Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2026 at 11:02, ரசோதரன் said:

சு. வெங்கடேசனை ஒரு இலக்கியவாதியாகவே நான் முதலில் அறிந்திருந்தேன். அவருக்கு 'காவல் கோட்டம்' என்னும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பின்னர் அந்த நாவலின் சில பகுதிகளே வசந்தபாலனின் இயக்கத்தில் 'அரவான்' என்ற திரைப்படமாக வந்தது. அந்த நாவலில், திரைப்படத்தில் வரும் சில நிகழ்வுகளும், மனிதர்களும் ஏதோ சில வகைகளில் இலங்கையிலும் சில ஊர்களில் நடந்ததாகவும், இருந்ததாகவும் எனக்கு அன்று தெரிந்தது. பின்னர் தான் அவர் ஒரு மார்க்சிஸ்ட் என்று தெரியவந்தது.

நீங்கள் சொன்னது போலவே இரண்டாவது உதாரணம் அவர்..................

என்னுடைய சில மதுரைக்கார நண்பர்களுக்கே அவரைத் தெரியாது. மற்ற மாவட்டக்காரர்களுக்கு சுத்தம்...............

பல வருடங்களின் முன் பாஜக அரசு மொழிவாரி ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கும் போது தமிழுக்கு மிகக் குறைவாகவும், சமஸ்கிருதத்துக்கு மிக அதிகமாகவும் ஒதுக்கியிருந்தது. அதை எதிர்த்தும் இந்திய பாராளுமன்றில் பேசியிருந்தார். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் ஓரளவு ஓடித் திரிந்தது.

இப்போதைக்கு எடப்பாடியார் சாத்தியங்கள் உள்ள ஒரு மாற்றாகத் தெரிகின்றார். அவருக்கு தனிப்பட்ட ஆளுமையோ அல்லது பிரபலமான பின்புலமோ அல்லது பெரும் கவர்ச்சியோ கிடையாது. ஆதலால் ஓரளவுக்கேனும் ஒரு கூட்டு முயற்சியாக அவரது நிர்வாகம் அமையக்கூடும். ஆனால் அவர் சேர்ந்திருக்கும் இடமும், அதிமுகவின் பிளவுகளும் பயத்தை உண்டாக்குக்கின்றன. சசிகலாவுக்கு தங்கள் ஊரிலேயே ஒரு இரண்டாயிரம் வாக்குகள் இருப்பதாக திண்டுக்கல் நண்பன் ஒருவன் சொன்னான். இந்தக் கொடுமை வேறு இருக்கின்றது..........

ஜி கே வாசனின் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஐந்து இடங்களையும் பார்த்தீர்களா................. இதுக்கு அவருக்கு ஒரு இடமும் கொடுக்காமலேயே விட்டிருக்கலாம்............. இதில் வேற அவர் தாமரைச் சின்னத்தில் நிற்கின்றார்.................🫣.

சில இடங்களில் தீவிர விஜய் எதிர்ப்பாளர் போல தோன்றினாலும், உங்கள் கருத்துக்கள் ஒரு மிக பரவலான பார்வையாக வேறுபட்டுள்ளது, தற்போதய நிலையில் இந்திய மற்றும் தமிழக அரசியல் பற்றிய புரிதல்கள் இன்மையால் ஓரளவிற்கு உங்கள் கருத்துக்கள் ஒரு சம நிலை உடையதாக எனக்கு தோன்றுகிறது (எந்த ஒரு விடயத்தினையும் தக்கவைப்பதுதான் கடினம்).

  • Replies 151
  • Views 7.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இவர்கள் எவரையும் நம்பி தூய்மை, சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதம் என்று நாங்களும் சொல்லலாமா............. 'புலி' படத்துக்கு கறுப்பாக வாங்கிய 15 கோடி ரூபாய்களுக்கு வந்த வழக்கில், விஜய் தரப்பு என்

  • வாதவூரான்
    வாதவூரான்

    ஏழையா இருந்தால் தானே மக்களுக்கு சேவை செய்யலாம். பாவம்நடிகைகளுக்கு செலவளித்துநொந்து போனார் போலை

  • ரசோதரன்
    ரசோதரன்

    திமுகவினரே உள்ளவர்களில் மிகப் பெரும் கொள்ளையர்கள் என்பதே என் அபிப்பிராயம். இதை நான் மீண்டும் மீண்டும் எழுதுகின்றேன். திமுகவின் குடும்ப ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து சொல்லிக்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, vasee said:

சில இடங்களில் தீவிர விஜய் எதிர்ப்பாளர் போல தோன்றினாலும், உங்கள் கருத்துக்கள் ஒரு மிக பரவலான பார்வையாக வேறுபட்டுள்ளது, தற்போதய நிலையில் இந்திய மற்றும் தமிழக அரசியல் பற்றிய புரிதல்கள் இன்மையால் ஓரளவிற்கு உங்கள் கருத்துக்கள் ஒரு சம நிலை உடையதாக எனக்கு தோன்றுகிறது (எந்த ஒரு விடயத்தினையும் தக்கவைப்பதுதான் கடினம்).

நான் விஜய்யின் சினிமா ரசிகர் இல்லை, வசீ. அஜித்தின் ரசிகரும் இல்லை, ரஜனியின் ரசிகரும் இல்லை. கமலின் ரசிகரும் இல்லை. ஆனால் கமலின் படங்களை சிரமப்பட்டாவது பார்ப்பேன். போன வாரம் கூட ஒரு அலைவரிசையில் கமலின் 'உத்தம வில்லன்' போய்க் கொண்டிருந்தது. அப்படியே உட்கார்ந்து பார்த்து முடித்தேன். இது முன்னரே நான் தியேட்டரில் பார்த்த படம் தான். விழலுக்கு இறைத்த நீர் என்று தான் கமலின் பல நேர்மையான சினிமா முயற்சிகளை சொல்லவேண்டும். அவருடைய சினிமா முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் கமலின் அரசியல் பிரவேசத்தை, அரசியல் நடவடிக்கைகளை மிகவும் விமர்சித்தே எழுதி வருகின்றேன்.

விஜய்யிடம் இருக்கும் அரசியல் முதிர்ச்சியின்மை, அவர் காட்டும் தவறான முன்னுதாரணங்கள், மேம்போக்கான பார்வைகள், இப்படியான பல காரணங்களாலேயே நான் அவருடைய அரசியலை விமர்சிக்கின்றேன். தனிப்பட்ட ரீதியில் விஜயையோ அல்லது எவரையுமோ வெறுப்பதும் இல்லை; எவருக்கும் ரசிகனாக இருந்து, அந்த தனி மனிதனின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஆதரிக்கும் மனமும் கிட்டவில்லை.

ஞானபீட விருது விவகாரத்தில் வைரமுத்துவின் படைப்புகளையும், நடவடிக்கைகளையும் நான் விமர்சித்து இருந்ததும் இதே வகையே.


கீழே இருப்பது சேரன் அவருடைய எக்ஸ் தளக் கணக்கில் நேற்று விஜய்யின் அரசியல் பற்றி எழுதியிருப்பது:

நீங்கள் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி மக்களிடம் வாக்கு கேட்டு வந்தால், மக்களுக்கு என்ன பிரச்சனை, அதை உங்கள் கட்சி எப்படித் தீர்க்கும், நாட்டில் நீங்கள் என்ன மாற்றங்களைக் கொண்டு வர முடியும்… அதற்காக உங்களிடம் என்ன திட்டங்கள் உள்ளன என்பதைப் பற்றி நீங்கள் பேச வேண்டுமா, அல்லது ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டுமா அல்லது நீங்கள் வர வேண்டுமா என்று கேட்டால் மட்டும் போதுமா? ஒரு நாட்டை ஆள அந்தத் தகுதி போதுமானதா? உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று எங்களுக்குத் தெரியாது… உங்கள் ரசிகர்களுக்குக் கூடத் தெரியாது என்று நினைக்கிறேன்.

எதுவாக இருந்தாலும், இது எப்போதும் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையேயான போட்டியாகவே முடியும்… எனவே, திமுக மீது உங்களுக்கு என்ன கோபம் இருக்கிறது என்று சொல்லுங்கள், விஜய்… நாங்கள் உங்களையும் ஆதரிப்போம். நீங்கள் எதுவும் சொல்லாமல் சினிமா வசனங்களை மட்டும் பேசிக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் கேட்கத்தான் போகிறார்கள்.

இங்கே, ஐம்பது ஆண்டுகளாக நிலைத்திருக்கும் கட்சிகள் ஏராளமாக உள்ளன, மேலும் பதினைந்து ஆண்டுகளாக மக்களுடன் களத்தில் நின்று, புதிய மாற்றங்களுடன் தமிழ்நாட்டை மறுவடிவமைக்க மக்களிடமிருந்து வாக்குகளைச் சேகரித்து வரும் கட்சிகளும் உள்ளன. அந்தக் கட்சிகளை விட நீங்கள் உயர்ந்தவர் என்று எந்த வகையில் உரிமை கோர முடியும்? எந்தப் போராட்டத்தில் நீங்கள் மக்களுக்காக மக்களுடன் நின்று, இது இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையேயான சண்டை மட்டுமே என்று கூறியிருக்கிறீர்கள்? ‘

மனசாட்சி இல்லாமல், எப்படி நீங்கள் ஒரு மக்கள் தலைவராக ஆவீர்கள், விஜய்? முதலில், கடின உழைப்பை மதியுங்கள்… உங்கள் கவர்ச்சி மட்டுமே மக்கள் அரசியல் ஆகாது. இனிமேல், மக்களிடம் வெறும் வீரதீர வார்த்தைகளை முழங்குவதற்குப் பதிலாக, உங்கள் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் எல்லா இடங்களிலும் முறையாகப் பேசுங்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் என்ன பிரச்சனை என்பதை ஆராய்ந்து படியுங்கள்… பொதுவாக வீரதீரச் செயல்களில் ஈடுபடுவது போலப் பேசுவது—இது ஒரு நகைச்சுவை மேடை அல்ல, இது மக்களின் களம். நாம் ஏற்கனவே 50 ஆண்டுகளை இழந்துவிட்டோம். இப்போது வந்து ஆட்டத்தைக் கெடுக்காதீர்கள். மக்களின் பிரச்சனைகளை உணராத இன்னொரு முதலமைச்சர் எங்களுக்கு மீண்டும் வேண்டாம். மக்களுடன் ஒருவராக நின்று, எங்களுக்கும் எங்கள் இளைய தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒரு தலைமைதான் எங்களுக்கு வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.