Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அட்லாண்டா (WANF/கிரே நியூஸ்) - வால்மார்ட் கடையில் ஒரு குழந்தையைக் கடத்த முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தனது வாழ்க்கை தலைகீழாக மாறியதாகக் கூறி, ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒருவர் அக்வொர்த் நகராட்சி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் கழித்தார், மேலும் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பு மிரட்டல்களையும் பெற்றதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பரில் நகராட்சிக்கு அனுப்பப்பட்ட ஒரு முன் அறிவிப்பின்படி, மகேந்திர படேல் அவதூறு, மானநஷ்டம், கவனக்குறைவு, தவறான சிறைவைப்பு, மன உளைச்சல் மற்றும் பல காரணங்களுக்காக அக்வொர்த் நகராட்சியிடம் இருந்து 25 மில்லியன் டாலர் இழப்பீடு கோருகிறார்.

மார்ச் மாதம் வால்மார்ட் கடையில் ஒரு குழந்தையைக் கடத்த முயன்றதாக படேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு எதிரான அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளும் ஆகஸ்ட் மாதம் கைவிடப்பட்டன. படேலின் வழக்கறிஞர் ஆஷ்லே மெர்ச்சன்ட், இந்த முழு சம்பவத்தையும் ஒரு தவறான புரிதல் என்று கூறினார். தனது கட்சிக்காரர், கைகளில் நிறைய பொருட்களை வைத்திருந்த ஒரு தாய்க்கு உதவ மட்டுமே முயன்றார் என்றும் அவர் தெரிவித்தார். படேல் தனது வயதான தாய்க்கு டைலெனால் மருந்து வாங்குவதற்காக கரோலின் மில்லர் என்ற வால்மார்ட் வாடிக்கையாளரிடம் உதவி கேட்டபோது இந்தச் சம்பவம் தொடங்கியதாக மெர்ச்சன்ட் கூறுகிறார். கண்காணிப்பு வீடியோவில், மில்லர் தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் ஒரு மொபிலிட்டி ஸ்கூட்டரில் பயணிப்பது தெரிகிறது.

மில்லர் மருந்தைச் சுட்டிக்காட்ட எழுந்தபோது, தன் மடியில் இருந்த குழந்தையை கீழே விழாமல் தடுக்க படேல் குனிந்ததாக மெர்ச்சன்ட் கூறுகிறார். 30 நிமிடங்களுக்குப் பிறகு, மில்லர் அக்வொர்த் காவல் துறைக்குத் தொலைபேசி செய்து, கடத்தல் முயற்சி குறித்துப் புகார் அளித்ததாகப் பதிவுகள் காட்டுகின்றன. தனது குழந்தையை இழுத்துச் செல்வதில் நீண்ட நேரம் நடந்த ஒரு போராட்டத்திற்குப் பிறகு படேல் அங்கிருந்து சென்றுவிட்டதாக அவர் அந்தச் சம்பவத்தை விவரித்தார். தன் குழந்தைகளுக்கு உதவுவதை மில்லர் விரும்பவில்லை என்பதை உணர்ந்ததும் படேல் அங்கிருந்து சென்றுவிட்டதாக மெர்ச்சன்ட் கூறுகிறார்.

அவர் தேடிக்கொண்டிருந்த டைலெனால் மருந்தை கண்டுபிடித்து, அதை வாங்கி, அந்தச் சம்பவம் நடந்த சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு கடையை விட்டு வெளியேறிவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, படேல் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவருக்குப் பிணை வழங்கப்படுவதற்கு முன்பு அவர் 46 நாட்கள் சிறையில் இருந்தார்.

https://www.kbtx.com
No image preview

Man accused of trying to kidnap toddler from Walmart sues...

The man's lawyer called the whole thing a misunderstanding, saying her client was merely trying to help a mother who had her hands full.

Edited by ஈழப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக ஒரு குழந்தை விழப்போகுதே என்று குழந்தையைப் பிடித்தவருக்கு

ஒருவாரமாக கம்பி எண்ணியிருக்கிறார்.

சிலவேளை இவர் ஒரு வெள்ளையராக இருந்திருந்தால்

இவர்களால் மிகவும் பாராட்டப்பட்டிருக்கலாம்.

இதையெல்லாம் படிப்பினையாக வைத்து என்ன தான் நடந்தாலும்

கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

சாதாரணமாக ஒரு குழந்தை விழப்போகுதே என்று குழந்தையைப் பிடித்தவருக்கு

ஒருவாரமாக கம்பி எண்ணியிருக்கிறார்.

சிலவேளை இவர் ஒரு வெள்ளையராக இருந்திருந்தால்

இவர்களால் மிகவும் பாராட்டப்பட்டிருக்கலாம்.

இதையெல்லாம் படிப்பினையாக வைத்து என்ன தான் நடந்தாலும்

கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியுமா?

இது அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் அதிகம் நிகழக் கூடிய ஒரு ஆபத்துத் தான். ஜோர்ஜியாவின் தலை நகரான சவன்னாவில் சில ஆண்டுகள் முன்னர் ஒரு இந்திய வயோதிபர் காலை நடைப் பயிற்சி சென்ற போது "சந்தேகத்திற்கிடமானவர் திரிகிறார்" என்று யாரோ பொலிசைக் கூப்பிட பொலிஸ்காரர் வந்து அவரிடம் உரையாட முயல்கிறார். வயோதிபருக்கு ஆங்கிலம் தெரியாது, அவர் சிரித்து விட்டு தொடர்ந்து நடக்க, அந்தப் பொலிஸ்காரர் அவரை நிலத்தில் தள்ளி வீழ்த்திக் கைது செய்ததில் அவரது கழுத்தெலும்பு பாதிக்கப் படுகிறது. பல நாட்கள் மருத்துவ மனையில் இருந்த அவரது குடும்பம் நகர நிர்வாகம் மேல் வழக்குப் போட்டு சில மில்லியன்கள் நட்ட ஈடு பெற்றார்கள் என நினைக்கிறேன்.

ஒரேயடியாக அச்சம் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அவதானமாக இருக்க வேண்டும். தேவையின்றி ஒருவருக்கு உதவப் போகக் கூடாது. இது எங்கள் தென்னாசியக் கலாச்சாரத்தில் இருந்து வேறுபாடானது தான், ஆனால் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது பாதுகாப்பிற்கு அவசியம். "வெள்ளையின மீட்பர்கள்" வந்து இது போன்ற நிறவாதம் பார்க்கும் இளம் தாய்மாருக்கு உதவுவார்கள். இந்த ஆசியரை 2 மாதங்கள் சிறையில் வைக்கச் செய்த அதே பெண்ணுக்கு, சில நிமிடங்களில், இன்னொரு வெள்ளையின ஆண் அவரது வண்டிலைத் தொட்டு உதவும் வீடியோவையும் வால்மார்ட் சேர்த்தே வெளியிட்டு உதவியிருக்கிறது.

எனவே தான், தென் மாநிலங்களில் வசிக்கும் பிறவுண் மனிதர்கள், வெள்ளையின மீட்பர்களை உதவ அனுமதித்து விட்டு வாழ்க்கையை அமைதியாக அனுபவிக்க வேண்டுமென்கிறேன்😇.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஒரேயடியாக அச்சம் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அவதானமாக இருக்க வேண்டும். தேவையின்றி ஒருவருக்கு உதவப் போகக் கூடாது.

எனது மனைவிக்கும் குழந்தைகளுக்கு உதவுவதில் அலாதி பிரியம்.

எப்ப முறைப்பாடு செய்கிறாங்களோ என்று சொல்லுவேன்.

இந்த கதையை சொல்லும் போது கொஞ்சம் சிந்திக்கிறா.

பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் இதே போல் ஒரு சம்பவம் நான் அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் நடந்திருந்தது, பஞ்சாப் பின்னணியினை கொண்ட ஒருவரின் தந்தையினை வரவழைத்திருந்தனர், அவர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வெள்ளையின குழந்தையினை தூக்கியதாகவும் அதனை ஆந்த குழந்தையின் தாய் காவல்துறையில் முறையீடு செய்து நீதிமன்றம் சென்று அவரின் மகன் நீதிமன்றில் இந்தியாவில் குழந்தைகளை தூக்குவது சாதாரண விடயம் அந்த மனநிலையில் செய்துவிட்டார் என கூறியும் அவரினை (தந்தையினை) நீதிமன்றம் நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக கூறினார்கள்.

இன்னுமொருவர் ஒரு வெள்ளையினை பெண் பின்னால் சுற்றிதாக நீதிமன்றம் சென்றபோது பொலிவூட் சினிமாவில் அவ்வாறுதான் காதலிப்பது என நீதிமன்றில் கூறியதாக வாசித்த நினைவுள்ளது.

வேறுபட்ட கலாச்சாரங்களில் வந்தவர்களினால் அறியாமையினால் ஏற்படும் தவறாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

48 minutes ago, vasee said:

வேறுபட்ட கலாச்சாரங்களில் வந்தவர்களினால் அறியாமையினால் ஏற்படும் தவறாக இருக்கலாம்.

இந்தக் கலாச்சார வேறுபாடுகள் பற்றிய விழிப்புணர்வின்மை வேற்று நாட்டவருக்கு மட்டுமல்லாமல், வேற்று மாநிலத்தவர், ஒரே மாநிலத்தின் வேற்று நகரத்தவர் போன்றவர்களுக்கும் ஆப்பாக முடிந்திருக்கிறது.

சில ஆண்டுகள் முன்பு, ஒஹையோவில் ஒரு பெரும்பனிப் புயல் வந்து, வீதிகளில் இருந்து வாகனங்கள் சறுக்கி மீடியனில் மாட்டிக் கொண்ட நிலை. இப்படி மாட்டிக் கொண்ட ஒரு வாகனத்தை, உதவும் நோக்கில் இன்னொரு வழிப்போக்கர் அணுகி கண்ணாடியைத் தட்டிய போது உள்ளே இருந்த அரை லூசுப் பயல் துப்பாக்கியால் சுட்டதில் உதவ வந்தவர் இறந்தார். சுட்டவருக்கு பின்னர் நீண்ட சிறை கிடைத்தது, ஆனால் ஒரு நல்ல மனிதர் உலகில் இருந்து மறைந்தார்.

இங்கே வாகனங்களை ஒரு வீதியில் திருப்ப வேண்டிய தேவை (U-turn) வந்தால், முடிந்த வரையில் எந்த தனியார் வீடுகளின் வாசல் பகுதி (driveway) யினுள்ளும் நுழையாமல் திருப்ப வேண்டும் என ஆலோசனை இருக்கிறது. நியூ யோர்க் நகரில் இருந்து வடக்கில் இருக்கும் நியூயோர்க் மாநில கிராமம் ஒன்றுக்குச் சென்ற ஒரு இளையோர் குழு, ஒரு தனியார் வீட்டின் வாசலில் நுழைந்து வாகனத்தைத் திரும்ப முயன்ற போது உள்ளேயிருந்து வந்த ஒரு கிழவர் வாகனத்தை நோக்கிச் சுட்டதில் ஒரு இளம் பெண் பலியானார். இந்தக் கிழவருக்கும் நீண்ட சிறை கிடைத்தது.

எந்த வீட்டில்/வாகனத்தில் எத்தகைய மனப் பிறழ்வுடைய மனிதர்கள் இருப்பார்கள் என்ற அறுதியில்லாத காரணத்தால் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே 911 அல்லது உள்ளூர் காவல் துறையை அழைப்பதும் ஏனையோருக்கு உதவும் ஒரு பாதுகாப்பான வழி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.