Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும் - ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும் - ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்

Published By: Digital Desk 3

22 Mar, 2026 | 05:23 PM

image

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் சில கப்பல்களுக்கு ஈரான் 20 இலட்சம் அமெரிக்க டொலர்களை கட்டணமாக அறவிட தீர்மானித்துள்ளதாக ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அலாவுதீன் புருஜெர்தி தெரிவித்துள்ளார்.

ஈரான் அரச தொலைக்காட்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹோர்முஸ் நீரிணையில் தற்போது ஒரு "புதிய நிர்வாக முறை" அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த புருஜெர்தி, "போர் என்றால் அதற்கு ஒரு செலவு உண்டு. எனவே, இங்கிருந்து செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பது ஈரானின் அதிகாரம் மற்றும் உரிமையைக் காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/241669

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகளை தவிர அனைவருக்கும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு ; புதிய தடைகளை விதித்துள்ளது ஈரான்

Published By: Vishnu

22 Mar, 2026 | 07:00 PM

image

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சில கப்பல்களிடமிருந்து ஈரான் 2 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிப்பதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டி தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஹோர்முஸ் ஜலசந்திக்கு ஒரு "புதிய ஆட்சி முறை" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

"போருக்கு ஒரு விலை உண்டு" என்பதை வலியுறுத்திய அந்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நடவடிக்கை ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வலிமையையும் இறையாண்மையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் என்றும் கூறினார்.

தற்போதைய போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைக் கடுமையாகச் சோதித்து வருகிறது.

மேலும், இஸ்ரேல் அல்லது அமெரிக்காவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என உறுதிசெய்யப்பட்ட கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

https://www.virakesari.lk/article/241678

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரால் பல மக்கள் தேவையில்லாமல் இப்ப அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது,☹️

ரம்பின் அடுத்த இலக்கு வடகொரியா☠️

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்த நாட்டை சீண்டி, அவர்கள் கையில் அதிகாரம் கொடுத்துள்ளார்கள். பத்து ஆண்டுகளுக்கு தமக்கு இரானால் அச்சுறுத்தல் இல்லை என்றார் நெத்தன்யாகு, இரான் அமெரிக்காவோடு ஒத்து உறவாட வேண்டும் என்றார் ட்ரம்ப், இப்போ அமெரிக்கா இஸ்ரேலோடு தொடர்புள்ளவர்களுக்கே பாதுகாப்பே இல்லை என்கிறது இரான், அரபு நாடுகள் அமெரிக்காவோடு சேர்ந்து இயங்குவது பற்றி ஆலோசிக்கின்றன. இரண்டு முட்டாள்கள் சேர்ந்து சாதித்தது இவைதான். அதிக தலைக்கனம் இப்படித்தான் தலைகுனிவை ஏற்படுத்தும். தலை தப்பியது தம்பிரான் புண்ணியமென நினைத்து ஒதுங்க வேண்டும் இவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹோர்முஸ் நீரிணையை சர்வதேசக் கப்பல்கள் பயன்படுத்துவது தொடர்பில் ஈரானின் பாதுகாப்பு சபையின் நிபந்தனை

Published By: Digital Desk 3

23 Mar, 2026 | 03:51 PM

image

ஹோர்முஸ் நீரிணையை சர்வதேசக் கப்பல்கள் பயன்படுத்துவது தொடர்பிர் ஈரானின் பாதுகாப்பு சபை நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஈரானுடன் குரோதமற்ற நாடுகள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல ஈரானுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதுதான் ஒரே வழி என ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான பாதுகாப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், ஈரானின் கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடாவிலுள்ள அனைத்துப் போக்குவரத்துப் பாதைகளும் பல்வேறு வகையான கடற்படை கண்ணிவெடிகள் மூலம் முடக்கப்படும். கடற்கரையிலிருந்து ஏவப்படக்கூடிய மற்றும் கடலில் மிதந்து செல்லக்கூடிய கண்ணிவெடிகள் இதற்காகப் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தகைய தாக்குதல் நிகழ்ந்தால், ஹோர்முஸ் நீரிணை மட்டுமல்லாமல் முழு பாரசீக வளைகுடாவும் நடைமுறையில் முடக்கப்படும் எனவும், அதன் பொறுப்பு தாக்குதல் நடத்திய தரப்பினருக்கே சேரும் எனவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

https://www.virakesari.lk/article/241735

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.