Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

தூறல் நாள் 45

ஏகாந்தமும் ஆனந்தமும்

வந்தது..பெண்ணே

நீ வந்த பின்னால்

இந்த இரவுக்கு

மட்டும்..ஏனிந்த

அவசரம்..நான்

உன்னைக் கூட

வரும் நேரம்..

விரைந்து ஓடி விடுகிறதே..

கண்களின் கனிவை..

சிரிப்பின் தாய்மையை

பார்வையின் பரிவை

எல்லாம் பார்த்து

ஏமாந்து போகாதீர்கள்..

அவளுள்ளே..அழகான

இராட்சசி அமைதியாக

உறங்கிக்கொண்டிருக்கிறாள்!!

உன் அழகோவியத்தை

உன்னைக்கேளாமல்..

என் இதயச்சுவரில்.

மாட்டிக்கொண்டேன்..

உன் ஓவியம்

கனக்கத்தொடங்கியபின்

என்னிதயம்

வலுவிழந்து வலிக்கிறதே..

குணம்..

குப்பையானால்தான்..

பணம்..பையில் வருமாம்..

இல்லையே..

பணம் பையில் வந்தவுடன்..

குணமெல்லாம்

குப்பையாகிவிடுகிறதே!!

வலுவிழந்த கால்கள்

எண்ணி அழுகிறாயே..அன்பே..

காலமெலாம் உனை தோளில்

சுமப்பேன்..அன்பானவளே..

உன்னை சுமப்பதே என் சுகம்..

இல்லாததையெல்லாம் எண்ணி

உன் உள்ளத்தையும்..

ஊனப்படுத்திக்கொள்ளாதே..

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தூறல் நாள் 46

நீக்கமற நிறைந்திருந்த

வண்ணப்பூக்களாய்...

வசந்தம் வீசிக்கொண்டிருந்த

திருமணவாழ்வைச் சிதறடித்தது

சின்னத்துளியாய்..எழுந்த

சந்தேகப்புயல்!..

விழுவதும்..எழுவதும்

வாழ்வாயிருந்தாலும்..

பிறரை வஞ்சித்து

வீழ்த்தாமல் எழுதலே

பெருவாழ்வு அன்றோ!!..

கடும்முள்மூடிய

பளாச்சுளை போல்..

கருத்த தோல்

போத்திய தங்கம்..

நான் என்பதை கண்டுபிடித்து

சொன்ன வித்தகி நீ!!

அன்று

சேற்றில் முளைத்தாலும்

செந்தாமரை மதிப்பிழப்பதில்லை..

ஆனால் தங்ககரண்டியோடு

பிறந்தும் தகரமாய்

இருக்கின்றாயே.. என்று

அரசரிடம் அர்ச்சனை

வாங்கிய இளவரசன்..

பின்னர் அரசன்..

வேறில்லை கதி..அதுவோ

விதிவழி..

இன்று...

குப்பையில் பிறந்து

கோடியில் புரண்டு..

நாட்டை ஆள்பவன்..

மகன் கேடியாயிருந்தாலும்..

அவனும் ஆளமுடிகிறது..

வேறிருந்தும் வழி.... இது

மக்கள் மதி!!

மனிதக்கண்கள் காணாமல்..

கோடிகோடியாய் அழகுகள்..

அடர்ந்த காட்டுக்குள்..

பூக்களாய்..செடிகொடியாய்..

அருவியாய்..ஓடையாய்..

கொட்டிக் கிடக்குமோ...

கிடக்கும்!!..யார் கண்டார்?..

ஒரு முறை திரும்பிப்பார்த்து...

இருமுறை கையசைத்து...

மறுமுறை கண்டபோது

மலர்த்திய வழிமடல்கள்..

மூடாமல்..விரிந்துநின்று

முழுமையாய்.. சிரித்து..

ஓடி வந்து.. கட்டிக்கொண்டு

"ஐய்.. மாம..மா..மாமா.."

என்றது மழலையாய்...

மனதைத் திருடிக்கொண்டு..

திறந்த ஜன்னல்..

கூதல் காற்று...

முழுநிலவு..

அதனை மூடாத முகில்கூட்டம்..

முற்றத்து மல்லிச்செடி...

அது அனுப்பிக்கொண்டிருக்கும்..

ஆளை மயக்கும் நறுமணம்..

சுகந்தம் மிக்க

சுகங்களையெல்லாம்..

உள் வாங்காமல்..

சுகந்தி விசும்பி

அழுதுகொண்டிருக்கிறாள்..

நாளை மணமேடையில்..

அவளிடத்தில் இன்னொருத்தி..

வாழவேண்டிய வாழ்வை..

பிறர் வக்கிரத்தால் தொலைத்து..

அழுதுகொண்டிருக்கிறாள்..

இன்னல் புகுந்த மன

ஜன்னல் மூடித்தான் இருக்குமோ..

ஈழத்தமிழர் இதயம் போல்!..

கடும்முள்மூடிய

பளாச்சுளை போல்..

கருத்த தோல்

போத்திய தங்கம்..

நான் என்பதை கண்டுபிடித்து

சொன்ன வித்தகி நீ!!

ஆஹா கருத்த தோல் போத்திய தங்கத்தை கண்டுபிடிச்ச வித்தகி யாருங்கோ விகடகவி?

நல்லா இருக்கு தூறல்கள்

  • தொடங்கியவர்

வெண்ணிலா..என் கலரு தெரியும்தானே.. அல்டிமேட் கலரு :wub: ...அப்டில்லாம் கேட்கப்படாது. ^_^ .

தூறல் சிறிய இடைவெளிக்குப் பின் தொடரும்..

நன்றி

வணக்கம் விகடகவி

இன்று தான் உங்கள் தூறல்களில் நனைய முடிந்தது.

சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

என் பாதங்களைக்

காக்க.. பாதி..

தேய்ந்த செருப்பே..உனக்கு

நான் கடமைப்பட்டிருக்கிறேன்.."

என்று மேடையில்..முழங்கும்..

புலத்துக் கவிஞனே..

ஊன் கரைத்து..

உனை வரைந்த தாய்..

ஊரில் உயிர்

கரைந்துகொண்டிருக்கிறாளாம்..

தெரியுமா..

எவ்வளவு யதார்த்தமான வார்த்தைகள். தொடருங்கள் தூறல்களை....

  • தொடங்கியவர்

நன்றி..மணி அண்ணா

  • தொடங்கியவர்

தூறல் நாள் 47

பெண் விழிமேகங்கள்

தூவும் காதல் மழையில்..

நனைந்தேன்..அழகி

அவளிதழ் ஒத்தடம்

தரும்வரை தணியாமல்

ஒரு நோயாளியாய்

காத்திருப்புகளோடு!!..

உறவுகளைச் சேர்ப்பது

திருமணமாம்...முட்டாள் பேச்சு

பெண்டு(ஆட்டி) வந்ததும்

தனிக்குடித்தனம்..

அழைத்துப்போய்விடுகிறாள்!!..

அடி இவளே..

உன்னை எனக்குப் பிடிக்கும்தான்..

அதற்காக..உன்னைப்போல்

உன்; நாய்க்குட்டியையெல்லாம்

தூக்கி முத்தமிட

நான் தயாராக இல்லை!!

அவளுக்கும்

தேவதைக்கும்

சம்பந்தமிருக்கிறது

அழகாயிருக்கிறாள்...

அவளுக்கும்

இராட்சசிக்கும்

சம்பந்தமிருக்கிறது

இரங்காமலிருக்கிறாள்...

அவளுக்கும்

கடவுளுக்கும்

சம்பந்தமிருக்கிறது

கல்லாயிருக்கிறாள்....

அவளுக்கும்

எனக்கும்

சம்பந்தமிருக்கிறது

எதிர்வீட்டில் இருக்கிறாள்!!

என் மனைவி மீது

வெறுப்பாக இருக்கிறது

நான் எதைக் கிறுக்கினாலும்..

அழகு என்கிறாள்..

"கண்ணே..எவ்வளவுதான் என்

மனமேகங்கள் கவிமழை

பெய்தாலும்..இரசனையில்

நனையாத..நீ ஒரு

வெள்ளைத்தோல் எருமை"என்று

எழுதியிருந்தேன்..

"ஆகா..அருமை"என்றாள்

பாவி..பார்த்துவிட்டுத்தான்

சொல்கிறாள்..ஒருபோதும்

படித்துவிட்டுச் சொல்வதேயில்லைப்

போலும்..

எதிர்பார்ப்புகள்

ஏமாற்றங்கள்

நப்பாசைகள்..

நம்பிக்கைத்துரோகங்கள்

இவ்வாறிருந்த என்

காதல் வரலாற்றை

திருப்பி எழுதி

சுபமான ஜெயம்

போட்டவள் நீ!!!

ஆயிரம் பேர்

முன்னிலையில்..மேடையேறி

பாடல் சொல்லத் தயங்காத

நான்..உன்னெதிரே வந்து..

ஒரு வாரத்தை சொல்ல

உள்ளமும் உடலும்

உதறுகிறேன்..ஒரு

காதல் கோழையாகி...

  • கருத்துக்கள உறவுகள்

பெண் விழிமேகங்கள்

தூவும் காதல் மழையில்..

நனைந்தேன்..அழகி

அவளிதழ் ஒத்தடம்

தரும்வரை தணியாமல்

ஒரு நோயாளியாய்

காத்திருப்புகளோடு!!..

அழகான வரிகள் விகடகவி

  • தொடங்கியவர்

கவி மழை அழகா..

கபி கண்ணழகை விடவா... :lol:

  • தொடங்கியவர்

தூறல் நாள் 48

ஊருக்குப் போய்..

பள்ளிக்கூடம் சென்ற

பாதைகளில் நடந்து...

முருகன் கோவில் வீதி

மணலில் அமர்ந்து..

மூலையில் இருந்த புளியமரத்தில்..

கொஞ்சம் சாய்ந்து...

அந்தக் காற்றை..

நன்றாய் இழுத்து சுவாசித்து...

கோவில் குளத்தில்..

ஐயருக்கு தெரியாமல்..

களவாய்க் குதித்து..

கும்மாளமிட்டு குளித்து..

திருட்டுத்தனமாய் சேலன் மாங்காயடித்து..

அரைத்த உப்பும். தூளும் தொட்டு

ஸ்ஸ்ஸ்ஸ்....அப்படி சுவைத்து..

இழந்து போன என்

தேசத்து சுகங்களை....

உயிரில் நுகர்ந்து

மறந்துபோன தேசத்துத்

தடங்களை வெற்றுக்

காலில் அளந்து...

தாய் மண்ணே...உன்னில்

தலை சாய்ந்து விழி

மூடமாட்டேனா..!!!

விகடகவி உங்கள் தூறலைப் பார்த்த உடனே எனக்கும் சேலன் மாங்காயும் தூளும் உப்பும் சாப்பிடணும் போல இருக்கு. நல்ல நினைவுத்தூறல்

  • தொடங்கியவர்

என்ன.. உங்களுக்கும்சேலன் மாங்காய் கிடைக்கலையோ... :wub::(:(

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

தூறல் நாள் 49

சந்தோச சிறகுகளை

உல்லாசமாக விரித்தாலும்..காதலியே..

உயர உயர பறக்கும்போதுதான்..

உணர்கிறேன்.. அருகில்

நீயில்லாத குறையை..

மல்லாந்து படுத்துக்கொண்டு

முகட்டைக்கேட்டேன்..

எப்படா வருவாயென்று..

குளியலறைக் கண்ணாடியைக்

குட்டிக்கேட்டேன்...

எப்படா வருவாயென்று..

சுண்ணாம்புச்சுவரை

சுரண்டிக்கேட்டேன்

எப்படா வருவாயென்று..

என்னடா இவன்..

தனக்குத்தாளே பேசுகிறானே.. என்று

மற்றவர்கள் கிசுகிசுக்கிறார்கள்..

அவர்களிடம் சொல்லவா..

முகம் தெரியாத...

முகவரி தெரியாத..

அறிமுகம் இல்லாத..என்

அவளிடம்தான்

பேசிக்கொண்டிருக்கிறேனென்று!!!.

ஆயிரமாயிரம்..

ஆசைச்சொற்கள்..உதிர்த்த

உதடுகள்..அனைத்தையும்..

எரித்தது..ஒரு சந்தேகக்

தீச்சொற்கணையால்!!

அழகான..

பூமிப்பந்தில்..

நாளை நானும்

அவளும் காணமல் போகலாம்..

ஆனால் நீ..

மட்டும் நித்திய அழகுடன்

வாழ்வாய்..காதலே!!

ஏழு ஸ்வரங்கள்

இருந்தும் என்ன பயன்..

எட்டாவது ஸ்வரம்..

நீ ஏறாத மேடையில்!!..

கோடிப் பட்டாம்பூச்சிகள்

என்னை உரசிப்பறந்தன..

உன் சேலை உரசலில்..

தூறல்கள் அழகாக உள்ளது...... :rolleyes:

  • தொடங்கியவர்

கவரிமான்..உங்கள் வாழ்த்துகள் கொண்டு

எனக்கு சவரி வீசிவிட்டீர்கள்.. நன்றி நன்றி நன்றி

  • தொடங்கியவர்

தூறல் நாள் 50

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

தூறல் நாள் 50

ஆஆஆஆஆ.....விகடகவி தூரல் 50 க்கு என்னாச்சு

  • தொடங்கியவர்

தூறல் நாள் 50

இருண்ட வானத்தை

அண்ணாந்து பார்த்து

தடதடவென இறங்கிய

மழைத்துளிகள்..என்னை

அறைவதனை..ஏற்றுக்

கொண்டேன்...என் குழந்தை

முகத்தில் தன்

பிஞ்சுவிரல்களால்..

தாளமிட்ட அந்த நொடி

சுகங்கள் மீள..மெல்ல

எட்டிப்பார்க்கிறது!..

ஆணின் இளமை..

காத்திருக்க தேயுமாம்...

பெண்ணின் இளமை

பார்த்திருக்க தேயுமாம்..

காதலின் இளமை மட்டும்..

கல்யாணமானவுடனே

தேய்ந்துவிடுகிறதே!!!..

நானாய்க் காதலித்தேன்..

அப்போதும் நான் துடித்தேன்..

அவள் பறந்து போனபோது...

பெண் அவளாய்க் காதலித்தாள்..

அப்போதும் நான்தான் துடித்தேன்..

காதலித்தவளே... கைவிட்டு சென்றபோது!..

அத்தை மகளே..

தண்ணீரிலே மிதந்தாலும்..

தாமரை இதழ்கள் மேல்

நீர்த்துளி ஒட்டுவதில்லை..

நீ தாமரைப்பூ.

நான் நீர்த்துளி..

இருக்கலாம்.அதற்காக

இப்படியா உருட்டி விடுவது?...

அவசரமாக..

ஓடிக்கொண்டிருக்கும்

உலகத்தில்..

அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும்

குழந்தையாகவே இருந்திருக்கலாம்..

இன்று தினமும்..

என்னை அலாரமும்...

ஆத்துக்காரியும்..

துரத்திக்கொண்டிருக்கத்

தேவையில்லை!!

Edited by vikadakavi

பொன்விழா கொண்டாடும் தூறலுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

நன்றி நன்றி :rolleyes:

  • தொடங்கியவர்

ஏன் எந்தன் மெத்தை முள்ளானதோ...

நினைவுகள் பாறாங் கல்லானதோ..

பாவம் இந்தப் பையனென்று பல்லி சொல்லுதோ...

பல்லி சொல்லும் நேரம் துக்கம் முட்டி மோதுதோ..

தமிழீழம் நம் தேசம் அங்கேதான் என் சுவாசம்...

இப்போது ..இங்கேது சுகவாசம்தானோ..

தாய் தங்கை முகத்தை நினைந்தழுதாய்...

தந்தையின் துயரை உணர்ந்தழுதாய்..

வார்த்தையிங்கே வரண்டதனாலே...

வலியையும் சமையையும் புதைக்கின்ற நெஞ்சே..

என்தேசத்தாயின் மடி தேடுதே...

ஊர்க்காற்றை கேட்டு மூர்ச்சையாகுதே...

மண்ணும் மரமும்...ஆலும் வேரும்..

என்றும் நினைவில் ஆட

இது பெரும் வாழ்வியல் சோதனை

தாயின் அழுகுரல் பேரிய வேதனை

காலங்கள் கடுகதியாய் போகின்றதே...உன்

கடமையேனும் செய்யச்சேருமாதாய் ஜீவனே...

பண்பாடு இங்கே திண்டாடுதே...

கற்காலம் நோக்கித் தானோடுதே...

ஆடைகுறைக்கும் பெண்களினாலே...

அலையும் ஆண்கள் அகதிகள் போல..

மதுபோதை நாடும் இளம்பிள்ளையே...

தாயாக ஆகும் சிறுமுல்லையே...

ஆடும் நதியில் வள்ளம்..

நாளும் எந்தன் உள்ளம்..

பூ நெஞ்சம் ஏற்குமோ புழுதியை

கண்ணாடி தாங்குமோ கறைகளை

யார் வந்து படகேற்றுவார்..

தப்பிச் செல்ல தாயின் தேசமே...

என்ன விகடம் பாட்டா?

வாய் முணுமுணுக்கறாப்போல கிடக்கு.... அட ஆதி வாய்தான் முணுமுணுக்குது பாட்டை... உணர்வுகள் திண்டாடுகிறது. பாராட்டுக்கள் ஆமா எப்ப இவையெல்லாவற்றையும் இறுவட்டில் ஏற்றி இறுமாப்புக் காட்டப் போகிறீர்கள்?

  • தொடங்கியவர்

இறுமாப்பு எண்டால் என்ன எண்டே எனக்குத் தெரியாது :blink: ....எங்க ஆதி அடிக்கடி காணாமல் போறேள்...அறுபடுற வால் வளரும் வரைக்கும் மறைவா இருப்பியள் போல :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக..

ஓடிக்கொண்டிருக்கும்

உலகத்தில்..

அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும்

குழந்தையாகவே இருந்திருக்கலாம்..

இன்று தினமும்..

என்னை அலாரமும்...

ஆத்துக்காரியும்..

துரத்திக்கொண்டிருக்கத்

தேவையில்லை!!

கவிஞரே! என்ன என் இல்லின் சாரளமூடாக நோக்கிப் புனைந்தீரோ அறியேன். அதும் அப்படியே.

இனிய அழகிய சாரல்கள் கவி. தொடரட்டும்! வாழ்த்துகள். :icon_mrgreen:

  • தொடங்கியவர்

சுவி!..

எல்லா தூறலும்...(மெய்யாய் உளறலும்..)

என் உணர்வுகள் மட்டுமல்ல...

பார்த்த பார்வைகள்.. எதிர்வீட்டு சாளரங்கள்..

பழகிய இதயங்கள்..படித்த தமிழ்..

என்று பலவற்றால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்..

மனவோட்டக்கூத்துகள்.கும்மாளங

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.