Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மரபுரிமை சுற்றுலா

DJI_0424-780x470.jpg

கட்டுரை மற்றும் படம்| North East Narrative

நமது கடந்த காலத் தலைமுறைகள் நமக்காக விட்டுச்சென்றவைகள் மரபுரிமைகள் ஆகும். அவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இதனைத் தொட்டுணரக்கூடிய மரபுரிமைகள் (Tangible Heritage) எனவும், தொட்டுணர முடியாத மரபுரிமைகள் (Intangible Heritage) எனவும் இரண்டாக வகுப்பர். நினைவுச்சின்னங்கள், பண்டைக்கால கட்டடங்கள், கலைப்பொருட்கள் போன்றன தொட்டுணரக்கூடிய மரபுரிமைகளாகவும், பண்டைக்கால தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலைநிகழ்ச்சிகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் கதைகள், மரபுவழிப் பாடல்கள் போன்றன தொட்டுணரமுடியாத மரபுரிமைகளாகவும் கொள்ளத்தக்கன.

மரபுரிமைகள் என்ன செய்யும்?

இத்தகைய மரபுரிமைகள், எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றைக் கடத்தும் பணியை செவ்வனே செய்கின்றன. குறித்தவொரு பிராந்தியத்தின் வாழும் மக்களின் தனித்துவமான அடையாளக்கூறுகளைக் கட்டிக்காக்கின்றன. இனம்சார் உணர்வு மேலிடவும், தக்கவைக்கவும் உதவுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக குறித்தவொரு மரபுரிமைச் சின்னம் காணப்படுகின்ற பிராந்தியத்தின் சுற்றுலாத்துறை விருத்தியடையவும், அதன்விளைவாக அப்பிராந்தியத்தின் வரலாறு உள்ளிட்ட பண்பாட்டுக்கூறுகள் உலகத்தவர்களுக்கு எடுத்துச்செல்லப்படவும், பொருளாதாரம் மேம்படவும் உதவுகின்றன.

ஈழத்தமிழர் மரபுரிமைகள் எத்தகையன?

இலங்கையின் வடக்கு கிழக்கு பாகங்களில் வாழுகின்ற ஈழத்தமிழர்களிடம் இருக்கின்ற மரபுரிமைகளை எந்த வகைக்குள் உள்ளடக்குவது என்கிற கேள்வி எழுவது இயல்பானது. இப்பிராந்தியத்தில் போரில் அழிக்கப்பட்டவைபோக, தற்போது எஞ்சியிருக்கின்ற மரபுரிமைகளுக்குள் அனேகமானவை பண்பாட்டு மரபுரிமைகள் (Cultural Heritage) என்கிற வகையறாவுக்குள்ளேயே உள்ளடக்கத்தக்கவை. அவற்றுள் தொட்டுணரக்கூடியவையும், தொட்டுணரமுடியாதவையும் அடங்கும்.

அண்மையில், சர்வதேச சுற்றுலாப் பயணங்களுக்கான விபரிப்பு சஞ்சிகையான Lonely Planet இவ்வருடத்தில் (2026) சுற்றுலாப் பயணிகள் உலகளவில் பயணம் செய்வதற்கெனத் தெரிவுசெய்யக்கூடிய சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாண நகரத்தைத் தெரிவுசெய்திருந்தது. அச்சஞ்சிகையில், யாழ்.நகரானது தமிழ் கலாசார விழுமியங்களைக் கற்க விரும்புபவர்களுக்குப் பொருத்தமான நகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தொடர்பான பார்வையில் இப்படியோர் அடையாளத்தைப் பிடித்திருக்கும் யாழ்ப்பாணத்தைத் தமிழர் பண்பாட்டு மரபுரிமைசார் இடமாகக் காட்டுவது எப்படி என்பதற்கான எழுத்துவடிவிலான சுற்றுலா வழிகாட்டியாக இந்தக் கட்டுரைத்தொடர் அமையும்.

கீரிமலை

யாழ்.குடாநாட்டில் இருக்கின்ற மிக முக்கியமான பண்பாட்டு மரபுரிமை மையங்களில் கீரிமலையும் ஒன்றாகும்.  யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே 19 கிலோமீற்றர்கள் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. ஆழமற்ற, சுண்ணக்கற்பாறைகளால் சூழ்ந்த அழகிய கடற்கரையும்,  யாழ்ப்பாண பாரம்பரிய கட்டடக் கலைமரபில் அமைந்த கட்டடங்களும் இந்தக் கிராமத்திற்கு எல்லையிட்டு நிற்கின்றன.

கீரிமலையை அடைவதற்கான இலகு பயணம்

யாழ்ப்பாண நகர மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இக்கிராமத்திற்கு அரச மற்றும் தனியார் பேரூந்துகள் மூலமாகப் பயணம் செய்யலாம். அதேபோல தனியார் முச்சக்கர வண்டிகள் மூலமாகவும் பயணிக்கலாம். அரச, தனியார் பேரூந்துகளின் கட்டணம் 200 ரூபாவுக்குட்பட்டதாகவும், முச்சக்கரவண்டிகளின் கட்டணம் 2500 ரூபாவுக்குட்பட்டதாகவும் காணப்படும். யாழ்.நகரிலிருந்து புறப்பட்டால் 45 நிமிட நேரத்திற்குள் இவ்விடத்தினை அடையலாம்.

கீரிமலையில் பார்க்கவேண்டிய இடங்கள்

கீரிமலையின் என்கிற இந்தக் கடற்கரை கிராமத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் முதன்மையானது நகுலேச்சரம் சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள மிகத் தொன்மையான ஐந்து சிவன் கோயில்களில் ஒன்றாக நகுலேச்சரம் காணப்படுகின்றது. இக்கோயிலின் வரலாறானது இராமயணக் காலத்திலிருந்தே ஆரம்பிப்பதாகக் குறிப்புகள் உண்டு. இறந்தோருக்கான பிதிர்க்கடன் ஆற்றுவதற்குப் பிரசித்தி பெற்ற  நகுலேச்சர கோயிலின் உருவாக்கம் தொடர்பில் ஐதீகக் கதையொன்று உண்டு.

15ஆம் நூற்றாண்டில் இலங்கையைத் தம் காலனியாத்திக்கத்தின் கீழ் வைத்திருந்த போத்துக்கேயர்கள் மிகத் தொன்மையான இக்கோயிலை முதலில் அழித்தனர். பின்னர் ஆறுமுகநாவலர் எடுத்த முயற்சியின் பலனாக 1894 ஆம் ஆண்டில் மீண்டும் புனருத்தானம் செய்து திறக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நகுலேச்சரம் முற்றாக சேதமடைந்தது. தற்போது மீளவும் புதுப்பொலிவுடன் கட்டியமைக்கப்பட்டு, வர்ணமிகு புதிய கோயிலாக நகுலேச்சரம் காட்சிதருகின்றது.

நகுலேச்சரத்தின் வரலாறு

முன்பொரு காலத்தில் சுதாமா எனும் முனிவர் மேரு மலையில் தவம் செய்துகொண்டிருந்தபோது, அவரின் தவத்தை குழப்பிய குற்றத்திற்காக யமத்கினி எனும் வேடன் முனிவரின் சாபத்திற்குள்ளானார். அச்சாபத்தினால் அவர் கீரி முகம் அமையப்பெற்றார். கீரிமுகம் பெற்ற வேடன் தற்போதைய நகுலேச்சரத்தை அண்மித்த கடலில் நீராடி தன் கீரிமுகத்தை நீங்கப் பெற்றமையால் அவர் நகுல முனிவர் என அழைக்கப்பட்டார். அதனால் அந்தக் கடற்கரை கிராமத்திற்கு கீரிமலை என்றும், நகுலகிரி என்றும் பெயர்பெற்றது. பின்னாளில் நகுல முனிவர் வழிபட்ட இடம் ஆனபடியால், அங்கு அமைந்த சிவ ஆலயமும் நகுலேச்சரம் எனப் பெயர்பெற்றது.

DJI_0441-1024x576.jpg

கீரிமலை நகுலேச்சரம் கோயில்

கீரிமலை தீர்த்தக் கேணி

கீரிமலைக்கு வருகின்ற பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அதிகம் கவருகின்ற இடமாக நீள்வட்ட வடிவான அழகிய தீர்த்தக்கேணி காணப்படுகின்றது. எக்காலத்திலும் நீர் வற்றாத, உப்புத் தன்மையற்ற இத்தீர்த்தக்கேணியில் பகல் வேளைகளில் நீராடுவது, உடலில் உள்ள நோய்களைத் தீர்க்கும் என நம்பப்படுகின்றது.

DJI_0401-1024x576.jpg

கீரிமலை தீர்த்தக்கேணி

சிறாப்பர் மடம்

கீரிமலையில் அமைந்துள்ள சிறாப்பர்மடமானது யாழ்ப்பாணத்து பாரம்பரிய சமயம்சார் கட்டடக் கலை மரபின் எச்சமாக காணப்படுகின்றது. 1870ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் கதிரவேல் என்பவர் ”நகுலேசுவர சுவாமிகள் தண்ணீர் பந்தல்” எனும் பெயரில் இம்மடத்தினை அமைத்தார். அவர் அக்காலத்தில் பிரபலமான ”சிறாப்பர்” பதவியைப் பெற்றிருந்தமையால், பின்நாட்களில் சிறாப்பர் மடம் என அழைக்கப்பட்டது. கீரிமலைக்கு வருகின்ற யாத்திரிகர்கள் தங்கிநின்று ஓய்வு எடுக்கவும், தியானம் செய்யவும், சமயத் தேவைகளுக்காகவும் இந்த மடம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதுபோல கீரிமலையை அண்மித்த பகுதிகளில் 13 மடங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. அவை அனைத்தும் இன்று அழிவடைந்துவிட்டன. சிறாப்பர் மடமும் போர்க்காலத்தில் மோசமாக சிதைவடைந்த போதிலும், அதன் கட்டட அமைப்பை இப்போதும் பார்வையிடலாம்.

மன அமைதி தரும் தியான மண்டபம்

கீரிமலையின் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மண்டபம் தியானம் செய்வதற்கு மிகப் பொருத்தமான இடமாகும். வெளிநாட்டுப் பயணிகளும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகாலை வேளையில் இந்த மண்டபத்திற்கு வருகைதந்து, மெல்லிய கடல் அலையின் ஓசையைக் கேட்படி மனதுக்கு அமைதி தரும் தியானத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் தியான மண்டபமும், தியானம் மேற்கொள்வதற்கான கோயிலும் கீரிமலையில் அமைக்கப்பட்டுள்ளது.

DJI_0400-1024x576.jpg

கீரிமலை கடற்கரையில் அமைந்துள்ள யாத்திரிகர்களுக்கான மண்டபம்

கீரிமலையில் பார்க்கக்கூடிய சடங்கு

கீரிமலை ஆலயச்சூழலில் இறந்தோர்க்கு பிதிர்க்கடன் செய்யும் வகையிலான சடங்குகளும் இடம்பெறும். அதிகாலை 3 மணி தொடக்கம் சூரிய உதயம் நிகழும் வரைக்கும் இந்தச் சடங்கினைப் பார்க்க முடியும். சைவ சமயத்தைப் பின்பற்றுகின்ற தமிழ் மக்கள் தம் குடும்பத்தில் இறந்த ஒருவரின் 16ஆம் நாள் கீரிமலைக்கு அதிகாலை வேளை வருகைதந்து, சமய முறைப்படி, இறந்தவர் குறித்த சடங்குகளைச் செய்வதோடு, இறந்தவரை எரித்த பின் எஞ்சிய சாம்பலையும் அக்கடலில் கரைத்துச் செல்வர்.

இதனைவிட இறந்தவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இடம்பெறும் ஆடி ஆமாவாசை வழிபாட்டு நிகழ்வுகளும் இங்கு சிறப்பாக இடம்பெறும். நாடு முழுவதுமிருந்து பெருமளவிலான பக்தர்கள் இவ்விடத்திற்கு வருகைதந்து சடங்குகளைச் செய்வர்.

உணவு மற்றும் தங்குமிடம்

கீரிமலைக்கு அண்மித்த தெல்லிப்பளை, காங்கேசன்துறை போன்ற இடங்களில் அதிகளவான தங்ககங்கள் உள்ளன. அதேபோல யாழ்ப்பாணத்தின் உணவுகளைப் பரிமாறும் உணவகங்களும் கீரிமலைக்குப் பயணிக்கும் சாலை ஓரங்களில் உள்ளன. கீரிமலையில் ”அம்மாச்சி உணவகம்” என அழைக்கப்படுகின்ற மலிவு விலை பாரம்பரிய உணவகமும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த உணவகத்தில் யாழ்ப்பாணத்தின் உணவுகளை சமைத்து, சுடச்சுட பெண்கள் வழங்குவர். அவ்வுணவுகளின் விலை மலிவானதாகவும் சுகாதாரமானதாகவும் காணப்படுகிறது.

இது தவிர ஞாயிற்றுக் கிழமைகளிலும், விசேட தினங்களிலும் கீரிமலையில் அமைந்துள்ள சிவபூமி அறக்கட்டளை என்கிற அமைப்புக்குரிய அன்னதான மடத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. கீரிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள்கூட குறித்த இந்த அன்னதான மடத்தில் உணவருந்தமுடியும். அன்னதானத்தைத் தாம் வழங்க விரும்பினாலும் அதனைச் செய்ய இயலும்.

முடிவாக, யாழ்ப்பாண பண்பாட்டின் மரபுரிமைகளைத் தரிசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணி ஒருவர் – மனதுக்கு அமைதியைத் தரக்கூடிய இடமொன்றைப் பார்வையிட விரும்பும் சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவுசெய்யவேண்டிய முதன்மையிடம் கீரிமலை ஆகும்.

https://nenarrative.com/தமிழர்-பண்பாட்டு-மரபுரிம/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.