Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

March 8, 2026 3:30 pm

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மகளிர் தினமான இன்று, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இன்றுடன் தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டில் கால் பதிக்கும் இவ்வுறவுகள், இறுதிப் போரின் போது கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கானோர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட இடமான வட்டுவாகல் பாலம், வலி சுமந்த ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது.

அங்கு கூடியிருந்த பெருந்திரளான தாய்மார்கள் மற்றும் பெண்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். ‘எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது?’ என்ற கேள்விக்கு உரிய பதிலும், சர்வதேச ரீதியிலான நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

https://oruvan.com/massive-protest-in-mullaitivu/

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம்

Published By: Vishnu

08 Mar, 2026 | 08:59 PM

image

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக  காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை (8) மாபெரும்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

65151.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 08.03.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த தொடர் கவணயீர்ப்பு போராட்டமானது இன்று ஒன்பது ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

65149.jpg

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை  இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த  தகவலும் வெளியிடவில்லை எனவும் இனப்படுகொலையாளிகளை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து,  இராணுவத்தினரிடம் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே, வட்டுக்கோட்டை தீர்மானம் வழிகாட்டி சுய நிர்ணயம் எங்கள் உரிமை, சர்வதேசமே பதில்சொல் என பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

65147.jpg

எங்கே எங்கே உறவுகள் எங்கே , பழைய சட்டமும் வேண்டாம் புதியசட்டமும் வேண்டாம் , அழிக்காதே அழிக்காதே தமிழரின் இன அழிப்பின் அடையாளமான வட்டுவாகல் பாலத்தை அழிக்காதே, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் வட்டுவாகல் பாலத்தடியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் செல்வபுரத்தில் இராணுவத்திடம் உறவுகளை கையளித்த இடம் வரை சென்று நிறைவடைந்தது.

65141.jpg

குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,மன்னார் மாவட்டங்களை சேர்ந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதுடனர்.

65117.jpg

போராட்டத்தின் இறுதியில்  கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டு   ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

65105.jpg

65096.jpg

65084.jpg

65093.jpg

65075.jpg

65071.jpg

65073.jpg

65068.jpg

65050.jpg

65032.jpg

65023.jpg

64999.jpg

64987.jpg

64953.jpg

64968.jpg

சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.