Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

நீர் அந்த பாட்டை கேட்டுட்டு ராரா...ராரா... என்று திரிவீர், நான் வந்து லக்க...லக்க...லக்க...லக்க சொல்லேலாது சொல்லிட்டன்! அது படத்திலதான் சரிவரும்! :evil:

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply
aandavan6ha.gif

பாடல்: கடவுள் அமைத்து வைத்த மேடை

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்

வரிகள்: கண்ணதாசன்

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை

இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

(கடவுள்)

நான் ஒரு விகடகவி

இன்று நான் ஒரு கதை சொல்வேன்

ஓங்கிய பெரும் காடு

அதில் உயர்ந்தொரு ஆலமரம்

ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே

ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிலி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு

அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு

அன்பே...ஆருயிரே...என் அத்தான்

(கடவுள்)

கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா

ஆசை விமானத்தில் ஆனந்த மேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா

தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா

பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாங்கு பாடுதம்மா

(கடவுள்)

கன்றோடு பசு இன்று கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா

கான்வெண்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா

?????

(கடவுள்)

ஒரு கிளி கையோடு ஒருகிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா

உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா

அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா- அது

எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான் இப்போது தெரிந்ததம்மா

(கடவுள்)

பாடலை கேட்க

பாடல்: தெய்வம் தந்த வீடு

குரல்: கே ஜே ஏசுதாஸ்

வரிகள்: கண்ணதாசன்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை

என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

(தெய்வம்)

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்?

உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்

கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன?

இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

(தெய்வம்)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உண்மை என்ன பொய்மை என்ன?

இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

(தெய்வம்)

பாடலை கேட்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா.. அவள் ஒரு தொடர்கதையில வாற பாடல்கள் எனக்கு றொம்ப பிடிக்கும்.. இணைச்சிருக்கிறியள் றொம்ப நன்றி :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மந்திரி நீங்க சிரிக்கிறிங்க... :cry:  :cry:  :cry:  :cry:  :cry:

அதுக்கேன் நீங்கள் இரண்டுதரம் பதிஞ்சிட்டு நிக்கிறியள் :)

ஓ.. இங்கே சினிமாப்பாடல்கள் மட்டும்தான் எழுதலாமோ... நான் இதை இங்கே எழுதுகிறேன்.. இங்விடத்தில் பொருத்தமில்லாதுவிடத்து அகற்றிவிடவும்.

கண்ணம்மா - என் காதலி (பாரதியார்)

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!

சூரிய சந்திரரோ?

வட்டக் கரிய விழி - கண்ணம்மா!

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் - புடவை

பதித்த நல் வயிரம்

நட்ட நடு நிசியில் - தெரியும்

நஷத் திரங்க ªடீ!

சோலை மல ரொª¢யோ - உனது

சுந்தரப் புன்னகை தான் ?

நீலக் கடலலையே - உனது

நெஞ்சி லலைக ªடீ!

கோலக் குயி லோசை - உனது

குரலி னிமை யடீ!

வாலைக் குமரி யடீ - கண்ணம்மா!

மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா!

சாத்திர மேதுக் கடீ!

ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!

சாத்திர முண்டோ டீ!

மூத்தவர் சம்மதியில் - வதுவை

முறைகள் பின்பு செய்வோம்;

காத்திருப் பேனோடீ? - துபார்.

கன்னத்து முத்த மொன்று!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Malalai எழுதியது:

ஏன் மந்திரி நீங்க சிரிக்கிறிங்க...      

அதுக்கேன் நீங்கள் இரண்டுதரம் பதிஞ்சிட்டு நிக்கிறியள்  

இப்ப அதுவா முக்கியம் ஆஆஆ...ஏன் சிரிச்சிங்க என்றதுதான் முக்கியம் .... :twisted: :wink: :):)

பயப்பட வேண்டாம் சம்சன். பாரதியார் பாடல்கள் எல்லாமே (பெரும்பாலும்) சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கு. இந்தப் பாடலும் சினிமாவில் வந்திருக்கு. சுசீலா பாடியிருக்கிறார்.

kanpesumvaarthaigal7fi.gif
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் அந்த பாட்டை கேட்டுட்டு ராரா...ராரா... என்று திரிவீர், நான் வந்து லக்க...லக்க...லக்க...லக்க சொல்லேலாது சொல்லிட்டன்! அது படத்திலதான் சரிவரும்!  

ஆமா நான் பாடுவன் ஏன் நீங்க லக்க லக்க சொல்லவேணும் ஆஆஆ

என்ன என்ட ஆள போட்டு தள்ளுற பிளானோ.... :evil: :evil: :P :P :):)

  • தொடங்கியவர்

இந்தாங்க மழலை ரா ரா பாட்டு தமிழில் கேட்டு பாருங்கள்.

http://www.raaga.com/getclip.asp?id=999999023556 தமிழில் வாராய்... நானுன்னை தேடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றி வசி அண்ணா...நல்லா இருக்கு...இன்று தான் இந்தப்பாட்டு கேட்டேன்.... :P :P :P

உங்கட்ட இருக்குதா பாடல் வரிகள்? யாராவது இருந்தால் சொல்லுங்க..நன்றிகள்.... :P

நல்ல பாடல் ஹரி நன்றி

p54.jpg

படம்: காதல்

பாடல்: உனக்கென இருப்பேன்

பாடியவர்: ஹரிசரன்

பாடலை கேட்க... http://www.tamilsongs.net/page/build/album...dhal/index.html

உனக்கென இருப்பேன்,

உயிரையும் கொடுப்பேன்.

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்.

கண்மனியே, பொன்மனியே,

அழுவதேன், கண்மனியே!

வழித்துணை நான் இருக்க,

(உனக்கென இருப்பேன்)

கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்.

கண்மனி, காதலின் நெஞ்சம்தான் தாஙகிடுமா?

கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்

என்றுதான் வன்னத்துபூச்சிகள் பார்த்திடுமா?

மின்சார கம்பிகள் மீது

மைனாக்கள் கூடு கட்டும்.

நம் காதல் தடைகளை தாண்டும்.

வளையாமல் நதிகள் இல்லை,

வலிக்காமல் வாழ்க்கை இல்லை.

வரும் காலம் காயம் ஆற்றும்.

நிலவொளியை மட்டும் நம்பி

இலையெல்லாம் வாழ்வதில்லை,

மின்மினியும் ஒளி கொடுக்கும்.

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.

தோழியே, இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.

தோளிலே நீயுமே சாயும்போது

எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.

வெண்ணீரில் நீர் குளிபேன்,

விரகாகி தீ குளிப்பேன்,

உதிரத்தில் உன்னை கலப்பேன்.

விழிமூடும்போது முன்னே பிரியாமல் நான் இருப்பேன்,

கனவுக்குள் காவல் இருப்பேன்.

நான் என்றால் நானேயில்லை,

நீதானே நானாய் ஆவேன்.

நீ அழுதால் நான் துடிப்பேன்.

(உனக்கென இருப்பேன்)

பாடலுக்கு நன்றி மதன் அண்ணா. :P

ஏன் மதன் அண்ணா இத்திரைப்படத்திற்கு விஜய் த்ரிஷா படத்தை போட்டிருக்கிறீங்க? :wink:

இப்படம் பொருந்தும் என நினைக்கிறேன். :idea:

penninmanthu_kadal_aaninmanthu_thiivu-thumb.PNG

இது போல படம் தேடினேன் கிடைக்கவில்லை

பாடல்:- பாலசுப்ரமணியம்

படம்:- யூத்

வரிகள்:- வைரமுத்து

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்

புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.....................

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்

புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.....................

வெற்றியைப்போலவே ஒரு தோல்வியும் நல்லதடி

வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி

குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி

இழையும் புண்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி

தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி

தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி

உள்ளம் என்பது கவலைகள் நிறப்பும் குப்பைத்தொட்டியில்லை

உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை

புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.....................

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப்படைத்தானே

அவன் ஆசையைப்போலவே இந்த பூமி அமையலையே

ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில்

மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா

நன்மையென்றும் தீமையென்றும் நான்குபோர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே

துன்ப என்ற சிற்பிக்குள்தான் இன்ப என்ற முத்து வரும் துணிந்தபின் பயமில்லையே

கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்

காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்

புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.....................

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி பாடலுக்கு :P :P :P :P :wink: :wink:

  • தொடங்கியவர்

படம்: நந்தா

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்..

ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்..

உன் சொந்தம் இங்கு யார் யாரோ?

நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ?

நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு?

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே..

பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்றில் அப்போதே..

எதனைக்கொண்டு நாம் வந்தோம்..?

எதனைக் கொண்டு போகின்றோம்..?

ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே..

காற்றுக்கு யார் இங்கே பாட்டுச் சொல்லித் தந்தாரோ?

ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டுத் தந்தாரோ?

வாழ்க்கை எங்கு போய்ச் சேரும்?

காலம் செய்யும் தீர்மானம்...

என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நல்ல பாட்டு எல்லாம் எங்கைபா சுடுறியள்.. :lol: ..

  • தொடங்கியவர்

சுடவில்லை கவிதன் இங்கு நான் எழுதிய அனைத்துப்

பாடல்களுமே கேட்டுத்தான் எழுதினேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ எனக்கு பாடுறதே ஒழுங்கா விளங்கிறேல்லை அவ்வளவும் கேட்டு கேட்டு எழுதினீர்களா.. வாழ்த்துக்கள் தொடருங்கள் :lol:

பாடல்: காதலின் தீபம் ஒன்று

படம்: தம்பிக்கு எந்த ஊரு?

பாடியவர்: SPB

பாடலை கேட்க...

காதலின் தீபம் ஒன்று,

ஏற்றினாளே என் நெஞ்சில்.

ஊடலில் வந்த சொந்தம்,

கூடலில் கண்ட இன்பம்.

மயக்கம் என்ன,

காதல் வாழ்க.

நேற்று போல் இன்று இல்லை,

இன்று போல் நாளை இல்லை.

அன்பிலே வாழும் நெஞ்சில்,

ஆயிரம் பாடலே.

ஒன்றுதான் எண்ணம் என்றால்,

உறவு தான் ராகமே.

எண்ணம் யாவும் சொல்ல

வா.

(காதலின் தீபம் ஒன்று)

என்னை நான் தேடி தேடி,

உன்னிடம் கண்டுக் கொண்டேன்.

பொன்னிலே பூவை அள்ளும்,

புன்னகை மின்னுதே.

கண்ணிலே காந்தம் வைத்த

கவிதையை பாடுதே.

அன்பே இன்பம் சொல்ல

வா.

(காதலின் தீபம் ஒன்று)

பாடல்களுக்கு நன்றி வசியண்ணா & ஹரியண்ணா (மன்னா) :P

மன்னா பாடல்வரிகள் எங்காவது சுடுகிறீர்களா? இல்லை பாடலைக் கேட்டு கேட்டு எழுதுறீங்களா? :?:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.