Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!

Vhg பிப்ரவரி 13, 2026

AVvXsEiwCZQVZDH7kG4F9QQOuXXnOFaM3ugDFcJqB5F8hNgh59pWU64fgUHd_B9LttStVV-eX-d17piTMnTOmquihf4iW6HwfqBKnQ1s7ygnBTR91sgelwnUjHgFenAyzPt2uY5k0On2CqfxDI_iDO4dOvPaJkO7XQYlRJ1YJfwjk0FcgeqAJVkNh4OEcAGA4kEA

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில், இந்திய இழுவைமடிப் படகு கடற்றொழிலாளர்களால் நயினாதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பா பார்த்தீபன், மங்களேஸ்வரன் கார்த்தீபன், நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.battinatham.com/2026/02/blog-post_87.html

  • கருத்துக்கள உறவுகள்

பார் சிறிக்கு துணை தூதரை மட்டும்தான் சந்திக்க முடியும் போல😂.

கூட ஒரு எம்பியிம் போகவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் போதுகூட எந்த பாராளுமன்ற உறுப்பினரையும் அழைத்துச்செல்லவில்லை. அண்மையில் சாணக்கியனை அழைத்துச் செல்வார், அதற்கு முதல் இது, இரகசியமான கூட்டம் யாரையும் அழைத்து வராதீர்கள் என்று தனக்கு மட்டும் அழைப்பு வைப்பார்களாம். அப்படியெனில் அவர்கள் என்னத்தைப்பற்றித்தான் இரகசியமாக பேசியிருப்பார்கள்? அவர்கள் இரகசியமாக சந்தித்ததை, பேசியதை தான் மற்றைய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வாராம், படத்தையும் பகிரங்கப்படுத்துவாராம். இதிலென்ன இரகசியம், அதற்கு அவர்களில் ஒருவரை அழைத்துச்செல்லலாமே, ஏன் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால்; என்ன பேசினர் என்பதை மற்றவர் நேரில் அறிந்துவிடக்கூடாது என்பதில் குறியாய் இருப்பார் தில்லு முல்லு சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ம்ம்ம்…

ஆனால் பார் சிறி கூப்பிட்டும் போக ஆளில்லை போலும்?

அதான் பிரதேசசபை உறுப்பினரை எல்லாம் கூட்டி போயுள்ளார்😂

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் இப்போ பதவிகள் பறிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுள்ளார், அவருடன் யாராவது சந்திப்புக்கு போயிருந்தால் கூடபோனவர்களின் பதவியும் பறிக்கப்படும், சிறி நேசனுக்கு என்ன நடந்தது என்பது சிலர் அறியாதது ஆச்சரியமே. ஆனால் சுமந்திரன் யாரையும் கூப்பிடுவதில்லை. அதற்கு வேறு காரணம் கூறுவார். சிறிதரன் என்ன கதைக்கிறார் என்பதை அறிய பிரதேச சபையினர் சாட்சியாக உள்ளனர், அவர் அதைவிட இரகசியமாக என்ன கதைக்கப்போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

அவர் தலைவராக தேர்ந்தெடுத்த கட்டிசியிலே கூட அவர் தனிமைபடுத்த பட்டுள்ளார்…

இவருக்கெலாம் எதுக்கு அரசியல்?

இவர் எப்படி மக்கள் உரிமையை வென்றெடுப்பார்?

சுமந்திரனை வெட்டி ஆட முடியாதவரா சிங்களவரை வெட்டி ஆட போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

உட்கட்சி மோதலை சந்தியில் விமர்சிப்பவர், நீதிமன்றத்தில் நிறுத்துபவர், பின் மற்ற கட்சிகள் எங்களை விமர்ச்சிக்கிறார்கள் என்று குறைபாடுபவர்கள், சிங்களவரை வெட்டி ஆட முடியாதவர்கள் சிறிதரனை கட்சியிலிருந்து நீக்குவதுதான் அரசியல் சாதனை. அவரை தெரிந்தெடுப்பது மக்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் கட்சியால் நிராகரிக்கப்பட்டவர் இல்லாத பதவிகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுகிறார். ஓடுகிறவன் எல்லாம் ஜெயிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

இவ்வளவு மோசமான சுமந்திரனை எதிர்த்து சொந்த கட்சியில் ஆட்களை திரட்ட வக்கிலாத ஆள்தான் சிறி என்கிறீர்கள்.

இவர் எம்பி. சுமன் ஒரு உள்ளாட்சி உறுப்பினர் கூட இல்லை. ஆனால் எதுவும் செய்ய முடியாமல் முக்கிறார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

"எருதோடு பொருத முடியாதவர்கள் மேழியோடுதான் பொருதுவார்கள்." சுமந்திரன், ஒருவர் மேல் அழுக்காறு கொண்டால் எந்த நிலைக்கும் தாழ்ந்து போவார். அப்படி யாராலும் இறங்கிப்போக முடியாது, சுமந்திரனோடு யாராலும் இணைந்து செயற்படவும் முடியாது. ஆனால் சிறிதரன் புத்திசாலி. தானாக கட்சியிலிருந்து விலகாமல் எல்லா குடைச்சலையும் தாங்கி, சமாளித்து தேர்தலில் வென்று, வலுக்கட்டாயமாக சுமந்திரனாலேயே கட்சியிலிருந்து நீக்கப்படுள்ளார். சுமந்திரன் ஒரு குழப்பி, அழுக்காறு கொண்டவர். தான் அடுத்தவர்க்கு வெட்டிய குழியில் விரைவாகவே விழுவார். அப்போ இவருக்காக யாரும் கவலைப்படப்போவதில்லை ஆரம்பத்திலிருந்தே நான் சொன்னதுதான், தமிழருக்கும் அவர்தம் கட்சிக்கும் குழி பறிக்கவே திட்டமிட்டு புகுத்தப்பட்டவர் சுமந்திரன். எல்லா ஜனாதிபதியையும் வரவேற்றவர் அனுராவை மட்டும் மிரட்டுகிறார், சவால் விடுகிறார், ஏனென்றால் இவரை அழைத்து பதவி வழங்காதவர் அனுரா மட்டுமே.

சுமந்திரனோடு சேர்ந்து இயங்குபவர்கள் சுமந்திரனைப்போலவே உண்மைக்கு வெகு தூரமானவர்கள். அவர்களை திரட்டி எதை சாதிக்க முடியும்? அவர்கள் பதவியும் பொறுப்பும் எத்தனை நாளைக்கு? மக்கள் வாக்களித்தால் மட்டுமே இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக முடியும். மக்களே தீர்ப்பளிப்பவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2026 at 03:08, கிருபன் said:

இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பா பார்த்தீபன், மங்களேஸ்வரன் கார்த்தீபன், நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறிதரனுடன் கூடப் போனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படிக்கு

உண்மையுள்ள

பதில் தலைவர்,பதில் செயலாளர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறிதரனுடன் கூடப் போனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படிக்கு

உண்மையுள்ள

பதில் தலைவர்,பதில் செயலாளர்.

பார் சிறியோடு கிளிநொச்சியில் இருந்து ஒரு உள்ளாட்சி அரசியல்வாதி கூட போகவில்லையா? அல்லது கூட்டி போலவில்லையா?

2 hours ago, satan said:

"எருதோடு பொருத முடியாதவர்கள் மேழியோடுதான் பொருதுவார்கள்." சுமந்திரன், ஒருவர் மேல் அழுக்காறு கொண்டால் எந்த நிலைக்கும் தாழ்ந்து போவார். அப்படி யாராலும் இறங்கிப்போக முடியாது, சுமந்திரனோடு யாராலும் இணைந்து செயற்படவும் முடியாது. ஆனால் சிறிதரன் புத்திசாலி. தானாக கட்சியிலிருந்து விலகாமல் எல்லா குடைச்சலையும் தாங்கி, சமாளித்து தேர்தலில் வென்று, வலுக்கட்டாயமாக சுமந்திரனாலேயே கட்சியிலிருந்து நீக்கப்படுள்ளார். சுமந்திரன் ஒரு குழப்பி, அழுக்காறு கொண்டவர். தான் அடுத்தவர்க்கு வெட்டிய குழியில் விரைவாகவே விழுவார். அப்போ இவருக்காக யாரும் கவலைப்படப்போவதில்லை ஆரம்பத்திலிருந்தே நான் சொன்னதுதான், தமிழருக்கும் அவர்தம் கட்சிக்கும் குழி பறிக்கவே திட்டமிட்டு புகுத்தப்பட்டவர் சுமந்திரன். எல்லா ஜனாதிபதியையும் வரவேற்றவர் அனுராவை மட்டும் மிரட்டுகிறார், சவால் விடுகிறார், ஏனென்றால் இவரை அழைத்து பதவி வழங்காதவர் அனுரா மட்டுமே.

சுமந்திரனோடு சேர்ந்து இயங்குபவர்கள் சுமந்திரனைப்போலவே உண்மைக்கு வெகு தூரமானவர்கள். அவர்களை திரட்டி எதை சாதிக்க முடியும்? அவர்கள் பதவியும் பொறுப்பும் எத்தனை நாளைக்கு? மக்கள் வாக்களித்தால் மட்டுமே இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக முடியும். மக்களே தீர்ப்பளிப்பவர்கள்

சுமந்திரன் பச்சை கள்ளன்.

பார் சிறி நழுவல் கள்ளன்.

முள்ளை முள்ளால் எடுத்தால் உங்கள் கைதான் கிழியும்😂.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பார் சிறியோடு கிளிநொச்சியில் இருந்து ஒரு உள்ளாட்சி அரசியல்வாதி கூட போகவில்லையா? அல்லது கூட்டி போலவில்லையா?

தெரியவில்லைக் கோசான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.