Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

பின் அலனை அவுட்டாக்கிய பந்து சைட் ஸ்பின், ஆனால் பந்தை விடும்போது நடு விரலினால் பந்தின் லைனை மாற்றினார் முஜீப், பந்து ஓப் ஸ்டம்பிற்கு வெளியே போவது போல மட்டையாளருக்கு இருக்கும் ஆனால் பந்து உள்ளே வரும், அடுத்த பந்து ரச்சின் ரவீந்திரவிற்கு பிலிப்பர் போல இருக்கும் ஆனால் பிலிப்பர் இல்லை, பாக் ஸ்பின், இது கட்டு நேராக இருக்கும் பந்து விடுவிக்கும் போது நடுவிரலுக்கு பின் திசையில் சுழலும் மட்டையாளருக்கு பந்து முன்னாலே விழுவது போல இருக்கும் ஆனால் பந்து எதிர்பார்த்த அளவினை விட கூடுதலாக உள்ளே வரும் அத்துடன் பந்தின் கை வீச்சு வேகமாக இருக்கும் ஆனால் நடுவிரலில் பந்து சறுக்கி மெதுவாகி விடும் பந்து பிட்சில் பட்டவுடன் பிட்சில் நின்று நேராக உள்ளே வரும்.

பிலிப்ஸ் ஆரம்பத்தில் முஜீப்பின் கூக்ளியினை கணிக்கவில்லை, கூக்ளி போடும் போது மட்டையாளருக்கு பந்து வீச்சாளரின் பின் கை தெளிவாக தெரியும்.

ரச்சின் துப்பரவா கணிக்கவேயில்லை. பந்து அப்பிடியே காலுக்கும் மட்டைக்கும் இடையால போய் விக்கட்டை உடைக்கும். நீங்கள் தெளிவாச் சொல்லியிருக்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கமிந்து குசால் சேர்ந்து 150க்கு மேல அடிச்சாச்சு. இது காணும் என்று நினைக்கிறன்.

44 minutes ago, alvayan said:

லன்கன்ஸ் ஆருகாண்டியோ புல்லுப்போட்டு பொங்கினவை ...இப்ப அவைக்கே ஆபத்து...ரத்நாயக்கவும் அவுட் ..இந்த மச் வெல்லவிட்டால் உவை நாட்டில் இருந்தபாடில்லை

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, செம்பாட்டான் said:

கமிந்து குசால் சேர்ந்து 150க்கு மேல அடிச்சாச்சு. இது காணும் என்று நினைக்கிறன்.

பொறுங்கோ....பொறுங்கோ பார்ப்பம் ...ஒரு ஓவ்ரிலை 11 பந்துவீசி 19 ரன் கொடுத்து ..2 விக்கட் எடுத்து விட்டினம் ..கைப்பிடிகள் விடாவிட்டால் ...எப்பவோ திண்ணை காலி ...பிக்குமார் கட்டினநூல் வேலை செய்யத்தானே வேண்டும் ..புள்ளிக்கு பயப்படுமாப்போல் இருக்கு ..எனக்கும் அதேதான் ...கடவுள் இருக்கிறான் ..குமாரு

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

ஓம்…ஆனால் இங்கிலாந்துக்கும் ஒரு பாகிஸ்தான் குணம் இருக்கு…3 போட்டி சூப்பராக விளாடினா அடுத்த போட்டியில் சொதப்புவார்கள்.

இலங்கையில் ஒரு சொதப்பல் overdue 😀

4 ரன்னில் என் கணிப்பு தவறியுள்ளது😂

19 hours ago, goshan_che said:

எப்போதும் இங்கிலாந்து banana skin எனப்படும் பெரிய அணி சின்ன அணியிடம் அடிவாங்கும் விடயத்தை வேர்ல்ட் கப்பில் அரங்கேற்றும்.

இதில் நேபாளத்தை போடலாம் என நான் கூட யோசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

4 ரன்னில் என் கணிப்பு தவறியுள்ளது😂

அப்ப என்ன, இங்கிலாந்து பாகிஸ்தான் இலங்கை..... மூவரில் யார் முதலில் தோற்பது என்பதுதான் போட்டியோ. ஏதோ ஒரு சிறிய அணி அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says "SORJATSO ¡SOR VAIBHAV SURYAVANSHI 175 Jude ENGLAND CRICKET BOARD சீனியர் டீம்ல விளையாட வேண்டியவனை எல்லாம் சின்ன பசங்க டீம்ல சேர்த்து எங்க தாலியை அறுக்குறீங்க"

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

@ரசோதரன் க்கு யோகம் அடிக்கப்போகின்றதா?😱

யோகம் அடிக்கவில்லை............ ஞானம் தான் கிட்டியிருக்குது, கிருபன்................🤣.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளில் நான் நேரே அவசரமாக ஞானத்துக்கே போய்விட்டேன்........................😜.

கனவில் வந்த காட்சி, வெறும் கனவாகவே போய்விட்டது:

'இமயம் கண்டேன்

இமயம் கண்டேன்

பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்................'

  • கருத்துக்கள உறவுகள்

ம‌திசா ப‌த்திரானாவை சென்னை க‌ல‌ட்டி விட்ட‌ மாதிரி இல‌ங்கை அணி இவ‌னை எப்ப‌ க‌ல‌ட்டி விடுவின‌ம்😁😛...............

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

யோகம் அடிக்கவில்லை............ ஞானம் தான் கிட்டியிருக்குது, கிருபன்................🤣.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளில் நான் நேரே அவசரமாக ஞானத்துக்கே போய்விட்டேன்........................😜.

கனவில் வந்த காட்சி, வெறும் கனவாகவே போய்விட்டது:

'இமயம் கண்டேன்

இமயம் கண்டேன்

பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்................'

நேபால் ந‌ல்ல‌ அணி என்ற‌த‌ தொட‌ர்ந்து நிறுபிக்கின‌ம்

அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் தென் ஆபிரிக்காவை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து க‌ட‌சி ஓவ‌ரில் தென் ஆபிரிக்கா வீர‌ர் சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்ட‌தால் 2ர‌ன்ஸ் அல்ல‌து மூன்று ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி

வ‌ள‌ந்து வ‌ரும் அணிக‌ளில் நேபால் அணியும் ஒன்று..........................

Edited by வீரப் பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, குல்படின் நைப்பின் அதிரடியான 63 (35) ஓட்டங்களோடு 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி டிம் செய்ஃபேர்ட்டின் வேகமான 65 (42) ஓட்டங்களோடு 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் இல்லை.


இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தெல் 55 (35), ஹரி புரூக் 53 (32) ஆகியோரின் அதிரடி ஆட்டங்களுடனும், வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் எடுத்த புயல்வேக 39 (18) ஓட்டங்களோடும் 7விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பாடிய நேபளம் அணி திபேந்திர சிங் ஐரீ 44 (29), ரோஹித் பெளடேல் 39 (34) ஆகியோரின் வேகமான ஓட்டங்களுடனும், லோகேஷ் பாம் ஆட்டமிழக்காமல் எடுத்த 39 (20) ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை அண்மித்தாலும், இறுதி ஓவரில் சாம் கரனின் இறுக்கமான பந்து வீச்சால் வெற்றி இலக்கிற்கு 10 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: இங்கிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த @ரசோதரன் க்கு புள்ளிகள் இல்லை.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து மெதுவாக முன்னேறினம். இலங்கை கவனமா இருக்கவேண்டிய நேரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ல‌சித் ம‌லிங்கா யோக்க‌ர் கிங்💪

ம‌திச‌ ப‌த்திரனா ஹா ஹா😁😛.........................

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

யோகம் அடிக்கவில்லை............ ஞானம் தான் கிட்டியிருக்குது, கிருபன்................🤣.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளில் நான் நேரே அவசரமாக ஞானத்துக்கே போய்விட்டேன்........................😜.

கனவில் வந்த காட்சி, வெறும் கனவாகவே போய்விட்டது:

'இமயம் கண்டேன்

இமயம் கண்டேன்

பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்................'

கொஞ்சம் மார்க்கமாத்தான் இறங்கி இருக்கிறியல். எல்லாம் அவன் விட்ட வழி.

சுமைதாங்கி. 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, செம்பாட்டான் said:

கொஞ்சம் மார்க்கமாத்தான் இறங்கி இருக்கிறியல். எல்லாம் அவன் விட்ட வழி.

சுமைதாங்கி. 😁

உல‌க‌ கோப்பை இன்னும் முடிய‌ல‌ லொள்😁😛....................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

பொறுங்கோ....பொறுங்கோ பார்ப்பம் ...ஒரு ஓவ்ரிலை 11 பந்துவீசி 19 ரன் கொடுத்து ..2 விக்கட் எடுத்து விட்டினம் ..கைப்பிடிகள் விடாவிட்டால் ...எப்பவோ திண்ணை காலி ...பிக்குமார் கட்டினநூல் வேலை செய்யத்தானே வேண்டும் ..புள்ளிக்கு பயப்படுமாப்போல் இருக்கு ..எனக்கும் அதேதான் ...கடவுள் இருக்கிறான் ..குமாரு

அது அவேன்ட‌ ந‌ம்பிக்கை

பிக்குக‌ளிட‌ம் ஆசிர் வேண்டி விட்டு வெளி நாடு சென்று விளையாடுவ‌து

விளையாடும் வீர‌ர்க‌ள் சுத‌ப்பும் போது அவ‌ர்க‌ளின் க‌ட‌வுளை குறை சொல்லுவ‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை......................

  • கருத்துக்கள உறவுகள்

ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும்

அய‌ர்லாந் வீர‌ர்க‌ள் ஒரு ஓவ‌ரை ப‌த‌ம் பாத்தால் இல‌ங்கை தோல்வி அடைய‌க் கூடும்..............................

  • கருத்துக்கள உறவுகள்

பயந்த மாதிரியே இலங்கை வெல்கிறது. இனி அனைவரும் உறங்கச் செல்லலாம். 😁

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று சுழ‌ல் ப‌ந்தோட‌ அணிய‌ தெரிவு செய்த‌து ந‌ல்ல‌தாய் போச்சு.............இல்லையே வேக‌ ப‌ந்துக்கு அடி விழுந்து இருக்கும்................இன்றையான் ப‌ரிட்சையில் மீண்டும் நான் பாஸ் ஆகி விட்டேன் லொள்😁😛...............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

அயர்லாந்து மெதுவாக முன்னேறினம். இலங்கை கவனமா இருக்கவேண்டிய நேரம்.

அயர்லாந்து அசத்தலான ரீம் ...களத்தடுப்பும் ...பிடிகளிலும் கவனம் செலுத்துயிருந்தால் ..2 விக்கட் இழப்புடன் போட்டியை வென்று இருப்பினம்

இலங்கையின் இன்றைய களத்தடுப்பு பிரமாதம்.....எப்படியும் எனக்கு வெற்றி புள்ளிகள் வந்திருக்கும்

53 minutes ago, வீரப் பையன்26 said:

அது அவேன்ட‌ ந‌ம்பிக்கை

பிக்குக‌ளிட‌ம் ஆசிர் வேண்டி விட்டு வெளி நாடு சென்று விளையாடுவ‌து

திரியை சிரிப்பாக்க...நீங்கள் என்னவென்றால் ..மததுவேசம் கொண்டுவாறியள்..

1 hour ago, வீரப் பையன்26 said:

ல‌சித் ம‌லிங்கா யோக்க‌ர் கிங்💪

ம‌திச‌ ப‌த்திரனா ஹா ஹா😁😛.........................

இதுக்கு சிரிப்பதா ..அழுவதா..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

அயர்லாந்து அசத்தலான ரீம் ...களத்தடுப்பும் ...பிடிகளிலும் கவனம் செலுத்துயிருந்தால் ..2 விக்கட் இழப்புடன் போட்டியை வென்று இருப்பினம்

இலங்கையின் இன்றைய களத்தடுப்பு பிரமாதம்.....எப்படியும் எனக்கு வெற்றி புள்ளிகள் வந்திருக்கும்

திரியை சிரிப்பாக்க...நீங்கள் என்னவென்றால் ..மததுவேசம் கொண்டுவாறியள்..

இதுக்கு சிரிப்பதா ..அழுவதா..

அப்ப‌டி இல்லையே...............

சும்மா பொதுவாக‌ எழுதினேன்..........................

  • கருத்துக்கள உறவுகள்

கமில் மிசாரவின் களத்தடுப்பு அபாரம். ஒரு பத்து ஓட்டங்கள் மட்டில் சேமித்திருப்பான். மைதான எல்லையில் சிங்கன் ஒரு புலி.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

கமில் மிசாரவின் களத்தடுப்பு அபாரம். ஒரு பத்து ஓட்டங்கள் மட்டில் சேமித்திருப்பான். மைதான எல்லையில் சிங்கன் ஒரு புலி.

வளமையை விட ..அபாரம்

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இத்தாலி எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டு விறுவிறுப்பாக‌ இருக்கும்................என‌து தெரிவு ஸ்கொட்லாந்😁😛......................

  • கருத்துக்கள உறவுகள்

க‌ன‌டாவுக்கு நாளைக்கு தென் ஆபிரிக்கா சாத்த‌ப் போகுது😁😛.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.