Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை தடை செய்ய வேண்டும்: ஜே.வி.பி. மீண்டும் வலியுறுத்தல்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய நிதி சேகரித்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை அமெரிக்கா தடை செய்து விட்டது என்று பெருமை பேசுவதில் எந்தப்பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை.

அமெரிக்காவைப் போன்று இங்கும் புலிகள் இயக்கத்தையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என ஜே.வி.பி உறுப்பினர் விமல் வீரவன்ஸ நேற்று நடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் நேற்றுக் காலை கூடிய போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகள் மற்றும் அதனோடு தொடர்புடைய குழுகளின் செயற்பாடுகள் என்பனவற்றை ஐக்கிய அமெரிக்கா தடை செய்து முடக்கி வைத்ததுள்ளது. அதற்காக இலங்கை அரசின் சார்பில் அமெரிக்காவிற்கு தாம் நன்றி தெரிவிக்கிறார் என் அந்த

உரையில் அவர் கூறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜே.வி.பி உறுப்பினர் விமல் வீரவன்ஸ ஒரு கோரிக்கையை முன் வைத்தார்.

'உலக நாடுகள் புலிகளைத் தடை செய்து விட்டன. அமெரிக்காத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் தடை செய்து விட்டது. அதன் சொத்துக்களை முடக்கி விட்டது என்று கூறுவதில் எந்தத் நன்மையும் ஏற்படப் போவதில்லை'.

'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இங்கு சுதந்திரமாக செயற்படுகின்றது. சர்வதேச தொண்டர் நிறுவனமான யுனிசெப் அமைப்பு அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பத்துக் கோடி ரூபாவை வழங்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நான் ஏற்கனவே இந்தச் சபையில் முறைப்பாடு செய்துள்ளோம்.

'அதே வேளை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இங்கு புலிகளின் செயற்பாடுகளுக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்து செயற்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆழிப் பேரலை

நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக கௌரவித்து அதற்கு விருது வழங்கியுள்ளார்.

'ஆனால் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கத்துடன் நேரடித் தொடர்புகளை உடையது'.

'எனவே அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பது போல் இலங்கையிலும் அதனைத் தடை செய்ய வேண்டும்'. எனக் கோரிக்கை விடுத்தார்.

புலிகள் மீது தடை விதித்து அதன் மூலம் ஜே.வி.பியை வளைத்துப் போடத் திட்டம். அரச உயர் மட்டத்தில் ஆய்வு

தனது வரவு செலவத்திட்டத்தை நாடர்ளுமன்றில் நிறைவேற்றுவதற்கு போதிய எம்.பிக்களின் ஆதரவின்றித் தடுமாறும் அரசுத் தலைமை, பிரதான எதிர்க்கட்சிகளுக்குள் ஒன்றான ஜே.வி.பியைத் தனக்கு ஆதரவாக வளைத்துப் போடும் முயற்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை அறிவிப்பை எந் நேரத்திலும் விடுக்கலாம் என கொழும்பில் பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்தகைய தடை உத்தரவு ஒன்றை உடனடியாக விடுவிப்பது குறித்து அரசு தலைமை தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

நன்றி : சுடர் ஒளி

'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இங்கு சுதந்திரமாக செயற்படுகின்றது. சர்வதேச தொண்டர் நிறுவனமான யுனிசெப் அமைப்பு அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பத்துக் கோடி ரூபாவை வழங்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நான் ஏற்கனவே இந்தச் சபையில் முறைப்பாடு செய்துள்ளோம்
.

தடை செய்தால் சுதந்திரமாக செயற்படாதா?

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-11-17

ஜே.வி.பியைத் "தாஜா' செய்ய புலிகள் மீது தடை விதிப்பு?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு நாடாளுமன்றத்தில் முக்கிய பலப் பரீட்சையை நாளை மறுதினம் சந்திக்கவிருக்கின்றது.

"மஹிந்த ராஜபக்ஷ சகோதரர்கள் அன்ட் கம்பனி'யின் கெடுபிடிகளாலும், போக்குகளாலும், குடும்ப ஆதிக்கத்தாலும் அரசுக்குள் அதிருப்தியுற்ற மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் பலர் அரசிலிருந்து வெளியேறி எதிரணிப் பக்கம் தாவலாம் என்ற சூழ்நிலையில் நாளை மறுதினம், அரசின் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முக்கிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது.

அரசுக்கு எதிராக எதிரணி எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் சூழலில், அரசுக்குள்ளும் அரசுத் தலைமைக்கு எதிரான புகைச்சல் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதால், இவை எல்லாம் சேர்ந்து வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசின் காலை முற்றாக வாரி விட்டாலும் விடலாம் என்ற எதிர்பார்ப்பு கொழும்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது.

ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில் கட்சிகளின் ஆதரவு நிலை தொடர்பான அட்சரகணிதக் கணக்குகளை ஆராய்வோர் ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறுகின்றனர். இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசைக் கவிழ விடுவதில்லை என்ற ஒரு தீர்மானத்தை ஜே.வி.பி. எடுக்குமானால், அதை செயலில் உறுதிப்படுத்தக்கூடிய வலிமை இன்று அக்கட்சிக்கு உள்ளது என்பதுதான் அது. இந்த யதார்த்தம் அரசுத் தலைமைக்கும் நன்கு புரியும்; தெரியும்.

ஆகவே, ஜே.வி.பியை "தாஜா' செய்து சமாளிப்பதன் மூலம் வரவு செலவுத்திட்டம் மீதான முதலாவது கண்டத்தை நாளை மறுதினம் இலகுவாகத் தாண்டி விடலாம் என்பது அரசுத் தலைமையின் கணிப்பீடு.

ஆனால், வரவு செலவுத்திட்டத்தின்போது அரசைக் காப்பாற்றுவதற்கு ஜே.வி.பி. நான்கு முன் நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அரசு புலிகள் இடையேயான யுத்த நிறுத்த உடன்பாட்டை ரத்துச் செய்ய வேண்டும் என்பது அதில் முக்கியமான ஒரு கோரிக்கை.

வரவு செலவுத் திட்டத்தில் தப்பிப் பிழைப்பதற்காக ஜே.வி.பியின் ஆதரவை எப்படியும் வளைத்துப்போடும் நோக்கில் அதன் காலில் விழுவது போல இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதாக அறிவிப்பது அரசுத் தலைமைக்கு அவமானமானது. அத்தோடு, அமைதிப் பேச்சுமூலம் சமரசத் தீர்வு காணும்படி சர்வதேசமும் இலங்கை அரசு உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளை ஒரே குரலில் வற்புறுத்தி நிற்க, அந்த முயற்சிகளுக்கு நிரந்தர வேட்டு வைப்பதுபோல யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அரசுத் தரப்பே முன்னின்று முறிப்பது சர்வதேச ரீதியில் அரசுக்கு நெருக்கடிகளையும் நெருக்குதல்களையும் தரக்கூடியதும் கூட.

ஆகவேதான் இதற்கு மாற்று வழி ஒன்றை அரசுத் தலைமை நாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்த உத்தியை அரசுத் தலைமை செயற்படுத்துவதற்கான வாய்ப்பான சூழலை அமெரிக்காவே இலங்கை அரசுக்கு இச்சமயத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

அமெரிக்க அரசு, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கணக்குகளை முடக்கி வைக்கத் தீர்மானித்திருப்பது தெரிந்ததே. அந்த அமைப்பு ஊடாகப் புலிகளுக்கு நிதி செல்வதாகக் குற்றம் சுமத்தியே அமெரிக்கா இந்த நடவடிக்கையை இந்தச் சமயத்தில் மேற்கொண்டிருக்கின்றது.

இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள ஜே.வி.பி., புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்தமைபோல இலங்கை அரசும் தடைசெய்யவேண்டும் எனத் திரும்பவும் நாடாளுமன்றத்தில் நேற்றுக் கோரியிருக்கின்றது.

இதையே இப்போது தனக்கு வசமான ஆயுதமாக உத்தியாக பயன்படுத்துவது குறித்து அரசுத் தலைமை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிகின்றது.

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடைபெற முன்னர், புலிகள் இயக்கம் மீதான தடையைத் திடீரென அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தி, ஜே.வி.பியை நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராகச் செயற்படாமல் தற்காலிகமாகவேனும் தடுக்கமுடியும் என்ற தந்திரோபாயத்தையே அரசுத் தலைமை சிந்திக்கின்றது.

2002 இல் புலிகள் இயக்கம் மீதான தடையை அப்போதைய ரணிலின் அரசு நீக்கும்வரை அந்த அரசுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்ய முடியாது எனப் புலிகள் அடம்பிடித்து நின்றார்கள் என்பது தெரிந்ததே. அதேபோல இப்போது புலிகள் இயக்கம் மீது அரசு மீண்டும் தடையை விதிக்குமானால், அதைக் காரணம் காட்டி புலிகளே தம்பாட்டில் இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறும் முடிவைப் பிரகடனப்படுத்துவர், அந்த ஒப்பந்தத்தை நிரந்தரமாக முறிக்கும் வேலையை அரசுத் தரப்புச் செய்யவேண்டியதில்லை என அரசுத் தலைமை கருதுகின்றதாம்.

ஆக, புலிகள் இயக்கம் மீது மீளத் தடையை விதித்து, அதன் மூலம் நாடாளுமன்றில் ஜே.வி.பியின் ஆதரவைத் தொடர்ந்து அரசுக்குத் தக்க வைத்தல் மற்றும் புலிகள் தாங்களாகவே யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகின்றனர் என அவர்களைக் கொண்டே அறிவிக்கச் செய்தல் என ஒரே கல்லில் பல மாங்காய்களுக்கு இந்தத் தந்திரம் மூலம் திட்டமிடுகிறது அரசுத் தலைமை.

தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதி புலிகளுக்குப் போகின்றது என்ற காரணத்தைக் காட்டி அந்த அமைப்பின் நிதி மற்றும் சொத்துக்களை தான் முடக்கியிருப்பதாக அமெரிக்கா விடுத்திருக்கும் அறிவிப்பு, அதையொட்டியே புலிகள் இயக்கத்தை இலங்கையில் இலங்கை அரசு தடை செய்கின்றது என்ற பொருத்தமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

http://www.uthayan.com/

தடை என்பது இலங்கையில்தான் தமிழ் மக்களின் மனதில் இருந்து அல்ல அதற்கு சான்று இந்த காணொளி

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளும் எது நடக்கக் கூடாது என்று சர்வதேசத்தை மதித்தார்களோ அதை சர்வதேசமும் சிறீலங்காவும் இணைந்து மிதித்துவிட்டன.

அன்ரன் பாலசிங்கம் சொல்லித்தான் சென்றார் மேற்குலக தடைகள் வரும்.. புலிகள் மீதான அதி உச்ச அழுத்தங்கள் வரும் என்று. நாம் எமது பலத்தால் ஒற்றுமையால் அவற்றை முறியடிக்கும் போது எமது விடுதலையும் மலரும்..! அவர் தடை இவர் தடை என்று அவர்களின் வாயைப் பார்த்துக் கொண்டிராமல் எமது விடுதலைப் போராட்டத்தை இத்தடைகளையும் தாண்டி பலப்படுத்துவது குறித்தே நாம் தற்போது சிந்திகக் வேண்டும். அதற்கான வழிவகைகளை மக்களுக்கு இனங்காட்ட வேண்டும். அதைவிடுத்து சிங்கள மற்றும் மேற்குலக நகர்வுகளை கண்கொட்டாமல் அவதானித்துக் கொண்டிருப்பதால் மட்டும் எமது விடுதலை சாத்தியப்படாது..!

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று கூறி 25 வருடம் சிறையில் போட்டு வதைத்த அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் அந்த மக்களின் தியாகத்தால் பிறந்த விடுதலைக்குப் பின்னர் அவருக்கு லண்டனில் சிலை வைக்கல்லையா..??!

பயங்கரவாத நாடு என்று லிபியா மீதும் கடாபி மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவும் அதன் மேற்குலக அருவருடிகளும் இன்று கைகுலுக்கல்லையா...??!

அமெரிக்காவும் மேற்குலகும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாறக் கூடியவர்கள். அவர்கள் தமிழ் மக்களை நோக்கி மாறி வர நாம் தான் எமது செயற்பாடுகளை செய்ய வேண்டுமே தவிர.. எமது பலத்தை விடுதலையின் உறுதிப்பாட்டை தெரியப்படுத்தனுமே தவிர... தடைகள் சிறைகளுக்கு அஞ்சி விடுதலைக்கு விடை கொடுக்க முடியாது. இவை விடுதலை வேண்டி நிற்கும் எல்லா மக்களும் இந்த உலகில் அனுபவித்த தடைகள் தான். தமிழர்களுக்கு எதிரான தடைகள் அல்ல. வல்லாதிக்க சக்திகளும் பேரினவாதிகளும் குணத்தால் ஒருவரே..! :unsure:

Edited by nedukkalapoovan

அருமையான கருத்து நெடுக்ஸ்

ஜோர்ஜ் வசிங்டனும் பிரிட்டிஸ் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவர்தான் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸும் பிரிட்டனால் தேடப்பட்டவர்தான்

  • தொடங்கியவர்

இன்றைய காலகட்டத்தில் நாம் வெளிநாடுகளை எதிர்பார்க்காமல் எமது இலட்சியத்திற்காக தமிழ் மக்கள் நாம் ஒன்று சேர்வதே சலச் சிறந்தது. நெல்சன் மண்டேலா, யாசர் அர்பாத் போன்றோரை இந்த மேற்குலகம் தான் பயங்கரவாதியகச் சித்தரித்தது. காலத்தின் கட்.டாயம் அவர்களை மதித்து அவர்களுக்கான மரியதையைப் பெற்றுக் கொடுத்தது. எமது ஒன்றுபட்ட செயல்களினால் எமது இலட்சியத்தை வென்றேடுத்து எமது தேசியத் தலைவருக்கும் அந்த மரியதையை நாம் பெற்றுக் கொடுப்போம். உறுதியான எமது இலட்சியத்தை ஒரு சில தடைகளினால் தழும்பச் செய்யாமல் முன்னோக்கி செலுத்துவதற்கு ஊந்து சக்தியாக இருப்போம்.

ஜானா

  • 2 weeks later...

தமிழீழ விடுதலைப் புலிகளை தயக்கமின்றி உடனடியாக சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்து அவர்களுடனான உறவுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு இன்று இரண்டாவது நாளாகவும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பியின் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

நெடுக்ஸின் கருத்துக்கள் அருமையாகவுள்ளது குறூக்ஸின் கருத்துக்கள் போல .... எனக்கென்னவோ சந்தேகமாயிருக்கு.

நெடுக்ஸின் கருத்துக்கள் அருமையாகவுள்ளது குறூக்ஸின் கருத்துக்கள் போல .... எனக்கென்னவோ சந்தேகமாயிருக்கு.

:lol::unsure:

ஊடகங்களைக் கட்டுப்படுத்த புலிகள் மீது தடை விதியுங்கள்! வீரவன்ஸ வலியுறுத்தல்

நுகேகொட குண்டுவெடிப்புச் சம்ப வத்தைத் தொடர்ந்து புலிகள் அமைப்பை இலங்கையில் உடனடியாகத் தடைசெய்யுமாறு ஜே.வி.பி. நாடாளுமன்றில் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.புலிகளைத் தடைசெய்வதன் மூலமே, புலிகளின் பிரசாரங்களை முன்னெடுக்கும் பிரபாகரனின் மாவீரர் தின உரையைப் பக்கம் பக்கமாகப் பிரசுரிக்கும் ஊடகங்களின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் விமல் வீரவன்ஸ கூறினார்.

நாடாளுமன்றில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரையைத் தொடர்ந்து நுகேகொட குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக விமல் வீரவன்ஸ கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு :-

புலிகள் நுகேகொடையில் நடத்திய குண்டுத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். புலிகளை இலங்கையில் உடனடியாகத் தடைசெய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது.

" புலிகளின் குரல்" வானொலி விமானப்படையால் தாக்கப்பட்டபோது ஊடக சுதந்திர மீறல் என்று சுதந்திர ஊடக அமைப்பு மற்றும் எல்லைகளற்ற ஊடக அமைப்பு ஆகியன அத் தாக்குதலைக் கண்டித்துள்ளன.

சில ஊடகங்கள் பிரபாகரனின் மாவீரர் தின உரையை பக்கம் பக்கமாகப் பிரசுரித்தன.

புலிகளைத் தடைசெய்து, அது சட்ட விரோதமான இயக்கம் என்று அறிவித்தால்தான் ஊடகங்களில் புலிகளுக்கு ஆதரவான பிரசாரங்களை நிறுத்த முடியும். என்றார் விமல் வீரவன்ஸ.

http://www.tamilwin.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.