Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நியாயம் said:

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?

இந்தியாவிற்கு அல்ல....சீனாவிற்கு என நினைக்கின்றேன்.

இந்தியாவினது வல்லமையின் அழகு உலகிற்கே தெரிந்த விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இல்லை.

இந்தியாவில் இருந்து புறப்பட்டு, அதன் கடல் எல்லையை தாண்டி, சர்வதேச கடற்பரப்பில், யுத்த முனை நோக்கி நகரும் போது தாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா, இலங்கை எவருக்கும் கொடுக்க பட்ட எச்சரிக்கை அல்ல.

அப்படி கொடுக்கவும் தேவையில்லை.

ஏன் எண்டால் மோடி ஜி, பீபீயின் பொக்கெட்டுக்குள்😂

ஆனால் ஒரு விடயம்,

ரஸ்யா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான், என ஈரானின் நண்பர்கள் என சொல்லி கொண்ட பலரும் ஈரானை திரும்பி கூட பார்க்கவில்லை.

இத்தனைக்கும் ரஸ்யாவுக்கு டிரோன் கொடுத்து, அண்மைய முறுகலில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுத்து ஈரான் ரொம்ப நம்பிக்கையாய் நடந்து கொண்டது.

அதே போல் இலங்கையின் இன்வழிப்பு போரில் வெல்ல, தேயிலைக்கு எண்ணை டீல் மூலம் போரின் எரிபொருள் வழங்குனராக ஈரான் இருந்தது. இலங்கையும் பெரிதாக அலட்டிகொள்ளவில்லை.

என்ன ஜீ ...தமிழ்வாணனின் கிரைம் தொடர் போல் எழுதிக்கொண்டே வாறியள் .... வாசிக்க வாசிக்க ...ஆச்சரியமாக இருக்கு

4 hours ago, தமிழ் சிறி said:

ஈரான் போருக்குப் போக, இப்படி... எல்லாரும் ஒளித்து திரிந்தால்...

இனி இவர்களுக்கு... முஸ்லீம் நாடுகளிடம் இருந்து பண உதவி வராது போலுள்ளது. 😂

ஏற்கனவே கள்ளக்காணி பிடித்து ..அதிலை காசுசேர்த்தாச்சு ...இப்ப கவர்மெந்தட்டை காணிக்குப் போறபாதைக்குத்தன் சண்டைபிடிக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன?

இரான் கப்பல், இலங்கை

பட மூலாதாரம்,Mashregh News / File Photo

எனினும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தற்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இரானிய போர்க்கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடலில் அமெரிக்கா மூழ்கடித்ததாக" தெரிவித்தார்.

"அக்கப்பல் நீர்மூழ்கிக் குண்டால் மூழ்கடிக்கப்பட்டது" என அவர் தெரிவித்தார்.

ஆனாலும், தாக்குதலுக்கு உள்ளான இரானிய கப்பலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

அதே சமயம், இலங்கையில் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் கப்பல் மூழ்கியதாக வெளியான செய்திகளை நிராகரிப்பதாகவும், மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புதிகா சம்பத் முன்னர் தெரிவித்திருந்தார்.

நீர்மூழ்கி தாக்குதல் என்பதை மறுத்த இலங்கை கடற்படை

இரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் தான் காரணம் என்கிற செய்தியை தாங்கள் முற்றிலும் மறுப்பதாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்தார்.

கப்பலை அடிச்சவன் சொல்கிறான் ...நான் அடிச்சது என்று....உதவிக்கு போனாக்கள்..கப்பலையே காணாமல்...அப்படியில்லை என்று மறுக்கினம்...என்னையா அங்கை நடக்குது...லங்காவுக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் .நிராயுதபாணிகளாக வந்த கப்பலைத்தாக்குவதும். பாதையில் போவோரை பெரிய வாகனங்களில் வந்து அடித்துக் கொல்வதும். கத்திக்குத்துத் தாக்குதல் செய்வதும் பெரிய வித்தியாசம் இல்லை.முஸ்லிம் செய்தால்பயங்கரவாதம் அமெரிக்கா செய்தால் யுத்தம் என்பது ஏற்புடையதல்ல. அமெரிக்கா ஈரானோடு யுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். அது யுத்தம். ஆனால் இது கோழைத்தனமான தாக்குதல். இனி ஈரானின் எப்படிப்பட்ட யுத்த நெறிமுறைகளை மீறிய தாக்குதல்களையும் இது நியாயப்படுத்தும். அது சரி ஐநா என்று ஒரு அமைப்பு இருந்ததே. ஒருவாரமாக பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது. செத்து விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் .நிராயுதபாணிகளாக வந்த கப்பலைத்தாக்குவதும். பாதையில் போவோரை பெரிய வாகனங்களில் வந்து அடித்துக் கொல்வதும். கத்திக்குத்துத் தாக்குதல் செய்வதும் பெரிய வித்தியாசம் இல்லை.முஸ்லிம் செய்தால்பயங்கரவாதம் அமெரிக்கா செய்தால் யுத்தம் என்பது ஏற்புடையதல்ல. அமெரிக்கா ஈரானோடு யுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். அது யுத்தம். ஆனால் இது கோழைத்தனமான தாக்குதல். இனி ஈரானின் எப்படிப்பட்ட யுத்த நெறிமுறைகளை மீறிய தாக்குதல்களையும் இது நியாயப்படுத்தும். அது சரி ஐநா என்று ஒரு அமைப்பு இருந்ததே. ஒருவாரமாக பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது. செத்து விட்டதா?

நீங்கள் மஹாபாரத காலத்தில் சூர்ய அஸ்தமனத்தின் பின் போர் செய்ய கூடாது, பென் உருவில் வருபவர்ரை கொல்ல கூடாது என்று ஏதேனும் பண்டைய போர் விதிகளை பின் பற்றுகிறீர்களா?

இதில் ஜெனிவா ஒப்பந்தம் உட்பட எந்த யுத்த விதியும் மீறப்படவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேல் நாலு நாளைக்கு முன்பே ஈரானின் அத்தனை அரச சார்புடைய அமைபுகள் மீதும் தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள்.

இது ஒரு போர் கப்பல், இந்தியாவில் இருந்து யுத்த முனை நோக்கி நகர்கிறது.

இதை யுத்த முனைக்குள் நுழைந்த பின் தான் தாக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.

2ம் உலக போரில் ஜேர்மனியின் யூபோர்ர்டுகள் பலவும், பிரித்தானியாவின் மேர்ச்ண்ட் நேவி மற்றும் நேவி கப்பல்களும் நடு அத்லாந்திக்கில் வைத்து இரு தரப்பாலும் மூழ்கடிக்கப்பட்டன.

அது போலவே இதுவும்.

ஆனால் இந்தியாவை தேவையில்லாமல் டென்சன் ஆக்க கூடாது என்பதால் - அதன் territorial waters மட்டும் அல்ல exclusive economic zone ஐயும் தாண்டிய பின் இலங்கை EEA க்குள் வைத்து அடித்துள்ளார்கள்.

இது கூட முடிந்தளவு உயிரிழப்பை தவிர்க்க என்றே நினைக்கிறேன.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே அல்லது மாலைதீவுக்கும் Horn of Africa வுக்கும் இடையில் வைத்து போட்டிருப்பின் - காப்பாற்ற எவரும் இன்றி அத்தனை பேரும் செத்திருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு 

Published By: Digital Desk 3

05 Mar, 2026 | 09:27 AM

image

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியிருப்பதை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க யுத்த விவகார செயலாளர் பீட் ஹெக்செத் ஈரானியக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததை உறுதிப்படுத்தினார்.

"சர்வதேச கடல் பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட டோர்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் அழித்துள்ளோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 180 பணியாளர்களுடன் பயணித்த "ஐஆர்ஐஎஸ் டெனா" கப்பல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இதுவரை பின்வரும் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடலில் மிதந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவை மேலதிக பரிசோதனைகளுக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

32 பேர் கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் இருந்த ஏனைய சுமார் 64 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

1979 ஆம் ஆண்டின் சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மாநாட்டின் உடன்படிக்கையின்படி, இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்ததால், மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணிகளை முன்னெடுக்கும் சர்வதேச கடப்பாடு இலங்கைக்கு உண்டு. Beaches & Islands

நேற்று புதன்கிழமை (04) அதிகாலை 5.08 மணியளவில் கிடைத்த அபாய சமிக்ஞையைத் தொடர்ந்து, கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தலைமையிலான குழுவினர் விமானப்படையின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

இச்சம்பவம் பிராந்தியத்தில் ஒரு நேரடி யுத்தச் சூழலை உருவாக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/240189

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.