Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Mar 9, 2026 - 10:52 PM

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.

340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.

281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாயாகும்.

329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 353 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.

அதேநேரம் ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmjg7r44000i356pptfwqnv9

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்; அதன்மூலமே நீண்டகாலப் பாதிப்புக்களைக் குறைக்கலாம் - தலால் ரஃபி 

Published By: Vishnu

10 Mar, 2026 | 04:05 AM

image

(நா.தனுஜா)

மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் போர்ச்சூழல் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் என பிரபல பொருளியலாளர் தலால் ரஃபி சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைய பூகோளப் பதற்றநிலைகளால் இலங்கையும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் நிலவும் பின்னணியில், குறிப்பாக எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் போர்ச்சூழல் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும். எரிபொருள் நிவாரணங்களுக்குப் பதிலாக நலிவுற்ற சமூகப்பிரிவினருக்கு நேரடியாக நிதியுதவி வழங்குவதை நான் எப்போதும் ஆதரிப்பவன் என்றாலும், தற்போதைய அசாதாரண சூழ்நிலை குறித்து சர்வதேச நாணய நிதியத்துக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.

அதேபோன்று விலை சூத்திரத்தை தற்காலிகமாக நிறுத்தாவிடின், சந்தை நிலைவரப்படி எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வடையும். போர் ஆரம்பமானதிலிருந்து மசகு எண்ணெய் விலை 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இது பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில் பிரதிபலித்தால் போக்குவரத்து மற்றும் ஏனைய விநியோகச்செலவுகள் உயர்வடைந்து, உணவுப்பொருட்களின் விலைகளும் மிகவேகமாக அதிகரிக்கும். பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்கள் விலையை உயர்த்திய பின்னர், எரிபொருள் விலை குறைந்தாலும் மீண்டும் விலையைக் குறைக்கமாட்டார்கள். எனவே இது நிரந்தர விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.

அதேவேளை எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவதால் அரசாங்கத்துக்கு நிதிச்சுமை ஏற்படும் என்பது உண்மைதான். இருப்பினும் வாகன இறக்குமதி வரி மற்றும் மூலதனச் செலவினங்கள் குறைவாக இருந்ததன் காரணமாக அரசாங்கத்திடம் இப்போது போதிய நிதிக்கையிருப்பு உள்ளது. தற்காலிகமாக 2 - 3 மாதங்களுக்கு விலையை ஸ்திரமாகப் பேணினால், நீண்டகால அடிப்படையில் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புக்களைத் தவிர்க்கலாம்.

ஏனெனில் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்தால், அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது அரசாங்கத்தின் மீள் உருவாகும் செலவுகளை நிரந்தரமாக உயர்த்திவிடும். அத்தோடு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதங்களை அதிகரிக்கவேண்டியிருக்கும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

இலங்கையில் ஏற்கனவே 25 சதவீத மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தத் திடீர் விலை உயர்வைச் சமாளிக்கும் சக்தி பலருக்கு இல்லை. எனவே எதிர்பொருள் விலை சூத்திரத்தை நிறுத்திவைப்பது 3 மாதங்களுக்கு மட்டுமேயான ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/240578

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே.... யாழ்பாணத்தான் கெட்டிக்காரன்.

ஈரானில், முதல் குண்டு வெடித்த உடனேயே...

பெற்றோலுக்கு இரவு, பகலாக வரிசையில் நின்று...

எரி பொருட்களை சேமித்து வைத்து விட்டார்கள்.

இவர்கள் இப்படி அடிபட்டு பெற்றோல் அடிப்பதை பார்த்து மற்றைய மாகாணத்தவர்....

"யாழ்ப்பானீஸ்", "பனங்கொட்டை சூப்பி"... என்று எள்ளி நகையாடிய போதும், 🤣

எதையும் கவனத்தில் எடுக்காது.... பெற்றோலை சேமித்து வைத்ததை பாராட்ட வார்த்தைகளே இல்லை. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விலை உயர்வுக்கான உண்மையான காரணம்

Mar 10, 2026 - 01:46 PM

எரிபொருள் விலை உயர்வுக்கான உண்மையான காரணம்

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார். 

எரிபொருள் விலைகள் ஒரே அடியாக பெருமளவு உயர்வதைத் தவிர்ப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: 

"பொதுவாக முந்தைய மாதத்தின் விலைகளை சரிசெய்தே நாங்கள் விலைகளை அதிகரிக்கிறோம். தற்போது எங்களிடம் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு நிலையாக இருந்தபோதிலும், அடுத்த மாதத்திற்காக வரும் கப்பல்களின் எரிபொருள் விலை பெருமளவு அதிகரித்து வருகின்றது. எனவே, தற்போதுள்ள இருப்புகளைப் பாதுகாத்து, விலையை சமநிலைப்படுத்த நாங்கள் எதிர்பார்த்தோம். 

அதன்படி, எரிபொருள் விலைகள் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் உயர்வதைத் தவிர்க்கவும், இருக்கும் இருப்புகளை மாதங்களுக்கு இடையில் கவனமாகப் பகிர்ந்து பயன்படுத்தவும் விலையை சமநிலைப்படுத்தினோம். எரிபொருள் பதுக்கல் மாஃபியாக்களைக் கட்டுப்படுத்துவதுடன், வரிசைகள் உருவாகாமல் பொதுமக்கள் நீண்ட காலத்திற்கு ஒரே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம். உலகச் சந்தையில் விலை குறைந்தால், அடுத்த சில நாட்களில் நிச்சயமாக எமது எரிபொருள் விலைகளைக் குறைக்க முடியும்" எனத் தெரிவித்தார். 

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு இணங்க, கடந்த மார்ச் முதலாம் திகதி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலைகளைத் திருத்திய போதிலும், அதிலிருந்து 9 நாட்களின் பின்னர் நேற்று (09) இரவு மீண்டும் அனைத்து எரிபொருட்களினதும் விலைகளை அதிகரித்துள்ளது. 

புதிய எரிபொருள் விலைப் பட்டியல்: 

ஒக்டேன் 92 பெட்ரோல்: 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 317 ரூபா

ஒக்டேன் 95 பெட்ரோல்: 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 365 ரூபா

லங்கா வெள்ளை டீசல்: 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 303 ரூபா

லங்கா சுப்பர் டீசல்: 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 353 ரூபா

மண்ணெண்ணெய்: 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 195 ரூபா.

https://adaderanatamil.lk/news/cmmkc501r000l356pl8ddnpp5

ட்றம்பின் நேற்றைய அறிவிப்பைத் தொடர்ந்து இன்று பெற்றோல் 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது.

எரிவாயுவின் விலையும் 15 வீதத்தால் வீழ்ந்துள்ளதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

உண்மையிலேயே.... யாழ்பாணத்தான் கெட்டிக்காரன்.

ஈரானில், முதல் குண்டு வெடித்த உடனேயே...

பெற்றோலுக்கு இரவு, பகலாக வரிசையில் நின்று...

எரி பொருட்களை சேமித்து வைத்து விட்டார்கள்.

இவர்கள் இப்படி அடிபட்டு பெற்றோல் அடிப்பதை பார்த்து மற்றைய மாகாணத்தவர்....

"யாழ்ப்பானீஸ்", "பனங்கொட்டை சூப்பி"... என்று எள்ளி நகையாடிய போதும், 🤣

எதையும் கவனத்தில் எடுக்காது.... பெற்றோலை சேமித்து வைத்ததை பாராட்ட வார்த்தைகளே இல்லை. 😂

சிறித்தம்பி! யாழ்ப்பாணீஸ் உந்த பதுக்கல்,அமுக்கல் விசயத்திலை விண்ணாதி விண்ணர்கள்.🤣

கோயில் படையல் புக்கை மோதகம் தொடக்கம் பாதி வாழைப்பழம் எல்லாத்தையும் கதவுக்கு பின்னாலை ஒளிச்சு வைக்கிறதில வலு கெட்டிக்காரங்கள்.40,50 வருசத்துக்கு முதலே மண்ணெண்ணை தகரத்தை கிடங்கு வெட்டி மண்ணுக்கை பதுக்கி வைச்ச பரம்பரை நம்ம பரம்பரை.😂

பதுக்கல் எண்டது யாழ்ப்பாணத்து மண்வாசனையோட சேர்ந்தே இருக்கும்.😎

  • கருத்துக்கள உறவுகள்

649481933_925349290138869_82935580099385

😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.