Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!

adminMarch 11, 2026

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார்.

வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. அத்துடன் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த திட்டத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும் , அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் , அதற்கு அப்போதைய யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் (தற்போதைய வடமாகாண ஆளுநர்), அந்த திட்டம் நடைமுறைப்படுத்திய கால பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக கடமையாற்றிய தெ.சுகுணரதி மற்றும் ஆ. சோதிநாதன் ஆகிய மூவருக்கும் எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2026/230329/

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

50 minutes ago, கிருபன் said:

, அதற்கு அப்போதைய யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் (தற்போதைய வடமாகாண ஆளுநர்),

எப்போதையை ஆளுநர் என்பதை விளக்கமாக தெரிவிக்க முடியவில்லையோ? செய்தியில் ஏன் இத்தனை குழப்பம்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

எப்போதையை ஆளுநர் என்பதை விளக்கமாக தெரிவிக்க முடியவில்லையோ? செய்தியில் ஏன் இத்தனை குழப்பம்?

அண்ணை தற்போதைய ஆளுநர் தான், இவர் முன்பு அரசாங்க அதிபராக இருக்கையில் நடந்த திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

எப்போதையை ஆளுநர் என்பதை விளக்கமாக தெரிவிக்க முடியவில்லையோ? செய்தியில் ஏன் இத்தனை குழப்பம்?

சம்பவம் நடைபெற்ற காலமான 2016’ம் ஆண்டு… அவர் மாவட்ட செயலர், இப்போ ஆளுநர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ! அவர்தான் இவரா? நான் கவனிக்கவில்லை. இந்த நாட்டில் இதெல்லாம் சகஜம். சுனாமி நிதியை காளவாடியபின், கொலை, கொள்ளை செய்த பின் அதை செய்த திருடர், கொலைகாரர் ஜனாதிபதியாகிற நாடல்லவா இது!

  • கருத்துக்கள உறவுகள்

அனுரவின் ஆளுனர் செய்த களவுக்கு கவர் எடுக்கும் அந்தரிப்பில் அவர் முன்னர் யாழ்பாண ஜி ஏ என்பது கூட மறந்து போச்சு 😂.

ஜெயக்கொடி, வேதநாயகன் என கள்ளர்கள் என குற்றம் சாட்டபட்டவர்கலால் நிரம்பி வழிகிறது ஜேவிபி.

இந்த வேதநாயகன் பற்றி ஆரம்பம் முதலே நான் யாழில் எச்சரித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய யாழ் அரச அதிபர் பிரதீபனின் மகன் 20 -25 வயதுகளை நெருங்கியவர்.

அண்மையில் பல கோடி ரூபா பெறுமதியான நவீன உணவகம் ஒன்றினை திறந்துள்ளாராம்.

இந்த இளம் வயது உள்ளவருக்கு... இவ்வளவு பணம் எங்கிருந்து வந்துள்ளது.

நான் இந்த வயதில்... 200 ரூபாவை கூட கண்டத்தில்லை.

சில காலத்துக்கு முன் இந்த மகன், தனது நண்பருடன்... தகப்பனின் அரச வாகனத்தை எடுத்துக் கொண்டு மிக வேகமாக ஓடி...கந்தர்மட சந்திக்கு அண்மையில் மிகப் பெரிய விபத்தை சந்தித்து இருந்தார்கள். விலை உயர்ந்த வாகனம் பெருமளவு சேதத்துக்கு உள்ளாகி இருந்தது. அந்த விடயத்தை... காதும்,காதும் வைத்த மாதிரி அமுக்கி விட்டார்கள்.

பொதுவாக இலங்கையில்... உத்தியோகங்களை பார்த்துத்தான், வழக்குப் போடுவார்கள் போலுள்ளது. அப்பாவி மக்கள்தான்... பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

பல சிங்கள அமைச்சர்களை விட தமிழ் அரசாங்க அதிபர்களின், அமைச்சு செயல்லாளர்களின் சொத்து பலமடங்கு.

வீடுகள் எல்லாம் மினிமம் 3 மாடி, மாட மாளிகைகள்.

யார் அமைச்சரா வந்தாலும்…சேர்…சேர்…

எண்டு குழையடித்து சேத்து விடுவார்கள், சொத்தை.

பதவியை விட்டு போகும் போது கூட அமைச்சருக்கு தெரியவராது தான் அடித்ததை விட இவர்கள் அடித்தது அதிகம் என்பது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.