Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலா அண்ணையின் நினைவுகளோடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணா எம்மை விட்டுப் பிரிந்து 14ம் திகதியோடு ஒரு வருடங்கள் ஆகின்றன. இளைஞன் அப்போது சொன்னபோதும் சரி, இப்போதும் சரி அவரில்லை என்பதை ஏற்கமுடியவில்லை.

காலம் எம்மிடம் இருந்து பிரித்தாலும், நினைவுகளும், அவர் வகுத்த பாதைகளும் எம் கூடத் தான் இருக்கின்றன. அவை எமக்கு வழி காட்டிக் கொண்டும் இருக்கின்றது.

antonadelebalasinghams.jpg

அவரின் நினைவுகளைத் தாங்கிய பதிவுகள் சில யாழ் இணைப்பில் இருந்து:

http://www.yarl.com/videoclips/view_video....68d138f2b4fdd6f

http://www.yarl.com/videoclips/view_video....9dcf8d3b5c6e0b0

http://www.yarl.com/videoclips/view_video....70ded05f5a3bf3e

http://www.yarl.com/videoclips/view_video....bb1864cdee4d3d6

http://www.yarl.com/videoclips/view_video....dbebc2ac9128303

மேலும்:http://www.yarl.com/videoclips/channel_detail.php?chid=4

Edited by தூயவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தூயவா உங்களது முயற்சிக்கு பாரட்டுகள் இருப்பினும் எனக்கு ஒர் மனகுறை காரணம் இதை படித்த பின்பு உங்களுக்கு புரிந்து கொண்டால் சரி.

அன்று ஒரு காலம்,பலயுகங்களிற்கு முன்னம்,இந்த பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது.கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது,மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.

அந்த கருதிற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான்.மலைகளை பெயர்த்து பாறைகளை தகர்த்து கலைவடிவம் கொடுத்தான்.ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான் வியாக்கியானங்கள் கொடுத்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள்,சடங்குகள் தோன்றின கோடானு கோடி அடியார்கள் தோன்றினர் ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து இப் பூவுலகில் பல நாகரிகங்கள் தோன்றின.கிறிஸ்தவ.இஸ்லாமிய,இந்து, பெளத்த நாகரிகங்களாக மானிடம் பிளவுபட்டது போர்கள் நிகழ்ந்தன நாடுகளும் இனங்களும் மோதின.பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து அவர்களை ஆட்டிபடைத்தது.

தேசத்தின் குரல் அன்டன்பாலசிங்கத்தின் கூற்று..

புத்தனின் கூற்று எவ்வளவு அருமையான கருத்து இதற்கு பதில் கருத்து கூறுவதிற்கு அடியேன் புத்தனிற்கு தகுதியேதும் இல்லை தூயவா உமது இந்து நாகரிகத்தை தலையில் வைத்து கூதாடுவதை இனிமேலாவது சிந்திப்பீராக தமீழிழம் மலர்ந்தால் இங்கு இந்து நாகரிகம்,கிறிஸ்தவ நாகரீகம்,இஸ்லாமிய நாகரிகம் எதற்கும் இடம் வேண்டாம் என்பது தான் மறைந்த தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் கருத்து என்பது உங்களுக்கு புரிந்தால் சரி வாழ்க தமீழிழம் வேண்டாம் மதவாதம்.

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நினைத்தால் பாவமாக இருக்கின்றது புத்தன்.

பாலா அண்ணா மாக்கிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவராயினும், தலைவரை இந்துக் கோவில் ஒன்றில் வைத்து, திருமணம் செய்விக்க முன்னின்றது அவர் தான். அவ்வாறே லண்டனில் மாவீர்ர தினங்களில் பௌத்தகொள்கைகள் மேலே தான் கொண்ட ஈடுபாட்டைப் பற்றிச் சிலாகித்தும் கதைத்திருக்கின்றார்.

தாங்கள் பாலா அண்ணை சொன்ன கூற்று என்று சொல்லவந்தது, நான் கேள்விப்படாத ஒன்று. அல்லது, உங்களுக்கு ஏற்ற விதத்ததில் திரிவாக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா தூயவனே விடுதலை கட்டுரை தொகுப்பை தாங்கள் படித்ததுண்டா அப்படி படிகாவிடில் அந்த புத்தகத்தை வாங்கி தயவு செய்து பக்கம் 85 முதல் 93 வரை வடிவாக ஆழமாக நான்கு,ஜந்து முறை படித்து புரிந்து விளங்கி கருத்து எழுதுவீர்களாக அதை படித்த பின்பு உங்கள் கருத்தை இதில் பதிந்தீர்கள் ஆனால் அடியேன் ரொம்பவே மகிழ்ச்சி அடைவேன் அன்டன் பாலசிங்கத்தின் கருதிற்கும் நீங்கள் இவ்வளவு நாளும் யாழில் கிறுக்கிய கருத்திற்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப முரண்பாடு உண்டு,மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது அடியேன் புத்தன் :)

உங்களுடைய ஒவ்வொருவருடைய கொள்கைகளையும் தமிழீழம் பிரதிபலிக்க வேண்டும் என எதிர்பார்க்கலாம். தப்பில்லை. அதுக்காக இது தான் கொள்கை எனப் பூச்சாண்டி காட்டாதீர்கள்
.

ஜயா தூயவா நாங்கள் எல்லாம் பூச்சாண்டி காட்ட தகுதி உடையவர்களா எங்கே உற்சாக பாணம் கிடைக்குதோ அங்கு சரண்டர் கோஷ்டியினர் சும்மா யாழ்களதிற்கு கருத்து உதிரும் உத்தமர்கள் உயிரை தியாகம் செய்யும் ஓர் இனகுழுமத்தின் பிரதிநிதி என்ற தகுதியை தவிர வேறேதும் எனகில்லை சகல வசதிகளையும் புலத்தில் இருந்து கொண்டு அநுபவிக்கும் அதி உத்தமன் என்று எனக்குள் ஒர் மமதை

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின்குரல் பாலா அண்ணாவின் ஒராண்டு நினைவாக இப்பாடல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ.இஸ்லாமிய,இந்து, பெளத்த நாகரிகங்களாக மானிடம் பிளவுபட்டது போர்கள் நிகழ்ந்தன நாடுகளும் இனங்களும் மோதின.பூமியில் இரத்த ஆறுகள் ஓடின

உண்மை தான் புத்தன். நாகரீகங்களாகப் பிளவு பட்டதைச் சொல்லுகின்றபடி அண்ணர், அதற்காகத் தான் போர் நடந்தது என்று கூறவில்லை. எனவே அவர் உண்மையைத் தான் சொல்லியிருக்கின்றார். அதைப் 10 தரம் படித்தும் புரியாதவர்கள் தான் திரிக்க முனைகின்றனர்.

பாலா அண்ணரின் கொள்கையோடு என்னுடைய யாழ்கருத்துக்களை ஒப்பிட வேண்டாம். அதற்கு எனக்குத் தகுதியில்லை. ஆனால் விடுதலைப்புலிகளில் கூட வேறுபட்ட சிந்தனை கொண்டவர்கள் தான் இணைந்திருக்கின்றார்கள். மக்கிசக் கொள்கையில்லாமல் தனிப்பட்டரீதியாக கிறிஸ்தவ, இந்து மதங்களில் பற்றுக கொண்டவர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். வழிபாடுகளிலும் பங்குபற்றுகின்றார்கள்.

எனவே தனிப்பட்ட ஒவ்வொருவருடைய கொள்கைகளும், மற்றவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற தேவைப்பாடு அங்கில்லை. மற்றவர்களை மதிக்கத் தெரிந்திக்க வேண்டும். அதற்கு உதாரணமாகத் தான், தலைவருடைய திருமணத்தினை பாலா அண்ணா தலைமையேற்று நடத்தினதைச் சொன்னேன். அவர்கள் சரியாகத் தான் நடந்து கொள்கின்றார்கள். புரியாதவர்கள் தான், மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கின்றார்கள்.

தூயவா உமது இந்து நாகரிகத்தை தலையில் வைத்து கூதாடுவதை இனிமேலாவது சிந்திப்பீராக தமீழிழம் மலர்ந்தால் இங்கு இந்து நாகரிகம்,கிறிஸ்தவ நாகரீகம்,இஸ்லாமிய நாகரிகம் எதற்கும் இடம் வேண்டாம் என்பது தான் மறைந்த தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் கருத்து என்பது உங்களுக்கு புரிந்தால் சரி வாழ்க தமீழிழம் வேண்டாம் மதவாதம்.

நான் இந்து மதக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றேனோ, நீங்கள் கன்னடக்காரரின் கொள்கைகளைத் தலையில் வைத்துக் கூத்தாடுகின்றீர்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

எந்த மதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதற்கும், எந்த மதமுமே இருக்க்க கூடாது என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் திரு. புத்தன் அவர்களே! பாலா அண்ணா மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தயாரித்த இடைக்காலத் தன்னாச்சி அதிகாரசபை கூட எந்த மதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க் கூடாது என்பதைத் தான் சொல்லி நிற்கின்றது. ஆனால் தனிப்பட்ட கொள்கைகளைத் தடை செய்கின்ற அளவுக்கு இல்லை.

சொல்லப் போனால் அமெரிக்கா அரசின் கொள்கைகளும் அவ்வாறே அவர்களின் அரசியல் கொள்கைகளில் மதம் பற்றிய எவ்வித சட்டங்களும் இல்லை. அதாவது ஒருவருடைய பதவி, போன்றவை மதங்களின், இனங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக் கூடாது என்பதே அதன் மூலக்கருத்தாகும். புரிகின்றதா புத்தன்.

என்னும் பதிலளிக்க வேண்டும். நேரம் கிடை;ககும்போது....

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரும்,அவரது மனைவியுடன் தேசத்தின் குரலும்,அவரது அவுஸ்திரேலிய மனைவி அடேல் அன்ரியுடன்.

http://www.eelatamil.net/gallery/details.php?image_id=240

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.