Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

வேல்ஸ் நாடு இதுக்கு முத‌ல் கிரிக்கேட் விளையாடின‌தை நான் பார்த்த‌து இல்லை ஹா ஹா..................

வேல்ஸ்சுக்கு என தனியாக அணி ஏதும் இல்லை.

ECB யின் முழு பெயர் England and Wales Cricket Board LTD என்பதே.

இங்கிலாந்து county போட்டியில் விளையாடும் Glamorgan கவுண்டி, வேல்ஸ் நாட்டின் ஒரு கவுண்டிதான்.

தலைநகர் கார்டிவ்வில் இங்கிலாந்து விளையாடும் ஒரு டெஸ்ட் மைதானும் அண்மைகாலங்களில் உருவாகியுள்ளது.

5 hours ago, கந்தப்பு said:

2024 இலும் மேற்கிந்தியா, அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியிலும் இதே முறைதான்.

இம்முறை பாகிஸ்தானும் இந்தியாவும் அரை இறுதியில் மோதினால் இந்தியா முதலாவது போட்டியில் கொழும்பில் விளையாடும். மோதவிட்டால் சூப்பர் 8 குழு ஒன்றில் இந்தியா முதலாவது அல்லது இரண்டாவது வந்தால் மும்பையில் (2 வது போட்டியில்) விளையாடும். 2024 t20 போட்டி, சென்றவருடம் நடைபெற்ற மகளிர் கிண்ணப்போட்டி போல இந்தியா அணிக்கு அரை இறுதி போட்டி எங்கே விளையாடும் என்பது முதலில் தெரியும். t20, பெண்கள் மகளிர் போட்டி போல சூழல் பந்துக்கு சாதகமான மைதானத்தில் இந்தியா விளையாடுகிறது.

@கிருபன் நடாத்தும் இந்தப்போட்டியில் பலர் சூப்பர் 8 இல் குழு ஒன்றில் முதலாம் இடத்தில் இந்தியா வந்தால் முதலாவது அரை இறுதி போட்டியில் ( பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவகாட்டாலும்) விளையாடும் என்று விடை எழுதி இருக்கிறார்கள். ஆனால் அரை இறுதியில் இந்தியா பாகிஸ்தான் இடையில் போட்டி நடந்தால் மட்டுமே முதலாவது போட்டியில் இந்தியா விளையாடும். இந்தியா குழு ஒன்றில் ஒன்று அல்லது இரண்டாவதாக வந்தால் எப்போதும் 2 வது அரை இறுதியில் மும்பையில் விளையாடப்போகிறது. இதனால் குழு 2 இல் தெரிவாகும் நாடுகளும் விளையாடப்போகும் போட்டிகளும் இடமாற வாய்ப்பு இருக்கிறது.

இதனால் பலருக்கு புள்ளிகள் கிடைக்காத சந்தர்ப்பம் ஏற்படப்போகுது.

நீண்ட தகவலுக்கு நன்றி.

அவசரத்தில் பதிந்ததில் இதை கவனிக்க தவறிவிட்டேன்.

ஜெய் ஷா வைத்த கண்ணிவெடியில் பாக்கிஸ்தான் மாட்டுதோ இல்லையோ கோஷான் மாட்டி விட்டார்😂

  • Replies 1.4k
  • Views 42.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை க‌ப்ட‌னை உண்மையில் அணியில் இருந்து நீக்க‌னும்..............அவ‌ர் விளையாடின‌ 4விளையாட்டில் பெரிசா சாதிக்க‌ வில்லை

சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌தெஷ‌னா இவ‌ர் இல‌ங்கை அணிக்கு விளையாட‌ வ‌ந்த‌ போது ந‌ல்லா ப‌ந்து போட்டார் இப்போது இவ‌ரின் ப‌ந்து சுழ‌ல் ப‌ந்து ச‌ரி இல்லை அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கிறார் விக்கேட் பெரிதா எடுப்ப‌தில்லை....................இவ‌ருக்கு சிறு ஓய்வு கொடுத்தால் ப‌ழைய‌ ப‌டி ந‌ல்லா விளையாடுவார்............................

இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கந்தப்பு said:

இதனால் பலருக்கு புள்ளிகள் கிடைக்காத சந்தர்ப்பம் ஏற்படப்போகுது.

அரையிறுதிப் போட்டிகள் கேள்விகளின் அடைப்படையில் நடாத்தப் படாவிட்டால் புள்ளிகள் பறிபோகாது. அரையிறுதியில் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். அது முதல் போட்டி அல்லது இரண்டாவது போட்டியாக இருந்தாலும் பிரச்சினை இல்லை! இரண்டுக்கும் சேர்த்து aggregate ஆகக் கொடுக்கப்படும். ஆனால் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு ஒரு புள்ளியும் கிடையாது😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

கிரிக்கேட் விளையாட்டு உட‌லுக்கும் ந‌ல்ல‌ம்

உட‌ல் ப‌யிற்ச்சி செய்த‌ மாதிரியும் இருக்கும் ஓடி போய் ப‌ந்தை பொருக்குவ‌து உட‌ல் ஆரோக்கிய‌த்துக்கு ந‌ல்ல‌ம்😄...........................

அதற்கெல்லாம் நேரம் செலவழிப்பதில்லை, நல்ல உடல் ஆரோக்கியமாகவே இருக்கிறேன் (வேலைக்கு இடைக்கிடை சுகயீனம் காரணம் காட்டி ஓய்வெடுப்பதுண்டு, இலங்கை சிம்பாவே போட்டியினை முழுமையாக பார்க்கவேண்டும் என்ற நோக்கமும் இருந்தது)

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் கிடக்கட்டும் பையா இன்று விளையாட்டு இருக்கா இல்லையா ...... இருந்தால் யாரும் யாரும் ஆடுவார்கள் . .......என்ன நேரம் என்பதை சொல்லுங்கள் . ......! 🙃

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, suvy said:

அதெல்லாம் கிடக்கட்டும் பையா இன்று விளையாட்டு இருக்கா இல்லையா ...... இருந்தால் யாரும் யாரும் ஆடுவார்கள் . .......என்ன நேரம் என்பதை சொல்லுங்கள் . ......! 🙃

அவுஸ்ரேலியா எதிர் ஓமான்

ஜ‌ரோப்பிய‌ நேர‌ம் ம‌திய‌ம் இர‌ண்டு ம‌னிக்கு தொட‌ங்குது................இது தான் ஆர‌ப்ப‌ சுற்று க‌ட‌சி போட்டி..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, suvy said:

அதெல்லாம் கிடக்கட்டும் பையா இன்று விளையாட்டு இருக்கா இல்லையா ...... இருந்தால் யாரும் யாரும் ஆடுவார்கள் . .......என்ன நேரம் என்பதை சொல்லுங்கள் . ......! 🙃

👇🏿

13 hours ago, கிருபன் said:

40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS எதிர் OMA

அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்.................

  • கருத்துக்கள உறவுகள்

ஒமான் அணி தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ப‌டு கேவ‌ல‌மாய் விளையாடின‌து

ம‌ற்ற‌ அணிக‌ள் அங்கினேக்க‌ ப‌ந்து வீச்சில் ம‌ட்டைய‌டியில் சாதிச்சின‌ம்

ஒமான் அணி எல்லாத்திலும் சுத‌ப்ப‌ல்...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இறுதியான முதல்சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஓமான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. வாசிம் அலி மாத்திரம் நிதானமாக 32 (33 பந்துகளில்) ஓட்டங்களை எடுத்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்து, இறுதியில் 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 104 ஓட்டங்களுடனும் சுருண்டுகொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிச்செல் மார்ஷும், ட்ராவிஸ் ஹெட்டும் பந்துகளை நாலாபக்கமும் விளாசித் தள்ளி 6 ஓவர்களிலேயே 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். தொடர்ந்தும் வேகமாக அடித்தாடியபோதும் ட்ராவிஸ் ஹெட் 32 ஓட்டங்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். எனினும் மிச்சல் மார்ஷ் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் 64 (33 பந்துகளில்) ஓட்டங்கள் எடுத்து 9.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

முதல் சுற்றின் 40 போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5220.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

சிறப்பு. 80 புள்ளிகளில் 68ஐப் பெற்ற அல்வாயன், கந்தப்பு. வாழ்த்துகள்.

இனித்தான் விறு விறுப்பான கட்டம். எப்படி அமையப் போகிறது

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, செம்பாட்டான் said:

இனித்தான் விறு விறுப்பான கட்டம். எப்படி அமையப் போகிறது

எனக்கோ?

குப்புறத்தான்😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

எனக்கோ?

குப்புறத்தான்😂

இது என்ன‌ புதுசா

வ‌ழ‌மை போல் ந‌ட‌ப்ப‌து தானே..........................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதலாவது சுப்பர் 8 போட்டி நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தானிடையே நடைபெறவுள்ளது.

சிம்பாவே மற்றும் இலங்கை போட்டி நடைபெற்ற பிரேமதாச மைதானத்திலேயே இப்போட்டி நடைபெறவுள்ளது, பாகிஸ்தானின் மிக சிறப்பான சுழல் பந்து வீச்சுகொண்ட அணியினை நியுசிலாந்து ஒரு பகலிரவு போட்டியில் எதிர்கொள்கிறது.

இலங்கை சிம்ப்பாவே போட்டி பகல் போட்டியாக விளையாடியமையால் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட அப்போட்டியில் முடிவெடுத்திருந்தது, ஆனால் இது பகலிரவு போட்டி, மைதான ஈரலிப்பு இரண்டாவதாக விளையாடும் அணிக்கு மெதுவான ஆடுகளத்தில் பந்து இலகுவாக மட்டைக்கு வர உதவும் என்பதால் இரண்டாவதாக துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்வார்கள்.

இந்த குறூப்பில் பலவீனமான அணியாக நியுசிலாது உள்ளது (இலங்கை ஆடுகள சூழ்நிலைக்கு), பையனின் தெரிவான இஸ் சோதியினை (மணிக்கட்டு சுழல்) நியுசிலாந்து அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது அத்துடன் ஜிம்மி நீசத்திற்கு பதிலாக (சகலதுறை ஆட்டகாரர்) நியுசிலாந்து அணியில் இணைக்குமா?

மறுவளமாக சகல வகையிலும் (பாகிஸ்தானுக்கு ஒரு சொந்த நாட்டு பிட்ச் போன்ற, மற்றும் சிறந்த சுழல்) சாதகமான நிலையில் பாகிஸ்தான் விளையாடவுள்ளது, இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கே சூழ்நிலைகள் சாதகமாகவுள்ளது.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

இது என்ன‌ புதுசா

வ‌ழ‌மை போல் ந‌ட‌ப்ப‌து தானே..........................

நிலைமாறும் உலகில் ….

நிலைக்கும் கோஷான் வீடு 😂

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து எப்போது திறமையாக திட்டமிடுபவர்கள் இந்த சூழ்நிலை மாற்றத்தினை எவ்வாறு அதற்கெதிராக திட்டமிட்டு எதிர்கொள்கிறார்கள் என்பதில் அவர்கள் வெற்றி வாய்ப்புள்லது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

சோதியினை

3 minutes ago, vasee said:

நீசத்திற்கு

ஆரும் தெரியாத ஆட்கள் வாசிச்சால், நியூசிலாந்திலும் தமிழ் ஆட்கள் விளையாடுவாதாய் நினைப்பார்காள்😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

எனக்கோ?

குப்புறத்தான்😂

நீங்கள் சொல்லுறதும் சரிதான். இப்போ குப்பிற நிக்கிறபடியால், இனி குப்புற விழுந்தால், மேல் நோக்கி எல்லோ போவீர்கள். குப்பிற நிக்கிற ஆள் குப்பிற விழுந்தால், விளைவு மேல் நோக்கி. நான் சொல்லும் தர்க்கம் சரி தானே. இரண்டு (-) சேர்ந்து (+) ஆகிற மாதிரி. 😉

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

இன்று முதலாவது சுப்பர் 8 போட்டி நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தானிடையே நடைபெறவுள்ளது.

சிம்பாவே மற்றும் இலங்கை போட்டி நடைபெற்ற பிரேமதாச மைதானத்திலேயே இப்போட்டி நடைபெறவுள்ளது, பாகிஸ்தானின் மிக சிறப்பான சுழல் பந்து வீச்சுகொண்ட அணியினை நியுசிலாந்து ஒரு பகலிரவு போட்டியில் எதிர்கொள்கிறது.

இலங்கை சிம்ப்பாவே போட்டி பகல் போட்டியாக விளையாடியமையால் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட அப்போட்டியில் முடிவெடுத்திருந்தது, ஆனால் இது பகலிரவு போட்டி, மைதான ஈரலிப்பு இரண்டாவதாக விளையாடும் அணிக்கு மெதுவான ஆடுகளத்தில் பந்து இலகுவாக மட்டைக்கு வர உதவும் என்பதால் இரண்டாவதாக துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்வார்கள்.

இந்த குறூப்பில் பலவீனமான அணியாக நியுசிலாது உள்ளது (இலங்கை ஆடுகள சூழ்நிலைக்கு), பையனின் தெரிவான இஸ் சோதியினை (மணிக்கட்டு சுழல்) நியுசிலாந்து அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது அத்துடன் ஜிம்மி நீசத்திற்கு பதிலாக (சகலதுறை ஆட்டகாரர்) நியுசிலாந்து அணியில் இணைக்குமா?

மறுவளமாக சகல வகையிலும் (பாகிஸ்தானுக்கு ஒரு சொந்த நாட்டு பிட்ச் போன்ற, மற்றும் சிறந்த சுழல்) சாதகமான நிலையில் பாகிஸ்தான் விளையாடவுள்ளது, இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கே சூழ்நிலைகள் சாதகமாகவுள்ளது.

இதை தான் நானும் நினைத்தேன்

மேக‌ம் ம‌ழை மூட்ட‌மாய் தெரிந்த‌து.............ப‌ந்து சுழ‌ல‌ வில்லை பிச்சில் வெப்ப‌ம் இல்லாம‌ ச‌ரியான‌ மாற்ற‌ம் தெரிந்த‌து..................

நியுசிலாந்தை விட‌ பாக்கிஸ்தான் சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை வைத்து இருக்கும் அணி........................வெற்றி வாய்ப்பு அதிக‌ப் பாக்கிஸ்தானுக்கு

பாப்போம் நாளைக்கு............................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

நீங்கள் சொல்லுறதும் சரிதான். இப்போ குப்பிற நிக்கிறபடியால், இனி குப்புற விழுந்தால், மேல் நோக்கி எல்லோ போவீர்கள். குப்பிற நிக்கிற ஆள் குப்பிற விழுந்தால், விளைவு மேல் நோக்கி. நான் சொல்லும் தர்க்கம் சரி தானே. இரண்டு (-) சேர்ந்து (+) ஆகிற மாதிரி. 😉

Laws of mathematics, physics இற்கு அப்பாற்பட்ட சக்தி கோஷான் என்பதை உங்களுக்கு காலம் உணர்த்தும்😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

நியுசிலாந்து எப்போது திறமையாக திட்டமிடுபவர்கள் இந்த சூழ்நிலை மாற்றத்தினை எவ்வாறு அதற்கெதிராக திட்டமிட்டு எதிர்கொள்கிறார்கள் என்பதில் அவர்கள் வெற்றி வாய்ப்புள்லது.

ஆரம்ப வீரர்கள், சிறந்த தொடக்கம் குடுத்தால் சரி. அவர்களின் வேகப் பந்தா, பாகிஸ்தானின் சுழல் பந்தா......

நியுசிலாந்தின் முக்கிய ஆயுதம், அவர்களின் களத்தடுப்பு. பாகிஸ்தான் கிட்டவும் வர முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vasee said:

இன்று முதலாவது சுப்பர் 8 போட்டி நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தானிடையே நடைபெறவுள்ளது.

சிம்பாவே மற்றும் இலங்கை போட்டி நடைபெற்ற பிரேமதாச மைதானத்திலேயே இப்போட்டி நடைபெறவுள்ளது, பாகிஸ்தானின் மிக சிறப்பான சுழல் பந்து வீச்சுகொண்ட அணியினை நியுசிலாந்து ஒரு பகலிரவு போட்டியில் எதிர்கொள்கிறது.

இலங்கை சிம்ப்பாவே போட்டி பகல் போட்டியாக விளையாடியமையால் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட அப்போட்டியில் முடிவெடுத்திருந்தது, ஆனால் இது பகலிரவு போட்டி, மைதான ஈரலிப்பு இரண்டாவதாக விளையாடும் அணிக்கு மெதுவான ஆடுகளத்தில் பந்து இலகுவாக மட்டைக்கு வர உதவும் என்பதால் இரண்டாவதாக துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்வார்கள்.

இந்த குறூப்பில் பலவீனமான அணியாக நியுசிலாது உள்ளது (இலங்கை ஆடுகள சூழ்நிலைக்கு), பையனின் தெரிவான இஸ் சோதியினை (மணிக்கட்டு சுழல்) நியுசிலாந்து அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது அத்துடன் ஜிம்மி நீசத்திற்கு பதிலாக (சகலதுறை ஆட்டகாரர்) நியுசிலாந்து அணியில் இணைக்குமா?

மறுவளமாக சகல வகையிலும் (பாகிஸ்தானுக்கு ஒரு சொந்த நாட்டு பிட்ச் போன்ற, மற்றும் சிறந்த சுழல்) சாதகமான நிலையில் பாகிஸ்தான் விளையாடவுள்ளது, இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கே சூழ்நிலைகள் சாதகமாகவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் 21 ஆம் திகதி பிறந்துவிட்டது. நான் ஏன் நீங்கள் இன்று என எழுதினீங்க என்று சற்று குழம்பிவிட்டேன்!😄

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

Laws of mathematics, physics இற்கு அப்பாற்பட்ட சக்தி கோஷான் என்பதை உங்களுக்கு காலம் உணர்த்தும்😂

ஏதாவது (+)வா சொல்லுவம் என்டால்... நீங்கள் எவடம். மதவடியா. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன.

சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவான அணிகள்:

குழு A

இந்தியா

பாகிஸ்தான்

குழு B

ஸிம்பாப்வே

சிறிலங்கா

குழு C

மேற்கிந்தியத் தீவுகள்

இங்கிலாந்து

குழு D

தென்னாபிரிக்கா

நியூஸிலாந்து

large.IMG_5221.jpeglarge.IMG_5222.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, செம்பாட்டான் said:

நியுசிலாந்தின் முக்கிய ஆயுதம், அவர்களின் களத்தடுப்பு. பாகிஸ்தான் கிட்டவும் வர முடியாது

25 ஓட்டங்களை சேமிப்பார்கள் எனபார்கள்.

பாக்கிஸ்தான் களதடுப்பில் இப்போ ஓரளவு ஓக்கே ஆனாலும் நியூசிலாந்த்துக்கு கிட்ட அல்ல தூரவும் வராயினம்.

2 minutes ago, செம்பாட்டான் said:

ஏதாவது (+)வா சொல்லுவம் என்டால்... நீங்கள் எவடம். மதவடியா. 😁

😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.