Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு

Mar 15, 2026 - 06:50 AM

ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை:  ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரானுக்கு உடன்படிக்கை செய்துகொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் தாம் தற்போது அதனைச் செய்ய விரும்பவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

அந்நிபந்தனைகள் எவை என்பதைக் கூற மறுத்துவிட்ட அமெரிக்க ஜனாதிபதி, ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை முற்றாகக் கைவிடும் அர்ப்பணிப்பு அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மட்டும் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய மையமான 'கார்க்' (Kharg) தீவை அமெரிக்கா முழுமையாக அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், வேடிக்கைக்காக அமெரிக்கா இன்னும் சில தடவைகள் அந்த இடத்தைத் தாக்கக்கூடும் என்றும் இதன்போது கூறியுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmr2goy5000u356p2jffdg8t

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது; ஆனால் உடன்படிக்கைக்கு நான் தயாரில்லை – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

15 Mar, 2026 | 02:28 PM

image

ஈரான் அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லாததால் இப்போதைக்கு அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

NBC செய்திச் சேவைக்கு சனிக்கிழமை வழங்கிய 30 நிமிட தொலைபேசி நேர்காணலின் போது அவர் இதனைத் திட்டவட்டமாக அறிவித்தார்.

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், "நாங்கள் அத்தீவை முற்றாக அழித்துவிட்டோம், விளையாட்டிற்காக இன்னும் சிலமுறை அங்கு தாக்குதல் நடத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாகத் துடைத்தெறியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமினி உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பில்  தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவது குறித்து கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்த ட்ரம்ப், ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பெற்றோல்  விலை ஒரு கலன் 3.66 டொலராக உயர்ந்துள்ள போதிலும், போர் முடிந்தவுடன் அது முன்னெப்போதையும் விடக் குறையும் என அவர் உறுதியளித்துள்ளார்.

உக்ரேன் போர் தொடர்பில் பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை விட உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உடன்படிக்கை செய்துகொள்வதற்கு மிகவும் கடினமானவராக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியுள்ளதை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

ட்ரோன்களை வீழ்த்துவதற்கு உக்ரேன் வழங்க முன்வந்துள்ள உதவியை நிராகரித்த அவர், "எமக்கு ஜெலென்ஸ்கியின் உதவி தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தேவையற்ற முறையில் ஈரானால் தாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/241031

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர் வாயால் வடை சுடுவதில் வல்லவர் என்பது உலகறிந்ததே, ஆனால் நிஜத்தில் அவர் ஒரு ஆப்பிழந்த குரங்காகவே இருக்கின்றார். அவருடைய கதைகளை அவருடைய விசில் அடிச்சான் குஞ்சுகளே (MAGA supporters ) தற்போது நம்புவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.