சொல்லப்பட்டது. இவ்வளவு வேகத்தில் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டனவா? @சுவைப்பிரியன் எதற்கும் லைப் ஜெக்கெற், பெரு நடைக்கு தேவையான பூட்ஸ், உலர் உணவு, தண்ணீர், படுக்கும் பை, ரோச் லைட் இவை எல்லாம் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், இது எனக்கு நினைவில் கொண்டுவருவது அந்த தொடரூந்து நிலையங்களின் அறிவுப்பும், அதன் தொனியும்.

அந்த அறிவுப்பு எல்லோரையும் அறிவுப்பு முடியும் வரை கட்டி வைத்து இருக்கும்.

இப்போதும் அப்படியா அறிவுப்பு?

முன்பு மகோவில் புகையிரத சந்தியில் இருந்தே மட்டக்கிளப்புக்கு, இப்பொது புதிய பாதை?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

விமான நிலையத்திலிருந்து கோட்டடைக்கு ஒரு பேருந்து ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு போகுதாம்.அது இப்பவும் இருக்கா.

இப்போ இருக்கா தெரியவில்லை. கொவிடுக்கு முன்பு போனேன். ஏசி பஸ் 250௹ அப்போ எடுத்தார்கள் என நியாபகம். விமான நிலையம் - கட்டுநாயக்க பஸ் நிலையம் இலவச பஸ், கட்டுநாயக்க பஸ்நிலையம்-கோட்டே விரைவுபாதையில் ஏசி பஸ் (ரோசா வான்).

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

ஆம், இது எனக்கு நினைவில் கொண்டுவருவது அந்த தொடரூந்து நிலையங்களின் அறிவுப்பும், அதன் தொனியும்.

அந்த அறிவுப்பு எல்லோரையும் அறிவுப்பு முடியும் வரை கட்டி வைத்து இருக்கும்.

இப்போதும் அப்படியா அறிவுப்பு?

முன்பு மகோவில் புகையிரத சந்தியில் இருந்தே மட்டக்கிளப்புக்கு, இப்பொது புதிய பாதை?

இந்தமுறை தொடரூந்தில் போகவில்லை…

ஆனால் 2024 இல்…கொழம்ப கொடுவ சிட்ட காங்கசந்துறே தக்வா யன தும்பிரிய வேதிகாவ துனேங் பிட்டத்வெய்… என்ற அதே அறிவுபுத்தான்…

இப்போதும் திருமலை மட்டகளப்பு போகும் கிழக்கு ரயில் தடம் வடக்கு தடத்தின் மார்க்கத்தில் இருந்து-மஹோ-வில்தான் பிரிகிறது.

முன்னர் போலவே கல்லோயாவில் கிழக்கு தடம், திருமலை, மட்டகளப்பு என மேலும் பிரிகிறது.

ஒரே மாற்றம். முன்னர் கல்லோயாவில் மட்டகளப்பு போபவர்கள் அதே ரயிலில் இருக்க, திருமலை போவபர்கள் இறங்கி ரயில் மாற வேண்டும்.

இப்போ செய்தியின் படி திருமலை போபவர்கள் ரயிலில் இருக்க, மட்டகளப்பு போவபர்கள் இறங்கி மாற வேண்டும் போலுள்ளது.

7 hours ago, நியாயம் said:

மழை வெள்ளத்தில் சிலிப்பர்கட்டைகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன, ரயில்வே பாலங்கள் உடைந்துவிட்டன என சொல்லப்பட்டது. இவ்வளவு வேகத்தில் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டனவா? @சுவைப்பிரியன் எதற்கும் லைப் ஜெக்கெற், பெரு நடைக்கு தேவையான பூட்ஸ், உலர் உணவு, தண்ணீர், படுக்கும் பை, ரோச் லைட் இவை எல்லாம் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறவும்.

எனக்கும் ஆச்சரியமாக உள்ளது. நான் கேட்டபோது மாசகணக்கில் ஆகும் என சொன்னார் கோட்டையில் இருந்த டிக்கெட் விற்பவர்.

ஆனால் திணைக்கள வெப்சைட் 2 ரயில்களை மட்டுமே பட்டியல் இட்டுள்ளது. இரவு மெயிலை காணவில்லை. வெள்ளத்துக்கு முன் தினமும் 4 ஓடியது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனால் 2024 இல்…கொழம்ப கொடுவ சிட்ட காங்கசந்துறே தக்வா யன தும்பிரிய வேதிகாவ துனேங் பிட்டத்வெய்… என்ற அதே அறிவுபுத்தான்…

பழவெனி வேதிகாவே திபுண ராத்திரி தும்பிறிய தெங் காங்கசந்துறய பலாபிரத்துவே.

இது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

பழவெனி வேதிகாவே திபுண ராத்திரி தும்பிறிய தெங் காங்கசந்துறய பலாபிரத்துவே.

இது எப்படி?

நியமாய் ஐய்யே😂

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

இப்போ இருக்கா தெரியவில்லை. கொவிடுக்கு முன்பு போனேன். ஏசி பஸ் 250௹ அப்போ எடுத்தார்கள் என நியாபகம். விமான நிலையம் - கட்டுநாயக்க பஸ் நிலையம் இலவச பஸ், கட்டுநாயக்க பஸ்நிலையம்-கோட்டே விரைவுபாதையில் ஏசி பஸ் (ரோசா வான்).

நன்றி.அந்த பேருந்து நிச்சயம் இல்லாமல் அதை நம்பி புகையிரதம் பதிவு செய்வது கூடாது.7 மணி நேரம் காத்திருந்து யாழ்ப்பாண எ சி பஸ் எடுப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

இப்போதும் திருமலை மட்டகளப்பு போகும் கிழக்கு ரயில் தடம் வடக்கு தடத்தின் மார்க்கத்தில் இருந்து-மஹோ-வில்தான் பிரிகிறது.

முன்னர் போலவே கல்லோயாவில் கிழக்கு தடம், திருமலை, மட்டகளப்பு என மேலும் பிரிகிறது.

ஆம், யாழில் இருந்து செல்லும் போது மாகோவில் இறங்கி மாறவேண்டும்.

கொழும்பில் இருந்து கிழக்கு செல்வதையே செய்தி சொல்கிறது.

அதில் தான்குழப்பம் ஏற்பட்டது

Intercity ஓடும் போது கூட (1 நாளில் 3 சேவைகள் என்றே நினைவு, காலை, மதியம், இரவு), யாழில் இருந்து கிழக்கு செலும் பொது, மகோவில் சாமத்ததுக்கு கிட்ட இரங்கி மாறுவதை தவிர்க்க, அநேகமானோர் காலையிலேயே புறப்படுவது

ஆனால், இன்டெர்சிட்டி முக்கிய நகரங்களில் மட்டும் தரிப்பதால் மதிய சேவை மகோவை சென்றடைய நேரம் போதும், கொழும்பில் இருந்த்து வரும் கிழக்கு புகையிரஹா சேவையை 10.00 - 12.00 க்கு இடையில் பிடிக்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.