Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

தூறல்நாள் -96

மெல்ல மெல்ல விடியுமோ-கரு

மேகத்திரை விலகுமோ...

இனி மெல்ல மெல்ல விடியுமோ-கரு

மேகத்திரை விலகுமோ...

ஆதவனின் ஒளிக்கரங்கள்

அன்பாய் அணைக்குமோ..

ஆனந்தங்கள் புத்துணர்வாய்த்

பூந்தேனைத்தெளிக்குமோ..

அட தேனைத் தெளிக்குமோ

மெல்ல மெல்ல விடியுமோ-கரு

மேகத்திரை விலகுமோ......

பூமி என்னும் சோலைக்குள்ளே

புயலை யார் வைத்தது?..

தென்றல் தினம் வீசும்போது

தீயால் யார் சுட்டது?..

ஆடலும் பாடலும்

கலைகளில் ஆனந்தம்..

உறவுகள் மழலைகள்..

மண்ணிலே ஆனந்தம்...

பேரானந்தக்கதவே...

பேரானந்தக்கதவே...

உனக்கு பூட்டை யார் செய்தது?..

திறக்கும் சாவி எங்குள்ளது?..

மெல்ல மெல்ல விடியுமோ-கரு

மேகத்திரை விலகுமோ...

இனி மெல்ல மெல்ல விடியுமோ-கரு

மேகத்திரை விலகுமோ...

ஆதவனின் ஒளிக்கரங்கள்

அன்பாய் அணைக்குமோ..

ஆனந்தங்கள் புத்துணர்வாய்த்

பூந்தேனைத்தெளிக்குமோ..

அட தேனைத் தெளிக்குமோ

மெல்ல மெல்ல விடியுமோ-கரு

மேகத்திரை விலகுமோ......

மனிதனை மனிதன்

வேட்டை கொள்ள..

மிருகங்களாகிறான்

எங்கே சொல்ல?..

அழகு பூமியில்

ஆழம் செய்ய

அணுகுண்டுகள் எதற்கு

என்ன சொல்ல?..

காற்று..பூமி.. வானமெல்லாம்

பொதுவுடமை என்றில்லையா?..

வாழ்வை யாவரும் வாழவேண்டும்...

வன்முறை தவறில்லையா

வாழ்வுக்குத் தடையில்லையா?

ஆனந்தமாய் நாம் வாழ்வதற்கு

அன்பே வழியல்லவா...

ஆனந்த மொழியல்லவா..

ஆனந்த மொழியல்லவா..

மெல்ல மெல்ல விடியுமோ-கரு

மேகத்திரை விலகுமோ...

இனி மெல்ல மெல்ல விடியுமோ-கரு

மேகத்திரை விலகுமோ...

ஆதவனின் ஒளிக்கரங்கள்

அன்பாய் அணைக்குமோ..

ஆனந்தங்கள் புத்துணர்வாய்த்

பூந்தேனைத்தெளிக்குமோ..

அட தேனைத் தெளிக்குமோ

மெல்ல மெல்ல விடியுமோ-கரு

மேகத்திரை விலகுமோ......

Edited by vikadakavi

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இதனை பாட்டு வடிவத்தில் எழுதியிருக்கிறேன்..யாராவது மெட்டுப்போட்டு இணைக்க முடியுமா?..

கன்னிமுயற்சிகளும் வரவேற்கப்படுகிறது. :huh:

  • தொடங்கியவர்

அடி மேல் அடி

அம்மியே நகருமாம்..வல்

அரசுகள் அசராதா?...

திரண்டு வா அணியாய்..

திக்கெட்டும் பேரொலியாய்..

சிறுதுளி..

பெருவெள்ளம்..அதில்

நீ ஒரு துளியாய்..

உன் பணியேற்கவா..இடரில்

சிக்கிய உறவுகள் மீட்க வா

ஈழத் தமிழர்தம

உயிரினைக் காக்க வா..

ஒரு கை தட்டி

ஓசை வராது..

ஒரு இலட்சம் கைகள் தட்ட

உலகம் விழிக்கும்..

உன் இரத்தங்களுக்காய்..

ஓடோடி வா...

தானாடாவிட்டாலும் தசையாடும்

என்பார்கள்..

உணவு இல்லை..உடை இல்லை

உறையுள் இல்லை...

உயிரும் இல்லை என்றாவதற்குள்..

உடன் பிறப்பே உந்தன்

வேலையெல்லாம் உதறிவிட்டு

ஒரு பேரணியாய் வா

இது கெஞ்சல் கூட்டமல்ல

உறவுக்கு உறவுகளின் அஞ்சல் கூட்டம்

அது கண்ணீர் அஞ்சலிக்கூட்டமல்ல

ஆதரவை அஞ்சல் செய்யும் கூட்டம்...

நாளை மாலை..பிரித்தானிய

பராளுமன்றம் விழித்தெழட்டும்...

தமிழனின் உணர்வொலிக்கு பதில் தரட்டும்..

உறவே உன் தமிழும்..

உன் மண்ணும்..

உன் நினைவுகளும்

உன் கலாச்சாரமும்..

சிங்களவனின் இனி அழிப்பில்

சின்னாபின்னமாக முன்..

உன் கடமையாய்..

வந்து காட்டு தமிழனின் ஆதரவை

வந்து காட்டு தமிழ் மக்கள் ஒருமைப்பாட்டை

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

இனித்திருந்த தேசம்...

இருண்டிருக்கும் காலம்...

குயில்கள் கூவிக்கொண்டிருந்த தோப்புகள்...

சுடுகாடாகி..ஆந்தைகள் அலறிக்காண்டிருக்கிறது...

தென்றல்காற்றுக்கூட தீக்குளித்து

அனலாக அடித்துக்கொண்டிருக்கிறது...

ஊருக்குள் நுழைவோம்...

முன்வரிசையில் இருந்த வீடுகள்..எங்கே..

சுவடுகள் கூட புழுதிக்குள்

புதைந்துவிட்டனவா...

இதோ ஒரு வீடு..எட்டிப்பார்ப்போம்..

ஆச்சி..குழந்தைகளின் இனிப்புக்கடை அவள்..

குழந்தைகளுக்காய் உயிரைவிடுவாளே..

ஏன் அழுதுபொண்டிருக்கிறாள்..

ஆச்சி சுவரை ஏன் அப்படி வெறிக்கிறாய்..

அவள் குடும்ப புகைப்படம்..

திக்கொன்றாய் பிள்ளைகளை

உயிர்தப்ப அனுப்பிவைத்துவிட்டு..

ஏங்கியழும் இவள் உயிரை மட்டும்..

மீதமாய் வைத்துக்கொண்டு..

அவள் கண்ணீரின் சுகங்களை..

சோகங்களை கலைத்துவிடாமல் வெளியே வர

எங்களை மோதிக்கொண்டு வேகமாய்..

தெருப்புழுதியில் தீய்ந்த போன தாரின்

வாசனையைக் கலந்துகொண்டு எமனின்

வண்டிகள்..சில..சிங்களக்கெக்கல

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி எங்களுடைய அலைவரிசை அநேகமாக ஒற்றுமையாக இருக்கிறது. கவிதை மனதை நெருடுகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14380

  • தொடங்கியவர்

நன்றி...

ஏக்கமும் ஆசையும் எல்லா உணர்வுபூர்வமான தமிழனுக்கு தற்போது ஒன்றுதானே..

உங்களுடைய கதை அருமை கதையைக் கூட ஹைக்கூ போல அழகாக எழுதியிருக்கிறீங்க வாழ்த்துகள்.

மாமாவின் தினசரி தூறள்..ள் மேனியை சிலிர்க்க வைக்கின்றது..து வாழ்த்துகள் மாமா :icon_mrgreen: அது சரி தூறள் ஏன் தற்போது விட்டு விட்டு தூறுகிறது..து.. :icon_mrgreen:

வெயில் காலமோ தற்போது..து..(நான் பகிடிக்கு மாமா) :lol: ..தூறள் 96 பாடலாக தூறி சென்றுள்ளது..து நான் பாடிடுவன் மாமா ஆனா..னா.. :icon_mrgreen:

என்ன கேட்கிறவை தான் பாவம்... :lol: என்னதிற்கும் எங்கன்ட நெலா.லா அக்காவை கேட்டு பார்போம்..ம்.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நிலாப்பாட்டு பாடி கேட்டிருக்கிறேன்

நிலா பாடிக் கேட்டதில்லை..

பார்ப்போம் ஜம்மு முயற்சி பலிக்கிறா என்று..

நன்றி மருமோப்பிள்ளை!

வாழ்வை இழந்து

சுதந்திரத்துக்கு ஏங்கும் எல்லாருக்கும்

விடுதலை கொடு

விடுதலை கொடு என்று

வேண்டிக்கொண்டு இப்போது

விடைபெறுகிறேன்.

நல்லதொரு வேண்டுதல், வாழ்த்துக்கள் விகடகவி

  • தொடங்கியவர்

நன்றி வெண்ணிலா

அதுசரி ஜம்மு சொன்ன நிலா நீங்கதானே..?

நன்றி வெண்ணிலா

அதுசரி ஜம்மு சொன்ன நிலா நீங்கதானே..?

:( ஜம்முவை தான் கேட்கணும்.

  • தொடங்கியவர்

ஜம்முவை பாடச்சொல்லாதீங்கோ..

அவுக... பாப்பா பாட்டு பாடிடுவாங்கோ...

வெண்ணிலா உங்க குரல்ல நான் பாட்டு கேட்டிருக்கன் ஞாபகமிருக்கா?..

நல்ல குரலெல்லோ உங்களுக்கு.ஒருக்கா முயற்சி செய்யுங்கோவன்

தூறள் 96

:) ஜம்முவை தான் கேட்கணும்.

எனக்கு தெரிந்த நிலவுகள் எண்டால் ஒண்டு வானில் இருக்கும் நிலா..லா மற்றது நீங்க தானே..னே..பாடுங்கோவன் நிலா அக்கா..கா.. :huh:

கேட்க ஆசையா இருக்கின்றது..து..!!.. :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்முவை பாடச்சொல்லாதீங்கோ..

அவுக... பாப்பா பாட்டு பாடிடுவாங்கோ...

வெண்ணிலா உங்க குரல்ல நான் பாட்டு கேட்டிருக்கன் ஞாபகமிருக்கா?..

நல்ல குரலெல்லோ உங்களுக்கு.ஒருக்கா முயற்சி செய்யுங்கோவன்

தூறள் 96

ம்ம்..சரியா சொன்னீங்க மாமா..மா என்னை விட்ட பாப்பா பாட்டு தான் பாடுவன்..ன் மற்ற பாட்டு எல்லாம் பாட தெரியாது ஆனா நிலா அக்கா நீங்க சொல்லுற மாதிரி நன்னா பாடுவா..வா.. :D

அதிலையும் அவா மேல் ஸ்ருதி எடுத்து பாடினா..னா எண்டா..டா..நன்ன நித்தா வரும் எண்டு சொல்ல வந்தனான் பாருங்கோ..கோ.. :wub:

சரி..சரி கோவிக்காம நிலா அக்கா பாடுங்கோ எங்களுகாண்டி என்ன..ன..(ஆனா இப்போதைக்கு பாடுவாவோ எனக்கு தெரியல்ல மாமா).. :rolleyes:

எல்லாம் முருகன் செயல் ஆக்கும்..ம்..!!.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

யார் முருகன்..இசையமைப்பாளரா? :)

வெண்ணிலா உங்க குரல்ல நான் பாட்டு கேட்டிருக்கன் ஞாபகமிருக்கா?..

நல்ல குரலெல்லோ உங்களுக்கு.ஒருக்கா முயற்சி செய்யுங்கோவன்

தூறள் 96

:rolleyes: ஞாபகம் இருக்கிறதே

பாடுவதில் என்ன தயக்கம்..... மெட்டு எப்படி னு சொன்னால் இந்த மொட்டு இதழ்விரிக்கும் :icon_idea:

எனக்கு தெரிந்த நிலவுகள் எண்டால் ஒண்டு வானில் இருக்கும் நிலா..லா மற்றது நீங்க தானே..னே..பாடுங்கோவன் நிலா அக்கா..கா.. :rolleyes:

நிலா அக்கா நீங்க சொல்லுற மாதிரி நன்னா பாடுவா..வா.. :D

அதிலையும் அவா மேல் ஸ்ருதி எடுத்து பாடினா..னா எண்டா..டா..நன்ன நித்தா வரும் எண்டு சொல்ல வந்தனான் பாருங்கோ..கோ.. :lol:

சரி..சரி கோவிக்காம நிலா அக்கா பாடுங்கோ எங்களுகாண்டி என்ன..ன..(ஆனா இப்போதைக்கு பாடுவாவோ எனக்கு தெரியல்ல மாமா).. :icon_idea:

எல்லாம் முருகன் செயல் ஆக்கும்..ம்..!!.. :)

அப்ப நான் வரட்டா!!

ஓ உங்களுக்கு தெரிஞ்ச நிலா உந்த வானிலாவும் வெண்ணிலாவும் தானோ... நான் நினைச்சேன் வேறை பெண்ணிலாக்களும் தெரியும் என்று...

அட பாவமே மேல் சுருதியா அப்படின்னா என்ன தம்பி :wub:

:D ஊமக்குயில் பாடுவது உங்கள் செவிகளுக்கு கேட்கிறதா

யார் முருகன்..இசையமைப்பாளரா? :icon_idea:

ம்ம்..இசையமைப்பாளர் எண்டும் வைத்து கொள்ளளாம்..ம் அவர் தான் ஆட்டி வைக்கிறார்..ர் நான் சொன்னது அந்த கடவுள் முருகனை மாம்ஸ்..ஸ்..!!.. :)

அப்ப நான் வரட்டா!!

ஓ உங்களுக்கு தெரிஞ்ச நிலா உந்த வானிலாவும் வெண்ணிலாவும் தானோ... நான் நினைச்சேன் வேறை பெண்ணிலாக்களும் தெரியும் என்று...

அட பாவமே மேல் சுருதியா அப்படின்னா என்ன தம்பி

ஊமக்குயில் பாடுவது உங்கள் செவிகளுக்கு கேட்கிறதா

வெண்ணிலாக்கள் தான் இரண்டு எண்டு சொன்னனானே தவிர பெண்ணிலாக்கள் எண்டு சொல்லவே இல்ல..ல அங்க தான் ஜம்மு நிற்குது..து.. :rolleyes: மேல் ஸ்ருதி எண்டு என்னட்ட கேட்டா எனக்கு தெரியுமே..மே நான் 2 மாசம் சங்கீதம் படித்தனான் அப்ப எண்ட..ட சங்கீத ஆசிரியர் சொல்லுறவா..வா.. :D

அதை தான் சொன்னான்..ன் அதுக்கு மிஞ்சி எனக்கு சங்கீதமும்..ம் தெரியா..யா மேல் ஸ்ருதியும்..ம் தெரியா...ஊமகுயிலின் பாடல் செவிடனின் செவிக்கு விருந்து தானே நிலா..லா அக்கா..கா.. :wub:

இதற்கு மிஞ்சி இங்க நின்றா..றா விகடகவி மாமாவே என்னை போக சொல்லிடுவார்...ர் அதை விட நானே போயிடுறன் ஆனா கட்டாயமா பாடனும்..ம் சொல்லிட்டன்..உங்களின் பாடலுடன் மறுபடி இங்கே வருகிறேன்..ன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

தூறல் நாள் 99

காற்றுக்கு வேலியும்

கண்ணீருக்கு வாய்க்காலும்

போடுவதற்கு கூட்டம் கூட்டமாய்

ஏராளம் ஏற்பாடுகள்...

இங்கே வாசலுக்கு கதவில்லை

ஒரு வாய் உணவில்லை

ஓடவும் ஒழியவும் வழியில்லை

சுதந்திரம் அர்த்தம்

மறந்துவிடமுன்..அதை

வாழ்ந்து பார்க்க ஆசை..

பேராசை?!..

சுயமாய் சிந்திக்க

சுயமாய் வாழ

சுயமாய் பேச..

மன்னனுக்கே தெரியவில்லை

மற்றவர்களென்ன

விதிக்கு விலக்கா

வீதிக்கு விளக்கா

படித்த புத்தகத்தின்

பக்கங்கள் நினைவுக்கு

உள்ளேயும் வெளியேயும்

புரட்டி பார்க்கும்போது

குழப்பங்கள் ஓராயிரம்

மேகக்கூட்டங்களாய்...

குழந்தையாயும்

சிறுவனாயும்

வாலிபனாயும்

வயோதிபனாயும்

வாழ்க்கைப்பரிமாணங்கள்

ஏறிஇறங்கும்...

வயிறும் வாழ்வும்

இருக்கும் பள்ளத்தாக்கில்

ஏராளம் பேர்க்கு..

ஊரை நினைத்து

உறவ நினைத்து

படித்த பள்ளியை நினைத்து

பாய்ந்தேறிய புளிய மரத்தை நினைத்து

ஏங்குகின்ற மனதுக்கு...

ஏனோ

நினைவுகளை எட்டிப் பார்க்ககூட

பயமாய் இருக்கிறது!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தூறல் நாள் 100

தைரியம்

உன் மொழி மௌனமாக

இருப்பதனால்தான்

நம் காதல்

ஊமையாயே இருக்கிறது..

சந்தர்ப்பம்

சொல்லமுடியாத காதல்

புரியமுடிந்தாலுமே

புதிராக இருப்பவள்

பெண்!

அடிமை

நடக்க ஆரம்பிக்கும்போதும்

சேர்ந்துவிட்ட பிறகும்..

இடம் அறிந்திராத

கால்கள்!

ஜாக்கிரதை

வண்ணத்துப்பூச்சிகள்

இலைகளில் ஓய்வெடுத்தால்

பூக்கள் சிறகுக்கு

ஆசைப்படும்!

முட்டாள்தனம்

மகளின் பாசத்தின்

நம்பிக்கையில்..தந்தை

காதலனுக்கு விடும் சவால்

பயம்

வீட்டுக்கு வெளியே

தூக்கம் கொடுக்காத

திருமண முடிச்சுகள்

கலாச்சாரம்

கற்கால மனிதன்

தொடங்கி வைத்த

பூமிச்சுற்றுலா...

வியர்வை

முயற்சியை

முணுமுணுக்கும்..

உடலருவி..

ஏக்கம்

இருக்கும் போது

இழந்ததும்..

தூங்கவிடாமல்

குடைவதும்..

பகுத்தறிவு

முள்ளுக்கு தெரியாமல்

பூவிற்கு விண்ணப்ப்pற்கும்

விரல்களின் ஸ்பரிசம்!

காலணி

புதிதில் கடிப்பதாக

சொல்லப்படாலும்

காலப்போக்கில்

காப்பதாக சொல்லப்படுகின்ற

பாதங்களின் கடவுள்!

ம்ம்..மாமாவின் 100 வது தூறளிள் நனைந்தேன்..அத்தனை தூறள்களுமே..மே மனதை தடவி செல்கின்றது..து என்னும் பல துளிகள் விழட்டும்..ம்.. :lol:

யாழில்..ல்..(இன்னைக்கு உந்த பக்கம் வரக்க குடை கொண்டு வரல்ல பிறகு வாறன் என்ன)..வாழ்த்துக்கள் மாமோய்..!!. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நன்றி ஜம்மு...

பெரியவர் கந்தப்புவை சந்திச்சனான்..உரையாடும்போது உங்களைபற்றியும் பேசினனாங்கள்..மருமோப்பிள்ளைய

ப் பற்றி

சில விசயங்கள் தெரிஞ்சுகொண்டன்..(நல்லமாதிரி

நன்றி ஜம்மு...

பெரியவர் கந்தப்புவை சந்திச்சனான்..உரையாடும்போது உங்களைபற்றியும் பேசினனாங்கள்..மருமோப்பிள்ளைய

ப் பற்றி

சில விசயங்கள் தெரிஞ்சுகொண்டன்..(நல்லமாதிரி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கவிஞரே!

பொதுவாக தூறல்கள் மழையாக மாறி குடை தேட வைக்கும். இந்தத் தூறல் மட்டும் எப்போதும் மெல்லிய சாரலாக முகத்துடன் உரசிச் செல்கின்றதே!!!

முதல் நூறுக்கு வாழ்த்துக்கள். பல நூறுக்கு ஏக்கங்கள்!!!

  • தொடங்கியவர்

மிக்க நன்றி சுவி

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.