Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

நடுநிசி எலிகள்..
எல்லோரும் தூங்கிய பின்
சமையலறைக்குள் நுழையும்..
பிடித்ததெல்லாம்
பிரியமாய் தின்னும்..
வந்த தடம் தெரியாமல்
மீண்டும் தூங்கச்செல்லும்...
புத்திசாலி எலிகள் பற்றி
கண்டுகொள்வதில்லை
ஒவ்வொரு வீட்டு அம்மாக்களும்..

 

அதிகாலை ..
அழகான கனவு ..
புல்லின் மேல் பூக்கள் ஆடும் பொழுது...
தெளிந்த வானம் பார்த்து சுகந்து கிடக்க ..
கால்களில் சலனம் ..
கீழே பாக்கிறேன் ...
புல் எல்லாம் கட்கள் ஆகும் அதிசயம் ...
எழுந்து பாக்கிறேன்
பஞ்சு மெத்‌தை கூட பாறயை போல் ..

மீன்கடைகாரர் தந்த
பாக்கிபண
நோட்டில்..
சந்தனச்சுவடுகள்..
கோவில் ஐயரிலா
ஐயம்கொள்வது?

 

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயரில் ஐயம் வேண்டாம்

அன்பரே - அம்பாளுக்கு

அர்ச்சனை செய்த அஞ்சுகம்

அப்படியே மீன் வாங்கி

போயினள் காண்...!

  • தொடங்கியவர்
On 1/17/2016 at 10:48 AM, suvy said:

ஐயரில் ஐயம் வேண்டாம்

அன்பரே - அம்பாளுக்கு

அர்ச்சனை செய்த அஞ்சுகம்

அப்படியே மீன் வாங்கி

போயினள் காண்...!

:rolleyes:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நீருக்கும் மண்ணுக்கும்
நெருப்புக்கும் காற்றுக்கும்
இரையாகும் உடலே 
உனதும் எனதும்...

நான் கோடி ஆண்டுகளும்
நீ கோடி ஆண்டுகளும் 
வாழ்வதுமில்லை..

வீழவைக்க நினையாது
வாழவைக்க பார்க்கலாமே..
மகிழ வைத்து புன்னகையை ரசிக்கலாமே
உண்ணவைத்து நெஞ்செல்லாம் நிறையலாமே..
துயர்கள் துடைக்க கைகள் முன்வரலாமே..
வன்மம் அழிய அன்பு பரவலாமே

மறந்தும் மன்னித்தும்
மனிதனாய் வாழலாமே..

  • தொடங்கியவர்

இருள் மூடி
பொருள் தேடி
அருள் நாடி நின்றே

குறை கண்ட
நிறை கொண்ட
சிறை மீண்ட பின்னே

சிலை போல
நிலை வாழ
கலை சூழ நானே

எனை மாற்றி
தமிழ் ஊற்றி
ரசிக்கின்றாய் மானே..

 

 

  • தொடங்கியவர்

பிறர் அழத் தானுமழுது
பிறர் சிரிக்க தானும் சிரித்து
பெண்ணுக்கு பெண்ணாகி
ஆணுக்கு ஆணாகி
குழந்தைக்கு குழந்தையாகி
ஊர் தூங்கப் போனபின்னும்..
தான் தூங்கப்போவதில்லை
இந்த நிலைக் கண்ணாடி..

 

கண்ணிருந்தும் ஒளியில்லா..
காதல் ஒரு மாயைகாடு
அறிவிருந்தும் சொல்கேளா
இளமை ஒரு எருமைமாடு

 

ஒரு பூங்காவை விட்டுவிட்டு
காணாமல் போனாய்
நினைவுகளின் நறுமணத்தில்
மயங்கி கிடந்தவன்-எழுந்து
பார்க்கிறேன்..விரல்களில்
நகங்கள் முட்களாய்..
ரோமங்கள் வெண் புட்களாய்..
நான்..சருகுகளோடு சருகாய்...

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிருந்தும் ஒளியில்லா..
காதல் ஒரு மாயைகாடு
அறிவிருந்தும் சொல்கேளா
இளமை ஒரு எருமைமாடு

 

அசத்துறீங்கள் விகடகவி....!

  • தொடங்கியவர்
13 hours ago, suvy said:

கண்ணிருந்தும் ஒளியில்லா..
காதல் ஒரு மாயைகாடு
அறிவிருந்தும் சொல்கேளா
இளமை ஒரு எருமைமாடு

 

அசத்துறீங்கள் விகடகவி....!

நன்றி.

  • தொடங்கியவர்

கவிதை வேண்டும்

கவிதை வேண்டும்

என்று கேட்பாய்

நீ வேண்டியது வார்த்தையல்ல

வாழ்க்கையென்று ஏன்

சொல்லவில்லை?

 

கவிதை வேண்டும்

கவிதை வேண்டும்

என்று கேட்டாய்

நீ கேட்டது

கருத்தை அல்ல

காதலை என்று

ஏன் சொல்லவில்லை?

 

கவிதை வேண்டும்

கவிதை வேண்டும்

என்று கேட்டாய்

நீ யாசித்தது

எழுத்தையல்ல

என்னையென்று

ஏனடி சொல்லவில்லை

 

முட்டாள் இவனுக்கு

மூவாறு தை முன்னே

தெரிந்திருந்தால்

சுபம் விழுந்திருக்கும்

இவன் கிறுக்கல் ஆர்வத்திற்கே!

  • 1 month later...
  • தொடங்கியவர்

அச்சம்..மடம்...நாணம். பயிர்ப்பு..

முன்னோர்கள் நான்கு பக்கம் எழுப்பிய சுவர்களுக்குள்

ஆண்களை மகிழ்விக்கும்

உன் புற அழகை பூசி மெருகேற்றும் பெண்ணே..
ஆண்கள் வர்க்கத்தையே

வெட்கப்பட வைக்கும்

வெறியர்களை வீழ்த்த

வீரம் கற்றுக்கொள்..


உன்னை உயர்த்தும்

கலையை கற்றுக்கொள்..


நீயே ஆளலாம்

நீதியை கற்றுகொள்..


பூமியை ஆளலாம்

புன்னகை கற்றுக்கொள்..

 

அம்மாவாய்..அக்காளாய்..தோழியாய்..

காதலியாய்..மனைவியாய்..மகளாய்..

உறவுகளாய்..ஆணின் வாழ்வில்

அர்த்தங்களாய் நிறைந்த பெண்கள் வாழ்க.

  • தொடங்கியவர்

காலையிலும் தூங்குகிறாய்
கனவுகளை வாங்குகிறாய்..
கண்களை நான் திறந்தபின்னும்
காற்றலையில் நீந்துகிறாய்
ஏழைமகன் குடிசையிலே
பொன்மகளே உலவுகிறாய்..
ஏக்கங்களை மூடிவைத்தேன்..
புன்னகையில் பூட்டுடைத்தாய்

  • 4 months later...
  • தொடங்கியவர்

திரும்பி பார்க்கின்ற
கணங்களை
திருப்பி பார்க்கின்றேன்..
திருத்தி எழுதப்படாமல்
எழுத்துப் பிழைகள்
நிறைந்த
என் காப்பியத்தின்
கதாநாயகி
ஒரு கோழை..

  • தொடங்கியவர்

முகமூடியை தொலைக்கின்ற
போதெல்லாம்
தோற்பதனாலோ என்னமோ
கழற்ற மறுத்து..நிஜமுகம்
மறந்து நிற்கிறேன்..
என் நண்பனும்..
என் சகோதரனும்..
என் அம்மையப்பனும்
என்னாசானும்..
என் உறவுகளும்
உற்றவரும்
கொண்டாடிய..நானா
மாறிப்போய் நிற்கிறேன்..
வெற்றி என்ற வெற்றிடத்துக்காக..

எல்லாம் இழந்தபின்
தான் எதுவோ கிடைக்குமென்றால்..
தோல்விகளை சுகந்து
நான் நானாகவே
இருந்திருக்கலாம்..

  • 1 month later...

அருமை!!! நல்லகவிஞ்ஞன் ஒய்வில்ல அலைகள் போன்றவன்!!!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கஜந்தி said:

அருமை!!! நல்லகவிஞ்ஞன் ஒய்வில்ல அலைகள் போன்றவன்!!!

நல்ல கவிதையை ரசிக்க ஆட்கள் இல்லை  
அது நவீன நேரம் போகும் உலகில் போய்க்கொண்டிருக்கிறது :unsure:

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

நீரில் நாம் மூழ்குவதற்கும்..
தீயில் நாம் மாய்வதற்கும்..
முன்னோரே..காரணம் என்று
நாளையும் சொல்வார்கள்..
நம் சந்ததிகள் !!

  • தொடங்கியவர்

சாரல் நனைத்த..
மழை ரசித்த..அவள்
நிலா முகத்தின் ஈரம்
தசாப்தங்களாய்
இன்னும்
சொட்டிக்கொண்டிருக்கிறது
எனக்குள்!

  • தொடங்கியவர்

மனிதன்..
உணர்வுகளற்ற
இயந்திரனாக
மாறிக்கொண்டிருக்க
நேரம்தான் காரணமாம்..
பாவம் கடிகாரம் மட்டும் 
இப்போதும்..
அப்போதும்..
ஒரே வேகத்திலேயே
ஓட ?
 

 

  • தொடங்கியவர்

கொஞ்சம் மழை..
கொஞ்சம் வெயில்..
நிறைய பாசம்..
குறைய பேசும்
இன்றைய வாழ்க்கை!!

  • தொடங்கியவர்

அறிவு வளர்ந்தபின்..
அறிந்த மதங்களை
கொண்டாடும் மனிதா..
உன் போலவே
ஊனோடும் உணர்வோடும்
உயிர்வாழும்-சக 
மனிதனை கொண்டாட
மறந்தாயே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சலிக்காமல் எழுதும் கவி நம்ம விகடகவி.tw_thumbsup:
தொடருங்கள்....தொடர்ந்து வாசித்து வருபவன் நான்.,

  • தொடங்கியவர்

நீங்கள் ரசிக்கும்வரைக்கும் கிறுக்கிறேனே.. குமாரசாமி அண்ணா..

  • 1 month later...
  • தொடங்கியவர்

காற்றின் பலாத்கார
கரங்களில்..
துகிலிழந்த மரங்கள்...
சிந்தும் கண்ணீரில்
நிறைந்த பள்ளங்களை..
பார்த்து பரிகசித்து
நகர்கின்றன..
வில்லத்தனத்துடன்
கறுப்பு மேகங்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

காற்றைத் துச்சாதனனாக்கி கார்மேகத்தை ரகுவரானாக்கும் வித்தகர் நீங்கள்....!  tw_blush:

  • தொடங்கியவர்

தளர்ந்த வயதிலும்
தளராத கைப்பிடி
காதல் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.