Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

Mar 24, 2026 - 08:08 AM

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

இந்த பாரிய வெடிப்பைத் தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, வெடிப்புச் சத்தத்தினால் அருகில் உள்ள வீடுகள் கூட அதிர்வடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இருப்பினும், இந்த வெடிப்புச் சம்பவத்தினால் இதுவரை உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. 

ஆயினும், காற்றின் தரம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நகரத்தின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmn409ioz0008356psfp6ghcv

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, உடையார் said:

இது ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கலாம்🤣

ஈரான்காரன்… அமெரிக்க வரை போயிட்டான் போலுள்ளது. 😂

தம்பருக்கு இது தேவையா. 🤡

கெத்து காட்டப் போய், அவன் வீட்டு வாசல்லை வந்து நிற்கிறான். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா: டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு!

Published By: Digital Desk 1

24 Mar, 2026 | 08:13 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் ஆர்தர் பகுதியில் அமைந்துள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (23) பாரிய வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பலத்த வெடிப்பைத் தொடர்ந்து, அங்கு பாரிய தீ பரவியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்ட் ஆர்தரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குள்ளேயே இருக்குமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியைத் தவிர்க்குமாறு வாகன சாரதிகளை டெக்சாஸ் மாநில போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு நகர முதல்வர் மற்றும் அவசர முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த சுத்திகரிப்பு நிலையமானது அமெரிக்காவின் மிகப்பெரிய நிலையங்களில் ஒன்றாகும். இது நாளொன்றுக்கு 360,000 பெரல் எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த வெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/241790

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஈரான்காரன்… அமெரிக்க வரை போயிட்டான் போலுள்ளது. 😂

தம்பருக்கு இது தேவையா. 🤡

கெத்து காட்டப் போய், அவன் வீட்டு வாசல்லை வந்து நிற்கிறான். 🤣

ஏற்கனவே சீனாக்காரன் வேற அமெரிக்காவுக்கு மேலால பலூன் விட்டு நீளம் அகலம் பாத்திட்டான்....gutenmorgen.gif

New images show Chinese spy balloons also targeted Asia as Japan vows  retaliation - World News

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.