Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி?

thalapathy-vijay.jpg?imgsize=1094003&wid

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கோட்டையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரதத்திற்கு, இப்போது 'பெட்ரோல்' போடக் கூடப் பணமில்லாமல் என்ஜின் முனகிக் கொண்டிருக்கிறது. “தளபதி வருவார்... மாற்றத்தைக் தருவார்" என்று காத்திருந்த நிர்வாகிகளுக்கோ, இப்போது "கடன் காரன் வருவான்... கழுத்தைப் பிடிப்பான்" என்ற பயமே மேலோங்கி நிற்கிறது.

தவெக-வின் தற்போதைய நிலைமையை 'ஆக்‌ஷன்' படம் என்று நினைத்து உள்ளே வந்தவர்களுக்கு, இப்போது அது 'சோகப் படமாக' நீண்டு கொண்டிருக்கிறது.

கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தியதோடு சரி, அடுத்தகட்ட நகர்வுகளில் தலைமை காட்டும் மந்தகதி அடிமட்டத் தொண்டர்களை அதிர வைத்திருக்கிறது. குறிப்பாக, தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், இப்போது கையை விரித்து நிற்கிறார்கள். "கட்சிப் பணிக்காக ஏற்கெனவே கையில் இருந்ததைச் செலவு செய்துவிட்டு, இப்போது வட்டிக்குக் கடன் வாங்கி திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தலைமையோ எட்டிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை" என்பதுதான் மாவட்டச் செயலாளர்களின் குமுறலாக இருக்கிறது.

நிதிய நெருக்கடி என்ற புயல், தவெக-வின் அடிமட்டக் கட்டுமானத்தையே ஆட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் களம் என்பது வெறும் ஆக்ரோஷமான பேச்சால் மட்டும் அமைவது அல்ல; அதற்கு 'பணபலம்' என்ற எரிபொருள் மிக அவசியம். ஆனால், தவெக-வின் கஜானாவோ 'ஈ' ஆடிக்கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், கட்சியின் உச்சகட்டத் தலைமை (விஜய்) எடுக்கும் முடிவுகள் நிர்வாகிகளை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளன. "கட்சியைக் கொண்டு சேர்க்க நாங்கள் ரத்தம் சிந்துகிறோம், ஆனால் விஜய் அண்ணனோ வசதி படைத்தவர்களை (Rich background) மட்டுமே அருகில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்" என்ற பேச்சு அறிவாலயத்தின் சுவர்களைத் தாண்டி வெளியே ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

உள்ளூர் அளவில் செல்வாக்கு இருந்தும், கையில் காசில்லாத காரணத்தால் பல விசுவாசமான நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, "தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்ய விஜய் தயாராக இல்லை, மாறாக நிர்வாகிகளையே நிதியைத் திரட்டச் சொல்கிறார்" என்ற தகவலும் தீயாய்ப் பரவுகிறது.

பல நிர்வாகிகள் மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கட்சியே வேண்டாம் என்ற விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளதாக 'சோர்ஸ்கள்' தெரிவிக்கின்றன.

தேர்தல் பணிகள் குறித்து எந்தவொரு தெளிவான திட்டமிடலோ அல்லது நிதி ஒதுக்கீடோ தலைமையிடமிருந்து வராதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதே நிலை நீடித்தால், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்குத் தாவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில கடனோடு கட்சி பணிகளை நிறுத்திவிட்டு.. போதும்டா சாமி என்று கிளம்பும் சூழல் உள்ளது.

'வெற்றி நிச்சயம்' என்று முழங்கிய தவெக, இப்போது 'நிதி நெருக்கடி' என்ற சுழலில் சிக்கித் தவிக்கிறது. விஜய் தன் 'பர்ஸ்' கயிற்றைத் தளர்த்துவாரா அல்லது தொண்டர்களே தங்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.tamilmirror.lk/cinema/தமிழகத்தில்-தத்தளிக்கும்-த-வெ-க-அப்போ-விஜய்யின்-கதி/54-374319

  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களின் முன்னர் பாமகவில் பிளவு ஏற்பட்ட பின் நடந்த ஒரு கூட்டத்தில் அன்புமணி ஆதரவாளர்களிடம் நிதி கோரியிருந்தார். ஐந்து ரூபாய்கள் என்றாலும் கொடுங்கள் என்று கேட்டிருந்தார் என்று நினைக்கின்றேன். இப்போது அன்புமணி பாஜக - அதிமுக கூட்டணியில் போய்ச் சேர்ந்து விட்டார், ஆகவே தேர்தல் செலவு பற்றிய கவலை அவருக்கில்லை. ஐந்து ரூபாய் கூட எவரும் கொடுக்கத் தேவையில்லை.

சீமான் இப்பொழுது நிதி கேட்டுக் கொண்டிருக்கின்றார். தொலைக்காட்சியில் சீமானின் நிதி கோரும் விளம்பரம் பார்த்தேன். இப்படி ஒரு சீமானை, துள்ளலும் எகத்தாளமும் இல்லாத ஒரு சீமானை, நான் முன்னர் எங்கும் பார்த்திருக்கவில்லை. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யாத கட்சியாக நாதக இருந்தாலும், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள் தவிர வேறு எவராவது இப்படி இருக்கின்றார்களா தெரியவில்லை, தேர்தல் செலவு நிறையவே ஆகும்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளுக்காக திமுகவே பணம் செலவழித்துவிடும். நாதகவிற்கு வழியேயில்லை. 234 தொகுதிகளிலும் தனியவே நிற்பதற்கு நாதகவின் ஆதரவாளர்களும், அபிமானிகளுமே நிதி கொடுக்க வேண்டும்.

விஜய்க்கும், தவெகவிற்கும் ஆதவ் அர்ஜூனா சில கோடிகளை இதுவரை கொடுத்திருக்கலாம், இன்னும் சில கோடிகளை அவர் கொடுக்கக் கூடும். இது மொத்தமாக ஆகப் போகும் செலவுடன் ஒப்பிடும் போது ஒரு துளி மூக்குத்தூள் அளவு என்று சொல்லலாம். விஜய்க்கும், ரஜனிக்கும் இருக்கும் சில பல ஒற்றுமைகளில் பண விடயமும் ஒன்று. காத்திரமான ஒரு நிதிப் பங்களிப்பை இவர்கள் இருவரும் செய்வதில்லை. கைகள் மிகவும் இறுக்கமானவர்கள். தவெகவிற்கு விஜய்யின் பணம் கிடைக்கப் போவதில்லை. மற்றும் விஜய்யிடம் இருக்கும் பணம் மற்றும் சொத்துகளை விட, 234 தொகுதிகளுக்கு ஆகும் செலவு மிக அதிகம்.

விஜய்யின் பெரும்பாலான ரசிகர்களே தங்கி வாழும் ஒரு பிரிவினராகத்தான் இன்னும் இருக்கின்றார்கள். வீட்டில் உள்ளவர்கள் விஜய்க்கு வாக்குப் போடாவிட்டால் சோற்றில் விஷம் வைத்து விடுவேன் என்று சொல்லி பிரபலமான அந்த இளம்பெண்ணின் வீட்டில் கூட அவரின் அப்பா மற்றும் அம்மாவே சோற்றுக்காக உழைக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். தேர்தலில் நிற்பதற்கு விருப்ப மனுக்களை வாங்கிய ரசிகர்கள் அவற்றை திருப்பிக் கொடுக்காததற்கு மீளமுடியா கட்டுப் பணமான ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாய்களே காரணம்.

தவெகவை நாதக போன்று குறைந்த செலவுடன் தேர்தல்களை சந்திக்கும் ஒரு கட்சியாக விஜய்யும், அவரது முதற்கட்ட நிர்வாகிகளும் உருவாக்கவில்லை. திமுக, அதிமுகவுக்கு எல்லா வகைகளிலும் தாங்கள் போட்டியாளர்கள் மற்றும் சமனானவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கவே முயன்றார்கள். பிம்பம் உருவாகி விட்டது. இனி அவர்கள் நிஜத்தை பார்க்கப் போகின்றார்கள். நிஜம் சுடும் என்பது தானே அனுபவம்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி?

thalapathy-vijay.jpg?imgsize=1094003&wid

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கோட்டையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரதத்திற்கு, இப்போது 'பெட்ரோல்' போடக் கூடப் பணமில்லாமல் என்ஜின் முனகிக் கொண்டிருக்கிறது. “தளபதி வருவார்... மாற்றத்தைக் தருவார்" என்று காத்திருந்த நிர்வாகிகளுக்கோ, இப்போது "கடன் காரன் வருவான்... கழுத்தைப் பிடிப்பான்" என்ற பயமே மேலோங்கி நிற்கிறது.

தவெக-வின் தற்போதைய நிலைமையை 'ஆக்‌ஷன்' படம் என்று நினைத்து உள்ளே வந்தவர்களுக்கு, இப்போது அது 'சோகப் படமாக' நீண்டு கொண்டிருக்கிறது.

கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தியதோடு சரி, அடுத்தகட்ட நகர்வுகளில் தலைமை காட்டும் மந்தகதி அடிமட்டத் தொண்டர்களை அதிர வைத்திருக்கிறது. குறிப்பாக, தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், இப்போது கையை விரித்து நிற்கிறார்கள். "கட்சிப் பணிக்காக ஏற்கெனவே கையில் இருந்ததைச் செலவு செய்துவிட்டு, இப்போது வட்டிக்குக் கடன் வாங்கி திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தலைமையோ எட்டிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை" என்பதுதான் மாவட்டச் செயலாளர்களின் குமுறலாக இருக்கிறது.

நிதிய நெருக்கடி என்ற புயல், தவெக-வின் அடிமட்டக் கட்டுமானத்தையே ஆட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் களம் என்பது வெறும் ஆக்ரோஷமான பேச்சால் மட்டும் அமைவது அல்ல; அதற்கு 'பணபலம்' என்ற எரிபொருள் மிக அவசியம். ஆனால், தவெக-வின் கஜானாவோ 'ஈ' ஆடிக்கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், கட்சியின் உச்சகட்டத் தலைமை (விஜய்) எடுக்கும் முடிவுகள் நிர்வாகிகளை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளன. "கட்சியைக் கொண்டு சேர்க்க நாங்கள் ரத்தம் சிந்துகிறோம், ஆனால் விஜய் அண்ணனோ வசதி படைத்தவர்களை (Rich background) மட்டுமே அருகில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்" என்ற பேச்சு அறிவாலயத்தின் சுவர்களைத் தாண்டி வெளியே ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

உள்ளூர் அளவில் செல்வாக்கு இருந்தும், கையில் காசில்லாத காரணத்தால் பல விசுவாசமான நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, "தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்ய விஜய் தயாராக இல்லை, மாறாக நிர்வாகிகளையே நிதியைத் திரட்டச் சொல்கிறார்" என்ற தகவலும் தீயாய்ப் பரவுகிறது.

பல நிர்வாகிகள் மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கட்சியே வேண்டாம் என்ற விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளதாக 'சோர்ஸ்கள்' தெரிவிக்கின்றன.

தேர்தல் பணிகள் குறித்து எந்தவொரு தெளிவான திட்டமிடலோ அல்லது நிதி ஒதுக்கீடோ தலைமையிடமிருந்து வராதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதே நிலை நீடித்தால், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்குத் தாவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில கடனோடு கட்சி பணிகளை நிறுத்திவிட்டு.. போதும்டா சாமி என்று கிளம்பும் சூழல் உள்ளது.

'வெற்றி நிச்சயம்' என்று முழங்கிய தவெக, இப்போது 'நிதி நெருக்கடி' என்ற சுழலில் சிக்கித் தவிக்கிறது. விஜய் தன் 'பர்ஸ்' கயிற்றைத் தளர்த்துவாரா அல்லது தொண்டர்களே தங்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.tamilmirror.lk/cinema/தமிழகத்தில்-தத்தளிக்கும்-த-வெ-க-அப்போ-விஜய்யின்-கதி/54-374319

தமிழ் மிரர் இலங்கை பேப்பர் அல்லவா?

இதை எழுதியவர் பெயர் ஏன் போடப்படவில்லை?

இந்த பத்திரிகைகக்கு தமிழ் நாட்டில் எத்தனை நிருபர்கள் உளர்?

விகடனின் பாணியில், ஏலவே தமிழக பத்திரிகைகளில் வந்த செய்தியை கலந்து, கற்பனையாக எழுதபட்ட ஆக்கம் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

விகடனின் பாணியில், ஏலவே தமிழக பத்திரிகைகளில் வந்த செய்தியை கலந்து, கற்பனையாக எழுதபட்ட ஆக்கம் போல தெரிகிறது.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் பற்றிய தமிழ் யுரியுப்பர்களின் காணொளி தயாரிப்புகள் போன்றது என்று சொல்கிறீர்கள் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.