Jump to content

நானும் என் ஈழமும் - பகுதி 7


Recommended Posts

பதியப்பட்டது

மாவீரர் தின பதிவு - தலைவர்க்கு துணையாக வேண்டும், தமிழீழம் மலர்ந்தாக வேண்டும்

cemetry2004a%20copy.jpg

[கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்]

வழமையான வேலை, படிப்பு ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மாவீரர் நாளான இன்றைய பொழுதிற்கான வேலைகளில் மூழ்கியபடியே இருக்கும் போது நடந்தவை பல மனதிலே தோன்றி , கண் வழியே இறங்கிகொண்டிருக்கின்றது. தனியே இருந்து அழவும், போராடவும் நாம் ஒன்றும் யாருமற்றவர்கள் இல்லையே. எங்களுக்கு தோள் தர உறவுகள் நீங்கள் இருக்கின்றீர்களே.

இன்றைய நாள் "கார்த்திகை 27" உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் ஏதோ ஒரு வகையில் நிறுத்தி வைக்கும் என்றே சொல்லலாம். என்னைக்கேட்டால் மாற்றுக்கருத்துக்காரர்களை கூட என்பேன்.எத்தனை ஆயிரம் உயிர்கள் எமக்காய் விதைத்தாயிற்று. தமிழன் ஒரு போதும் அடிபணியான் என்பது உலகம் உள்ள வரை வரலாற்றில் இருக்கும் வண்ணம் பதிந்தாயிற்றே! இந்த காலத்தில் வாழ்க்கின்றோம் என்பதே எத்தனை பெரிய பாக்கியம்.

கடந்த ஒரு மாதமாக ஒஸ்திரேலியாவில் மாவீரர் தின அலை வீசிக்கொண்டிருக்கின்றது. நாளை நடக்கவிருக்கும் மாவீரர் நாள் நினைவெழுச்சியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை ஒவ்வொரு ஒஸ்திரெலிய தமிழர் மனதிலும் இருப்பதை உணர முடிகின்றது. தேசியத்தலைவரின் உரையில் என்ன சொல்வார்? சண்டையா? சமாதானமா? இவை அனைத்தையும் ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்து என் அறையின் ஜன்னலை தாண்டி பார்வை போக, நினைவுகளோ ஈழத்தை நோக்கி செல்கின்றது.

என் சிறு வயதில் சில தடவைகள் மாவீரர் தினத்தன்று ஈழத்தில் இருந்திருக்கின்றேன். ஊரே உணர்வோடு இருப்பார்கள். எந்தவொரு வீட்டிலும் இரவு 12 மணிக்கு வாசல் முன்னர் தீப்பந்தம் வைக்க மறக்கமாட்டார்கள். அதே நேரத்தில் ஊரில் உள்ள அனைத்து கோவில்களிலும் மணிகள் அடிக்கும். சற்றே குளிர்கூடிய காற்றுடன், அந்த தீப்பந்தங்களும், கோவில்மணிகளும் எந்தவெரு மனிதனின் வீரத்தையும் தட்டி எழுப்பும். அந்த நேரத்தில் ஒரு வீட்டில் ஒரு மாவீரன் நாட்டிற்காய் போய் இருந்தால், அந்த பெற்றவளின் அழுகை ஒலி மனதை பிசையும். அடிக்கடி அழும் அப்பாச்சியை பார்த்து ரொம்ப சின்ன வயதில் பயந்து, பின்னர் மனதுடைந்து, வளர வளர அழுகை போய் அழுத்தம் தான் வந்தது.

அன்றைய நாளில் ஒரு மாவீரர் துயில் இல்லத்திற்கு சென்றால், சொல்லவும் எழுதவும் வார்த்தைகளே இருக்காது. எத்தனை உயிர்கள் அங்கு காத்திருக்கின்றார்கள் மலரும் ஈழத்திற்காய். அந்த இடத்தில் வீரம், துணிவு, தியாகம், பாசம் அத்தனையும் காற்றில் இருக்கும். ஒவ்வொரு கல்லறைக்கு முன்னாலும் அந்த மாவீரரை பெற்றவர்கள்.

பல தடவை சென்றிருந்தாலும், குறிப்பாக ஒரு மாவீரர்தினத்தை சொல்ல முடியும். எனது மச்சாள் மாவீரரான முதல் வருடம். என் அத்தையின் ஒரே பெண். எனக்கு மூத்தவள். குடும்பத்தில் இரு பெண் என்றிருக்க என்னை ஒருத்தியாக்கிவிட்டு சென்றவள். எனக்கு நினைவு தெரிந்து நடக்கும் எங்கள் வீட்டின் முதல் தியாகம். முன்னர் பலர் மாவீரரான போதும், எங்கள் வீட்டில் இருந்து ஒரு பெண் புலி. மச்சாள் போராட்டத்தில் இணைந்த போதும் என் அத்தை அழவில்லை, மாவீரர் ஆன போதும் அழவில்லை. இன்றுவரை தலைநிமிர்ந்து சொல்வார் "நான் ஒன்றை பெத்தாலும் ஒரு முத்தை பெத்தேன்". மச்சாளை போலவே உருவத்திலும், செய்கையிலும் ஒற்றுமை கொண்ட நான் போதும் என்பார்கள்.

அத்தை வீட்டில் இருந்து என்னையும் மச்சாளை பார்க்க (கல்லறையில்) அழைத்து சென்றார்கள். பொதுவாகவே ஒரு சிறு சோகம் என்றாலும் என் கண்ணில் நீர் வருவது வழமை. ஏனோ அன்று அழுகை வரவில்லை. என் அத்தை போல் போல் எத்தனை அன்னைகள். அவர்களின் பிள்ளைகளை கல்லறைகளாக கட்டிக்கொண்டு, அந்த கல்லறையில் ஒரு சிறு தூசு கூட விழுந்தாலும் துடித்து கொண்டு. அடிக்கும் குளிர்காற்றில் தன் பிள்ளைக்கு வைத்த தீபம் அணையக்கூடாதே என்ற பதபதைப்பு. அன்று என் அத்தானின் கைகளில் இருந்த எனக்கு அடுத்த நாள் அத்தானும் போராட்டத்தில் இணைவார் என தெரிந்திருக்கவேயில்லை. அந்த வயதில் புரிந்திருக்கவும் இல்லை. புரிந்திருந்தாலும் தடுத்திருக்கமாட்டேன். அத்தையும் தடுக்கவில்லையாம். மச்சாள் அடிக்கடி சொல்வாராம் "நான் போய்ட்டா, மரியாதைய ஒவ்வொருத்தர வந்திடணும்". மச்சாளின் ஆசை, நடந்துகொண்டுதானிருக்கின்றத

Posted

தாயகத்தில் இருந்தபோது நானும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்று நடுநிசியில் விளக்கேற்றியுள்ளேன். அது மிகவும் ஒரு வித்தியாசமான அனுபவம். சொற்களில் விபரிக்க முடியாது.

நீங்கள் இணைக்க முயற்சித்த பாட்டு கீழே உள்ளது.

Posted

நன்றி கலைஞன் :icon_mrgreen:

Posted

வணக்கம் தூயா

உங்களுடைய ஈழத்துடனான அனுபவத் தொடரின் எல்லா பகுதிகளையும் இன்றுதான் வாசித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். என்னையும் பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்றது.

சிறு வயதில் போராளிகளுடன் கதைக்க வேண்டும் அவர்களுடன் பழக வேண்டும் என எனக்கு நிறைய ஆசைகள் இருந்தது. ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு எனது தந்தை எனனை அழைத்து செல்வார். அப்போது போராளிகளை பார்க்கும் சந்தர்ப்பத்தில் நான் அடைந்த மகிழ்ச்சியை விபரிக்க முடியாது.

யாழ்ப்பாணம் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பின் அங்கு நின்று இராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்திய போராளிகளுடன் பழகும் சந்தர்ப்பம் 97 இல் எனக்கு கிடைத்தது. அது மறக்க முடியாத காலம். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். அந்த வயதில் போராளிகளுக்கு சிறுசிறு உதவிகள் செய்ய எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை ஈட்டு சிறிதளவு திருப்தியடைந்தேன். ஆமி கிழமைக்கு 2,3 நாட்களாவது எமது கிராமத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்துவான். துரோகிகளின் காட்டி கொடுப்பில் எனது தந்தை ஆமியினால் கைது செய்யப்பட்டார். நல்லகாலம் பின்னர் விட்டுவிட்டார்கள்.

பிள்ளைகள் தமிழ் தேசியப் போராட்டத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக வளர்வதற்கு பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது. இந்த வகையில் தூயா போல நானும் அதிஷ்டசாலி. ஆனால் இப்பவும் அரைவாசிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் சுயநலத்துடன் தான் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உணர்வு பூர்வமாக தமிழின உணர்வாளர்களை ஊருக்கு அழைத்து செல்லும் தூயாவுக்கு பாராட்டுக்கள்.

  • 1 month later...
Posted

வணக்கம் தூயா

உங்களுடைய ஈழத்துடனான அனுபவத் தொடரின் எல்லா பகுதிகளையும் இன்றுதான் வாசித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். என்னையும் பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்றது.

சிறு வயதில் போராளிகளுடன் கதைக்க வேண்டும் அவர்களுடன் பழக வேண்டும் என எனக்கு நிறைய ஆசைகள் இருந்தது. ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு எனது தந்தை எனனை அழைத்து செல்வார். அப்போது போராளிகளை பார்க்கும் சந்தர்ப்பத்தில் நான் அடைந்த மகிழ்ச்சியை விபரிக்க முடியாது.

யாழ்ப்பாணம் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பின் அங்கு நின்று இராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்திய போராளிகளுடன் பழகும் சந்தர்ப்பம் 97 இல் எனக்கு கிடைத்தது. அது மறக்க முடியாத காலம். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். அந்த வயதில் போராளிகளுக்கு சிறுசிறு உதவிகள் செய்ய எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை ஈட்டு சிறிதளவு திருப்தியடைந்தேன். ஆமி கிழமைக்கு 2,3 நாட்களாவது எமது கிராமத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்துவான். துரோகிகளின் காட்டி கொடுப்பில் எனது தந்தை ஆமியினால் கைது செய்யப்பட்டார். நல்லகாலம் பின்னர் விட்டுவிட்டார்கள்.

பிள்ளைகள் தமிழ் தேசியப் போராட்டத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக வளர்வதற்கு பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது. இந்த வகையில் தூயா போல நானும் அதிஷ்டசாலி. ஆனால் இப்பவும் அரைவாசிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் சுயநலத்துடன் தான் உள்ளனர்.

பல நாட்களின் பின்னர் பதிலளிப்பதற்கு முதலில் மன்னிப்புகேட்டு கொள்கின்றேன். என்னை போலவே சிந்திப்பவர்களை சந்திக்கும் போது மிகவும் இனிமையான உணர்வாக உள்ளது. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உணர்வு பூர்வமாக தமிழின உணர்வாளர்களை ஊருக்கு அழைத்து செல்லும் தூயாவுக்கு பாராட்டுக்கள்.

மிக்க நன்றி ஈழப்பிரியன் :lol:

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் அருமையான பதிவுகள் தூயா.

பிள்ளைகள் தமிழ் தேசியப் போராட்டத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக வளர்வதற்கு பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது. இந்த வகையில் தூயா போல நானும் அதிஷ்டசாலி. ஆனால் இப்பவும் அரைவாசிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் சுயநலத்துடன் தான் உள்ளனர்.

நீங்க வேற் இங்க சிட்னியில சில டமிழ்ஸ்(புத்தரின் பாசையில்) மாவீரர் நிகழ்வுகளுக்கு தங்கள் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போக மாட்டினம். ஆனால் பாரத தேசத்தின் சுதந்திர தின விழாவுக்கு கூட்டிக் கொண்டு செல்லுவினம் . அதுகளோட அரசியல் கதைத்தல் எங்களுக்கு விசர் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தூயா,

இன்றுதான் உங்கள் பதிவைப்படித்தேன். 2003ம் ஆண்டு மாவீரர் தினமன்று நான் ஈழத்தில் அதுவும் யாழில் இருந்தேன். அக்காவுடன் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சென்றேன். 'பாதங்களை மெதுவாகப் பதியுங்கள்' என்ற வாசகம் பார்த்த உடனேயே கண்களில் நீர் வரத்தொடங்கிவிட்டது.

எங்களின் எண்ணங்கள் யாவினையும் வார்த்தைகளாக்கி வரிகளாக்கி நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஈழத்தின் நினைவலைகளை உங்கள் மூலம் மீண்டும் சுவாசிக்கின்றோம்.

நன்றி தூயா.

  • 1 month later...
Posted

தூயா,

இன்றுதான் உங்கள் பதிவைப்படித்தேன். 2003ம் ஆண்டு மாவீரர் தினமன்று நான் ஈழத்தில் அதுவும் யாழில் இருந்தேன். அக்காவுடன் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சென்றேன். 'பாதங்களை மெதுவாகப் பதியுங்கள்' என்ற வாசகம் பார்த்த உடனேயே கண்களில் நீர் வரத்தொடங்கிவிட்டது.

எங்களின் எண்ணங்கள் யாவினையும் வார்த்தைகளாக்கி வரிகளாக்கி நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஈழத்தின் நினைவலைகளை உங்கள் மூலம் மீண்டும் சுவாசிக்கின்றோம்.

நன்றி தூயா.

கோப்பாயிலா? ரொம்ப உருக்கமா இருந்திருக்குமே..நான் அங்க போன போது அழுது கொண்டே இருந்தனான்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.