Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

12.45 இற்கு நான் கிளம்பவேண்டும். எனது பொதிகளைத் தூக்கிவர யாரையாவது அனுப்புகிறீர்களா என்றுவிட்டு சிறிய பொதியைத் தூக்கிக்கொண்டு வெளியே வர, இருவர் வாசலில் வந்து நிற்கின்றனர். கீழே சென்று திறப்பைக் கொடுத்தபின் பிக்மீக்குப் பதிய ஏழு நிமிடங்களின் பின் அந்தக் கார் வர, பொதிகள் மூன்றையும் ஏற்றிவிட்டபின் நானும் ஏறி அமர்கிறேன்.

பொதிகளை சுமந்தவைக்கு ஏதாவது???????

ஒன்றுமே போடலையே அதுதான்?

10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சாண்ட்விச், சலாட் மற்றும் ஹாட் சொக்ளற் என்று கூற 17 dollars என்கின்றார் அந்தப் பெண். நான் என் பாங்க் காட்டைக் கொடுக்க அந்தப் பெண் காட் ரீடரில் போட்டால் டிக்கிளைண்ட் என்று வருகிறது. அதில் போதிய பணம் இருக்கிறது மீண்டும் போடுங்கள் என்கிறேன். மீண்டும் போட அப்படியே வர அந்தப் பெண் பக்கத்தில் நின்ற ஒருவருடன் ஏதோ குசுகுசுக்க அவர் காட்டை வாங்கிப் பார்த்துவிட்டு உங்கள் காட் ஒரு மாதத்தின் முன்னரே முடிந்துவிட்டது என்றபடி காட்டை எனக்குத் தர, நான் நம்பாமல் வாங்கிப் பார்க்கிறேன்.

எனக்கு சந்தோசமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது.

உங்கள் முகம் எப்படி போயிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன அநியாயமாய் கிடக்கு . ....... உங்கட கார்ட் முடிந்ததற்கு அந்த அப்பாவி மனுஷனை ஏன் ஏசுவான்,கோபப்படுவான் ........ ! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:

நீண்ட நாட்களின் பின் பயணக் கதையுடன் வந்திருக்கிறீர்கள் . நன்றி

மூடடைப்பூச்சியும் நீங்களும் நல்ல நடபு போல ...எங்கு சென்றாலும் விடுவதில்லை . நல்ல தைரியமான பெண். தொடருங்கள். .

வருகைக்கு நன்றி அக்கா

11 hours ago, நிழலி said:

நல்ல துணிச்சலான பெண் தான் நீங்கள். நெடுங்காலத்தின் பின் கண்டது மகிழ்ச்சி.

நெடுங்காலமா ................. கடந்த ஆண்டும் வந்திருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் நீங்கள் போய் கேட்க உங்களை சேர்த்துக் கொண்டவைக்கு

இன்னொருத்தரோடும் கதைத்துள்ளேன் என்று கூட சொல்லவே இல்லை.

வாசித்த எங்களுக்கே ஜீரணமாக கஸ்டமாக இருக்கிறது.

உங்களைச் சேர்த்தவர்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம்.

அதுக்குக் காரணம் இருக்கு அண்ணா. நான் சொல்லி அவர்கள் வேறு ஆளைத் தம்முடன் சேர்த்துக்கொண்டால் அதுகும் இல்லை இதுகும் இல்லை என்றாகிவிடும். அத்தோடு அவர் சிங்களவர். முன்னபின்ன தெரியாது. அவர் என்னைக் கூட்டிக்கொண்டு போகும் வரையிலும் நான் உள்ளே போவேனோ மாட்டேனோ என்ற சந்தேகமும் இருந்துகொண்டிருந்தது. சிலவேளைகளில் உப்பிடி இருந்தால்த்தான் பிழைக்கமுடியும். ஆனாலும் அந்தப் பெண்கள் பக்கமே திரும்பாமல் ஓடி வராமல் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத்தான் வந்தேன். அத்தோடு அன்றுதான் சிங்களவர்கள் மேல் இருந்த ஏதோவொன்று இல்லாமற்போனது.

2 hours ago, ஈழப்பிரியன் said:

பொதிகளை சுமந்தவைக்கு ஏதாவது???????

ஒன்றுமே போடலையே அதுதான்

அவர்களுக்குக் கொடுக்காமல் எப்படி?? இம்முறை சிறிய பல விடையங்களைப் பஞ்சியில் எழுதாமல் கடந்திருக்கிறேன்

2 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு சந்தோசமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது.

உங்கள் முகம் எப்படி போயிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

அண்ணருக்கு என்னே ஒரு அன்பு 😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இதென்ன அநியாயமாய் கிடக்கு . ....... உங்கட கார்ட் முடிந்ததற்கு அந்த அப்பாவி மனுஷனை ஏன் ஏசுவான்,கோபப்படுவான் ........ ! 😂

காட் முடிந்தால் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னேயே புதியதாய் அனுப்பிவிடுவார்கள். என பெயரில் வரும் எல்லாக் கடிதத்தையும் எனக்குப் படம்எடுத்து வற்சப்புக்குப் போட்டவருக்கு இது மறந்துபோச்சு. தெரிந்திருந்தால் நானே காட்டைக் குடுத்திருக்கமாட்டேனே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவ்வளவு உணவும் எத்தனை பவுண்ட்ஸ் வருகிறது என்று போனில் பார்த்தால் 12.70 பவுண்டஸ் என்று காட்ட, அட மிகுதி ஏழு பவுண்டஸ் வீணாகப் போகிறதே என எண்ணியபடி ஒரு கேக் மற்றும் யூஸ் எடுத்துவிட்டு 20 பவுண்ஸ் கொடுத்து உணவுகளை வாங்கிக்கொண்டு வர அந்தக் கணவனும் மனைவியும் பிஸ்கற் உண்டு கொண்டு இருக்கின்றனர்.

என்னதான் உயிர் போகிற விசயமாயிருந்தாலும் சாப்பாட்டிலே நீங்கள் ரொம்பக் கவனம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

என்னதான் உயிர் போகிற விசயமாயிருந்தாலும் சாப்பாட்டிலே நீங்கள் ரொம்பக் கவனம்

உண்மைதான் அண்ணா. என் கணவர் அடிக்கடி சொல்வார் "உன்னைக் கூட்டிக்கொண்டு போற நேரம் சின்னப் பிள்ளை ஒன்றைக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று 😃ஆனால் இலங்கையில் நின்றபோது பெரும்பாலான நாட்கள் மதியம் சாப்பிட்டதுடன் இரவு உணவு உண்ணாமல் காலை எட்டு மணிக்குத் தான் உண்டிருக்கிறேன். அதனால் நிறையும் குறைந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவுதியின் ரியாத் ஏயாப்போட்டில் ஏழு மணிநேரம் எப்படியோ போய்விட்டது இன்னும் ஒரு மணிநேரத்தில் விமானத்தில் இருப்போம். எட்டு மணித்தியாலத்தில் லண்டனில் நிற்பம் என்று எண்ண ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. விமானம் புறப்படும் நேரத்துக்கு இன்னும் 20 நிமிடங்கள்தான் இருக்கு. ஆனாலும் எம்மை இன்னும் விமானத்தில் ஏற்றவில்லை. பணிப்பெண்களோ விமான ஓட்டியையோ கூடக் காணவில்லை. என்ன இது மீண்டும் பிந்தபோகிறதோ என்று சினத்துடன் வேறு வழியற்றுக் காத்திருக்க, கவுண்டர் திறக்கப்பட்டு ஆடிப்பாடி இருவர் வருகின்றனர்.

இப்பதான் எமது விமானம் “Saudia” வந்து சேர்ந்திருக்குப் போல என எண்ணியபடி எழுகிறேன். அதன்பின் 15 நிமிடம் கழித்தே எல்லோரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கின்றனர். காலை 6.30 மணிக்கு வெளிக்கிட்டிருக்கவேண்டிய விமானம் ஒன்பது மணிக்குத்தான் வெளிக்கிட ஆயத்தமாகுது. ஒரு வரிசையில் மூன்று மூன்றாக ஒன்பது இருக்கைகளே. ஒவ்வொரு மூன்று இருக்கையிலும் ஒவ்வொருவரே இருக்கின்றனர். அது ஒருவகையில் மகிழ்வாக இருந்தாலும் ஏன் இந்த விமானத்தில் சனமே இல்லை என்ர பயமும் வர வெளியே பிராக்குப் பார்க்க, வேறொரு விமானத்தைத் தவிர ஏதுவுமே தெரியவில்லை. எல்லோரும் எறிமுடிந்தும் நேரம் பத்து நிமிடம் போனபின்னர்தான் விமானம் ஸ்டார்ட் ஆகி அப்படியே நிற்கிறதே தவிர 20 நிமிடமாக நகரவே இல்லை.

என்னடா இது சோதனை. பக்கத்திலும் யாரும் இல்லை. பணிப்பெண்களையும் காணவில்லை. எட்டிப் பார்க்க அவர்களும் இருக்கைகளில் இருப்பது தெரிய வேறு வழியின்றி பேசாமல் இருக்கிறேன். ஸ்கிரீனில் ஏதும் பார்க்கலாம் என்றால் அதை மாற்றவே முடியவில்லை. அதுபோக எனது கெட்போன் அதில் எனது கெட்போனை கொழுவமுடியாமல் இருக்கு. விமானம் வெளிக்கிட்ட பின்தான் திறந்துவிடுவார்கள் போல என எண்ணியபடி கண்ணை மூடிக் கிடக்கிறேன். மீண்டும் ஒரு பத்து நிமிடங்கள் செல்ல விமானம் மெல்ல நகர கண்ணைத் திறந்து பார்க்கிறேன்.

விமானம் மிக மிக மெதுவாகவே ஊருகிறது. என்ன பிரச்சனை இவங்களுக்கு. விமானம் ஊர்வதால் அவர்களை அழைக்கவோ  எதுவும் கேட்கவும் முடியாது. என்னவோ பிரச்சனை என்று மட்டும் புரிகிறது. மீண்டும் சிறிது நகர்ந்து நிற்கிறது. சரியாகப் பத்துமணி ஆகும்போது தூரத்தில் நெருப்பு எரிவதுபோல் இரு இடங்களில் தெரிகிறது. அது உண்மையில் நெருப்புத்தானா அல்லது என்  நினைப்பா என்று தீர்மானிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் பரவலாக புகைபோல் தெரிய அது நெருப்பினால் வந்த புகையா அல்லது புகார் எதுமா என்று எண்ணியபடி எட்டி எட்டிப் பார்க்க எதுவும் தெரியவில்லை. விமானத்துள் எந்தச் சத்தமும் இன்றி அமைதியாக எல்லோரும் இருக்கின்றனர்.

பத்து நிமிடங்களின் பின்னர் மிக மெதுவாக ஊரத் தொடங்கிய விமானம் மெதுவாக நகர்ந்து ஓரிடத்தில் திரும்பிச் சென்று ஐந்து நிமிடங்களின் பின் இன்னொரு இடத்தில் திரும்புகிறது. நேரம் பிந்தியதில்த்தான் எமது விமானத்தை இன்னும் ஏறவிடலில்லை என்று நான் எண்ணியதைப் பொய்யாக்கியபடி எமது விமானத்துக்குப் பின்னே ஒரு பத்து விமானங்கள் வரிசையில் நிற்கின்றன. அப்போதுதான் எந்த ஒரு விமானமும் இதுவரை இறங்கவில்லை என்பது தெரிகிறது. ஏனோ தெரியவில்லை எனக்கு பதட்டமோ பயமோ ஏற்படவில்லை. ஏதோ நடப்பது நடக்கடும். சனீஸ்வரரே என்  கணவர் பிள்ளைகளிடம் என்னைச் சேர்த்துவிடுங்கள் என்று மனதுள் எண்ணியபடி வெளியே பார்க்கிறேன். அதன் பின் எந்தப் புகையோ நெருப்போ கண்ணில் படவில்லை.

எமக்கு முன் உள்ள ஓடுபாதையில் வேறுபக்கம் இருந்து ஒரு விமானம் வந்து மேலெழும்ப சிறிது நேரத்தில் எமது விமானமும் மெதுவாக மேலெழ அப்பாடா என்று நிம்மதி ஏற்பட்டாலும் ஏன் இப்படி மிக மெதுவாக மேலெழுகிறது? முன்னர் பயணித்த எந்த விமானமும் மேலெழும்போது இத்தனை மெதுவாக ஏறியதில்லையே. முன்னர் ஒரு தடவை ஜெர்மனியில் இப்பிடித்தான் இரண்டு மணிநேரம் பிந்திய easyjet விமானம் அரைமணிநேரம் மேலே வட்டமிட்டுவிட்டு மீண்டும் கீழே வந்து எம்மை இறக்கியது நினைவில் வர, இவர்களும் அப்பிடித்தான் செய்யப்போகிறார்களோ என்று சலிப்பும் வர ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்தின் பின்னரே மேகக் கூட்டங்களிநூடு மேலெழுந்து சென்றபின்னர்தான் நிம்மதியானது.

பாதுகாப்புப் பட்டியின் படம் மறைந்த பின், படம் பார்ப்போம் என்று பார்த்தால் கெட்போன் இன்னும் தரவில்லை. அவர்கள் தரும்வரை பொறுமையுடன் இருந்து வாங்கிக் கொழுவினால் எனக்கு முன்னால் உள்ள ஸ்கிரீனில் படம் விக்கிவிக்கி அப்பப்ப நின்று வர, பக்கத்து இடத்துக்கு மாறினால் அங்கும் அதே பிரச்சனை. சிறிது நேரத்தில் தமது விமானத்தில் இன்ரநெற் சரியாக வேலைசெய்யாமைக்கு வருந்துகிறோம் என்கின்றனர். சீற் தான் தாராளமாக இருக்கே என்று எண்ணியபடி மற்றய இரண்டு இருக்கைகளிலும் இருந்த சிறிய தலையணைகள் விரிப்புகள் எல்லாம் எடுத்து தலைக்கு வைத்தபடி படுக்க நல்ல தூக்கம் வருகிறது.

உணவின் வாசனை என்னை எழுப்ப எழுந்து அமர்கிறேன். இரண்டுமணிநேரம்தான் போயிருக்கு. மரக்கறியா சிக்கிணா என்று விமானப் பணிப்பெண் கேட்க சிக்கிண் என்கிறேன். இலங்கையில் நின்றபோது ஐந்து மாதங்களில் மூன்றோ நான்கோ நாட்கள்தான் கோழிக்கறி உண்டாதனால் அவர்கள் தந்த உணவு நன்றாக இருப்பதுபோல் இருக்கிறது. மோகன்லாலின் படம் ஒன்றைப் பார்க்கப் போட்டால் இரண்டரை மணிநேரப்படம் நின்றுநின்று மூன்று மணித்தியாலங்கள் சென்று முடிய மீண்டும் கண்ணை மூடி இருந்தபடியே தூங்குகிறன். கீத்துறோ விமான நிலையத்தை இன்னும் ஒரு மணிநேரத்தில் அடைந்துவிடுவோம்.  என்ற அறிவிப்பு வர மகிழ்ச்சி ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் மீண்டும் சிறிய உணவு ஒன்று தருகிறார்கள். திறந்து பார்த்தால் சலாமி, காளான் எல்லாம் போட்ட பீட்ஸா. சாப்பிட்டபின் மனதும் வயிறும் நிறைந்துபோயிருக்க ஸ்கிரீனில் விமானம் செல்வதைப் பார்க்க இன்னும் முப்பத்தைந்து நிமிடங்களில் இறங்குமிடம் என்று காட்டுகிறது.

திடீரென எல்லோரையும் பாதுகாப்புப் பட்டி அணியும்படி அறிவிப்பு வருகிறது. விமானம் மூன்று நான்கு தடவை குலுங்கிவிட்டுச் சரியாகிறது. நேரம் 9.45 இன்னும் பதினைந்து நிமிடத்தில் தரையிறங்க வேண்டும் ஆனால் சரியாக இருபத்தைந்து நிமிடங்கள் மேலேயே வட்டமிட்டுவிட்டு சரியாக 10 மணிக்கு இறங்கவேண்டிய விமானம் 10.30 மணிக்குத் தரையைத் தொட்டபின் தான் மனம் ஒரு நிலையாகிறது.

கீழே இறங்கி பொதிகளை எடுப்போம் என்று சென்றால் பொதிகள் முதலே வந்துவிடும் என்று இலங்கையில் சொன்ன நினைவு வர பொ திகளுக்குப் பொறுப்பான கவுண்டருக்குச் சென்று எமது பொதிகள் இந்த விமானத்தில் வரவில்லை. நேரே இலங்கையில் இருந்து இங்கே அனுப்புகிறேன் என்று கூறினார்கள். நான் ரியாத்தில் இருந்து வருகிறேன் என்றபடி எனது போடிங்பாசில் ஒட்டியிருந்த அட்டைகளை எடுத்துக் கொடுக்கிறேன். இது ரியாத்தில் தந்த போடிங்பாஸ் தானே என்றுகேட்க ஓம் என்கிறேன். நீங்கள் தமிழா  என்று கேட்க ஓம் என்கிறேன்.

அவர் தமிழில் இன்று வந்த போடிங் பாசில் ஒட்டியுள்ளபடியால் இன்றுதான் நீங்கள் வந்த விமானதில்த்தான் உங்கள் பொதியும் வந்திருக்கும். ஏழாம் இலக்கத்துக்குப் போங்கள் என்று கூற நான் எதுவும் பேசாமல் ஒரு தள்ளுவண்டியை எடுத்து அதில் எனது சிறிய பொதி, கைப்பை எல்லாவற்றையும் வைத்துத் தள்ளிக்கொண்டு ஏழாம் இழக்கத்துக்குப் போனால் அங்கு இன்னும் பொதிகள் வர ஆரம்பிக்கவில்லை. முன்னர் ரியாத் எயாப்போட்டில் என்னுடன் வந்து கதைத்த இருவரும் இன்னும் இருவரும் என்னருகில் வந்து நிற்க, எனது பொதி முன்னரே இங்கு வந்துவிடும் என்று இலங்கையில் கூறினார்கள் என்கிறேன். அப்பிடி வராது எம்மோடுதானே எமது பொதிகள் வரும் என்கிறார் ஒருவர். மற்றவர்களும் அதை ஆமோதிக்கின்றனர். அவள் வடிவாகக் கூறினாளே. இவர்கள் இப்படிச் சொல்கின்றனர். சிலவேளை ரியாத்தில் நாம் பொதிகளைத் தேடலாம் என்று அவள் சொல்லியிருப்பாளா என்ற எண்ணமும் ஓட எதுவும் பேசாமல் பாத்துக்கொண்டு நிற்கிறேன். பொதிகள் வரத்தொடங்கவும் எல்லோரும் அவரவர் பொதிகளை எடுத்துக்கொண்டு போக வந்து இறங்கியாச்சா என்று கணவர் போன் செய்கிறார். வந்தாச்சு. இன்னும் பொதிகள்தான் வரவில்லை எடுத்துக்கொண்டு வாறன் என்றுவிட்டு போனை வைக்கிறேன்.

எல்லாரும் அவரவர் பொதிகளை எடுத்துக்கொண்டு போக ஒரு பன்னிரண்டு பேர் மட்டும் நிற்க எமது பொதிகள் மட்டும் வரவேயில்லை. அதில் எல்லாப் பொதிகளும் வந்துவிட்டதாகப் போட நான் வண்டிலைத் தள்ளிக்கொண்டு முன்னர் போன இடத்துக்குப் போகிறேன். அவரிடம் எனது பொதிகள் இரண்டும் வரவில்லை. முன்னரே சொன்னேன் தானே என்கிறேன். அப்படியா என்றுவிட்டு ஒரு படிவத்தை எடுத்து நிரப்பும்படி தருகிறார். நல்ல ஏச்சுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் வேறு வழியில்லாமல் படிவத்தை வாங்கி பக்கத்தில் உள்ள மேசையில் வைத்து என் விபரங்களை எழுதிவிட்டு நிமிர, நான் நின்ற இடத்தில் வேறு இருவர் வந்து நிற்க நான் மற்றக் கவுண்டருக்குச் சென்று படிவத்தைக் கொடுக்க, அவர் சிஸ்டத்தில் பதிந்துவிட்டு நாளை DPD உங்கள் பொதியை வீட்டுக்கே கொண்டுவந்து தருவார்கள் என்றபடி ரிசீற்றைத் தர வாங்கிக்கொண்டு வெளியே வர குளிர் காற்று முகத்தில் அடிக்கிறது.

முடிந்தது   

    

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்களின் ஊடாக நிறைய புதிய விடையங்களை தெரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது..முக்கியமாக விமான பயணத்தில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றங்கள்.எதிர் காலத்தில் இந்த நிலைமைகள் மாற்றப்படுமா... ? அல்லது இதே வரிசையில் நின்று நம்பர் துண்டு எடுத்து இது எல்லாம் எல்லாருக்கும் சாத்தியபடாத ஒன்று..மிக்க நன்றியக்கா.தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, யாயினி said:

உங்கள் எழுத்துக்களின் ஊடாக நிறைய புதிய விடையங்களை தெரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது..முக்கியமாக விமான பயணத்தில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றங்கள்.எதிர் காலத்தில் இந்த நிலைமைகள் மாற்றப்படுமா... ? அல்லது இதே வரிசையில் நின்று நம்பர் துண்டு எடுத்து இது எல்லாம் எல்லாருக்கும் சாத்தியபடாத ஒன்று..மிக்க நன்றியக்கா.தொடர்ந்து எழுதுங்கள்.

இவை விசேட நிலைமைகள். ஆயிரக் கணக்கானோர் ஒரே நாளில் சேவைகள் பெறும் வகையில் வர முனையும் போது மட்டும் தான் இப்படியாக ரோக்கன் கொடுத்து உள்ளே விடுவார்கள் (ரோக்கன் கொடுக்கும் முறை இல்லா விட்டால், பெண்கள், வயோதிபர்கள் போன்றோர் உள்ளேயே போக முடியாமல் தடியன்கள் மட்டும் தான் வரிசையில் முன்னே நிற்பர்😂). மற்ற படி சாதாரணமாக உள்ளே நுழைந்து (walk-in) சேவைகள் பெறும் வகையில் தான் விமான நிறுவன அலுவலகங்கள் இருக்கும்! இது என் அனுபவம், கொழும்பில்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக இருந்தது ........உங்களின் பயணத்தில் நாங்களும் பங்கு கொண்டு பயணித்து வேர்த்து விறுவிறுத்து இறங்கியது போல் ஒரு மனநிலை .......... வீட்டுக்கு பொதி வந்ததும் பதியவும் .......! 😅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.