Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

தமிழ் மக்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி அதில் சுகபோக வாழ்க்கை வாழ்பவர்கள்.இயக்கங்கள் வராவிட்டால் தங்களை சோழர் பரம்பரையாகவே கதையை முடித்திருப்பர். 😂

என்ன செய்வது….? சிங்களவர் போல் தன் இனத்தை நேசிக்கும்… தலைவர்கள் இல்லாத, சபிக்கப்பட்ட இனமாக தமிழ் இனம் உள்ளமை பெரும் சோகம்.

இருந்த ஒரு தலைவனையும், போராட்டத்தையும் காட்டிக் கொடுத்தே அழித்து விட்டது… அதே இனத்தில் இருந்து வந்த கோடாலி 🪓 காம்புகள் எனப்படும் ஒட்டுக் குழுக்கள் கூட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிண்டன் முதல் மஸ்க் வரை: எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ள செல்வாக்கு மிக்க நபர்கள் யார்?

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்காரர்களின் பட்டியல் தற்போது நீண்டுள்ளது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இடமிருந்து வலமாக : ஈலோன் மஸ்க், பில் கேட்ஸ், சாரா பெர்குசன் மற்றும் எஹுட் பராக்

கட்டுரை தகவல்

  • பிராண்டன் ட்ரெனான்

  • 8 பிப்ரவரி 2026

    புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடையதாக கூறப்படும் உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்காரர்களின் பட்டியல் தற்போது நீண்டுள்ளது. நிதியாளரான ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்த விசாரணையிலிருந்து, அமெரிக்க அரசாங்கம் மில்லியன் கணக்கான புதிய கோப்புகளை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

இந்த ஆவணங்களில் ஒருவரின் பெயர் இடம்பெற்றிருப்பது, அவர் தவறான செயலில் ஈடுபட்டிருப்பார் என்பதைக் குறிக்கவில்லை. முன்பு வெளியிடப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்ற பலரும் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என மறுத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில நபர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈலோன் மஸ்க்

இந்த ஆவணங்களில், எப்ஸ்டீன் ஏற்பாடு செய்ததாகக் கருதப்படும் பயணத் திட்டங்கள் குறித்து, அவருக்கும் தொழில்நுட்ப பில்லியனர் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், தான் எப்ஸ்டீனின் தனியார் தீவுக்கு ஒருபோதும் சென்றதில்லை என்று மஸ்க் கூறியுள்ளார்.

நவம்பர் 2012-இல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில் மஸ்க், "உங்களது தீவில் எந்த பகல்/இரவில் கொண்டாட்டமான பார்ட்டி நடக்கும்?" என்று எழுதியுள்ளார்.

அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அனுப்பப்பட்ட மற்றொரு மின்னஞ்சலில், "செயின்ட் பார்ட்ஸ் அல்லது வேறு எங்காவது பார்ட்டிகளில் கலந்துகொண்டு உற்சாகமாக இருக்க விரும்புகிறேன்" என்று எழுதியுள்ள அவர், "அமைதியான தீவு அனுபவம்" தனக்கு வேண்டியதற்கு முற்றிலும் எதிர்மாறானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பதில்: இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனவரி மாதம் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மஸ்க், இந்த மின்னஞ்சல்கள் தனது "பெயரைக் கெடுக்க" பயன்படுத்தப்படலாம் எனக் கூறினார். ஆனால், "எப்ஸ்டீனுடன் இணைந்து கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள்" தண்டிக்கப்படுவதில் தான் அதிக அக்கறை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

பில் கேட்ஸ்

18 ஜூலை 2013 தேதியிட்ட இரண்டு மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனால் எழுதப்பட்டது போல் உள்ளன.

ஆனால் அவை உண்மையானவையா அல்லது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸிற்கு அனுப்பப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதில் ஒரு மின்னஞ்சல், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து விலகும் கடிதம் போல எழுதப்பட்டுள்ளது.

"ரஷ்ய பெண்களுடன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க", கேட்ஸிற்குத் தேவையான மருந்துகளைத் திரட்ட வேண்டியிருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

என்பிஆர்-க்கு அளித்த பேட்டியில், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, வெளியான இந்த ஆவணங்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்களை நினைவூட்டியதாக கூறினார்.

"என்னால், என் சொந்த சோகத்தை ஒதுக்கி வைத்து, அந்த இளம் பெண்களை பார்த்து, கடவுளே, அவர்களுக்கு இப்படியெல்லாம் எப்படி நடந்தது என்று கேட்க முடிகிறது," என அவர் தெரிவித்தார்.

மேலும், "குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை, நான் வாழ்க்கையில் முன்னேறிச் சென்றுவிட்டேன். இப்போது பெண்களாக வளர்ந்திருக்கும் அவர்களுக்கு ஏதேனும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

பதில்: கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறுகையில்,"ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ள, அதிருப்தி அடைந்த, உண்மையற்ற ஒருவரின் இந்தக் கூற்றுகள் முற்றிலும் அபத்தமானவை மற்றும் முற்றிலும் தவறானவை"என்றார்.

டொனால்ட் டிரம்ப்

புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில் அமெரிக்க அதிபரின் பெயர் நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், எஃப்.பி.ஐ கடந்த ஆண்டு தயாரித்த பட்டியலும் உள்ளது. அந்த பட்டியலில், தேசிய அச்சுறுத்தல் செயல்பாட்டு மையத் தகவல் வரிசைக்கு, டிரம்ப் மீது அழைப்பாளர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் பல, அந்த முகமையால் பெறப்பட்ட சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை என்றும், ஆதாரங்கள் ஏதுமின்றி கூறப்பட்டவை என்றும் தெரிகிறது.

டிரம்ப், எப்ஸ்டீன் மற்றும் பிற முக்கிய நபர்களுக்கு எதிரான ஏராளமான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பதில்: எப்ஸ்டீன் விவகாரத்தில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். எப்ஸ்டீனுடனான தொடர்பை பல தசாப்தங்களுக்கு முன்பே துண்டித்துவிட்டதாக அவர் கூறுகிறார். மேலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் டிரம்ப் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில், தரையில் படுத்திருக்கும் ஒரு பெண்ணின் மேல் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-கைகளையும், முழங்கால்களையும் ஊன்றி வின்ட்சர் இருப்பது போன்ற புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இரண்டு படங்களில், முன்னாள் இளவரசர் அடையாளம் தெரியாத மற்றும் முழுமையாக ஆடை அணிந்திருக்கும் அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதியைத் தொடுவது போல் காணப்படுகிறார். மற்றொரு படம் அவர் கேமராவை நேரடியாக உற்று நோக்குவதைக் காட்டுகிறது.

இந்தப் புகைப்படங்களுக்கான எந்தப் பின்னணித் தகவலும் வழங்கப்படவில்லை. இவை எப்போது, எங்கே எடுக்கப்பட்டன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

பதில்: பிபிசி நியூஸ் இது குறித்து கருத்து அறிய மவுண்ட்பேட்டன்-வின்ட்சரைத் தொடர்பு கொண்டுள்ளது. அவர் எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்று பலமுறை மறுத்துள்ளார்.

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்

பட மூலாதாரம்,US Department of Justice

படக்குறிப்பு,ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் எப்போதும் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

ரிச்சர்ட் பிரான்சன்

ரிச்சர்ட் பிரான்சனின் பெயர் இந்த கோப்புகளில் நூற்றுக்கணக்கான முறை இடம் பெற்றுள்ளது.

2013-ஆம் ஆண்டு நடந்த ஒரு உரையாடலில், பிரான்சன் அளித்த விருந்தோம்பல் மற்றும் மக்கள் தொடர்பு ஆலோசனைக்காக எப்ஸ்டீன் அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்.

அதற்குப் பதிலளித்த பிரான்சன், அவரைப் பார்த்தது "மிகவும் மகிழ்ச்சி" என்று கூறி, "நீங்கள் எப்போது இந்தப் பகுதிக்கு வந்தாலும் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். உங்கள் பெண்கள் குழுவை அழைத்து வந்தால் போதும் " என்று குறிப்பிட்டுள்ளார்.

"ஹேரம்" என்ற சொல் எப்ஸ்டீன் குழுவில் இருந்த மூன்று வயது வந்த உறுப்பினர்களைக் குறிப்பதாக விர்ஜின் குரூப் விளக்கம் அளித்துள்ளது.

பதில்: விர்ஜின் குரூப் பிபிசிக்கு அளித்த அறிக்கையில், எப்ஸ்டீனுடனான பிரான்சனின் தொடர்பு "பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இருந்தது. மேலும் இது தொண்டு நிறுவன டென்னிஸ் போட்டி போன்ற குழு அல்லது தொழில்முறை சூழல்களுக்குள் மட்டுமே இருந்தது" என்று கூறியுள்ளது.

மேலும், "எப்ஸ்டீன் ஒரு தொண்டு நன்கொடையை வழங்க முன்வந்தபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பிரான்சன் தங்கள் குழுவை முழுமையாக ஆய்வு செய்யச் சொன்னார். அந்த ஆய்வில் சில கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டன"என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,"ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்களின் விளைவாக, விர்ஜின் யுனைட் அந்த நன்கொடையைப் பெறவில்லை. மேலும் ரிச்சர்டும் ஜோனும் இனி எப்ஸ்டீனைச் சந்திக்கவோ பேசவோ வேண்டாம் என்று முடிவு செய்தனர். அவர்களுக்கு முழு விவரங்களும் தகவல்களும் தெரிந்திருந்தால், எவ்வித தொடர்பும் இருந்திருக்காது. எப்ஸ்டீனின் செயல்கள் அருவருப்பானவை என்று ரிச்சர்ட் நம்புகிறார் மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைப்பதை ஆதரிக்கிறார்"என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

சாரா பெர்குசன்

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சரின் முன்னாள் மனைவியும் பொதுவாக "ஃபெர்கி" என அழைக்கப்படுபவருமான சாரா ஃபெர்கசனின் பெயரும் பல மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இதில், எப்ஸ்டீன் வீட்டுக் காவலில் இருந்த காலகட்டத்தைச் சேர்ந்த மின்னஞ்சல்களும் உள்ளன.

எப்ஸ்டீனுடையது என்று நம்பப்படும் ஒரு கணக்கிலிருந்து வந்த மின்னஞ்சலில்,

"இப்போது ஃபெர்கி, 'நான் ஒரு பீடோ( குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுபவர் ) அல்ல' எனச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2009-இல் நடந்த மற்றொரு மின்னஞ்சல் பரிமாற்றத்தில், எப்ஸ்டீனை "ஒரு விரைவான தேநீர் சந்திப்பிற்கு" அழைக்கும் கோரிக்கை உள்ளது. அதில், "எனது அன்பிற்குரிய அற்புதமான மற்றும் சிறப்பான நண்பர் ஜெப்ரி. நீங்கள் ஒரு திறமைசாலி, உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

பதில்: இந்த மின்னஞ்சல்கள் எந்தவொரு தவறான செயலையும் சுட்டிக்காட்டவில்லை. இது குறித்த விளக்கத்திற்காக பிபிசி பெர்குசனைத் தொடர்பு கொண்டுள்ளது.

லார்ட் மண்டேல்சன்

கோப்புகளில் வெளியிடப்பட்ட வங்கி அறிக்கைகளின்படி, லார்ட் மண்டேல்சன் மற்றும் அவரது துணைவராக அறியப்படும் ரினால்டோ அவிலா டா சில்வா ஆகியோருடன் தொடர்புடைய கணக்குகளுக்கு எப்ஸ்டீன் 75,000 டாலர் (55,000 யூரோ) செலுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சந்தை தொடர்பான முக்கியத் தகவல்களை எப்ஸ்டீனுக்கு வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, லார்ட் மண்டேல்சன் மீது மெட்ரோபாலிட்டன் காவல்துறை குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளது.

மைனர் பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்த குற்றத்திற்காக 2009-இல் எப்ஸ்டீன் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, டா சில்வா "நீங்கள் எனக்கு உதவக்கூடிய ஏதாவது இருந்தால் செய்யுங்கள்" என்று கூறி ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதற்கு எப்ஸ்டீன், "உங்கள் கடன் தொகையை உடனடியாக வங்கி மூலம் அனுப்புகிறேன்" என்று பதிலளித்துள்ளார்.

மற்றொரு மின்னஞ்சல் பரிமாற்றத்தில், மண்டேல்சன் தனது நியூயார்க் குடியிருப்புகளில் ஒன்றில் தங்குவதற்கு எப்ஸ்டீன் ஏற்பாடு செய்வது போல் தெரிகிறது.

அதில் எப்ஸ்டீன், "உபசரிப்பதில் மகிழ்ச்சி, ஆனால் நான் அங்கு இல்லாதது வருத்தமளிக்கிறது" என்று எழுதியுள்ளார்.

பதில்: லார்ட் மண்டேல்சன் பிரபுக்கள் சபையிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று, "எப்ஸ்டீனை அறிந்திருந்தது" குறித்தும், அவர் தண்டிக்கப்பட்ட பிறகும் அவருடனான தொடர்பைத் தொடர்ந்தது குறித்தும் மண்டேல்சன் மீண்டும் வருத்தம் தெரிவித்தார். அவர் பிபிசியிடம் கூறுகையில், "எப்ஸ்டீனின் குற்றங்களில் நான் ஒருபோதும் குற்றவாளியோ அல்லது உடந்தையோ இல்லை. மற்றவர்களைப் போலவே நானும் அவரது மரணத்திற்குப் பிறகே அவரைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டேன்" என்றார்.

ஆவணங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை, ஆனால் அவர் தவறாக செயல்படவில்லை என்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காகச் செயல்படவில்லை என்றும் அவர் கூறுகிறார் என்பதை பிபிசி புரிந்துகொள்கிறது.

2008 உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தேச நலன் கருதி எப்ஸ்டீனின் நிபுணத்துவத்தை தான் நாடியதாக அவர் கூறுகிறார்.

ஸ்டீவ் பானன்

மறைந்த பாலியல் குற்றவாளிக்கும், டிரம்பின் முன்னாள் உயர்மட்ட ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீவ் பானனுக்கும் இடையே பரிமாறப்பட்டதாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளும் இந்தக் கோப்புகளில் உள்ளன.

இந்தக் குறுஞ்செய்திகளில் பெரும்பாலானவை 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் அனுப்பப்பட்டுள்ளன.

பானன் தனது வெள்ளை மாளிகை பதவியிலிருந்து விலகி, எப்ஸ்டீன் இறப்பதற்கு முன்பு அவரைப் பற்றிய ஒரு திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது இவை அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு குறுஞ்செய்தி உரையாடலில், எப்ஸ்டீனின் கடந்த காலக் குற்றங்கள் குறித்த பிம்பத்தை எப்படி மாற்றுவது என்று பானன் அவருடன் திட்டமிடுவது போல் தெரிகிறது.

அதில், "முதலில் நாம் பொய்களை எதிர்க்க வேண்டும்" என்றும், "தொண்டு செய்பவர் என்ற உங்கள் பிம்பத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டும்" என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

பதில்: எந்தவொரு தவறான செயலும் செய்ததாகக் குற்றம் சாட்டப்படாத பானன், இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு பிபிசி கேட்டதற்குப் பதிலளிக்கவில்லை.

மிரோஸ்லாவ் லாஜ்சாக்

அக்டோபர் 2018-இல், அப்போதைய ஸ்லோவாக்கியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்த மிரோஸ்லாவ் லாஜ்சாக் மற்றும் எப்ஸ்டீன் இடையே நடந்த குறுஞ்செய்தி பரிமாற்றம், பெண்கள் மற்றும் ராஜ்ஜீயம் குறித்து அவர்கள் உரையாடியதைக் காட்டுகிறது.

பதிவுகளில் காண முடியாத ஒரு படத்தை எப்ஸ்டீன் அனுப்பிய பிறகு, லாஜ்சாக் அதற்குப் பதிலளிக்கையில், "இந்த விளையாட்டுகளுக்கு என்னை ஏன் அழைக்கக்கூடாது? நான் 'எம்ஐ' பெண்ணைத் தேர்ந்தெடுப்பேன்," என்று கூறியுள்ளார்.

அதற்கு எப்ஸ்டீன், "யார் தான் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். நீங்கள் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொள்ளலாம், நான் எதையும் சொந்தம் கொண்டாடுபவன் அல்ல. அவர்களின் சகோதரிகளையும் கூட," என்று பதிலளித்துள்ளார்.

பதில்: சமீபத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, லாஜ்சாக் ஸ்லோவாக்கியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் எந்த தவறும் செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை.

ஹோவர்ட் லட்னிக்

சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ள மின்னஞ்சல்களின் படி, கோடீஸ்வர தொழிலதிபரும் அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளருமான ஹோவர்ட் , தனது குடும்பத்துடன் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

டிசம்பர் 2012-இல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், அந்தப் பயணத்திற்கு முந்தைய நாளில், லட்னிக்கின் மனைவி அலிசன் எப்ஸ்டீனின் உதவியாளருக்கு மின்னஞ்சல் எழுதியுள்ளார். அதில், "உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்," மேலும், "நாங்கள் உங்களுடன் மதிய உணவில் கலந்துகொள்ள விரும்புகிறோம்"எனக் கூறப்பட்டுள்ளது.

பதில்: அமெரிக்க வர்த்தகத் துறை பிபிசிக்கு அளித்த அறிக்கையில், "செயலாளர் லட்னிக், தனது மனைவி முன்னிலையில் மட்டுமே எப்ஸ்டீனுடன் குறைந்த தொடர்புகளை வைத்திருந்தார். அவர் மீது ஒருபோதும் தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.

லாரி சம்மர்ஸ்

அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் முன்னாள் நிதித்துறை செயலாளரும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவருமான லாரி சம்மர்ஸ் பெயரும் புதிதாக வெளியாகியுள்ள ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.

இதில் சம்மர்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான சந்திப்புகள் மற்றும் இரவு உணவுகள் குறித்த குறிப்புகளும் உள்ளன.

2017-ஆம் ஆண்டின் மின்னஞ்சல்களில், சம்மர்ஸும் எப்ஸ்டீனும் டிரம்பின் முதல் பதவிக்காலத்தைப் பற்றி கேலி செய்தும் விமர்சித்தும் பேசியுள்ளனர்.

சம்மர்ஸிற்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் டிரம்பைப் பற்றி எப்ஸ்டீன் கூறுகையில், "அவர் உண்மையில் எவ்வளவு முட்டாள் என்பதை உங்கள் உலகம் புரிந்து கொள்ளவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

பதில்: நவம்பர் மாதம் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளின் தொகுப்பில் சம்மர்ஸ் பெயர் குறிப்பிடப்பட்ட பிறகு, "எப்ஸ்டீனுடன் தொடர்ந்து தொடர்புகொள்வது என்ற எனது தவறான முடிவிற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். மேலும் ஓப்பன் ஏஐ ஆலோசனைக் குழு பதவி உட்பட பல பதவிகளிலிருந்து அவர் விலகினார்.

ஸ்டீவ் டிஷ்

நியூயார்க் ஜெயண்ட்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஸ்டீவ் டிஷ், எப்ஸ்டீன் வீட்டில் தான் சந்தித்த ஒரு பெண்ணைப் பற்றி விசாரிப்பது புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்களில் தெரியவந்துள்ளது.

ஒரு மின்னஞ்சல் பரிமாற்றத்தில், அந்தப் பெண் ஒரு தொழில்ரீதியிலான பணியாளரா அல்லது " குடிமகளா" என்று டிஷ் கேட்டுள்ளார்.

மற்றொரு உரையாடலில், எப்ஸ்டீன் டிஷ்ஷிற்கு ஒரு "பரிசு" வைத்திருப்பதாகக் கூறி, அவருக்கு அறிமுகப்படுத்தப்போகும் ஒரு பெண்ணைப் பற்றி, "தாஹிடியன், பெரும்பாலும் பிரஞ்சு பேசுவார், கவர்ச்சியானவர்" என்று விவரித்துள்ளார்.

பதில்: சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செய்தியில், எப்ஸ்டீனுக்கும் தனக்கும் "குறுகிய காலத் தொடர்பு இருந்தது" என்று டிஷ் கூறியுள்ளார். மேலும், "அவரது அழைப்புகள் எதையும் தான் ஏற்கவில்லை என்றும், அவரது தீவிற்கு ஒருபோதும் சென்றதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரட் ராட்னர்

அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப் குறித்த புதிய ஆவணப்படத்தின் இயக்குனர், ஒரு இளம் பெண்ணைத் தழுவியபடி இருக்கும் புகைப்படம் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது.

'ரஷ் ஹவர்' மற்றும் 'எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரட் ராட்னர், எப்ஸ்டீன் மற்றும் அடையாளம் மறைக்கப்பட்ட இரண்டு பெண்களுடன் ஒரு சோபாவில் அமர்ந்திருப்பதை அந்தப் படத்தில் காண முடிகிறது.

பதில்: இந்த ஆவணங்களில் தவறான செயல்கள் ஏதும் நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. பிபிசி இது குறித்த கருத்துக்களைத் தெரிந்துகொள்ள ரட்னரின் பிரதிநிதியைத் தொடர்பு கொண்டுள்ளது.

பிரெட் ராட்னர்

பட மூலாதாரம்,US Department of Justice

படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இரண்டு பெண்களுடன் பிரெட் ராட்னர் வலதுபுறத்தில் காணப்படுகிறார்.

பீட்டர் அட்டியா

முதுமைத் தடுப்பு தொடர்பான துறையில் சமூக வலைதள பிரபலம் மற்றும் சிபிஎஸ் நியூஸ் பங்களிப்பாளரான பீட்டர் , எப்ஸ்டீனுடன் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டதை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் காட்டுகின்றன. இதில் தரம் குறைந்த கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

மின்னஞ்சல்களில், எப்ஸ்டீனுடனான தனது நட்பை பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒன்று என்று அவர் எழுதியுள்ளார்.

மேலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட சிலரை அடையாளம் காட்டிய 2018-ஆம் ஆண்டின் மியாமி ஹெரால்டு கட்டுரை குறித்த விவாதமும் அதில் இடம்பெற்றுள்ளது.

பெண்களின் உடல் அமைப்பு மற்றும் பாலியல் செயல்பாடுகள் குறித்து அவர் எப்ஸ்டீனுடன் நகைச்சுவையாக பேசுவது போன்ற குறிப்புகளும் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பதில்: பிப்ரவரி 2 அன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தான் "எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை" என்று அட்டியா மறுத்துள்ளார். மேலும், "நான் ஒருபோதும் அவரது விமானத்திலோ, அவரது தீவிலோ இருந்ததில்லை, எந்தவொரு பாலியல் பார்ட்டிகளிலும் கலந்து கொண்டதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேசி வாசர்மேன்

2028 லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டியின் தலைவர், சிறையில் உள்ள எப்ஸ்டீனின் கூட்டாளியான கிஸ்லேன் மேக்ஸ்வெல்லுக்கு ஆபாசமாக மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார்.

2003-இல் மேக்ஸ்வெல்லுக்கு அனுப்பப்பட்ட கேசி வாசர்மேனின் குறுஞ்செய்திகளில், "நான் எப்போதும் உன்னைப் பற்றியே நினைக்கிறேன்... உன்னை இறுக்கமான தோலால் செய்யப்பட்ட உடையில் பார்க்க நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அவர் கேட்டுள்ளார்.

எப்ஸ்டீனால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதற்கு, இளம் பெண்களைத் திரட்டியதற்காகவும் கடத்தியதற்காகவும் மேக்ஸ்வெல் தற்போது 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

பதில்: வாசர்மேன் ஒரு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கிஸ்லேன் மேக்ஸ்வெல் செய்த கொடூரமான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவருடன் நான் தொடர்பு கொண்டிருந்ததற்காக ஆழமாக வருந்துகிறேன்."

செர்ஜி பிரின்

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான செர்ஜி பிரின், எப்ஸ்டீனின் தனியார் தீவிற்குச் சென்றதுடன், நியூயார்க் நகரில் உள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் இரவு உணவருந்தவும் திட்டமிட்டிருந்ததாக வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஆவணங்கள் கூறுகின்றன.

அவர் கிஸ்லேன் மேக்ஸ்வெல்லுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.

ஏப்ரல் 2003-இல் மேக்ஸ்வெல் பிரின்னிற்கு எழுதிய கடிதத்தில், "ஜெப்ரியின் இல்லத்தில் நடக்கும் இரவு உணவுகள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், சாதாரணமாகவும், நிதானமாகவும் இருக்கும்" என்றும், "உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பதில்: பிபிசி இது குறித்த கருத்துக்களை அறிந்துகொள்ள கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளது. இந்த மின்னஞ்சல்களில் எந்தவொரு தவறான செயலும் நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.

எஹுத் பராக்

முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுத் பராக் குறித்து புதிதாக வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு புளோரிடாவில் பாலியல் குற்றங்களுக்காக எப்ஸ்டீன் தண்டிக்கப்பட்ட பிறகும், அவர்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் தொடர்பு கொண்டிருந்ததை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

2017-ஆம் ஆண்டில் நியூயார்க் நகரிலுள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் தங்குவதற்கு பராக் திட்டமிட்டிருந்ததை ஒரு உரையாடல் காட்டுகிறது.

பதில்: எப்ஸ்டீனுடன் தனக்கு வழக்கமான தொடர்புகள் இருந்ததை பராக் ஒப்புக்கொண்டார். ஆனால் முறையற்ற நடத்தைகள் அல்லது பார்ட்டிகளை தான் ஒருபோதும் பார்த்ததுமில்லை, அதில் பங்கேற்றதுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நோம் சாம்ஸ்கி

புகழ்பெற்ற மொழியியலாளர் நோம் சோம்ஸ்கியின் பெயர் இரண்டு முறை வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளிலும் இடம்பெற்றுள்ளது. எப்ஸ்டீன் மீதான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் குறித்த ஊடகச் செய்திகள் தொடர்பாக சோம்ஸ்கி அவருக்கு ஆலோசனை வழங்கியதாகச் சமீபத்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 2019-இல் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களில், தான் "தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமா" அல்லது "புறக்கணிக்க வேண்டுமா" என்று எப்ஸ்டீன் சோம்ஸ்கியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலாக சோம்ஸ்கியிடமிருந்து வந்ததாகக் கருதப்படக்கூடிய ஒரு மின்னஞ்சலில், எப்ஸ்டீன் "மிக மோசமான முறையில் நடத்தப்பட்டுள்ளார்" என்றும், "பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து உருவாகியுள்ள பீதி " ஆகியவை குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதைச் சொல்வது வேதனையாக இருக்கிறது, ஆனால் இதை அலட்சியப்படுத்துவதே முன்னேறிச் செல்வதற்கான சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்," என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

பதில்: கோப்புகளில் சோம்ஸ்கியின் பெயர் இடம்பெற்றிருப்பது எந்த தவறான செயலும் நடந்ததாகக் குறிக்கவில்லை. இதுகுறித்து கருத்து பெற, அவரது மனைவியும் அவரது செய்தித் தொடர்பாளருமான வலேரியாவை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது.

பிராட் கார்ப்

புகழ்பெற்ற சட்ட நிறுவனமான பால் வெயிஸின் தலைவர் பிராட் கார்ப், அவருக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சமீபத்திய கோப்புகளில் வெளியானதைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகினார்.

அந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களில் ஒன்றில், பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எப்ஸ்டீன் முன்பே செய்துகொண்ட குற்ற ஒப்புதல் ஒப்பந்தம் குறித்து கார்ப் விவாதித்ததாக கூறப்படுகிறது.

எப்ஸ்டீன் கைது செய்யப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2019-இல் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், பிராட் கார்ப் என்ற பெயரில் உள்ள ஒருவர், "வரைவு மனு மிகச் சிறந்த நிலையில் உள்ளது" என்று கூறியுள்ளார்.

ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, இந்த விவாதம், 2008 ஆம் ஆண்டு வழக்கறிஞர்களுடன் எப்ஸ்டீன் செய்துகொண்ட குற்றஒப்புதல் ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கான அவரது முயற்சிகளுடன் தொடர்புடையதாகும். அந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆயுள் தண்டனை வரை எதிர்கொள்ள வேண்டிய ஃபெடரல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் தப்பித்திருந்தார். இருப்பினும், அந்த மின்னஞ்சல்கள் உண்மையில் அந்த ஒப்பந்தத்துடன் நேரடியாக தொடர்புடையவை என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை.

பதில்: புதன்கிழமை நிறுவனத்தின் அறிக்கையில் தனது ராஜினாமாவை அறிவித்த கார்ப், "சமீபத்திய செய்திகள் கவனச்சிதறலை உருவாக்கியுள்ளன, மேலும் என் மீது விழுந்துள்ள இந்த கவனம் நிறுவனத்தின் நலனுக்கு உகந்தது அல்ல" என்று கூறினார். அந்த அறிக்கை எப்ஸ்டீன் கோப்புகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை, மேலும் கார்ப் அதன் பிறகு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இது குறித்து கூடுதல் விளக்கத்திற்காக பிபிசி பால் வெயிஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளது.

பில் கிளிண்டன்

டிசம்பர் மாதம் நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணங்களின் முதல் தொகுப்பில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் பல படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அவர் ஒரு நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற ஒரு படமும், மற்றொரு படத்தில் 'ஹாட் டப்' என்று கருதப்படும் இடத்தில் கைகளை தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு படுத்திருப்பது போன்ற படமும் அடங்கும்.

எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு முன்பு, 1990-கள் மற்றும் 2000-களின் முற்பகுதியில் எப்ஸ்டீனுடன் கிளிண்டன் பலமுறை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார்.

பதில்: கிளிண்டனின் செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் உரெனா, டிசம்பர் மாதம் சமூக ஊடகங்களில் கூறுகையில், நீதித்துறை வெளியிட்ட புகைப்படங்கள் பல தசாப்தங்கள் பழமையானவை என்றார்.

"அவர்கள் விரும்பும் அளவிற்கு 20 ஆண்டுகளுக்கு மேலான தெளிவற்ற பழைய புகைப்படங்களை வெளியிடலாம், ஆனால் இது பில் கிளிண்டனைப் பற்றியது அல்ல. ஒருபோதும் இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை," என்று அவர் கூறினார்.

மேலும், "இங்கு இரண்டு வகை மனிதர்கள் உள்ளனர். முதல் குழுவினர் எப்ஸ்டீனைப் பற்றி எதுவும் தெரியாமல், அவரது குற்றங்கள் வெளிச்சத்திற்கு வரும் முன்பே அவரோடனான தொடர்பைத் துண்டித்தவர்கள். இரண்டாவது குழுவினர் அவரது குற்றங்களுக்குப் பிறகும் தொடர்பைத் தொடர்ந்தவர்கள். நாங்கள் முதல் குழுவில் இருக்கிறோம்," என்றும் அவர் கூறினார்.

சமூக வலைதளப் பதிவொன்றில் கிளிண்டன், தனக்குத் தெரிந்த அனைத்தையும் நாடாளுமன்றத்திடம் தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

"எப்ஸ்டீன் கோப்புகளை முழுமையாக வெளியிட வேண்டும் என்று நான் கூறியுள்ளேன். எனக்குத் தெரிந்தவற்றை ஒரு சத்தியப் பிரமாண வாக்குமூலமாக அளித்துள்ளேன். மேலும் இந்த வாரத்தில் தான், குழுவின் முன் நேரில் ஆஜராக ஒப்புக்கொண்டுள்ளேன்," என்று அவர் கூறினார்.

கிளிண்டன் இந்த மாத இறுதியில் பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழு முன் சாட்சியமளிக்க உள்ளார், மேலும் அந்த விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

தீபக் சோப்ரா

2008 ஆம் ஆண்டு சிறுமிகளிடம் பாலியல் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பின்னர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் எழுத்தாளர் தீபக் சோப்ரா இடையே பல ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்புகள் இருந்ததாக இந்த கோப்புகள் வெளிப்படுத்துகின்றன.

பிப்ரவரி 2017-இல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், சோப்ரா தன்னோடும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு குழுவோடும் இஸ்ரேலுக்கு வருமாறு எப்ஸ்டீனை அழைக்கிறார்.

"எங்களுடன் இஸ்ரேலுக்கு வாருங்கள்," என்று சோப்ரா கூறுகிறார். "சுவாரஸ்யமான மனிதர்களுடன் நிதானமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். நீங்கள் விரும்பினால் போலிப் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பெண்களை அழைத்து வாருங்கள். நீங்கள் எங்களுடன் இருப்பது வேடிக்கையாக இருக்கும். உங்களுக்கு அன்புடன் எழுதிக்கொள்கிறேன்"என்கிறது ஒரு செய்தி.

ஒரு மாதம் கழித்து நடந்த மற்றொரு உரையாடலில், இருவரும் கடவுள் மற்றும் மனித உடலின் செல்கள் பற்றிப் பேசியுள்ளார்கள். அப்போது சோப்ரா, "செல்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அப்படி எதுவும் இல்லை. பிரபஞ்சம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அப்படி எதுவும் இல்லை. அழகான பெண்கள் சத்தம் எழுப்பும்போது விழிப்புடன் இருக்கிறார்கள்," என்று கூறியுள்ளார்.

அந்த விவாதத்தின் தொடர்ச்சியாக சோப்ரா மேலும் கூறுகையில், "கடவுள் என்பது ஒரு கற்பனை. அழகான பெண்கள் தான் உண்மையானவர்கள்," என்கிறார்.

மாற்று மருத்துவ ஆதரவாளரான சோப்ராவிடம் எப்ஸ்டீன், "எனக்காக ஒரு அழகான இஸ்ரேலியப் பெண்ணைக் கண்டுபிடித்தீர்களா?" என்றும் கேட்கிறார்.

பதில்: இந்த மின்னஞ்சல்கள் வெளியானதிலிருந்து, சோப்ரா இணையத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைக் கண்டு ஆழ்ந்த வருத்தம் அடைவதாக" கூறியுள்ளார். மேலும் "எந்தவொரு குற்றவியல் அல்லது சுரண்டல் நடத்தையிலும்" தனக்குத் தொடர்பில்லை என்று மறுத்துள்ளார்.

"நான் குறைவாக தொடர்பு கொண்டிருந்தேன், மேலும் அவை அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பானவை அல்ல. கடந்த கால மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சில தற்போது வெளிவந்துள்ளன, அவை மோசமான தொனியில் இருந்தன. அதற்காக நான் வருந்துகிறேன், அக்காலகட்டத்தில் பொதுவாகத் தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் அவை இன்று எப்படிப் பார்க்கப்படும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். பொறுப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை ஆதரிப்பதில் எனது கவனம் தொடர்கிறது," என்று கூறியுள்ளார்.

எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்புகளில், ஏதேனும் தவறான செயல்கள் குறித்து அவர் அறிந்திருந்தாரா என்பதை பிபிசி, சோப்ராவிடம் கேட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8j3jknlynpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்ஸ்டீன் இரகசிய ஆவணங்களில் 1,005 முறை இடம்பெற்றுள்ளது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெயர்

Published By: Digital Desk 3

09 Feb, 2026 | 04:45 PM

image

மறைந்த அமெரிக்க பணக்காரரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல மில்லியன் பக்கங்கள் கொண்ட இரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.

இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் உயர் அதிகாரிகளுடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியாகியுள்ள 35 இலட்சம் பக்கங்கள் கொண்ட மின்னஞ்சல்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் விளாடிமிர் புட்டின் பெயர் 1,005 முறை இடம்பெற்றுள்ளது.

ரஷ்யா குறித்த குறிப்புகள் 5,000-க்கும் மேற்பட்ட இடங்களில் வருகின்றன.

எப்ஸ்டீன் பலமுறை புட்டினைச் சந்திக்க முயற்சி செய்துள்ளதும், அதற்காக ஐரோப்பிய அரசியல்வாதிகளின் உதவியை நாடியதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், இருவரும் நேரில் சந்தித்ததற்கான உறுதியான ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

ஐநா-வுக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் விடாலி சுர்கினுடன் (Vitaly Churkin) எப்ஸ்டீன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். சுர்கினின் மகனுக்கு நியூயோர்க்கில் வேலை வாங்கித் தரவும் அவர் முன்வந்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மின்னஞ்சல் ஒன்றில் "சுர்கின் ஒரு சிறந்த நபர், எங்களுக்கிடையிலான உரையாடலுக்குப் பின்னர் அவர் ட்ரம்ப் பற்றி நன்கு புரிந்து கொண்டார்" என எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

எப்ஸ்டீன் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து இளம்பெண்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்ததும், அவர்களை உயர் பதவியில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்ததும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"இந்த விபரீத பாலியல் ஊழல் வழக்கில் ரஷ்ய உளவு அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எப்ஸ்டீன் ரஷ்யாவின் 'உளவாளியாக' செயல்பட்டாரா என்பது தொடர்பில் போலந்து அரசு விரிவான விசாரணை நடத்தும்."

இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிரெம்ளின் மாளிகை ஊடகத் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், "எப்ஸ்டீன் ரஷ்ய உளவுத்துறையின் சொத்து என்ற வாதத்தை நகைச்சுவையாகக் கூட எடுத்துக்கொள்ள முடியாது; இது நேரத்தை வீணடிக்கும் செயல்" என விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க நிதி ஆலோசகராக இருந்த எப்ஸ்டீன், இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2019 இல் கைது செய்யப்பட்டார்.

விசாரணை நிலுவையில் இருந்தபோதே நியூயோர்க் சிறையில் அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது நட்பு வட்டத்தில் உலகத் தலைவர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பெரும் வர்த்தகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/238233

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது? 😂 எப்ஸ்டீன கண்டவன், பக்கத்தாலை போனவன், கலோ சொன்னவன், கை குடுத்தவன், எனக்கு அவர தெரியும் எண்டவன், எப்ஸ்டீன்ர காத்து பட்டவன், கூட நிண்டு படம் எடுத்தவன் எல்லாருக்கும் அரோகரா போல கிடக்கு...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'கழுத்தில் 2 முறிவு' - ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் இறந்த போது என்ன நடந்தது?

ஜெஃப்ரி எப்ஸ்டீன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன்

கட்டுரை தகவல்

  • ஷயன் சர்தாரிசாதே,

  • மாட் மர்பி,

  • பிபிசி வெரிஃபை

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிரிழந்த உடனேயே எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதுவரை பார்த்திராத இந்தப் புகைப்படங்கள், அவரது உடல் ஒரு ஸ்ட்ரெச்சரில் இருப்பதையும், மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதையும் காட்டுகின்றன.

எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது நிகழ்ந்த மரணம் குறித்த எஃப்.பி.ஐ விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியாக இருபது படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பல படங்கள் பார்ப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனுடன் பிரேதப் பரிசோதனை மற்றும் சிறையின் உள் ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் உள்ள மில்லியன் கணக்கான ஆவணங்களில் இந்தப் புகைப்படங்களும் அடங்கும்.

எப்ஸ்டீன் கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்று அவரது சிறை அறையில் இறந்து கிடந்தார்.

பாலியல் தேவைகளுக்காக கடத்தல் மற்றும் சதித் திட்டக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு முன்னதாக, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் சீர்திருத்த மையத்தில் எப்ஸ்டீன் வைக்கப்பட்டிருந்தார்.

ஜெப்ரி எப்ஸ்டீன் உயிரிழந்த உடனேயே, அவரது உடல் ஒரு ஸ்ட்ரெச்சரில் கிடப்பதையும், மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதையும் காட்டும் இதுவரை பார்த்திராத புகைப்படங்களை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன்

23 பக்க அறிக்கை

"ஜெப்ரி எப்ஸ்டீன் மரண விசாரணை" என்ற தலைப்பில் புதிதாக வெளியிடப்பட்ட இந்த எஃப்.பி.ஐ அறிக்கை, நியூயார்க்கில் உள்ள எஃப்.பி.ஐ ஏஜென்சியின் கள அலுவலகத்தால் நடத்தப்பட்ட விசாரணையாகத் தெரிகிறது.

இந்த 23 பக்க அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் "ரகசியமற்றது" என்ற முத்திரை இடப்பட்டுள்ளது.

பிபிசி வெரிஃபையால் பார்க்கப்பட்ட இந்த மறைக்கப்படாத ஆவணங்கள், எப்ஸ்டீனின் கழுத்து மற்றும் அதில் உள்ள காயங்களின் நெருக்கமான புகைப்படங்களைக் காட்டுகின்றன.

மேலும், இதில் எப்ஸ்டீனின் பிரேதப் பரிசோதனை விவரங்கள் மற்றும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாட்களில் அவரது மனநலம் குறித்த உளவியல் அறிக்கையும் இடம்பெற்றுள்ளன.

பல புகைப்படங்களில் எப்ஸ்டீன் ஒரு ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் காணப்படுகிறார். அவரை மீண்டும் உயிர்ப்பிக்க மருத்துவர்கள் முயற்சி செய்யும் காட்சிகளும் அதில் உள்ளன.

இந்தப் படங்கள் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று, உள்ளூர் நேரப்படி காலை 06:49 மணிக்கு எடுக்கப்பட்டதாக தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தனது சிறை அறையில் உணர்விழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து சுமார் 16 நிமிடங்கள் கழித்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் எப்ஸ்டீன் காலை 06:39 மணிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது, அந்தப் புகைப்படங்கள் அங்கே எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

மற்ற மூன்று புகைப்படங்களில் அவை மருத்துவமனையில் எடுக்கப்பட்டவை என்பதைக் குறிக்கும் குறிப்புகள் உள்ளன. அவை அவரது தலையின் நெருக்கமான காட்சியையும், கழுத்தில் உள்ள ஒரு காயத்தையும் காட்டுகின்றன.

ஒவ்வொரு புகைப்படத்திலும் எப்ஸ்டீனின் பெயர் உள்ளது, ஆனால் சில படங்களில் அவரது முதல் பெயர் Jeffrey என்பதற்குப் பதிலாக Jeffery எனத் தவறாக எழுதப்பட்டுள்ளது.

பாலியல் கடத்தல் மற்றும் சதித் திட்டக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு முன்னதாக, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் சீர்திருத்த மையத்தில் எப்ஸ்டீன் வைக்கப்பட்டிருந்தார்.

பட மூலாதாரம்,Department of Justice

படக்குறிப்பு,எப்ஸ்டீன் கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்று அவரது சிறை அறையில் இறந்து கிடந்தார்.

தன்னைக் கொல்ல முயற்சி என எப்ஸ்டீன் குற்றச்சாட்டு

எப்ஸ்டீனின் உடல் குறித்து சமீபத்தில் புதிதாக வெளியிடப்பட்ட புகைப்படங்களை பிபிசி வெரிஃபை ரிவர்ஸ் இமேஜ் முறையில் ஆய்வு செய்தபோது, ஜனவரி 30-ஆம் தேதிக்கு முன்பாக இணையத்தில் அவற்றின் முந்தைய பதிப்புகள் எதையும் கண்டறிய முடியவில்லை.

மேலும், அந்த புகைப்படங்களை உறுதிப்படுத்தும் பிற ஆவணங்களையும் அந்த கோப்புகளில் இருந்ததை கண்டுபிடித்தோம். அமெரிக்க நீதித்துறை மற்றும் நியூயார்க் தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகம் தாக்கல் செய்த 89 பக்க பிரதேச பரிசோதனை அறிக்கையும், அதே படங்களை (மறைக்கப்பட்ட) கொண்ட எஃப்.பி.ஐ. நியூயார்க் அலுவலகத்தின் மின்னஞ்சல்களும் அடங்கும்.

தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட எப்ஸ்டீன் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் சில பகுதிகளும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதில் எப்ஸ்டீனின் கழுத்தில் உள்ள தைராய்டு குருத்தெலும்பில் ஏற்பட்ட இரண்டு முறிவுகளின் ஸ்கேன் நகல்களும் அடங்கும்.

2019ம் ஆண்டு 6ம் தேதி ஜூலை அன்று பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது முதல் அவர் இறக்கும் வரை, நியூயார்க் மெட்ரோபொலிட்டன் திருத்த மையத்தில் எப்ஸ்டீன் வைக்கப்பட்டிருந்தது குறித்த ஆறு பக்க காலவரிசையை எஃப்.பி.ஐ அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

23 ஜூலை 2019 அன்று எப்ஸ்டீன் தற்கொலைக்கு முயன்ற பிறகு, அவர் தற்கொலை கண்காணிப்பில் வைக்கப்பட்டதை இது வெளிப்படுத்துகிறது. அந்த நேரத்தில், கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்த முன்னாள் போலீஸ் அதிகாரியும், அவரது சிறையில் தங்கியிருந்தவருமான நிக்கோலஸ் டார்டாக்லியோன் தன்னைக் கொல்ல முயன்றதாக எப்ஸ்டீன் குற்றம் சாட்டினார்.

இடதுபுறம் உள்ள படத்தில் மருத்துவப் பணியாளர்கள் எப்ஸ்டீனின் உடலுக்கு சிகிச்சை அளிப்பதைக் காண முடிகிறது. வலதுபுறம் உள்ள படத்தில் அவரது பெயர் மற்றும் இறந்த தேதியைக் காட்டும் அடையாள அட்டையுடன் கூடிய எப்ஸ்டீனின் கை காணப்படுகிறது.

மறுநாள் ஒரு உளவியலாளருடனான சந்திப்பில், எப்ஸ்டீன் தனக்கு "தற்கொலை செய்துகொள்வதில் ஆர்வம் இல்லை" என்றும், உயிரை மாய்த்துக் கொள்வது "பைத்தியக்காரத்தனமாக இருக்கும்" என்றும் கூறியதாக அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

ஜூலை 25 அன்று, "எனது வழக்கை எதிர்த்துப் போராடுவதில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன், எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது, நான் மீண்டும் என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்" என்று அவர் கூறியதாக உளவியலாளர் அறிக்கை தெரிவிக்கிறது.

நீதித்துறை வெளியிட்ட பிற ஆவணங்கள், எப்ஸ்டீனை தனியாக தங்க வைக்கக்கூடாது என்று சிறைக் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியதையும், அவரது சிறை அறையில் "30 நிமிடங்களுக்கு ஒருமுறை சோதனைகள்" மற்றும் "அறிவிக்கப்படாத கண்காணிப்புகள்" மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதையும் காட்டுகின்றன.

எப்ஸ்டீன் இறப்பதற்கு முந்தைய நாள் அவருடன் சிறையில் இருந்த நபர் விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 9 அன்று இரவு, சிறைக்காவலர்கள் அதிகாலை 03:00 மற்றும் 05:00 மணிக்கு திட்டமிடப்பட்ட சோதனைகளைச் செய்யத் தவறிவிட்டனர் என்பதையும், அந்தப் பிரிவில் உள்ள கேமரா அமைப்பு செயலிழந்திருந்ததையும் சிறை ஆவணங்கள் காட்டுகின்றன.

சிறை ஊழியர்கள் மேற்கொண்ட காலை நேர சோதனையின் போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளின் ஒரு பகுதியாக, அதே எஃப்.பி.ஐ. அறிக்கையின் மறைக்கப்பட்ட இன்னொரு பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிப்பு 17 பக்கங்கள் மட்டுமே கொண்டது

இதில் உளவியலாளர் அறிக்கையும், எப்ஸ்டீன் காவலில் இருந்த காலவரிசையும் இடம்பெறவில்லை. மேலும், அந்த கோப்பில் உள்ள படங்களும் மறைக்கப்பட்டுள்ளன.

ஏன் மறைக்கப்பட்ட பதிப்பும், மறைக்கப்படாத பதிப்பும் இரண்டும் ஒரே நேரத்தில் இந்த கோப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரியவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க நீதித்துறையை தொடர்பு கொண்டுள்ளோம். எஃப்.பி.ஐ கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

கூடுதல் தகவல்: ஜோஷ் ஷீதம்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqj9r7jvqr0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்ஸ்டீன் சர்ச்சை; அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு பொலிஸாருக்கு உதவத் தயார் – மன்னர் சார்ள்ஸ் அறிவிப்பு!

Published By: Digital Desk 3

10 Feb, 2026 | 03:01 PM

image

ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மன்னர் சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட 30 இலட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஆவணங்களில் அண்ட்ரூ குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:

2010-ஆம் ஆண்டு அண்ட்ரூ இங்கிலாந்தின் வர்த்தகத் தூதுவராக இருந்தபோது சிங்கப்பூர், வியட்நாம், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணங்களின் இரகசிய அறிக்கைகளை ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகத் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்வதற்கான 'மிக இரகசிய' விவரங்களையும் அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறும் செயல் என 'ரிபப்ளிக்' என்ற அமைப்பு முறைப்பாடு அளித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

"மவுண்ட்பேட்டன்-வின்சரின் நடத்தை குறித்து தொடர்ந்து வெளிவரும் முறைப்பாடுகள் குறித்து மன்னர் மிகுந்த கவலை அடைந்துள்ளாரர். பொலிஸ் எங்களை அணுகினால், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்."

இதன் மூலம், தனது சகோதரரைக் காப்பாற்ற முயலாமல் சட்டத்திற்கு மதிப்பளிக்க மன்னர் தீர்மானித்திருப்பது தெளிவாகியுள்ளது.

அண்ட்ரூ ஏற்கனவே தனது 'இளவரசர்' மற்றும் 'டியூக்' பட்டங்களை 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இழந்தார். தற்போது அவர் தனது வின்சர் கோட்டை இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, சாண்ட்ரிங்ஹாம் (Sandringham) எஸ்டேட்டில் தங்கியுள்ளார்.

மன்னர் சார்ள்ஸ் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அங்கிருந்த ஒருவர் "அண்ட்ரூ பற்றி உங்களுக்கு எவ்வளவு காலமாகத் தெரியும்?" எனக் கத்தியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோரும் எப்ஸ்டீன் விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அண்ட்ரூ இந்த முறைப்பாடுகள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இருப்பினும், எப்ஸ்டீன் ஆவணங்களில் பெண்ணுடன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது பிரித்தானிய அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/238304

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.